Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மோஹித் மேலே சென்றதும் உதட்டை கடித்த படி ரோஹன் மற்றும் சுதா சிரித்தார்கள். ஹாரிகா மற்றும் அமலா என இருவரும் லாவன்யாவை பார்த்தார்கள். இவள் எதுவும் பிரயோஜனம் ஆவாளா? என பார்த்தார்கள். லாவண்யா பெரு மூச்சை விட்ட படி பார்க்க, வா லாவி வந்து சாப்பிடு மா செல்லம். என அழைத்தார் ராமச்சந்திரன்.

மேலே சென்ற மோஹித் அருவியை எழுப்பினான். ஹனி!! ஹனி என அழைத்துக் கொண்டு அவள் மேல் விழுந்தான். "அம்மாடியோவ்" என அதிர்ந்து கொண்டே எழுந்தாள் அருவி.

என்ன டி ஆச்சு? எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க? என மோஹித் கேட்டான். அய்யோ மணி என்னன்னு பார்த்தீங்களா? அய்யோ அம்மா என்னை என்ன நினைப்பாங்க? என கேட்டுக் கொண்டே எழுந்தவள் வேகமாக முகத்தை கழுவி விட்டு கீழே செல்ல போக, ஹே நில்லு டி! என தடுத்தான் மோஹித்.

உங்க விளையாட்டை விட்டுட்டு எனக்கு வழிய விடுங்க. நான் போகனும் என அருவி அவனை முறைத்து பார்க்க, இப்போ போக வேணாம் நீ பிளாக் டி குடிச்சிட்டு அண்ட் குளிச்சிட்டு போ கீழே எங்க அக்கா வந்திருக்கா! என்றான் மோஹித்.

அக்காவா! என கண்களை விரித்து பார்த்தாள் அருவி. ஆமா அவள் ஒரு மாதிரி. சோ நீ கீழே போனால் கேள்வி கேட்பா! அதனால் நீ என் கூட தான் கீழே வர, அதுக்கு முன்னாடி நீ போயி ஃப்ரெஷ் ஆவிட்டு வா என்றான்.

சரி என பிளாக் டீயை வேகமாக குடித்து விட்டு குளிக்க சென்றாள். மோஹித் அவளுக்காக சுடியை எடுத்து வைத்திருந்தான். அவள் புடவையுடன் வெளியே வர, இது வேணாம் சுடி போடு என நின்றான் மோஹித்.

"இல்ல நான் தான் புடவை கட்டிட்டெனே இப்போ நேரமாகுது" என அவள் செல்ல... ஹே நில்லு டிஈ! என அதட்டினான். அவள் திரும்பி பார்க்க, புடவை முந்தியை அவன் பக்கம் இழுத்தான். மாராப்புடன் கையில் வந்தது. என்ன இது சாமி நீங்க பண்றது சரி இல்ல என அவள் திரும்ப, மோஹித் அவளை அருகில் இழுத்து இன்னிக்கு நான் நைட்டு தான் ஷூட் கிளம்பி போவேன். நீ இப்படியே சாரி கட்டிட்டு என் முன்னாடி இருந்தீண்ணா I mean என் கண்ணு முன்னாடி இருந்தால் நடக்க போற விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது எப்படி வசதி? என மோஹித் பார்வை அம்புகளால் அவளின் மேனியை துளைத்தான்.

சரி நான் போய் மாத்திக்கிறேன் என வேகமாக உள்ளே சென்றாள். இங்கேயே மாத்து டி! நான் ஒன்னும் பண்ண மாட்டேன். என்றவன் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான். அருவி அவனை நம்பும் நிலையில் இல்லை. வேகமாக உள்ளே சென்றவள் சுடியை மாற்றிக் கொண்டு அவன் முன் வந்தாள்.

என்ன டிஇஇஇ!

கொஞ்சம் ஹெல்ப் பண்ணி இதை ஜிப் பண்ணுங்க என்றாள் அருவி.

உடனே மோஹித் அவளின் முதுகு பக்கம் வந்தவன் கைகளால் தடவினான். அருவி கண்களை மூடி அவனது தொடுதலில் உதட்டை கடித்த படி நின்றாள். அதை கண்ணாடி வழியாக ஆசையுடன் பார்த்தவன்.; அவளின் காதோரம் வந்து ஹே ஹனி எப்போ எனக்கு தர போற? I can't உனக்கு புரிய மாட்டிக்கிது என அழுத்தமாக முத்தம் பதித்து ஜிப்பை போட்டு விட்டான்.

அவனது பேச்சுக்கள் உள்ளுக்குள் சாக் அடித்தது. அருவிக்கு இதயம் வேகமாக துடித்தது. ஏனோ வியர்க்க விறுவிறுக்க நின்றாள். இப்போ இப்போ ஓகே வா? உன்னை என அவன் ஆரம்பிக்க, கீழே அம்மா தனியா எல்லாத்தையும் செய்வாங்க. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் எனக்கு வேலை இருக்கு என வேகமாக ஓடினாள். ஹே போனை எடுத்திட்டு எனக்கு கால் பண்ணிட்டு அப்படியே போ! என்றான்.

எதுக்கு? என அருவி திரும்பி பார்க்க, சொல்றத செய் டி! என வேகமாக அவளின் போனில் அவனுக்கு கால் செய்து கைகளில் திணித்து விட்டு நீ கட் பண்ணவே கூடாது. புரியுதா? நீ கட் பண்ண? அவ்ளோ தான் என கடுமையாக கூறி விட்டு குளிக்க சென்றான்.

என்ன பண்றாரு? கேட்டால் நம்மள தான் திட்டுவாரு. என பெரு மூச்சை விட்டு கீழே வந்தாள் அருவி. அம்மா சாரி மா!! என சொல்லிக் கொண்டே அருவி கீழே இறங்கினாள்.

வா அருவி! என சுதா அவளிடம் இயல்பாக பேசிகொண்டே வேலையை ஆரம்பித்தார்கள். அருவி சமையலறைக்குள் சென்று விட ரோஹன் தன்னை அறிமுக படுத்தி கொள்ளும் பொருட்டு  எழுந்து சென்றவன். அம்மா நான் யாருன்னு சொல்லு மி!! என அருவியை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான்.

அவனை பார்த்ததும் அருவி யோசனையாக பார்க்க, சுதா சிரித்துக் கொண்டே அருவி இது தான் ரோஹன் உன் புருசனோட தம்பி. ஃபாரின்ல படிக்கிறான் என கூறினார். அப்படியா சரிங்க மா! நீங்க நல்லாருக்கீங்களா? வணக்கம் என கூறினாள் அருவி.

அண்ணி நான் பெரிய ஆள் இல்ல நீங்க பேரு சொல்லியே கூப்பிடுங்க! என ரோகன் ஸ்னேகமாக பேச, அருவிக்கு மோகித்தை தவிர மற்ற ஆண்பிள்ளை யாரை பார்த்தாலும் பயம் தான். ராமச்சந்திரனை பார்த்தால் தந்தை போல இருக்க, அதை தாண்டி யாரை பார்த்தாலும் பயம் தான் லோகேஷ் இருந்தால் கூட வெளியே வரவும் மாட்டாள் பேசவும் மாட்டாள்.

அண்ணி அணீசியா ஃபீல் பண்றீங்களா? என்னை நீங்க தம்பியா நினைச்சுக்கோங்க. என புன்னகையுடன் பார்த்தான் ரோஹன். அது வந்து என அருவி பேச வர, இங்கே என்ன நடக்குது என சொல்லிக் கொண்டே வந்தாள் லாவண்யா.

அருவி திரும்பி பார்க்க, சுதா மற்றும் ரோஹன் என இருவரும் பார்த்தார்கள். என்ன? என்ன நடக்குது? மணி எத்தனை ஆகுது? மேடம் ஜாலியா வரீங்க? எந்த ஊர் நீங்க? எப்படி என்னோட தம்பிய வளைச்சு போட்ட? என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் லாவண்யா.

சுதா அவளை பார்த்து லாவி நீ தேவை இல்லாம பேசாத. நீ பண்றது தப்பு வார்த்தை மாறுது தேவையில்லாம பேசாத! என பேசினார். அம்மா உனக்கு என்ன தெரியும்? உன்னை மயக்கி வச்சிருக்கா! என சொல்லிக் கொண்டே லாவண்யா பேச...

அக்கா என்ன பேசுற நீ! இதையெல்லாம் நீ மோஹித் அண்ணா கிட்ட கேட்கணும். தேவையில்லாம பிரச்னை பண்ற. என்ற ரோகன் டாடி! இங்கே அக்கா வந்து அன்னிய பேசிட்டு இருக்கா என்றான் சத்தமான குரலில்.

எனக்கு யாரை பார்த்தும் பயம் இல்ல. உனக்கு அவன் அண்ணா ஆகிறத்துக்கு முன்னாடி எனக்கு அவன் தம்பி என்ற லாவண்யா வேகமாக உன் புருசனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கரதுக்கு முன்னாடி ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தான். அது ஹாரிகா என லாவண்யா சொல்ல,

லாவண்யா நீ எல்லைய மீறி போற! இது சரி இல்ல அருவி நீ நினைக்கிற மாதிரி பொண்ணில்ல எல்லா பிரச்னையும் முடிஞ்சது. நாங்களே அவங்க ரெண்டு பேரையும் எத்துக்கிட்டோம் அதனால நீயும் உன்னோட வேலையை பாரு என சுதா அருவியின் கையை பிடித்து இழுக்க, அம்மா என அதட்டிய லாவன்யா அருவியை பார்த்து, இந்த வீட்ல நான் முக்கியமான ஒருத்தி. என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹாரிகா மற்றும் அமலா இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

லாவி நீ தேவையில்லாம பண்ணிட்டு இருக்க என ரோஹன் மற்றும் சுதா இருவரும் சொல்லிக் கொண்டிருக்க, அருவி எதையும் பேசாமல் அவர்களை பார்த்தாள்.

ஹே பேசு டி அப்படியே ஊமை கோட்டான் மாதிரி நிக்கிற? என்ன திமிரா? என வரிசையாக திட்டினாள் லாவன்யா.

என்னாச்சு அண்ணி என அமலா கேட்க.. ஹே பதில் சொல்லு டி உன்னை தான் என லாவண்யா குரலை சத்தத்தை அதிக படுத்த, பதில் நான் சொல்றேன் என வந்து நின்றான் மோஹித்.

லாவண்யா அதிர்ச்சியுடன் திருப்பி பார்க்க, அருவி நேராக அவன் அருகில் போய் நின்று கொண்டாள்.

மோஹித் என லாவன்யா அழைக்க,

மாட்டிகிட்ட டி என ரோஹன் சிரிப்புடன் பார்த்தான்.

மோஹித்...?

லாவண்யா...?

வருவாள்.
 
Top