Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
ஹே பதில் சொல்லு டி உன்னை தான் என லாவண்யா குரலை சத்தத்தை அதிக படுத்த, பதில் நான் சொல்றேன் என வந்து நின்றான் மோஹித்.

லாவண்யா அதிர்ச்சியுடன் திருப்பி பார்க்க, அருவி நேராக அவன் அருகில் போய் நின்று கொண்டாள்.

மோஹித் அது வந்து நான் அவள் கிட்ட என லாவன்யா தயங்கி கொண்டிருக்க, அமலா மற்றும் ஹாரிகா இருவரும் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வமாக பார்த்தார்கள்.

உனக்கு என்ன பதில் வேணும்? அண்ட் என் பொண்டாட்டி எத்தனை மணிக்கு எழுந்து வந்தால் உனக்கென்ன? அருவிய கேள்வி கேட்க இங்கே யாருக்கும் ரைட்ஸ் இல்ல. இன்க்லூடிங் யூ! என்றான் மோஹித் பொறுமையாக..

"மோஹித் நான் உன்னோட அக்கா டா! அவள் நேத்து வந்தவ" என லாவண்யா அருவியை கண்களில் எரித்து விடும் அளவுக்கு பார்த்தாள்.

அக்காவா அது ஒரு ஓரமா இருக்கட்டும். ஆர் யூ educated fellow? டிசிப்ளின் இருக்கா இல்லையா? நீ நியூசிலாந்தில் இருக்கிற மாதிரி தெரியல. ஃபிஷ் மார்க்கெட்ல இருக்க மாதிரி இருக்கு என்றான் மோஹித் எகத்தாளம் நிறைந்த குரலில்.

நான்? என்னை எப்படி? எப்படி நீ சொல்லலாம்? நான் அப்படி என்ன பண்ணேன்? என கோபம் தலைக்கு ஏற பார்த்தாள் லாவண்யா.

அருவியை பாதுகாவலன் போல பார்த்தவன். உன்னோட சீப்பான டாக் எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். நீ என் அருவிக்கு முன்னாடி சீரோ! நீ சொன்ன வார்த்தை எல்லாத்தையும் என்னால ரிப்பீட் பண்ண முடியாது. ஆனால் உன் கிட்ட கேட்க சில விசயம் இருக்கு என்றான் மோஹித்.

ரோஹன் மற்றும் சுதா இருவரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமலாவுக்கு அடுத்த என்ன திட்டம் தீட்டி அருவியை இங்கிருந்து அனுப்பலாம் என யோசித்தாள். மோஹித் இப்படி மாறுவான் என துளி கூட நினைக்க வில்லை அவள்.

ஹாரிகாவுக்கு அருவியின் மேல் பொறாமையாக இருந்தது. லாவண்யா தனது தாயை பார்க்க, சுதா ஒரு வார்த்தை கூட பேச வில்லை. இவளை அடக்க ஆள் இல்லை என அமைதியாக இருந்தார். அவன் லாவண்யாவை பார்த்து என் கிட்ட சம்மந்தம் கேட்டு தான் சாப்ட்வேர் டெவலப்பர் சரவணனை நீ மேரேஜ் பண்ணிகிட்டியா? என கேட்டான் மோஹித்.

லாவண்யா புரியாமல் பார்க்க, மோஹித் அப்படியே அமலாவின் பக்கம் ஒரு பார்வையை பதித்து என்னை கேட்டு தான் இங்கே அமலா மிசஸ் அமலாவா இந்த வீட்டுக்குள் வந்தார்களா? சொல்ல போனால் உங்க ரெண்டு பேர் மேரேஜ்லயும் நான் இங்கே இல்லவே இல்லை. சரி தான? என இருவரையும் பார்த்தான்.

இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க மோஹித் என அமலா கேட்க, அவன் சிரித்துக் கொண்டே என்னோட லைப்ல வந்து ஜட்ஜ் மாதிரி பஞ்சாயத்து பண்ணுண்ணு நான் யாரையும் கூப்பிடல அப்புறம் ஏன் ரோஹன் உங்க அக்கா வந்தாங்க? நான் வேணும்னா extra curricular activities எல்லாம் அதிகமா லாவன்யாவுக்கு வருதுன்னு சரவணன் கிட்டயும் டாடி கிட்டயும் சொல்லவா? அதுவும் இப்போவே கூடவே லோகேஷ் கிட்ட professional ஆ அண்ட் பெர்சனலா பேச வேண்டி இருக்கு என்றான்.

அங்கிருக்கும் மூன்று பெண்களின் முகமும் மாற, லாவண்யா தனது அன்னை சுதாவை முறைத்து விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அதே போல ஹாரிகா அமலா இருவரும் அவளின் பின்னாலேயே சிட்டாக பறந்தார்கள்.

"ப்ரோ! வேற லெவல் பண்ணிட்ட" இனி அவள் வாய் திறக்கவே மாட்டாள் என்றான் ரோஹன்.

அருவி தயக்கத்துடன் மோஹித்தின் அணைப்பில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள். சுதா சிரித்த படி, எப்படி கரெக்டா வந்த? நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் டா ஆனால் லாவி கேட்கவே இல்ல என கூறினார்.

எனக்கு தெரியும்? அவள் எதுவும் பிரச்னை பண்ணுவான்னு அதனால் தான் நான் போன் லைனில் இருந்தேன். லாவண்யா பேசின எல்லாத்தையும் கேட்டேன் என்றான் மோஹித்.

ப்ரோ இப்படி நீ ரொமான்டிக் பாயாக மாறுவன்னு நான் நினைக்கல அதை விட இப்போ ஆக்சன் ஹீரோவா ஆகிட்ட... அவள் பிளான் பண்ணி சண்டை போடணும்னு வந்திருக்கா என்றான் ரோஹன்.

தெரியும் இன்னும் எவ்ளோ தூரம் போறாங்கன்னு நானும் பார்க்கிறேன். மா நீ இதை டாடி கிட்ட சொன்னாலும் சரி ஐ டோண்ட் கேர்! இப்போ கூட நான் வீட்டை விட்டு போக தயாரா இருக்கேன். என்றவன் அவளிடம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன் நீ ப்ரேக் பாஸ்ட் மேலே கொண்டு வா என சென்று விட்டான்.

மேலே செல்லும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி. ஹே என்ன டி பண்ண? அவன் எங்களை விட்டு தனியா உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்றான்? என்ன பண்ண? என சுதா கேட்க, அம்மா என அருவி கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள்.

ஹே அருவி இல்ல மா! எனக்கு தெரியாதா? இல்ல டா கண்ணு அழ வேணாம். நான் சும்மா உன்னை கிண்டல் பண்ணேன். வா வா! என அழைக்க, மா எதுக்கு அன்னிய அழ வச்ச? என கேட்டுக் கொண்டே ரோஹன் வந்தான்.

அடேங்கப்பா! உன் சின்ன அன்னிக்கு சப்போட்டா? என சுதா கேட்க... நீ தான் மா சொல்ற? அண்ணி என் கூட பேசவே இல்ல! என பார்த்தான்.

அருவி பதட்டத்துடன் சுதா மற்றும் ரோஹன் என இருவரையும் தயக்கத்துடன் பார்த்தாள். டேய் கம்முன்னு இரு டா! என்றவர் அருவி நீ என்ன பண்ணுவயோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது உன் புருஷன சாப்பிட கீழே கூட்டிட்டு வா ஓடு நான் உனக்கு போன் பண்றேன் அப்போ வந்தால் போதும் என்றார்.

சரி மா என வேகமாக அருவி மேலே ஓடி விட்டாள். ரோஹன் தனது அம்மாவை பார்த்து என்ன மா அவங்க யார் கூடவும் பேச மாட்டிக்கிறாங்க? என கேட்க, சுதா சிரித்த படி ரோஹன் நீ நினைக்கிற மாதிரி மார்டன் பொண்ணல்ல டா அருவி. அவள் கொஞ்சம் இன்டீரியர் பிளேஸ் அவளோட வளந்த விதம் எல்லாமே நம்மள போல இல்ல. நீ அவளை இன்னிக்கு தானே பார்க்கிற? அதனால உன் கிட்ட அவள் எதார்த்தமாக பேச கொஞ்சம் டைம் எடுக்கும் டா! என்றார்.

ம்ம் அது பிரச்னை இல்ல. ஆனால் ப்ரோ இப்படி மாறினது தான் எனக்கு ஆச்சரியம். அதை விட ஹாரிகாவை ப்ரோ கண்டுக்காம இருக்கிறது தான் எனக்கு ஆச்சரியம். எப்படி மம்மி இது? என ரோஹன் அவனது சந்தேகத்தை கேட்க, ரோஹனு அம்மா கிட்ட அடி வாங்காத! என காதை திருகினார் சுதா.

மா என்ன மா! நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என ரோஹன் நெளிந்தான். சுதா கடுமையாக அந்த ஹாரிகா பத்தி மோஹித் கூட இணைச்சு வச்சு பேசாத டா ரோஹன். இது அருவி காதில் விழுந்தால் தப்பா நினைச்சுக்குவா! அதை விட அவள் இந்த வீட்டு மருமகளா வராதது நினைச்சு என்னோட வேண்டுதல் பலிச்சதுல நான் சந்தோசத்தில் இருக்கேன். இந்த மாதிரி பேசி அம்மாவை டென்ஷன் பண்ணாத அப்படி இருந்தால் உன் அக்கா கூட சேர்ந்து ஊருக்கு கிளம்பு என கூறிய சுதா அவரது வேலையை பார்க்க சென்று விட்டார்.

மா இல்ல மி என சொல்லிக் கொண்டே ரோஹன் தன் அன்னையின் பின்னால் சென்றான்.

இங்கே மோஹித் கட்டிலில் படுத்துக் கொண்டே போனை நோண்டினான். மெதுவாக பூனையை போல உள்ளே வந்தாள் அருவி. ஹனி நீ மெதுவா வரணும்னு அவசியம் இல்ல வா வா என அழைத்துக் கொண்டே அவளை பார்த்தான்.

நான் உங்க மேலே கோபமா இருக்கேன். என கையை கட்டிக் கொண்டே அவனை பார்த்தாள் அருவி. போனை படுக்கையில் தூக்கி போட்டவன். என்னாச்சு நான் என்ன பண்ணேன் என் அருவி பேப்ஸ்சை என அவளை பார்த்தான் மோஹித்.

நீங்க அம்மா கிட்ட எதுக்கு அப்படி சொல்லிட்டு வந்தீங்க? என முறைத்து பார்த்தாள். நானா? நான் என்ன சொன்னேன்? எனக்கு தெரியலயே? என எழுந்து அவளருகில் சென்றவன் படுக்கைக்கு தள்ளி கொண்டு வந்தான்.

விடுங்க I'm not expecting from you.. it's too bad. என கூறினாள் அருவி. அவளின் அழகான ஆங்கில பேச்சில் மயங்கிய மோஹித். அப்படி என்ன மா சொன்னேன்? சொல்லுங்க நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க ரெடியா இருக்கேன் என்றவன் கைகள் அவளின் பின்னால் இருக்கும் ஜிப்பை சர்ரென கீழே இழுத்து விட்டது.

என்ன பண்றீங்க சாமி? என அருவி அடுத்து பேச வர அதற்குள் மோஹித்தின் நகர்வுகள் வேகமாக இருந்தது.

தொடரும்..
 
Top