Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
என்ன பண்றீங்க சாமி? என அருவி அடுத்து பேச வர அதற்குள் மோஹித்தின் நகர்வுகள் வேகமாக இருந்தது.

என்ன பண்றேன்? என அவனது குரலில் வித்தியாசம் தெரிய மோஹித் அவளின் மடியில் படுத்துக் கொண்டு அவளின் வயிற்றில் முத்தமிட்டான். அருவி கூச்சத்தில் நெளிந்தவள் அவனை விலக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். என்னமோ சொல்லிட்டே வந்த இப்போ சொல்லு டி பார்க்கலாம். என ஒற்றுதலை அதிக படுத்தினான்.

உங்களை நான் குடும்பத்தில் இருந்து பிரிக்கிறேன்னு அம்மா சொல்றாங்க! எதுக்கு இப்படி நடந்துக்குறீங்க? என கஷ்ட பட்டு சொல்லி முடித்தாள். அம்மாவா அப்படி சொன்னது? என வேகமாக அவளின் மடியில் இருந்து எழுந்தான் மோஹித்.

அய்யோ அய்யோ சாமி எங்கே போறீங்க? அவ என அருவி பதட்டத்துடன் எழுந்து அவன் கைகளை பிடித்தாள். விட்றி அம்மாவை பார்த்திட்டு வரேன் என அவன் ஆவேசமாக நிற்க, அய்யோ சாமி நான் சொல்றத கேளுங்க அம்மா அந்த அர்த்தத்தில் சொல்லல. நீங்க எதுக்கு ப்ரேக் பாஸ்ட் மேலே கொண்டு வர சொன்னீங்க? அதுக்கு தான் அம்மா அப்படி சொன்னாங்க என கூறினாள்.

எப்படி இருந்தாலும் சொல்லி இருக்க கூடாது. உன்னை எப்படி அவங்க சொல்லலாம். என முரட்டு காளையை போல சீற திரிந்தான் மோஹித். அம்மா சொல்றதுல தப்பு இல்ல நம்ம எல்லார் முன்னாடியும் எல்லார் கூடவும் சாப்பிடணும் அதை விட்டு தனியா எதுக்கு சாப்பிடணும்? சொல்லுங்க பார்ப்போம் என அருவி கேட்க, அந்த இடியட் பெல்லோ இருக்கிற இடத்தில் என்னால சாப்பிட முடியாது என்றான் விடா கண்டனாய்.

இது என்ன பழக்கம் சின்ன குழந்தை மாதிரி? உங்க அக்கா எதுவோ சொல்லிட்டு போறாங்க உண்மை என்னன்னு நமக்கு தான் தெரியுமே? என அருவி சொல்ல, நீ சப்போர்ட் பண்ணி பேசாத டி! எனக்கு பிடிக்கல.. அதுக்கு அர்த்தம் இனி எப்போவுமே அவளை பிடிக்காது.

சரி சரி அவங்க இருந்திட்டு போறாங்க. நீங்க வாங்க நம்ம கீழே போலாம். அம்மாவுக்காக..

நெவர்

இல்ல அது அப்பாவுக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி இருக்காது. நான் சொல்றத கேளுங்க என அருவி சொல்ல.. நான் தான் சொல்றேன் தானே முடியாது டி என கோபத்தில் கூறினான்.

அப்போ தள்ளி போங்க கிட்ட வராதீங்க என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அருவி. இப்போ மட்டும் எங்கே டி என்னை பக்கத்தில் விடுற? இப்போ மட்டும் விடுறதுக்கு இது வரைக்கும் நான் உன்னை வேடிக்கை தானே பார்க்கிறேன் என மோஹித் சலித்து கொண்டான்.

ஒரு சில மணி துளிகள் அமைதியாக சென்றது. மோஹித் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அருவி தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

இப்போ என்ன டி வேணும்? என சொல்லிக் கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான். கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது.

நீங்க கீழே வந்து சாப்பிடணும் என கூறினாள். சரிஇஇஇ! நான் வரேன் ஆனால் அதுக்கு எனக்கு லஞ்சம் கொடுக்கணும் என்றான் மோஹித்.

"அப்டின்னா?" என அருவி அவனை உற்று பார்க்க, அப்டின்னா என்றவன் இங்கே ஒரு லஞ்சம் கொடுத்துக்கிட்டே இருக்கணும் உனக்கு ஓகேன்னா நான் வரேன். இல்லன்னா நான் தூங்க போறேன் என மோஹித் கூறினான்.

நீங்க சொல்றது புரியல? லஞ்சம் மீன்ஸ்?

"லஞ்சம் மீன்ஸ் முத்தம் அப்புறம் இறுக்கி கட்டிக்கனும்"

"முடியாது" என்றாள் எடுத்த எடுப்பில்.

அப்போ நான் வரல போடி என அவளின் மடியில் இருந்து தலை கீழே இறங்கியது.

அங்கும் இங்கும் நடந்தாள் அருவி. அவளின் எண்ணுக்கு சுதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. வேகமாக போனை எடுத்தாள்.

பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல படுத்த படி அருவியை பார்த்துக் கொண்டிருந்தான் மோஹித்.

அம் அம்மா! என அருவி பதிலளித்தாள். டிபன் ரெடி மோஹித்தை கூட்டிட்டு வா அருவி என சுதா சொல்லி விட்டு போனை வைத்தார்.

அருவி வேறு வழி இல்லாமல் அவனை பார்த்தாள். என் கிட்ட நீ வந்து தாண்டி ஆகணும் என்னும் தோரணையில் மோஹித் அவளை பார்க்க, அருகில் வந்தாள் அருவி.

அது வந்து ந... நான் உங்களுக்கு முத்தம் கொடுக்கிறேன். என தயக்கத்துடன் கூறினாள்.

மோஹித் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் படுக்கையை விட்டு எழுந்தவன் நேராக அவளின் அருகில் வருவதை போல கதவை நோக்கி சென்றான்.

என்னங்க? சாமி! என அருவி அழைக்க, வா சாப்பிட போலாம் என அழைத்தான் மோஹித்.

அப்போ முத்தம் வேணாமா? என அருவி கேட்க, மோஹித் அதே வெற்று பார்வையுடன் சில விசயத்தை விருப்ப பட்டு செய்யணும். ஃபோர்ஸ் பண்ணி பண்ண கூடாது. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல. நீ தான் ஸ்டாட்டிங்லயே சொல்லிட்டயே என்னை பிடிக்காதுன்னு அந்த மாதிரி இருக்கும் போது நீ எனக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என மோஹித் கதவை திறந்தான்.

நில்லுங்க என அருகில் வந்த அருவி எதையும் யோசிக்காமல் குதி காலில் நின்று எக்கி அவனுக்கு முத்தம் கொடுத்தாள். ஒற்றும் இடைவெளியில் என்ன... இச்.. டி.. இச்...இது என விட்டு விட்டு மோஹித் கேட்க.. புருசன் ஆசைய பெஞ்சாதி நிறைவேத்தனும் என இச் என ஒட்டுதலுக்கு இடையில் கூறினாள் அருவி.

அப்போ நான் உனக்கு அவ்ளோ தான் இல்ல.. என மோஹித் விலக முயற்சி செய்ய, கொ... கொடுத்த முத்தத்துக்கு புரோபர் ரஸ்பான்ஸ் பண்ண மாட்டீங்களா சாமி! என்றாள் தயக்கத்தை உடைத்து. ஒன்னும் வேணாம் போ என நகர்ந்தவன். சட்டென முகம் தெளிந்தவனாய் என்ன சொன்ன? என அருகில் வந்து அவளின் இடையை பிடித்து அருகில் இழுத்து உதட்டுடன் உதடு சேர்த்து மென் முத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வன் முத்தமாக மாற்றி கொண்டிருந்தான்.

அருவி வெட்கத்துடன் மயங்கி கிறங்கி அவன் முன் சொக்கி சுயம் இழந்து அவளின் மொத்த வாழ்க்கையின் அர்த்தமும் மோஹித் என தெளிந்து அவன் முன் மட்டும் சிந்தை இழந்து இருந்தாள். மேல் உதடு கீழ் உதடு என முத்தம் வேகமாக அருவியும் மயங்கி கொண்டே அவனிடம் இளைந்தாள்.

மூச்சு சூடாகியது. இந்த தருணம் அவ்வளவு அழகானது. மோஹித் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவளும் அவனை கட்டிக் கொண்டாள். இருவரும் இங்கு இல்லை பரவச உலகில் இருந்தார்கள். மோஹித் என்ன நினைத்தானோ பாய்ந்து கொண்டு உதட்டில் முத்தமிட்டு அவளின் சிறிய சிவந்த உதட்டில் இருக்கும் மெல்லிய தோலை மொத்தமாக உரித்து இரத்தம் கண்ணி சிவக்கும் வரை செய்தவன். அவளின் ஜிப்பை மீண்டும் கழட்டி விட்டான். மெல்ல அவளை கட்டிலுக்கு தள்ளி கொண்டு சென்றான்.

அருவி இறுக்கி கண்களை மூடிக் கொண்டாள். அவளின் சிந்தையில் ஒருவன் மட்டுமே அது மோஹித். அதே போல மோஹித்தின் அத்தனை செல்களும் ஹனி ஹனி என அவளுக்காக துடித்து கொண்டிருந்தது. விரல்கள் வதனத்தில் மேடு பள்ளம் பார்க்காமல் ஸ்பரிஸித்து கொண்டே சென்றது.

இருவரும் எப்படி படுக்கையில் விழுந்தார்கள் என தெரிய வில்லை. மோஹித் அவளின் உதட்டை கவ்வி கொண்டு உடைய களைக்கும் நேரம் இருவரது போனும் அடித்தது. சட்டென கண்களை திறந்த அருவி உடல்கள் சிலிர்க்க மோன நிலை களைந்து அவனை பார்க்க தயங்கி தடுமாறினாள்.

மோஹித் அவனது போனை கடுப்புடன் பார்த்தான். அதில் கரண் என இருக்க, கடன்காரன் என மனதில் அர்ச்சித்து கொண்டவன். சொல்லு டா * என கெட்ட வார்த்தையை அள்ளி தெளித்தான்.

மச்சி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? நீ கரடி அளவுக்கு இல்ல காட்டெருமை என உள்ளுக்குள் கோபம் வெடித்தது மோஹிதிக்கு.. இந்த பக்கம் அருவிக்கு சுதா மீண்டும் அழைக்க, இதோ மா வரோம் என போனை வைத்தவள்.

வாங்க போலாம் என தலையை குனிந்து கொண்டே கூறினாள். எதுக்கு போன் பண்ண என எழுந்து கொண்டவன் அவளுடன் அறையை விட்டு வெளியே வந்தான் மோஹித்.

மச்சி எப்போ டா நைட்டு ஆகும்? எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றது என கரண் கேட்க.. மோஹித் கெட்ட வார்த்தையை விட்டு வணக்கியவன் வரேன் இரு உன்னை I will kill you என கட் செய்து விட்டு நடந்தான்.

அருவி முன்னால் செல்ல, அவளின் முதுகில் ஜிப் கலன்டு இருக்க, காட் இப்போ என்ன பண்ண? என மோஹித் அருவியின் அருகில் நெருங்கி வேகமாக பின்னால் இருக்கும் ஜிப்பை போட்டு விடவும் அதை ஹாரிகா அமலா இருவரும் பார்க்கவும் சரியாக இருந்தது.

வருவாள்.
 
Top