Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
மழை சாரலாக தூறிக் கொண்டிருந்தது. அதனால் மறவீட்டில் இருந்து சின்ன சின்ன மழை துளிகள் சொட்டுவது நன்றாகவே கேட்டது. உள்ளுக்குள் ஒரு வித பயம் பதட்டம் அருவிக்கு இருக்கத் தான் செய்தது. மோஹித் புதிய ஆடவன். அப்படியென்றால் அவன் பட்டனமாக தான் இருக்க வேண்டும். தன்னை எதுவும் செய்து விட்டால் என நினைத்துக் கொண்டு திரும்பி பார்த்தாள்.

அவனது போனை நோண்டிக் கொண்டிருந்தவன் கண்கள் கொஞ்சமும் அவள் மேல் இல்லை. ஆம் மோஹித் அவனது கதையில் கதாநாயகியின் அறிமுக காட்சியை அதாவது ஸ்கிரிப்ட்டை டைப் செய்து கொண்டிருந்தான். எதோ ஒரு நிம்மதி ஆனால் அதையும் தாண்டி படபடப்பு அதே நிலையுடன் அவ்வப்பொழுது விழிப்புடன் இருந்தவள்.
அவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்து அப்படியே உறங்கி விட்டாள். இரவு எப்படியும் தனது ஊருக்கு சென்று விடலாம் என நினைத்துக் கொண்டே அமர்ந்தவள் எப்படி உறங்கினாள்? என தெரிய வில்லை.

அடுத்த நாள் மோஹித்தின் தோலோடு தோல் உரசி தலையை முட்டிக் கொண்டு இருவரும் உறங்கி கொண்டிருந்தார்கள். குட் ஸ்மெல் பேபிஇஇஇ!! ஐ வான்ட் யூஉஉஉ என மெதுவாக முணுமுனுத்தவன் உடலை தலையை சற்று திருப்பி பார்க்க, அழகு ஓவியமாக இருந்தாள் தேனருவி. உறங்கும் போது எவ்வளவு அழகு!! ப்பா என தோன்றியது அவனுக்கு. புன்னகையுடன் இதை கூட சீன்ல சேர்த்துக்கலாம். ரொமாண்டிக் க்ளிக் என தோன்றியது உள்ளுக்குள். காலை வேலை உடலுக்குள் கொஞ்சம் உஷ்னம் பரவத்தான் செய்தது.

அவன் இன்னும் தலையை நகர்த்தாமல் இருக்க, மெதுவாக அவளிடம் அசைவு தெரிந்தது. சட்டென முழித்து பார்க்க, மோஹித் அவளை தான் விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மாடியோவ்!! என கத்தியவள். வேகமாக எழுந்து கொண்டாள்.

சரியாக அதே நேரம் ஊருக்குள் அருவிய காணோம்! அருவிய காணோம் என ஊருக்குள் பரவிக் கொண்டிருந்தது. அருவியின் தாய் அவள் பிறந்ததும் இறந்து விட அவளின் தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டார். அருவி தான் அவர்களின் வீட்டு கடை குட்டி, அவளின் அண்ணன் வேலன் தான் ஊர் தலைவரின் பெண்ணை மணந்து இருக்கிறான். அதற்கு அடுத்து மல்லி கடைசியாக தேனருவி. அவளின் மீது மல்லியின் கணவனுக்கு பெரும் கண் எப்படியாவது சீக்கிரமே அருவிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என தன் தங்கையின் கற்பை காப்பாற்ற வேண்டும் என மல்லி தான் தலைவரின் தம்பி மகனுக்கு அவளை கட்டி கொடுத்து விட முயற்சி மேற்கொண்டவள் அதில் முக்கிய முயற்சியாக மூக்கு குத்தி விட முடிவெடுத்தார். அவர்களின் மலை கிராமத்திலிருந்து கொஞ்சம் மைல் சென்றால் கடல் வரும், அதனால் இந்த பழங்குடியில் பாதி பேர் கட்டுமரத்தில் மீனும் பிடிப்பார்கள். அப்படி இருக்க மல்லியின் கணவன் ரங்கன் சென்றிருந்தான்.

மல்லி அங்கும் இங்கும் நடந்து கொண்டே என்ன செய்வது? என யோசித்து விட்டு அருவி தன் அண்ணனின் வீட்டில் இருப்பாள் என நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

அய்யோஓஓஓ!! என பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கீழே கேட்க... அருவி வேகமாக எட்டி பார்த்தவள். சட சடவென கீழே இறங்கினாள். அங்கே வயலில் போட்டிருந்த அத்தனை நெல் மணியும் விடாமல் பெய்த மழையில் அழுகும் நிலையில் இருந்தது. என்னாச்சு அக்கா? என பயிரின் நிலையை பார்த்தவள். கண்களில் சோகமும் குடி கொண்டது. ஹே அருவி புள்ளை உன்னை ஊர் முழுக்க மல்லி தேடிட்டு இருக்கா? இங்கே என்ன பண்ணுத? என கேட்டுக் கொண்டே மாரி முன்னால் வந்தார்.

அது நேத்து பயங்கர மழையா இங்கே மர வீட்டில் தான் என சொல்லும் போதே அவர்களின் பார்வை மாறி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அக்கா என்னாச்சு? என கேட்கும் போதே மோஹித் மேலே இருந்து கீழே இறங்கி வர, நேற்று ரிசார்ட்டுக்கு மோஹித் வரவில்லை என தெரிந்து கொண்ட அந்தகன் அவனை தேடி அங்கு வரவும் சரியாக இருந்தது.

அருவியின் உடையை பார்த்ததும், மோஹித்தை வளைத்து பிடித்துக் கொண்டது கூட்டம். சாமி என அங்கதன் அருகில் வந்து என்னாச்சு நீங்க எங்கே இருந்தீங்க? என்றவன். அருவியின் உடையை பார்த்ததும் சாமி அந்த பொண்ணு உங்க கூட இருந்தாளா? என பதட்டத்துடன் கேட்டான்.

ஆமா! நைட்டு சரியான மழை அந்த பொண்ணு என் கூட தான் மேலே ஸ்டே பண்ணா! சரியான குளிர் நடுக்கம் அதனாலே என்னோட ஓவர் கோட்டை கொடுத்தேன். என மோஹித் சாதாரணமாக சொல்லி முடிக்க.. அங்கிருக்கும் ஆண் கூட்டம் மொத்தமும் மோஹித்தை வளைத்து பிடித்தது.

ஹே ரப்பிஸ் என்ன பண்றீங்க? என மோஹித் கத்திக் கொண்டே திமிறினான். சாமி நேத்து ராத்திரி என்ன நடந்ததோ தெரியாது. ஆனால் இனி உங்களை விட மாட்டாங்க. என மெல்லிய குரலில் கூறினான். அனைவரும் அவர்கள் இருவரையும் ஊருக்கு இழுத்து சென்றார்கள்.

ரங்கன் இந்த முறை அதிக மீன்களை பிடித்து விற்றதால் பெரிய லாபத்துடன் எதோ ஒரு காரணத்தை சொல்லி தேனருவிய கட்டிக்கிடனும். என மீசையை முறுக்கிய படி ஊருக்குள் நுழைந்தான். அங்கே அக்கம் பக்கத்தில் கேட்ட விசயங்களை பார்த்ததும் உள்ளுக்குள் கலவரம் அதிகரிக்க, சரி இதுவும் நமக்கு சாதகமாக தான் முடியும். அவளை பத்தி தப்பா பேசியே கட்டிக்காம வச்சுக்கலாம். என திட்டம் தீட்டிய படி வந்தான். ஆனாலும் உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

ராத்திரி முழுக்க இவனோட தேனு மர வீட்டில் தனியா இருந்திருக்கா! அதெப்படி எதுவுமே நடக்காம போகும்? அவனோட சட்டைய போட்டிருக்கா? இதை விட வேற என்ன ஆதாரம் வேணும் என தேனருவியை பழி வாங்கும் எண்ணத்தை சிரத்தையாக வெளி படுத்திக் கொண்டிருந்தான் ரங்கன்.

எப்படியும் அவள் நமக்கு தான் என ரங்கனின் கண்களில் காம வெறி மின்னிக் கொண்டிருந்தது. எப்படியும் இந்த பட்டனத்துக் காரன் இவளை கட்டிட்டு போக மாட்டான். இஸ்ட பட்டு அனுபவிக்கனும். என உள்ளுக்குள் மிருகம் காவு வாங்க காத்துக் கொண்டிருந்தது.

தேனருவி அனைவரையும் பார்த்து வேகமாக இல்லை என்னை நம்புங்க என கதறிக் கொண்டிருக்க, செல்லாது ஊர் வழக்கப்படி அந்த பட்டணத்தில் இருந்து வந்தவன் கூட ஒரு நாள் ராத்திரி முழுக்க ஒண்ணா இருந்திருக்க, அவன் உன்னை தொட்டுட்டான். என மீதி இருக்கும் பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள...

தேனருவி அழுது கொண்டே இல்ல எதுவும் நடக்கல! நான் வேணும்னா காட்டு காளிக்கு பூகுழி இறங்குறேன். என அவள் அழுது கொண்டே கூறினாள். அனைவரும் ஒருவருக்குள் பேசிக் கொண்டார்கள். மல்லி அழுது கொண்டே ஓரிடத்தில் நிற்க, இன்னொரு பக்கம் ரங்கன் பீடியை புகைத்திக் கொண்டிருந்தான்.

என்ன ரங்கா இப்படி ஆகி போச்சு? அப்போ அருவி தப்பு பண்ணலயா? என கூட்டாளிகள் கேட்க.. எது நடந்தால் என்ன? அவளை இதுக்கு மேலே தலைவரோட தம்பி மகன் கட்டிக்க மாட்டான். இப்போ தான் சேதி வந்துச்சு. என் பொண்டாட்டிகாரியோட அண்ணன் வேலன் அந்த ஆட்டம் ஆடினான்! இப்போ இருக்கு!

என்ன மச்சான் பண்ண போரீரு? என இன்னொருவன் கேட்க, அவள் எனக்கு தான் ஊருக்கு முன்னாடி வச்சுக்க போறேன் என ரங்கன் சிரிக்க, அவனது கூட்டாளிகள் அனைவரும் சிரிக்க, அந்த பக்கம் வந்த மல்லியின் காதுகளில் இந்த விசயம் கேட்க நெஞ்சம் பதைத்தது. என்னோட வாழ்க்கை தான் அழிஞ்சு போச்சு. என் தங்கச்சி நிம்மதியா வாழணும் அப்டின்னா அவள் இங்கே இருக்க கூடாது என நினைத்தவள். நேராக தேனருவியிடம் விசயத்தை சொல்ல அவள் அழுது கொண்டே ஒத்துக் கொள்ள மாட்டேன் என விடாப்பிடியாக அழுது கரைந்தாள்.

மல்லி எப்படியோ சொல்லி அவளின் மனதை மாற்றி விட.. அழுது கொண்டே பார்த்தாள். நான் சொல்றத கேளு அருவி. இங்கே இருந்தால் உனக்கு பாதுகாப்பு இல்ல. அந்த பட்டணத்து பையன் உன்னை தொடாமல் கண்ணியமா நடந்திருக்கான். அதனால் அவரு உன்னை பாதுகாப்பா பாத்துக்குவார். ஒரே ஒரு பொய் சொல்லு போதும். இங்கே இருந்து போய் நீ நிம்மதியா வாழலாம் என மல்லி எடுத்துக் கூற... அருவி வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டாள்.

மோஹித் அங்கிருந்து அவனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப, வேகமாக வந்த வள்ளி. ஐயா அவள் எல்லா உண்மையும் சொல்லிட்டா! அந்த பட்டனத்துக்காரர் என மல்லி தயக்கத்துடன் சொல்லி முடிக்க, what the hell என குரலை உயர்த்திக் கொண்டு மோஹித் தாவிக் கொண்டு வர, நீ அவளை கெடுத்திட்ட நீ அவளை கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளோட தான் வாழணும் இது தான் ஊர் தீர்ப்பு என சொல்லி முடித்தார்.

இருவரின் கழுத்திலும் வலுக்கட்டாயமாக மாலை போட்டார்கள். ரங்கன் தாவிக் கொண்டு வந்து என்ன பண்றீங்க? அருவி தான் சொன்னாலே! எப்படி இது சாத்தியம் என அருவி இங்கிருந்து செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை அனுபவிக்க முடியாதே என வந்தான்.

மோஹித் அவளிடம் ஹே எதுக்கு டி பொய் சொன்ன? நான் உன்னை என்ன டி பண்ணேன்? ஒழுங்கா உண்மைய சொல்லு டிஇஇஇ! என பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

அருவி அழுது கொண்டே நிற்க... அதற்குள் வெட்டருவா, நெல் அறுப்பான் , கத்தி கம்பு என அனைத்துக்கும் நடுவில் வலுக்கட்டாயமாக மோஹித் அவளின் கழுத்தில் தாலியை கட்டினான். நீ!! உன்னை.. ச்சீ! இனி நான் யாருன்னு நீ பார்ப்ப டி! உனக்கு பாவம் பார்த்தேன்ல என்னை போய் என் மேலே எப்படி டி?.. ச்ச என் மேலே இப்படி ஒரு ஒரு கெட்ட பேரை உருவாக்கிய உன்னை சும்மா விட மாட்டேன் என பற்களை நரநரத்தான்.

இனி அருவியின் கண்களில் நீர் கொட்டியது.

இனி என்ன நடக்கும்?

வருவாள்..
 
Top