தன்னை கட்டு படுத்திக்கொண்டு ஜீவா அவளிடம் இருந்து மெல்ல நகர்ந்தான். எதுவும் பேசாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மூர்க்க தனமான முத்தத்தில் மூச்சடைத்து போன வானதி மெதுவாக அவன் அருகில் நெருங்கி ஜீவா! என அழைத்தாள்.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, என்னாச்சு? சாரி நான் தெரியாம விலகிட்டேன் என வானதி தயக்கத்துடன் கூறினாள்.
உனக்கு உரிமை இருக்கு. நீ என்ன வேணாலும் பண்ணலாம். ஏன்னா நான் உனக்கு தாலி கட்டிருக்கேன். உன்னோட புருஷன் என்றான் ஜீவா.
அய்யோ இதையே எத்தனை தடவை சொல்லுவீங்க? என அவளின் உதடுகள் குளிரில் நடுங்கியது.
ஜீவா அவளை எலனமாக பார்த்தவன். எதுவும் பேசாமல் வேறு புறம் திரும்பி கொண்டான். அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? எதுக்கு என்னை ட்ரெஸ் எல்லாம் கழட்ட சொன்னாரு? அய்யோ என வேகமாக சென்று இலகுவான உடையை மாற்றினாள் வானதி. அவனுக்கு அருகில் வந்து படுத்து கொண்டாள்.
தன்னவனை அருகில் பார்க்க ஆசையாக இருந்தது. கனவு நனவாகி விட்டதன் பூரிப்பு முகத்தில் தாண்டவம் ஆடியது. அவன் மேல் மெல்ல கைகளை போட்டபடி தூங்க ஆரம்பித்தாள்.
அவள் தூங்கி விட்டாள் என அவளிடம் இருந்து வரும் சீரான மூச்சு பதிலளிக்க, மெதுவாக அவள் பக்கம் திரும்பினான் ஜீவா. "எனக்கு உங்களை பிடிக்கல! எத்தனை தடவை சொல்றது? நீங்க உங்க ரெண்டு கண்ணால தானே பார்த்திட்டு இருக்கீங்க? இதுக்கு மேலே உங்களுக்கு என்னை விளக்கம் கொடுக்கணும்? என்னை நிம்மதியா விடுங்க." என வானதி சொன்னது அவன் காதுகளில் ரீங்காரமாக கேட்டுக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. வானதி முழித்து பார்க்க, படுக்கையில் ஜீவா இல்லை. அரக்க பரக்க குளித்து முடித்து வெளியே வந்தவள். கீழே வர, அங்கே ஜீவா காலை உணவை முடித்து கை கழுவி இருந்தான். ஜீவாவிடம் அவள் பேச போக, நேராக கிச்சன் சென்ற ஜீவா தனது அம்மாவிடம் "இனி என்னை டார்ச்சர் பண்ண மாட்டீங்க தானே! நீங்க சொன்ன மாதிரி உங்களுக்காக அண்ட் உங்க ரெண்டாவது பையனுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனி எதுலயும் என்னை நீங்க தொந்தரவு பண்ண கூடாது காட் இட்" என சொல்லி விட்டு திரும்பினான்.
காலங்காத்தால என்னடா பேச்சு? நீ ஒன்னும் சரி இல்ல ஜீவா! என சீதா தன் மகனை திட்டிக் கொண்டே வெளியே வர அங்கே வானதி நின்று கொண்டிருந்தாள். ஜீவா அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்க வில்லை. அவனது சோல்டர் பேக் மற்றும் கார் கீயை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டான்.
அய்யயோ இந்த பொண்ணு வேற எல்லாத்தையும் கேட்டுட்டாளே! என சீதாவுக்கு தர்மசங்கடமான சூழல் உருவானது. வானதிக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. இதயத்தில் மொத்தமாக கத்தியால் யாரோ குத்துவது போல உணர்ந்தாள் வானதி.
அட வானதி! எப்போ மா வந்த? வா வா! என்ன குடிப்ப? காபியா? டீயா? என கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்தார் சீதா. உங்களுக்கு எதுக்கு அத்தை சிரமம் நானே போடுறேன் என வானதி டீ போட சென்றாள்.
வானதி அதுக்கும் முன்னாடி இங்கே பூஜை அறை வா மா! என அழைத்தார் சீதா.
என்னங்க அத்தை என கொண்டையை அவிழ்த்த படியே வந்தாள் வானதி.
இந்தா மா! எல்லாமே ரெடி இந்த வீட்டு மூத்த மருமகள் தான் இதை பண்ணனும். வா டா கண்ணு வந்து விளக்கு ஏற்றி சாமிக்கு தீபாராதனை காட்டு என்றார் இன் முகத்துடன்.
அத்தை நீங்க அப்புறம் அக்கா இருக்கும் போது நான் எப்படி? என வானதி தயக்கத்துடன் கேட்க... இதுல தயக்க பட என்ன இருக்கு? வான்மதி உனக்கு உங்க வீட்டில் அக்கா. ஆனா இந்த வீட்டில் நீ தான் மூத்தவள் அது தான் முறையும் கூட வா மா! வா டா! என அழைத்தார்.
பக்தியுடன் உள்ளே நுழைந்த வானதி பாலும் தெளி தேனும், குரு பிரம்மா குரு விஷ்ணு, சரஸ்வதி நமஸ்துப்யம் என மந்திரங்களை சொல்லி தீபாராதனை காட்டி ஒரே குத்தியில் கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி என அனைத்தையும் ஏற்றினாள்.
சீதா ஆச்சரியத்துடன் பரவால்ல மா! என் வீட்டுக்கு மகாலட்சுமிய தான் கூட்டிட்டு வந்திருக்கா உங்க அக்கா என்றார் புன்னகையுடன்.
வானதி மென் சிரிப்பை உதிர்த்தாள். நல்லது மா அப்படியே ஹால், நிலவு கால், சமையல் கட்டு எல்லாத்துக்கும் காட்டு மா! என அவரும் தீபாராதனை ஒத்தி கொண்டார். அவள் அனைத்தையும் செய்து முடித்து விட்டு பூஜை அறை வந்து சேர்ந்தாள்.
வானதி மா வா வா! வந்து சூடு ஆரிடுறதுக்குள் குடிச்சிரு மா என சீதா அழைத்தார்.
உங்களுக்கு எதுக்கு அத்தை சிரமம் என வானதி வர, அப்படி இல்ல டா வா கண்ணு என்றார். வானதி ஒரு மிடுக்கு குடித்து விட்டு சீதாவை பார்த்து என்னாச்சு அத்தை என கேட்க, அது தப்பா நினைச்சுக்காத மா! ஜீவா கொஞ்சம் முசுடு. ஆனால் கெட்டவன் இல்ல மா என்னன்னு தெரியல இப்படி எல்லார் கிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு தான் விழுவான்.
அதனால் என்ன அத்தை நான் எதையும் பெருசா எடுத்துக்கல என்றவள். எதுவும் வேலை இருக்கா சொல்லுங்க என வானதி கேட்க... இல்ல மா எந்த வேலையும் இல்ல ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு என அவளை அழைத்தார்.
வான்மதி மற்றும் சஞ்சய் இருவரும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தான் வான்மதி மற்றும் வானதி இருவரும் பிறந்த வீட்டுக்கு செல்கிறார்கள்.
சஞ்சய் மற்றும் வான்மதி இருவரை பற்றியும் சீதாவும் கண்டு கொள்ள வில்லை. தனது பிள்ளையின் சந்தோஷம் தான தனக்கு முக்கியம் என நினைத்தார். வானதியை வலுக்கட்டாயமாக தூங்கு மா என அனுப்பி வைத்தார் சீதா.வானதி மேல அவளது அறைக்கு செல்லும் போது தான் குளித்து முடித்து வெளியே வந்தாள் வான்மதி.
"சின்னு மா" என கையை அசைத்தாள் வான்மதி. அக்கா! என சிரித்துக் கொண்டே அழைத்த வானதி. சீக்கிரம் போ போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்க என சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.
அறைக்குள் நுழைந்த வானதியின் கண்கள் கலங்கியது. இது வான்மதியை பார்த்து பொறாமை இல்லை. தன்னை நினைத்து சுய பட்சாதாபம் ஏற்பட்டது. "எனக்கு நம்பிக்கை இருக்கு ஜீவா நீங்க மாறிடுவீங்க. என்னை புரிஞ்சுக்குவீங்க" என விம்மி அழுதாள்.
அந்த நேரம் போன் சினுங்க கண்களை துடைத்துக் கொண்டே போனை பார்க்க, சங்கவி என இருந்தது. அய்யயோ சங்கவி என போனை எடுத்து என்ன சங்கவி போன் பண்ணிருக்க? என தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.
"ஹே உன்னோட டாக்டர் புருஷன் ஹாஸ்பிடல் வந்தாச்சு போல" என பதிலுக்காக காத்திருந்தாள் சங்கவி.
"ஆமா வேலை முக்கியம் தானே"
"சரி தான் நீ முக்கியம் இல்லை என்ற விசயம் தான் மறைமுக பதில் அதை சொல்லுவியா!" என கேட்டாள் சங்கவி.
"ஹே இல்ல டி!"
"ஹே அடங்கு டி! அவன் உலகத்தில் இல்லாத ஆளா?"
"சங்கவி அவரு என்னோட ஜீவா!" என கோபத்தில் கத்தினாள் வானதி.
நாங்க அவ்ளோ சொல்லியும் அவனை கட்டிகிட்டல்ல சரி கார்த்திக் பக்கத்தில் இருக்கான் கொடுக்கிறேன் என சங்கவி சொல்ல, ஹான் கொடு நீங்க ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு வரல உங்க மேல கோபமா இருக்கேன் என பொய் கோபம் கொண்டாள் வானதி.
அதை நானும் கார்த்திக்கும் சொல்லணும் என சங்கவி சொல்லி கொண்டே கார்த்திக் பேசு டா என நீட்டினாள்.
கார்த்திக் விடாப்பிடியாக முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். இட்ஸ் ஓகே என் கல்யாணத்துக்கு வரலைன்னா கூட பரவாயில்லை உங்களை நான் மன்னிச்சிடுறேன். அப்புறம் அவுட்டிங்கா? என வானதி கேட்க... மறு பக்கம் அமைதியே நிலவியது.
பேசு கார்த்திக் என சங்கவி உலுக்க.. மிஸ்டர் ஜீவா கஷ்ட படுத்தவே கழுத்தை நீட்டி போயிருக்கா! நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அவளுக்கு என்னோட பாசம் முக்கியம் தெரியல, ஜீவா தான் முக்கியம். சோ அவள் கிட்ட பேச நான் விரும்பல சங்கவி காலை கட் பண்ணு என கூறினான்.
சங்கவி அவனுக்கு மட்டும் தான் பேச தெரியுமா? எனக்கும் பேச தெரியும். அவனை ஒழுங்கா இருந்துக்க சொல்லு. நான் கஷ்ட படுவதை அவன் பார்த்தானா! அவன் என்ன என் கிட்ட பேசாமல் இருக்கிறது. நான் இனி அவன் கிட்ட பேச மாட்டேன். என் கிட்ட அவன் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டால் அப்போ தான் பேசுவேன். நான் வைக்கிறேன் டி சங்கவி மிஸ்டர் கார்த்திக் கிட்ட சொல்லிடு என பொய் கோபம் கொண்டு போனை வைத்தாள் வானதி.
டேய் எதுக்கு டா இப்படி பேசின? உன் கிட்ட நான் என்ன சொன்னேன்? ஏன் கார்த்திக் இப்படி பண்ண என சங்கவி சலித்துக் கொண்டாள்.
கார்த்திக் அவளை முறைத்து விட்டு அவனது டாக்டர் கோட்டை எடுத்துக் கொண்டு சென்றான். சங்கவி, வானதி இருவரும் செவிலி பயிற்சி முடித்து பணியில் இருப்பவர்கள். கார்த்திக் டாக்டராக இருக்கிறான்.
டேய் இரு டா! என சொல்லிக் கொண்டே பின்னால் ஓடினாள் சங்கவி.
இங்கே போனை வைத்த அடுத்த நொடி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் வானதி. தன் உயிர் நட்பு இரண்டும் தன்னை நினைத்து வருத்தப்பட கூடாது என்ற காரணத்தினால் தான் இந்த கபட நாடகம். அதற்கு மேல் இதயம் தாங்க வில்லை. அப்படியே அழுது கொண்டே உறங்கி விட்டாள்.
மாலை எழுந்ததும் முகத்தை கழுவி கொண்டு கீழே சென்றாள். என்ன மா சாப்பிடவே இல்ல மதியம். உன்னை எழுப்ப வந்தேன் வான்மதி தான் வேணாம்னு சொன்னது. ஒரு வாய் சாப்பிட்டு தூங்கி இருக்கலாமே! என கேட்டார் அக்கறையுடன் சீதா.
அது கல்யாண அலைச்சலில் தூங்கிட்டேன் அத்தை. இன்னிக்கி நைட்டு என்ன சமைக்கலாம். சொல்லுங்க இன்னிக்கு நான் சமைக்கிறேன் என வானதி சீதாவுடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.
வான்மதி , சஞ்சய் இருவரும் படத்துக்கு சென்று விட்டார்கள் இரவு உணவு அவர்கள் வெளியே, அப்போ நால்வருக்கு தான் சமையல். ஜீவாவுக்காக பார்த்து பார்த்து சமைத்தாள் வானதி
அவனுக்காக வானதி காத்திருக்க, சீதாவும், சிவராமணும் சாப்பிட்டு விட்டு உறங்க செ
ன்று விட்டார்கள்.
வானதி தன் ஜீவனுக்காக காத்திருந்தாள்.
நெருக்கம் தொடரும்...

Author: Pradhanya
Article Title: Episode-3
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.