வானதி அவனது முகத்தை வெறித்து பார்த்தவள். ஜீவா சீக்கிரம் என்னை புரிஞ்சுக்கணும் பிளீஸ் என வேண்டிக் கொண்டே தூக்கத்தை தழுவினாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வானதி குளித்து முடித்து கீழே வந்தாள். இன்று வான்மதி நேரமே வந்து விட்டாள். அக்கா இன்னிக்கி எனக்கு முன்னாடி வந்துட்ட? என சிரித்துக் கொண்டே கேட்டாள் வானதி.
"அடி வாங்குவ சின்னு மா" என வான்மதி வெட்கத்துடன் நெளிந்தாள்.
வானதி நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்ல. என்ன மா நீ! என சொல்லிக் கொண்டே வெளியே வந்தார் சீதா.
என்னாச்சு அத்தை என புருவ முடிச்சுடன் வானதிக்கு முன்னால் சென்றாள் வான்மதி.
வா வான்மதி உன் தங்கச்சி என்ன வேலை பண்ணிருக்கா வந்து பாரு! என அழைக்க, உடனே அவளின் பார்வை வானதியின் மீது சென்றது. அக்கா அத்தை என்ன சொல்றாங்கன்னு எனக்கே தெரியல! என அவழும் சமையலறை சென்றாள்.
இங்கே பாரு மா சுட சுட இட்லி செஞ்சேன் நைட்டு. அதை சாப்பிடாமல் ஃப்ரிட்ஜில் வச்சிருக்கா உன்னோட தங்கச்சி! ஏற்கனவே எலும்பும் தோலுமா இருக்கா! உன் அண்ணனும் அம்மாவும் எங்க பொண்ணை இப்படி தான் பார்த்துக்கிரிகளா அப்டின்னு கேட்டால் நான் என்னத்தை சொல்றது? என குறை பட்டு கொண்டாள் சீதா.
அத்தை அவ்ளோ தான்! நான் கூட பயந்துட்டேன். என புன்னகையுடன் வானதி தன் அக்காவையும் மாமியாரையும் பார்க்க, என்ன மா நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல என்றார்.
என்ன வானதி இது? என வான்மதியும் கேட்க, "அக்கா நேத்து மதியம் நான் என்னோட பங்கை சாப்பிடல அது தான் அதை நைட்டு சாப்பிட்டு முடிச்சு இந்த இட்லிய ஃப்ரிட்ஜில் எடுத்து வச்சேன். நைட்டு அவரும் வெளியே சாப்பிட்டுட்டு வந்துட்டாரு. சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வேணாம்ன்னு தான் அப்படி பண்ணேன். இப்போ காலையில் இந்த இட்லிய சூடு பண்ணி அப்படியே பீஸ் போட்டு நம்ம வீட்ல பொடி இட்லி பண்ணி சாப்பிடுவோம் தானே, அதை போல பண்ண நினைச்சேன் கா" என்றவள் சீதாவை பார்த்து "அத்தை நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நான் எதுவும் தப்பா பண்ணிட்டனா அத்தை! சாப்பாடு வேஸ்ட் பண்ண கூடாதுன்னு தான் அப்படி பண்ணேன். என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் வானதி.
சீதா அவளை பார்த்து உனக்கு என்ன மா தலையெழுத்து பழச சாப்பிடனும்னு என பாசத்துடன் கேட்டார்.
அப்படி இல்ல த! நம்ம எங்கே இருந்து வந்தோமோ அந்த இடத்தை என்னைக்கும் மறக்க கூடாதுன்னு அண்ணன் சொல்லும். அது போல தான் இதுவும் வானதி பண்ணதுல தப்பில்லை. நாங்க எல்லாம் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்ட பட்ட குடும்பம். இப்போ தான் கொஞ்சம் நல்ல நிலமைக்கு வந்திருக்கோம் என்றாள் வான்மதி.
இதையெல்லாம் கேட்டதும் சீதாவின் கண்கள் கலங்கி போனது. வானதி அவரிடம் அத்தை நீங்க இதை சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அக்காவும் இப்படி தான் செஞ்சு சாப்பிடுவோம் என அக்காவும் தங்கையும் செய்ய ஆரம்பித்தார்கள்.
என்ன டி மா! சமையல் கட்டில் ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? என்னை விடுங்க மா உங்களுக்கு என்ன வேணுமோ நான் செஞ்சு தரேன் என சீதா அங்கும் இங்கும் நடக்க.. இருங்க அத்தை இன்னும் அஞ்சு நிமிடம் என இரு பெண்களும் வெளியே வந்து சுட சுட நல்லெண்ணெய் மணக்க அதன் கூடவே பூண்டு பொடி மணக்க வெங்காயம் பச்சை மிளகாய் கடலை பருப்பு உளுந்து தாளித்து வாசனையுடன் நீட்டினார்கள்.
"வாசனையே நல்லாருக்கே" என சீதா ஆசையுடன் பார்க்க சாப்பிடுங்க அத்தை உங்களுக்கு தான் என ஸ்பூனில் நீட்டினார்கள். சீதா தயக்கத்துடன் வாங்கி உண்டவள் ருசி அபாரமாக இருக்க.. கண்ணு அப்படி கொடு என அந்த தட்டில் இருந்த எட்டு துண்டுகளையும் சாப்பிட்டு முடித்தார்.
என்ன எனக்கு கொடுக்காம உள்ளே தள்ளற? காலையிலேயே கறியா சீதா? என சிவராமன் தன் மனைவியை பார்த்து கொண்டே கேட்டார். இது ஒன்னும் சிக்கன் இல்ல! காலங்காத்தால வெள்ளி கிழமை அதுவுமா என்ன பேச்சு? என முறைத்து பார்த்தாள் தன் கணவனை.
மாமா இந்தாங்க என வானதி நீட்ட.. என்ன மா இது? உன் அத்தை என்னை திட்டுறாளே! என கூறினார் சிவராமன்.
வானதி சிரித்துக் கொண்டே மாமா நீங்க சாப்பிட வாங்க, அத்தை நீங்களும் வாங்க என இருவரையும் அமர வைத்து பரிமாறினாள். பிரமாதம் மா! புதுசா இருக்கு என சிவராமன் கூறிக் கொண்டே சாப்பிட்டார். இரண்டு மருமகள்களையும் பார்த்து மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு.
மதியம் போல ஜீவாவிடமிருந்து சீதாவுக்கு அழைப்பு வந்தது.என்ன டா அதிசயம் எனக்கு போன் பண்ணிருக்க? என கேட்டார் சீதா.
எனக்கு மாதுளை, சாத்துகொடி, அண்ட் மோர்சாதம் செஞ்சு அப்பா கிட்ட கொடுத்து விடுங்க என ஜீவா கூற, என்னாச்சு உன்னோட பேச்சு சரி இல்லையே என சீதா சந்தேகமாக கேட்டார்.
சொன்னத செய்யுங்க தேவையில்லாம பேச வேணாம். என சொல்லி போனை வைத்தான்.
அவன் சொன்னதை போலவே அனைத்தையும் செய்து கொடுத்து அனுப்பினார். ஹே சீதா நானே தான் போகணுமா? என சிவராமன் கேட்க, பின்ன நான் போகவா? அவன் கிட்ட எல்லாம் என்னால பேச்சு வாங்க முடியாது. நீங்களே போயிட்டு வாங்க
ஹே சின்னவனை அனுப்பலாம் டி!
அவன் திங்கட் கிழமையில் இருந்து வேலை வேலைன்னு கிடப்பான். புதுசா கல்யாணம் ஆகி இருக்கான் அவன் பொண்டாட்டி கூட இருக்கட்டுமே நீங்க போனால் இப்போ என்ன? என சீதா கேட்க.. அது அங்கே போனால் என் கிட்ட சுகர் பிரஸர் எக்கோ டெஸ்ட் எல்லாம் எடுக்க உட்கார வைப்பான் டி! கூடவே வெயிட்ட குறைன்னு சொல்லுவான். அதுக்கு தான் தயக்கமா இருக்கு என கூறினார் சிவராமன்.
அவன் உங்களை தான் வர சொன்னான். நீங்க முடிவு பண்ணிக்கோங்க என கூறி விட்டு அவர் சென்று விட்டார்.
என்னாச்சு அத்தை? என வானதி கேட்க, சுருக்கமாக விவரத்தை கூறினார் சீதா.
இப்போ என்ன பண்றது? என உடனே சங்கவிக்கு அழைத்தாள் வானதி .
என்ன டி சீக்கிரம் சொல்லு லஞ்ச்க்கு வந்திருக்கேன் என சங்கவி கூறினாள்.
அது ஜீவாவுக்கு என்னாச்சுன்னு பார்த்து சொல்றயா? அவர் இப்போ ஓகே வான்னு எனக்கு தெரியணும் என்றாள் வானதி.
அதுக்குள்ள என்னாச்சு? திடீர்னு பார்க்க சொல்ற? என சங்கவி கேட்க, வானதி சுருக்கமாக விவரத்தை கூறினாள்.
அதை கேட்டதும் சங்கவி திருப்தியுடன் சிரிக்க, என்ன என அவளின் முகத்தை பார்த்தான் கார்த்திக். உடனே சங்கவி ஸ்பீக்கர் போட்டு விட்டு எனக்கு கேட்கல மறுபடியும் சொல்லு என சங்கவி கூற, வானதி கவலையுடன் அவரு அன் டைமில் சாப்பிட்டது சேரல போல! எனக்கு வேற கையும் ஓடல. நீ ஒரெட்டு பார்த்து சொல்லு டி என்றாள்.
கார்த்திக் மெதுவான குரலில் அவள் தான் நல்லா சமைப்பாளே அப்புறம் என்ன கேடு சாப்பிட வேண்டியது தானே கேளு என கூறினான்.
அது வானதி நீ தான் நல்லா சமைப்பியே! அப்புறம் ஏன் டாக்டர் சார் அன் டைமில் வெளியே சாப்பிடணும்? என கேட்டாள் சங்கவி.
அது வந்து லேட் ஆகிடுச்சு? என வானதி சமாளிக்க, கார்த்திக் மற்றும் சங்கவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஹே இப்போ நான் கேட்டதை பன்னுவியா மாட்டியா? என வானதி அதட்ட.. சரின்னு சொல்லு என கார்த்திக் சைகை செய்தான்.
அவளும் சரி சொல்ல, சீக்கிரம் போன் பண்ணு என வைத்து விட்டாள் வானதி.
ஏன் டா அப்படி சொல்ல சொன்ன? என சங்கவி கேட்க, அவள் சாதாரணமாவே அந்த அரக்கனை நினைச்சு உருகி தவிப்பா! இப்போ நீ சரின்னு சொல்லல்ன்னா அந்த லூசு சாப்பிடாமல் அவனையே நினைச்சிட்டு இருக்கும். போய் அந்த அரக்கன் எப்டி இருக்கான்னு பார்த்து சொல்லு என சிரித்துக் கொண்டே கூறினான் கார்த்திக்.
இப்போ எதுக்கு டா நீ சிரிக்கிற?
எனக்கு சந்தோஷமா இருக்கு சங்கவி! அந்த டாக்டர் திமிர் படிச்சவன் வேணும்னு வானதிய கஷ்ட படுத்தி இருப்பான். அதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறான். இன்னும் வேணும் இரிடேட்டிங் பெல்லோ என தலையை கோதினான் கார்த்திக்.
வானதி போனில் அழைக்க, பரவிதிகாரி பாரு போன் பண்ணிட்டே இருக்கா சீக்கிரம் போ என கார்த்திக் கூற பெரு மூச்சை விட்ட படி சங்கவி சென்றாள்.
உன் புருஷனுக்கு வயிறு சரி இல்ல..ஏற்கனவே எரிஞ்சு எரிஞ்சு விழுவார். இப்போ இன்னும் எரிமலை மாதிரி வெடிக்கிறார் இன்னும் நல்லா வயிறு வலிக்கட்டும் என சங்கவி கூற, ஹே அவருக்கு சாபம் கொடுக்காத என் ஜீவா பாவம் உன் கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும் போடி என போனை வைத்தாள்.
இரவு கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டான் ஜீவா. சீதாவிடம் வானதி சொல்ல, என்ன மா என்னை அனுப்பி விடுற! அவன் திட்டுவான் என கூறினார்.
போங்க அத்தை திட்ட மாட்டார் என வானதி அனுப்பி வைத்தாள். டேய் ஜீவா வெறும் வயிறில் படுக்க வேணாம். இதோ உனக்காக சுடா இட்லி, அதுக்கு தொட்டுக்க தேங்காய் பால், அப்புறம் இது வந்து ஹான் மாதுளை பிஞ்சில் ஜுஸ் போட்டிருக்கேன் இதை சாப்பிடு சீக்கிரம் சரி ஆகிடும் என சீதா அனைத்தையும் லிஸ்ட் போட்டார்.
ஜீவா ஒரு நிமிடம் நின்று தான் தாயை திரும்பி பார்த்தான்.
அய்யோ பார்க்கிறானே! இந்த பொண்ணு என்னய மாட்டி விட்டுட்டா
ளே! என சீதா நிற்க..
வானதி பதட்டத்துடன் பார்த்தாள்.
ஜீவா...?
ஆசை தொடரும்...

Author: Pradhanya
Article Title: Episode-5
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.