ஜீவா நீ வெறும் வயிரோட தூங்க கூடாதுன்னு தான் அம்மா செஞ்சேன். அதுக்காக என்னைய முறைக்காத டா! என சொல்லியே படி சீதா பார்க்க, அய்யயோ கண்டு பிடிச்சிடுமா இந்த கடுவன் பூனை என நகத்தை கடித்த படி எட்டி பார்த்தாள் வானதி.
திக் திக் நிமிடங்களாக கடந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும்.. தன் அன்னையை உற்று பார்த்தவன் "போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்" என சொல்லி விட்டு அறைக்கு சென்றான் ஜீவா.
அதில் பெரு மூச்சை விட்ட சீதா, என்னோட மொத்த ஆவியும் வாங்கி தள்ளுறானே! சண்டாள பாவி! என் புருசனுக்கு கூட இத்தனை பயபட்டதில்லை என நினைத்த படி மருமகளை பார்த்தார்.
சூப்பர் அத்தை என வானதி அவரின் அருகில் வந்து தம்ஸ் அப் நீட்டினாள். போடி மா நீ வேற! உண்மைய சொல்ல போனால் என்னோட வீட்டுக்காரர் கூட என்னை திட்ட மாட்டார் தெரியுமா? நான் வயித்துல சுமந்து பெத்தது தான் என்னைய இந்த போடு போடுது. மூஞ்சூர் மாதிரி முகத்தை வச்சிட்டு திரியுறான். உன் கிட்ட பேசுவானா? என கேட்டார் சீதா.
ம்ம் பேசுவாரா! அதெல்லாம் என்னால பதிலே சொல்ல முடியாது. அப்பப்போ முசுடு போல முகத்தை வச்சிருப்பார் என வானதி கூற…
சீதா ஒரு பெரு மூச்சை விட்டபடி இல்ல டி மா! உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு எங்க வீட்டுக்கு எனக்கு மருமகளா வந்தது சந்தோஷம் தான். ஆனால் தெரிஞ்சே என் சுயநலத்துக்காக உன் வாழ்க்கைய பணையம் வச்சுட்டனோன்னு தோணுது.
வானதி அவரின் அருகில் வந்தவள். “அத்தை இங்கே பாருங்க? எதுக்கு இப்படி பேசுறீங்க? அவரை நீங்களே இப்படி பேசலாமா? உங்களுக்காக எங்க அக்காவுக்காக நான் அவரை கட்டிக்கல!”
பின்ன? என கன்னத்தில் கை வைத்த படியே சீதா பார்க்க, “எனக்கு முழு மனசா என்றவள் வெட்கத்தில் தலை குனிந்த படி மனசார உங்க புள்ளைய பிடிச்சிருக்கு. என்னை பார்க்க வந்த முதல் சம்மந்தம் இது தான். அதை விட எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். கல்யாணத்துக்கு முந்தியே நான் வேலை செய்யுற ஹாஸ்பிடல்க்கு வந்திருக்கும் அவர் போது பார்த்திருக்கேன்” என கூறினாள் வானதி.
ஓ அப்படி ஒரு சங்கதி இருக்கா! இப்போ தான் வானதி எனக்கு நிம்மதியா இருக்கு. கட்டாயமா குடும்பத்துக்காக கட்டிக்கிட்டு வாழறது சங்கடமான விசயம். இப்போ நீ சொன்ன விசயம் உண்மையாகவே எனக்கு நிம்மதி. அவனும் ஏற்கனவே உன்னை பார்த்ததால தான் உடனே ஒத்துக்கிட்டான் போல. இனி தான் எனக்கு நிம்மதியா தூக்கமே வரும். அவனை எப்படியாவது மனுசனா மாத்திடு கண்ணு என சொல்லி விட்டு சென்றார் சீதா.
அரை மணி நேரம் கழித்து கீழே வந்தான் ஜீவா. சமையலறை பக்கம் வானதி மட்டுமே இருந்தாள். போனை நோன்டிய படி உணவு மேஜையில் அமர்ந்தான். சுட சுட இட்லி, அதனுடன் சந்தவம் மற்றும் தேங்காய் பால், கச்சை மாதுளை சாறு என அனைத்தையும் எடுத்து வைத்தாள் வானதி. எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டான். இரண்டு இட்லி பஞ்சு போல உள்ளே இறங்கியது.
அவன் திருப்தியாக சாப்பிட்டதும் வானதிக்கு சந்தோஷம் தாங்க வில்லை. அவன் சாப்பிட்டு முடித்ததும் வானதி அவளுக்கான உணவுகளை போட்டு சாப்பிட்டாள். அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான் ஜீவா.
இன்னிக்கும் ட்ரஸ் இல்லாம படுக்க சொல்லுவாரா? என வானதிக்கு யோசனை ஓடி கொண்டிருக்க, நீ தூங்கு ரெண்டு நாள் கழிச்சு நம்ம குழந்தை பெத்துக்கற பிராசஸ் ஆரம்பிப்போம் என்றவன் உறங்க ஆரம்பித்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் வேகமாக ஓட மறுவீடு விருந்துக்கு அழைக்க செழியன் வந்திருந்தான். வான்மதி மற்றும் வானதி இருவரும் உற்சாகமாக இருந்தார்கள் தாய் வீட்டுக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷம் தான்.
என்ன பா! அது தான் தங்கச்சிங்க கல்யாணம் முடிஞ்சுபோச்சே! நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க உத்தேசம் என சிவராமன் கேட்க, இன்னும் நாள் ஆகட்டும் மாமா! பொறுமையா பண்ணிக்கலாம் என கூறினான் செழியன். அவனுக்கு வயது 36..
அப்படி எல்லாம் சொல்ல கூடாது பா! எங்க வீட்டுக்கு பேத்தி பேரன் வரதுக்குள்ள அவங்க அத்தை வீட்டுக்கு வந்திருக்கனும் அப்போ தான் மொட்டை அடிச்சு காது குத்தும் போது எங்களுக்கு பெருமையா இருக்கும். உங்க வீட்ல எடுத்து கட்டி செய்ய உங்க அம்மாவுக்கு துணைக்கு ஒரு ஆள் வேணும் தானே என சொல்லிய படி சீதா வந்தார்.
சரிங்க அத்தை நீங்க சொல்லிட்டீங்க பண்ணிட்டா போச்சு என்றான் செழியன். சஞ்சய் வேலையை முடித்த கையுடன் மச்சான் என செழியன் பக்கத்தில் வந்தான் புன்னகையுடன்.
மாப்பிள்ளை என செழியன் கை குலுக்கிய படி, பெரிய மாப்பிள்ளை எப்போ வருவாரு? என கேட்க, அவன் வரதுக்கு நைட் ஆகும் பா என சிவராமன் கூற, அப்போ என செழியன் தயங்கினான்.
செழியா இதுல என்ன தயக்கம் மறுவீடு அழைப்பு தானே நாளைக்கு நாலு பேரையும் அனுப்பி வைக்கிறேன். ரெண்டு நாள் தங்கி இருந்திட்டு வரட்டும். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. நாங்க ஜீவா கிட்ட சொல்லிக்கிறோம்! என்றார்கள் சிவராமன் மற்றும் சீதா இருவரும்.
சரிங்க என்றவன். “மாப்பிள்ளை நாளைக்கு நேரமே வந்திடுங்க பாப்பா பெரிய மாப்பிள்ளை கிட்ட நான் போனில் எதுக்கும் ஒரு வாட்டி பேசுறன்!” என சொல்லி விட்டு கிளம்பினான் செழியன்.
வீட்டுக்கு வந்ததும் சீதா ஜீவாவிடம் சொல்ல, வந்ததும் வராததுமாக நறுக்கென வார்த்தைகளை ஊசி போல வீசினான். மருத்துவன் ஆகிற்றே… நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் டா! அந்த பொண்ணு பூ மாதிரி அன்பா நடந்துக்கிறா! அவளை உனக்கு கட்டி வச்சது. என்னோட பெரிய தப்பு என சீதா சேலையின் தலைப்பால் கண்ணை துடைக்க, ஜீவா முறைத்து கொண்டே படிகளில் ஏறியவன் “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என அதட்டலுடன் கேட்டான்.
நாளைக்கு காலையில நீ மறுவீட்டுக்கு போகனும். நான் அவங்க அண்ணன் கிட்ட நீ வரதா வாக்கு கொடுத்துட்டேன். என சீதா சொல்ல, என்னால போக முடியாது முக்கியமான ஆப்பரேஷன் இருக்கு. அவளை கொண்டு போய் விடுறேன் என ஜீவா சொன்னான்.
சீதா கண்ணீரை துடைத்த படி “நீ அங்கே இருக்கிறதும் ஒன்னு தான் இல்லாமல் இருக்கிறதும் ஒன்னு தான் வானதியாவது சந்தோஷமா இருக்கட்டும்” என முணுமுனுத்தார்.
என்ன சொன்னீங்க? என ஜீவா தன் அன்னையை பார்க்க, நீ கூட்டிட்டு போறேன்னு சொன்னதே ரொம்ப சந்தோசம். போயிட்டு வாடா என்றார்.
வேகமாக படிகளில் ஏறினான் ஜீவா. சீதா கண்ணீரை துடைத்த படி இந்த விடாகண்டனை ஒத்துக்க வைக்க அழுக வேண்டியதா இருக்கு! எந்த நேரத்தில் பெத்தேன். அப்படியே என் மாமியார் குணத்தில் வந்து பிறந்திருக்கு முசுடு என நினைத்துக் கொண்டு செழியனுக்கு அழைத்தார்.
“கண்ணு அவங்க நாலு பேரும் நாளைக்கு வருவாங்க! நான் ஜீவா கிட்ட பேசிட்டேன்” என்றார்.
இங்கே அறைக்கு வந்ததும் கண்கள் அழகு மயிலை தான் தேடியது. குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்கள் மீண்டும் தேட கண்ணாடி வளையல் குலுங்கும் சத்தம் பால்கனி பக்கமாக கேட்டது. ஜீவா நேராக சென்று பால்கனியை வெறித்தான். ஒல்லி குச்சி உடம்புக்காரி! கைகளை தொங்க போட்டால் வளையல் கழண்டு ஓடி விடும். இடையினம் கட்டி போட்டது ஜீவனை. கழுத்தில் மஞ்சள் கயிறு பலிப்பு காட்டிக் கொண்டு தொங்கி கொண்டிருந்தது. நீயே ஸ்பரிசிக்காத இடத்தில் நான் தொங்கி கொண்டிருக்கிறேன் சொர்க்கம் டா நாயே என்றது.
அங்கங்கள் இரண்டும் கூறாக புடைத்து கொண்டு நின்றது அனைத்தும் அந்த இலகுவான உடையில் நன்றாகவே தெரிந்தது. தன்னை யாரோ குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதை போல தோன்ற சட்டென வானதி திரும்பி பார்க்கும் முன் ஜீவா மறைந்து கொண்டான்.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிரம்மசரியம் வேணாம் டா ஜீவா என தேகம் அவளை தனக்கு கீழ் கொண்டு வர மன்றாடியது. ம்ம் ஹிம் என உடலுக்கு தேவையான அளவுக்கு அதிகமான பசியை அடக்கி கொண்டான்.
அடுத்த நாள் காலையில் சஞ்சய் மற்றும் வான்மதி இருவரும் சந்தோசமாக சென்றார்கள் என்றால் வானதி தன் அக்காவை ஏக்கமாக பார்த்து வழி அனுப்பி வைத்தாள். அவன் கூட்டிட்டு போவான் நீ புறப்படு மா என சீதா சொல்ல, மேலே வந்த வானதி வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் அவனிடம் ஜீவா! வீட்டுக்கு போகனும் நீங்க…
போலாம் போலாம் இப்போ அங்கே போயி என்ன பண்ண போற? என்றான்.
“அதுக்கில்ல அக்காவும் மாமாவும் போயாச்சு!!”
உன் அக்கா கூட தொத்திகிட்டு வந்தவள் தானே நீ! அவங்க ரெண்டு பேரும் ஜோடியா போயி இறங்கட்டும். நீ என் கூட பக்கத்தில் வர தகுதி இருக்கா! என்றவன் நீயும் நானும் அவங்க கூட போயி இறங்கினால் டாக்டரை நர்சு வளைச்சு போட்டுட்டான்னு சொல்லுவாங்க. உனக்கு அது சாதாரணமா இருக்கலாம். ஆனால் எனக்கு அது கவுரவ குறைச்சல் அதுக்கு தான் என அவளை பார்த்தான் ஜீவா
அவ்வளவு தான் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது வானதிக்கு. முகமெல்லாம் சிவந்து போயி படுக்கையில் பொத்தென விழுந்தவள். அழுது கரைந்தாள் திருமணம் ஆகி 5 நாட்களில் முதல் முறையாக இந்த திருமணம் ஏன் செய்தோம்? என தோன்றியது. கார்த்திக் படித்து படித்து கெஞ்சினான். வேண்டாம் வானதி! அவன் உன்னை பழி வாங்க கட்டிட்டு போறான்! என்றும் வானதி வேணாம் டி அப்புறம் நர்ஸ் டாக்டர கட்டிக்கிட்டான்னு உன்னை தப்பா பேசும் ஊர் வாய் என சங்கவி சொன்னாள்.
ஆனால் இங்கு ஊர் வாய் சொல்ல வில்லை தாலி கட்டியவன் கூறி விட்டான். விட்டில் புழு போல துடித்தாள் வானதி.
இப்போ வரயா? இல்ல நான் ஹாஸ்பிடல் போகட்டுமா? என ஜீவா கேட்க.. வேண்டாம் டா நீ வர வேண்டாம்! நான் உன்னோட வர மாட்டேன் என கத்த வேண்டும் போல இருந்தது வானதிக்கு… சிரித்த முகத்துடன் தன் அண்ணன் வந்து அழைத்து சென்றதை நினைத்து பார்க்கையில் வேறு வழி இல்லாமல் எழுந்தவள். நேராக டிரெஸ்ஸிங் டேபிள் சென்றவள். தன் அழுகை வெளியே தெரியாத வண்ணம் மேக் அப் போட்டுக் கொண்டாள்.
வானதி மனதுக்குள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு சென்றாள். ஆனால் ஜீவா முன் அது பலிக்குமா? பா
ர்ப்போம்
நெருக்கம் தொடரும்…

Author: Pradhanya
Article Title: Episode-6
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.