இங்கேயே தன்னை இப்படி பேசுகிறான். அங்கே வீட்டுக்கு சென்றதும் எப்படி எல்லாம் பேசுவானோ? என ஜீவாவை நினைத்து நொந்து கொண்ட மனதை சமன் செய்து கொண்டு அவனுடன் காரில் சென்றாள் வானதி.
"அம்மா வானதி அவர் கூட வந்துட்டா!" என உற்சாகமாக சொல்லிக் கொண்டே வான்மதி அழைக்க, சஞ்சய் உடனே எழுந்தவன். இந்த பக்கம் பெட் ரூம் தான என உள்ளே ஓடிவிட்டான். தன் அண்ணனை நேரில் சந்திக்க பிடிக்காமல் தான்.. வவ் என நாயை போல குறைத்து ஹீரோவாக தன்னை மாமியாரின் வீட்டில் ஜீரோ ஆக்கி விட்டால் என்ன செய்வது? என்று பயம் தான்.
சஞ்சு இப்போ எதுக்கு உள்ளே போறீங்க? என வான்மதி கேட்டுக் கொண்டே அவனை எட்டி பார்க்க, அவன் கிளம்பினதும் வரேன் நீ போடி என கூறினான்.
அவனை பார்க்க சிரிப்பாக வந்தது வான்மதிக்கு. ஜீவா மற்றும் வானதி இருவரையும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார்கள். செழியா என ராதா கூவி கொண்டே வர, இதோ வந்துட்டேன் மா என ஜீவாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிடு போட்டான் செழியன்.
ராதா தண்ணீரை நீட்டிட, வாங்கி பருகியவன். அத்தை எனக்கு முக்கியமா ஆப்பரேஸன் இருக்கு. போயே ஆக வேண்டிய கட்டாயம். அதனாலே நான் நைட்டு வரேன். போயிட்டு வரேன் செழியன் என கூறினான் ஜீவா.
ராதா மற்றும் செழியன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். ஜீவா அவர்களையே பார்த்தான். அப்டின்னா நாளைக்கு லீவு கேளுங்க மாப்பிள்ளை என இருவரும் கூற.. முயற்சி பண்றேன் என்றவன். வெளியே வா வானதி என கையை பிடித்து இழுத்து சென்றான். ஆனால் அது வீட்டில் இருப்பவர்களுக்கு இணக்கமாக தோன்றியது. அது இருவருக்கும் இருக்கும் இணக்கம் இல்லை என்னும் விசயம் நமக்கு மட்டும் தானே தெரியும்.
எதுவும் பேசாமல் கொலு பொம்மை போல அவனது இழுப்புக்கு வந்தாள்.
அவளின் கையை விட்டவன். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். அவன் மகா நடிகன் என்பதை இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டாள் வானதி.
மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கிறாரா? நீ சந்தோஷமா இருக்கியா வானதி? என்று ராதாவின் குரல் கேட்க, தன் அன்னையின் குரல் கேட்டதும் சிரித்த முகத்துடன் திரும்பியவள். நீங்க தானே இப்ப பார்த்தீங்க? அவரோட அக்கறையை! அதெல்லாம் என்னை நல்லாவே பார்த்துக்கிறார் மா! என்றாள் வானதி உண்மையான சந்தோசத்துடன்.
ஜீவா பார்த்துக் கொள்வதில் என்ன இருக்கிறது? அவனை சார்ந்த அத்தனை பேரும் வானதியிடம் நல்ல முறையில் தான் நடந்து கொள்கிறார்கள். ராதா எப்படி இங்கு பார்த்துக் கொள்கிறார்களோ! அதே போல தான் சீதாவும், புதிதாக சிவராமன் தந்தையைப் போல, சஞ்சய் அதிகமாக பேச மாட்டான். அவன் உண்டு அவன் வேலை உண்டு, வானதியை பார்த்தால் சிறிய புன்னகை அவ்வளவு தான். புகுந்த வீட்டில் அனைவரும் பிரச்சனை இல்லாத மனிதர்கள். அதனால்தான் என்னவோ ஜீவா பிரச்சனைகுறியவனாக இருக்கிறான். யார் தன்னை புரிந்து கொள்ள வேண்டுமோ அவனே புரிந்து கொள்ளவில்லை.
இருந்தாலும் தனது வாழ்க்கையில் ஜீவா என்பவன் இதுவரை நான்கு சுவற்றிற்குள் இருக்கும் பிரச்சனை படி தாண்டியதில்லை. அந்த வகையில் நிம்மதியாக இருந்தாள்.
வீட்டில் செழியன் மட்டன் சிக்கன் நீந்துவது பறப்பது என தங்கைகள் இருவருக்கும் என்னென்ன பிடிக்குமோ அத்தனையும் வாங்கி வந்து விட்டான். ராதா வான்மதி வானதி என மூவரும் சேர்ந்து சமைத்தார்கள். செழியனும் என்று விடுப்பு எடுத்திருக்க, வீடே கலகலப்பாக இருந்தது.
சஞ்சய் அவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டான். "அத்த ரொம்ப நல்லாருக்கு டேஸ்டா இருக்கு வான்மதி உனக்கு சமைக்க தெரியுமா? நான் எப்ப பார்த்தாலும் வானதி தான் கிச்சன்ல இருக்காங்க. இவள் வெறும் வாய் மட்டும் தான் அத்தை என்று கூற, ராதா மெல்ல சிரித்தார்.
அவர்களுடன் பேசி சந்தோஷமாக பொரித்த மீன், குடல் கறி, மட்டன் பிரியாணி என நன்றாக மறு வீட்டை கொண்டாடினார்கள் வான்மதியும் சஞ்சையும்.
அவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்க, அன்னையுடன் சிரித்து கொண்டிருக்கும் வானதியை பார்த்தான் செழியன். என்னாச்சு அண்ணா? என்று அருகில் வந்த அமர்ந்தாள்.
பெரிய மாப்பிள்ளையும் இங்கே இருந்தா நல்லா இருந்திருக்கும்ல்ல என்று வருத்தத்துடன் கூறினான்.
அவருக்கு தான் வேலை இருக்கே. உயிர் சம்மந்தப்பட்ட வேலை! போய் தான் ஆகணும். எனக்கு இப்ப என்ன குறைச்சல்? அக்கா இருக்கா! நீங்க எல்லாரும் இருக்கீங்க. மாமா எவ்ளோ ஜாலியா பேசுறார். என்று வானதி தன் அண்ணனை சமாதானம் படுத்த கூறினாள்.
பொய் சொல்லாத சின்னு மா! உன்னோட ஏக்கம் முகத்திலேயே தெரியுது! என்று ராதா கூற, வான்மதி சிரித்தபடி தன் அம்மாவிடம் வந்து " மா ஜீவா மட்டும் வீட்டுக்கு வந்துட்டார்னா! இவள் ரூம விட்டு வெளியே வர மாட்டாமா என்று கூற..
அக்காஆஆஆ! என அதட்டினாள் வானதி.
இப்படி அனைவரும் கலகலப்புடன் இருந்தார்கள். மதியம் ஆனது ஒரு படுக்கை அறையில் வான் மதி , சஞ்சய் இருவரும் உண்ட களைப்பில் உறங்கி விட, ஹாலில் தலையணை போட்டு போனை நொண்டிய படி கிடந்தாள் வானதி.
கார்த்திக் உணவு இடைவேளையில் எப்டி இருக்கா பேசினயா? என வானதியை பற்றி கேட்டான்.
"இல்ல பேசல!" என சங்கவி சொல்ல.. கேளு அந்த ஆளு ரொம்ப பிரச்னை பண்ணா! நேராக போயி எல்லா உண்மையும் சொல்லலாம்னு இருக்கேன் என்றான் கார்த்திக்.
"டேய் வானதி யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கா டா!" என சங்கவி அவனை பார்க்க, இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்கிறது. உண்மை தெரியாமலேயே போனால் வானதி இப்படி அந்த ஜீவா கிட்ட கஷ்ட பட்டுட்டு தான் இருக்கணும். போயும் போயும் அவன் எல்லாம் ஒரு ஆளுண்ணு அவனை உருகி உருகி காதலிச்சிருக்கா! அவளோட காதலுக்கு அந்த ஜீவா தகுதி இல்லாதவன்" என கார்த்திக் தகித்து கொண்டிருந்தான்.
சங்கவி அவனை இயல்பாக்கும் பொருட்டு அப்போ வானதிக்கு யார் சரியான ஜோடி? நீயா டா! என கூறி விட்டு சிரித்த படி அவனை பார்த்தாள். அந்த வார்த்தைகளை கேட்டதும் கார்த்திக் கோபமாக அவ்விடத்தை விட்டு எழுந்தவன் வேக நடையிட்டான். ஹே கார்த்திக்! கார்த்திக் சாரி சாரி டா நான் சும்மா உன்னை நார்மல் ஆக்கிட அப்டி சொல்லிட்டேன் டா! என அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தவள் அவனது கையை பிடிக்க, ஆவேசமாக தட்டி விட்டான்.
கார்த்திக் சாரி டா என சங்கவி பதட்டத்துடன் கண்களில் நீர் கோர்க்க சொல்ல, லிஃப்ட் பட்டனை தட்டி விட்டவன். அவளை பார்த்து நீயே இப்படி தப்பான கண்ணோட்டத்தில் சொல்லும் போது அந்த ஜீவா சொன்றதில் என்ன இருக்கு? அப்போ உனக்கும் அந்த ஜீவாவுக்கும் என்ன வித்தியாசம்? என்றவன் லிஃப்ட் திறந்ததும் ஒரு அடி வைத்துவிட்டு அவளை பார்த்தவன். எல்லா உண்மையும் தெரிஞ்ச நீயே இப்படி பேசுறது தான் என்னால... இனி என் கண்ணில் முழிச்சுடாத என பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு புயல் போல சென்று விட்டான்.
சங்கவி போனை எடுத்தவள். சாரி கார்த்திக் பிளீஸ் சாரி டா என அழுது கொண்டே மெஸேஜ் அனுப்பினாள்.
கார்த்திக் போனை ஃப்ளைட் மோட் போட்டு விட்டு எமர்ஜென்சி வார்டு பக்கம் சென்றான். எதிரில் ஜீவா ஒரு ஆபரேசன் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான்.
இருவரின் பார்வையும் நேருக்கு நேர் இருந்தது. ஜீவா அதே கம்பீரம் குறையாமல் சென்றான். இருவரும் பார்த்துக் கொள்ள வில்லை. ஆனால் ஜீவாவின் எண்ணத்தில் கார்த்திக் தான் இருந்தான். கார்த்திக்கின் எண்ணத்தில் ஜீவா தான் இருந்தான்.
இருவரின் எண்ணத்திலும் பொதுவாக இருப்பவள் வானதி. வேலையை முடித்து விட்டு நேராக வீட்டுக்கு சென்றான்.
என்ன டா ஜீவா? இங்கே வந்திருக்க? என சீதா கேட்க..
வீட்டுக்கு வரவே கூடாதா? உங்களுக்கு என்ன பிரச்னை? போவேன் முக்கிய வேலையா வந்தேன். என கூறிக் கொண்டே ஏறினான் அவனது அறைக்கு.
ஏன்டி இதே போல தான் பேச ன்ட்டு கிட்ட வல்லு வல்லுன்னு விழுவானா? என சிவராமன் கேட்க, அது தெரியலங்க ஆனால் இவனை பார்த்தால் உங்க அம்மா நினைப்பு தான் வருது.
"ஹே எங்க அம்மாவை பத்தி பேசலன்னா உனக்கு தூக்கம் வராதே!" என சிவராமன் முறைத்து பார்க்க, அய்யயோ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! என்னோட மாமியார் சொக்க தங்கம் என்றார் சீதா.
"அது அந்த பயம் இருக்கட்டும்"
அவங்க குணம் பண்பு அத்தனையும் உரிச்சு வச்ச மாதிரி மேலே ஒன்னு போகுதே நான் பெத்தது என அசால்ட்டாக கலாய்த்து விட்டு சென்று விட்டார்.
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல என சிவ ராமன் அதற்கு மேல் எதுவும் பேச வில்லை.
வானதி வீட்டில் இரவு உணவு தயார் செய்திருந்தார்கள் ஜீவா சஞ்சய் மற்றும் வான்மதி இருவரும் ஜோடியாக கதைகள் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
செழியன் ராதா இருவரும் வானதியின் முகத்தை பார்க்க, " நீங்க சாப்பிடுங்கமா அவர் வந்துருவாரு! இதோ போய் போன் பண்றேன்!" என்று சென்றாள்.
வானதி மீண்டும் மீண்டும் அழைக்க ஜீவா ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எடுத்துப் பேசவில்லை.
என்ன மா? மாப்பிள்ளை என்ன சொன்னாரு? எப்ப வராராமா? கிளம்பிட்டாரா? வேலை இருக்குமா என்ற ராதா கேட்டப்படியே உள்ளே வர..
இப்பதான் போன் பண்ணேன். இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடுரேன்னு சொல்லிருக்கார். என்று சொன்னவள் நீங்க போய் சாப்பிடுங்க..
"நீயும் வா!"
இல்ல மா நான் அவர் கூட சாப்பிடுறேன் வந்துவிடுவார் என காத்துக் கொண்டிருந்தாள். சஞ்சய் மற்றும் வான்மதி அவர்களின் அறைக்கு சென்று விட்டார்கள். ஹாலில் இரண்டு கட்டிலில் ஒரு பக்கம் ராதா படுத்து விட, செழியன் அப்படியே அமர்ந்திருந்தவன். சின்னு மா! சின்னு மா!
அண்ணா! என ஓடி வந்தாள் வானதி.
"மாப்பிள்ளை" என செழியன் அவளின் முகத்தை பார்க்க, அண்ணா அவர் வருவாரு நீங்க படுங்க என சொல்லி விட்டு போனை எடுத்தவள்.
மீண்டும் அழைத்தாள்.
செழியன் அவளையே பார்த்து கொண்டிருக்க, புன்னகையுடன் திரும்பிய வானதி. இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவாராம். நீங்க தூங்குங்க என்றாள்.
செழியா நீ படு டா! அவள் பார்த்துப்பா! என ராதாவும் கூற, யோசனையுடன் படுத்தான்.
ஊரே ஓய்ந்திருந்தது. வானதியின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள தொண்டை விக்கி கொண்டு வந்தது. 11 மணிக்கு மெதுவாக வந்து சேர்ந்தான்.
அவனது காரை பார்த்ததும் உற்சாகம் பிறந்தது. ஆனால் உள்ளுக்குள் கோபம் எல்லை இல்லாமல் வந்தது. எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். ஜீவா தலையை கோதிய படி வந்தான்.
சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என வானதி அனைத்தையும் சூடு செய்தாள்.
மிட் நைட்ல அசைவம் வேணாம் நீ சாப்பிட்டு வா நான் எங்கே படுக்கணும்? என கேட்க.. கண்களில் நீர் வழிய பார்த்தவள். அவன் பார்ப்பதற்கு முன் உள் இழுத்து கொண்டு இன்னொரு படுக்கை அறையை திறந்து வைத்தாள். டேப் கட்டிலில் படுக்கை விரிப்பு போட பட்டிருந்தது.
வானதி திரும்பி வெளியே செல்ல... தூங்கலாம் எங்கே போற?
எனக்கு பசிக்குது சாப்பிடணும் என்றவள் பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அனைத்தையும் எடுத்து வைத்தாள். எப்படியோ வந்து சேர்ந்தான் என ஒரு பெரு மூச்சுடன் உள்ளே வந்தாள்.
"கதவை லாக் பண்ணு"
இது எங்க வீடு!
சோ வாட் என கண்ணாடியை கழட்டி வைத்தவன். வா இங்கே வந்து படு என அழைத்தான் ஜீவா.
இல்ல அது முடியாது.
உன் கிட்ட ஆர்டர் போடுறேன். சொல்றத செய்யணும் அவ்ளோ தான்! வா என கொஞ்சமே இடம் விட்டு அவளை பார்த்தான். முகமெல்லாம் உப்பி இருந்தது. அவனருகில் படுத்துக் கொண்டாள்.
"எனக்கு பண்ணனும் ட்ரெஸ் கழட்டு டி" என ஜீவா அவளின் முகத்தை திருப்பி முத்தமிட்டான். உதட்டில்.
"எனக்கு தோணல பிளீஸ்"
"அப்போ என்னை தூங்க வச்சிட்டு நீ தூங்கு" என்றான் ஜீவா.
"என்ன பண்ணனும்?" என வானதி அவனை பார்க்க, அவனது கண்கள் உதட்டில் பதிந்தது.
"எனக்கு முத்தம் கொடுங்
க" என வானதி கேட்க, ம்ம் என்றவன் முத்தமிட ஆரம்பித்தான்.
நெருக்கம் தொடரும்...

Author: Pradhanya
Article Title: Episode-7
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.