🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
1. அதிரூபனின் சுந்தரி
அதிரூபனின் சுந்தரி
📖 அதிரூபனின் சுந்தரி · Chapter 1 of 84

அதிரூபனின் சுந்தரி

  • 14 Mar 2026
  • 3,715 reads
  • ★ 5.0 (1)
  • 8 min read

அத்தியாயம் -1 

என்னடி சொன்ன?” அந்த அறையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு கர்ஜனை கேட்டது. அடுத்த நொடி, வீடே அதிரும்படி தனலட்சுமியின் கன்னத்தில் அக்னியின் கை ஓங்கிப் பதிந்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

​தனஞ்செயன் பதறிப்போய் தன் மனைவி அக்னியைத் தடுக்க கை ஓங்க, வாசலில் “என்னாச்சு டாடி?” என்ற அலறல் சத்தம் கேட்டது. அரக்கப்பரக்க உள்ளே ஓடி வந்தாள் சிவாங்கி.

​அக்னி அனல் தெறிக்கும் பார்வையால் தனஞ்செயனை நிலைகுலையச் செய்தாள். பின் மீண்டும் தன் மகள் தனலட்சுமியின் பக்கம் திரும்பி, “இப்போ சொல்லுடி!” எனச் சீறினாள்.

​தனலட்சுமி, வலித்த கன்னத்தைத் தடவக்கூட இல்லை. கண்களில் நீர் முட்டினாலும், அதில் ஒரு வைராக்கியம் மின்னியது. “எஸ்… ஐ லவ் ஆதவன்! நீங்க எவ்வளவு அடிச்சாலும், இதையேதான் சொல்லுவேன். நான் ஆதவனை காதலிக்கிறேன்!” என ஆணித்தரமாகச் சொன்னாள்.

​”அடியே பாதகத்தி! எங்க வீட்டு மகாலட்சுமிய கைய நீட்டி அடிக்கிறாயே?” எனப் பொங்கி எழுந்தாள் அபிராமி பாட்டி. “டேய் தனா! என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்க? உன் பொண்ணை இவ அடிக்கிறாளே!” எனத் தன் பேத்தியை அணைத்துக்கொண்டார்.

​”அபிமா விடு!” என பாட்டியின் கையை விலக்கிய தனலட்சுமி, உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு நின்றாள். “ஐ லவ் ஆதவன். நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா, அது அந்த ஆதவனை மட்டும்தான்!”

​”ஹே!” என அக்னி மீண்டும் கையை ஓங்கிட, “அம்மா!” எனப் பதறிக்கொண்டு குறுக்கே வந்தாள் சிவாங்கி.

​”அக்கா…” என ஶ்ரீவள்ளி பரிந்து பேச வர, அக்னி அனைவரையும் ஆக்ரோஷமாக ஏறிட்டார். பின் தனலட்சுமியைப் பார்த்து கசப்புடன், “நீ யாரை வேணாலும் லவ் பண்ணு, நான் ஏத்துக்கிறேன். ஆனா, அந்த ‘அஞ்சாநெஞ்சன்’ குடும்பத்துல பிறந்த பையன் மட்டும் எனக்கு வேணாம்!” என உறுதியாகக் கூறிவிட்டு விறுவிறுவென நகர்ந்தார்.

​தனலட்சுமி தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அப்போ எனக்கு கல்யாணமே வேணாம்!” எனக் கத்தினாள்.

​அக்னி ஒரு நொடி நின்றார். பின் திரும்பாமலேயே, “ரொம்ப சந்தோஷம்…” எனக்கூறி நிமிர்ந்த நடையுடன் சென்றார்.

​”என்னடி இவள் இப்படி சொல்லிட்டுப் போறா?” என அபிராமி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, ஶ்ரீவள்ளி நொடித்துக்கொண்டே சொன்னாள்: “உங்களோட மாமியார் தனத்தை உங்க மூத்த மருமகள் கிட்ட காட்ட வேண்டியதுதானே? நான் தான் உங்களுக்கு இழிச்சவாச்சியா?”

​”என்னடி இப்படிச் சொல்ற?” என அபிராமி பாட்டி தனது இளைய மருமகளைப் பார்க்க, ஶ்ரீவள்ளியோ சளைக்காமல் பேசினாள். “ஹான்! அப்படி ஒரு டிசைன்ல பெத்து போட்டிருக்கீங்க… எல்லாம் என் கிரகம், இந்த நாடகக் கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்!”

​பின் தனலட்சுமியின் பக்கம் திரும்பியவர், மென்மையாக, “சின்னப் பொண்ணு, வாடா…” என அழைத்துச் சென்றார். அபிராமி பாட்டி அழுகையுடன் பின் தொடர்ந்தார்.

தனலட்சுமி எதுவும் பேசாமல் குளியலறை சென்றாள். குளித்து முடித்துவிட்டு, தன்னை எதுவுமே பாதிக்காதது போல உடை மாற்றிக் கிளம்பினாள்.

​”ஹே… எங்கே போற சின்னப் பொண்ணு?” என ஶ்ரீவள்ளி உணவை ஊட்ட முயல, “இல்ல சித்தி, எனக்கு மகளிரணி மீட்டிங் இருக்கு. கோர்ட்ல ஒரு முக்கியமான கேஸ் இருக்கு, நான் போயே ஆகணும்,” என்றாள்.

​அவள் கண்ணாடி முன் நின்று வீங்கிய தன் கன்னத்தைப் பார்த்துக்கொண்டே பதில் சொல்ல, சிவாங்கி ஓடிவந்து, “சின்னவளே… முதல்ல உட்காரு,” எனத் தன் அக்காவை அமர வைத்தாள். சிவந்திருந்த அந்தத் தழும்பைத் தனது ஒப்பனையால் (Makeup) மறைத்து அவளைத் தயார் செய்தாள்.

​அபிராமி பாட்டி இன்னமும் அழுதுகொண்டிருக்க, தனலட்சுமி தீர்க்கமான பார்வையுடன் அவரைப் பார்த்தாள். “அபிமா, எதுக்கு அழுதிட்டு இருக்கீங்க? நான் இதற்கெல்லாம் கவலைப்படல. நீங்க எப்பவும் போல இருங்க… நான் யாருக்கும், எதுக்கும் அடிபணிய மாட்டேன்!”

​அப்படியே ஶ்ரீவள்ளி சித்தியின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டுவிட்டுச் சிட்டாகப் பறந்தாள் தனலட்சுமி.

​”சின்னவளே நில்லு!” என சிவாங்கி மீண்டும் அழைக்க, “சிவாங்கி, நான் நைட்டு வந்து பேசறேன்… பை!” எனச் சொல்லிவிட்டுச் சென்றாள் அந்தத் துணிச்சல்காரி.

இப்போ வாங்க யார் யாரு என்னென்ன உறவுன்னு பார்த்திடலாம். 

ரங்கராஜன் – அபிராமி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் தனஞ்செயன், இளையவன் வேலாயுதம், மூன்றாவது சங்க மித்ரா. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

தனஞ்செயன் ஆளும் கட்சி M.P யாக இருக்கிறார். அவரது மனைவி அக்னி. இவர்களுக்கு சிவகாம சுந்தரி( சிவாங்கி), தனலட்சுமி, அக்னி மித்ரன் என மூன்று பிள்ளைகள். 

சிவாங்கி பேரழகி அவள் சுந்தரி மேக்கப் ஸ்டுடியோ வைத்திருக்கும் பிசியான மேக் அப் ஆர்டிஸ்ட். சினிமாவில் அனைத்து நாயகிகளும் அழகாக தெரிய முக்கிய காரணமே சிவாங்கி தான். 

தனலட்சுமி சங்க தமிழ் முன்னேற்றக் கழகத்தில் மகளிரணி தலைவியாக இருக்கிறாள். மற்றும் வழக்கறிஞர் ஆவாள். 

அக்னி மித்ரன் கல்லூரி முடித்து இப்பொழுது தான் வீட்டுக்கு வந்திருக்கிறான். 

வேலாயுதம் – ஶ்ரீவள்ளி தம்பதிக்கு சுடர் விழி என்ற மகள் மற்றும். அகன் யுகன் யுவன் என மூன்று மகன்கள். வேலாயுதம் கோவை DGPயாக இருக்கிறார். 

சங்க மித்ரா அக்னியின் தம்பி அஞ்சா நெஞ்சனை காதல் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆகி விட்டார். அவர்களுக்கு அதிரூபன், ஆதவன், அகிலன் அஞ்சனா என நான்கு பிள்ளைகள். 

தனஞ்செயன் – அக்னிகா, வேலாயுதம் – ஶ்ரீ வள்ளி, சங்க மித்ரா – அஞ்சான் கதையை அசுரனும் அகதியும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

***

அபிராமி அங்கும் இங்கும் பதற்றமாக நடை பழக, ஶ்ரீவள்ளி உற்சாகத்தில் துள்ளினாள். “அத்தை! நான் இப்போவே மித்ராவுக்கு போன் பண்ணி விவரத்தைச் சொல்றேன். அப்படியே ஆதவனை அழைச்சிட்டு வந்து, ரகசியமாக ஒரு கோவில்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சிடலாம். எப்படி என் ஐடியா?”

சிவாங்கி குறுக்கிட்டு, “யோசிங்க சித்தி… ஒருவேளை அம்மா கண்டுபிடிச்சுத் தடுத்தா என்ன பண்றது?” எனக் கேட்க, ஶ்ரீவள்ளி அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.

“அதுக்கென்ன? உங்க அபி பாட்டிதான் சொல்லச் சொன்னாங்கன்னு பழி போட்டுடலாம். அவங்கதானே இந்த வீட்டுப் பெரியவர்!”

இதைக்கேட்ட அபிராமி, “அடியேய்! எதுக்கு? என்னை ஒரேயடியாக மேலே அனுப்பி வைக்கவா பாக்குற?” என்று கேட்டபடி ஶ்ரீவள்ளியின் காதைத் பிடித்துத் திருகினார்.

“அய்யோ… வலிக்குது அத்தை! விடுங்க!” என ஶ்ரீவள்ளி சினுங்கினாள்.

“சித்தி, என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு!” என சிவாங்கி கண்சிமிட்ட, “என்ன வழி?” எனப் பாட்டியும் மருமகளும் ஆவலாக அவளை மொய்த்தனர்.

சிவாங்கி மெதுவான குரலில், “தாத்தா கிட்ட போயி, ‘அபி பாட்டி ஒரு மாசம் மலேசியாவுல இருக்க மித்ரா அத்தை வீட்டுக்கு விசிட் அடிக்கப் போறாங்க’ன்னு சொல்லிடுவோம். அங்க போயி நம்ம அஞ்சான் மாமா கிட்ட பேசி, ஆதவன்-தனலட்சுமி காதலுக்குப் பச்சைக்கொடி வாங்கிட்டு வந்துட்டா…?”

அபிராமி கண்கள் விரிய, “ஹே! என் குலசாமி சிவகாம சுந்தரி!” என நெட்டி முறித்துச் சந்தோஷப்பட்டார்.

“ஆனா அதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கே?” என ஶ்ரீவள்ளி இடையில் கட்டையைப் போட, “எதுக்குடி உனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா?” என அபிராமி காய்ந்தார்.

ஶ்ரீவள்ளி செல்லமாகக் கோபித்துக்கொண்டு, “அப்போ போங்க… உங்க மூத்த மருமகள் (அக்னி) உங்களைச் சட்டினி பண்ணி, கொத்து பரோட்டா போடுவாங்க. நீங்க அதை நிதானமா என்ஜாய் பண்ணுங்க!” என அமர்ந்தாள்.

“அடியே… நான் உனக்கு மாமியார்ன்றது நினைப்புல இருக்கட்டும்!” என அபிராமி கெத்தாகச் சொல்ல, ஶ்ரீவள்ளி உதட்டைச் சுழித்தாள்.

சிவாங்கி சிரித்துக்கொண்டே, “சித்தி விடுங்க… அபிமா இனி பார்த்துப்பாங்க. இப்போ சின்னவளை (தனலட்சுமி) எப்படிச் சமாதானம் பண்றதுன்னு யோசிப்போம்,” என அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அடுத்த நாள் விடிந்தது. அபிராமி இரும்புப் பிடிவாதத்துடன் தன் கணவர் ரங்கராஜன் முன் போய் நின்றார்.

உணவு மேஜையில் அனைவரும் கூடி இருக்க, என்ன வேணும்? என ரங்கராஜன் தாத்தா கேட்டார். 

நான் மித்ரா வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன் என்றார் அபிராமி. 

 தனஞ்செயன், வேலு, ஶ்ரீ வள்ளி, அகன், யுகன், யுவன், தனலட்சுமி, சிவாங்கி என அனைவரின் பார்வையும் அபிராமியின் மீது பட்டு அப்படியே அக்னியின் மீது பட்டது. அக்னி தனது மகன் மித்ரனுக்கும் கூடவே அகன் யுகன் யுவன் என நால்வருக்கும் உணவு ஊட்டி கொண்டிருந்தார். 

தாராளமா போ என ரங்கராஜன் தாத்தா கூற, ஶ்ரீவள்ளி பதட்டத்துடன் போச்சு இந்த அபிராமி மாமியார் இப்போ தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. என்ன நடக்க போகுதோ? என உணவை பரிமாறினார். 

அபிராமி உற்சாகத்துடன் திரும்ப, உங்க பொண்ணு மித்ரா வீட்டுக்கு போயிட்டா அடுத்து உறவு கொண்டாடிட்டு என்ற வீட்டுக்கு வர கூடாது. என்று சொன்ன அக்னி, என்ற வீடு அப்டின்னா என்ற கொழுந்தன் குடும்பமும் அடக்கம் என்றாள். 

உடனே முந்தி கொண்டு வந்த அகன், அபி ஆத்தா? உனக்கு இந்த வீட்டை விட அவங்க முக்கியமா? என எழுந்தான். அடுத்ததாக யுகன், யுவன் என மூவரும் பின்பாட்டு பாடியபடி எழுந்து விட, நாசமா போச்சு என தலையில் அடித்து கொண்டாள் சிவாங்கி. 

யாரும் எனக்காக எங்கேயும் போக வேணாம். நான் கட்டினால் அது ஆதவன மட்டும் தான்.. இன்னார் பையன் பொண்ணு அப்டின்னு பார்த்து லவ் பண்ணல.. என தனலட்சுமி சொல்லி கொண்டிருக்க, தனஞ்செயன் உன் பொண்ணு வாய அடக்கு என உக்கிரமாக கத்தினார் அக்னி. 

சின்ன பாப்பா அம்மா சொல்றத கேளு என வேலு ஒரு பக்கம் வரிந்து கட்டி கொண்டு வர, சிவாங்கி மற்றும் ஶ்ரீ வள்ளி இருவரும் அபிராமியை முறைத்தார்கள். உணவு மேஜை கலவர பூமியாகி விட, அபிராமி பாட்டி மலேசியா பறப்பது தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டது. 

ஆனால் அபிராமி விடவில்லையே.. ஹே வள்ளி என உலுக்கினார் மருமகளை.  

அத்தை உயிரோட தானே இருக்கீங்க? என பதட்டத்துடன் ஶ்ரீ வள்ளி விழித்து பார்த்தவர் முகத்தில் அசடு வழிந்தது. 

அபிராமி ஶ்ரீ வள்ளியின் தலையில் கொட்டியவர் எனக்கு ஆயிசு கெட்டி டி அவ்ளோ சீக்கிரம் உன்னை கொடுமை பண்ணாம டிக்கெட் வாங்க மாட்டேன் நீ சுந்தரிய உடனே வர சொல்லு என அங்கும் இங்கும் நடந்தார். 

ஶ்ரீ வள்ளி சிவாங்கிக்கு அழைத்து வரவழைக்க, சொல்லு அபிமா என புன்னகையுடன் வந்தவளின் கையை பற்றி கொண்ட அபிராமி. என் குல சாமிக்கு தங்கச்சி கல்யாணம் நடக்கணுமா வேணாமா? 

இது என்ன கேள்வி? நடக்கணும் அபிமா. என்றாள் கன்னக்குழி தெரிய சிரித்து கொண்டே.. 

எங்கே நடக்க இந்த அத்தை சொத்தை எல்லாத்தையும் சொதப்பி விட்டுடுச்சு தாய் கிழவி என்று முனகினாள் ஶ்ரீ வள்ளி. 

என்ன பாட்டி இது கேள்வி? என சிவாங்கி கேட்க.. அப்போ எனக்கு பதில் அபிராமி பாட்டியாக நீ வேஷம் போட்டு அத்தை வீட்டுக்கு போ என வெடி குண்டை சிவாங்கியின் தலையில் இறக்கினார் அபிராமி. 

சிவாங்கி..? 

ஶ்ரீவள்ளி..?

தொடரும்..

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 1 comment

  1. Nice starting uhh😍….unexpected ud😌….Asuran Agathi💙 ellarukum bayangarama favourite😘 aagituu atha intha Adhirooba sundari🩵 overtake pannirum polayeee….opening show 🎬 ippdi iruku na poga poga eppdi irukum nu paaka excitement la iruken🤗…fun overloaded😅🤣….Abhi ma Srivalli combo vera maariiiii😂….Agni eppavum pola Gethuu dhan😎…Agniii Abhi ma va Anjuuu🤍 veetuku pona inga thirumba namma veetuku vara kudathu😝 nu sonnathum naalu perum senthu eppdi Agniii ku support ku varangaaa😍😘❤️….yaaru antha naalu peru ellam namma Mithran❤️, Agan💙, Yugan🩵, Yuvan🩷 dhan….appo pasanga ellarum Agnii army ponnunga ellarum Abhi ma Srivalli army ahh🩵🤍….parahh ithu kuda nalla irukeyyy❤️✨️….Dhana Lakshmi love❤️ kaga ippo Abhi ma mathiri Shivangi anga poganum ahhh😅🤣….Shivangi and Srivalli mindvoice😉: ennathuuuuhhhh😲…intha plan uh mattum Agnii ku theriyanum🙃 moonu peru mandaiyum setharu thengai dhan🥴….
    Namma Anjuuu family ah paakanum mukkiyam ahhh namma Hero sir uh eppdi irukaru nu nalaiku dhan theriyum polaaaa😉😘….keep rocking sissyyy 🫂

Share your thoughts

error: Content is protected !!