🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
3. அதிரூபனின் சுந்தரி
அதிரூபனின் சுந்தரி
📖 அதிரூபனின் சுந்தரி · Chapter 3 of 84

அதிரூபனின் சுந்தரி

  • 17 Mar 2026
  • 1,862 reads
  • ★ 5.0 (1)
  • 6 min read

Epi -2 

மலேசியாவின் கோலாலம்பூர் சிட்டி, அந்தி சாயும் வேளையில் ஒரு “Neon Paradise” போல மின்னிக் கொண்டிருந்தது. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸின் நிழல் விழும் அந்தப் பிரம்மாண்டமான கிளாஸ் பில்டிங்; அதன் என்ட்ரன்ஸில் ”Empire Ad Media” என்ற நேம் போர்டு ராயலாக ஜொலித்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

​ஆபிஸ்க்குள்ளே ஒரு விதமான “Pin-drop silence”. ஸ்டாஃப்ஸ் அனைவரும் மூச்சு கூட சத்தமாக விட முடியாதபடி தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தினார்கள். அதற்கு காரணம், உள்ளே இருக்கும் ஆடவனின் கழுகு பார்வையில் மாட்டி விடக் கூடாது என்பதற்காக…

​அதிரூபன் அஞ்சாநெஞ்சன்.

​6’2″ ஹைட், ஜிம்முக்கு போய் செதுக்கின கட் அண்ட் க்ளீன் பாடி. அவன் போட்டிருந்த பிளாக் அர்மானி சூட், அவனோட “Dominating personality”யை இன்னும் அதிகமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. அவனது புருவங்கள் எப்பொழுதும் வளைந்து ஒரு கத்தி போல இருக்கும்; எதிரில் இருப்பவர்களின் மனநிலை என்ன என்பதை ஸ்கேன் செய்து விடுவான்.

​அவன் கையிலிருந்த மான்ட் பிளாங்க் பென்னை கீழே வைத்த சத்தம், அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் எக்கோ அடித்தது.

​”Is this your best idea? இந்த மொக்கையான ஆட் (Ad) பார்த்துட்டு people எப்படி வாங்குவாங்க? எப்படி இம்ப்ரஸ் பண்ணுவீங்க? தியேட்டரை விட்டு ஓடுவாங்களா?” என அதிரூபனின் குரல் காட்டமாக ஒலித்தது. அவன் அப்படியே மேஜையில் இருந்து வீசி எறிந்தான்.

​அவனுக்கு முன்னால் நின்ற கிரியேட்டிவ் ஹெட் நடுங்கியவர், கொஞ்சம் தன்னை சரி செய்து கொண்டு, “சார்… இது கொஞ்சம் எமோஷனலா…”

​”I don’t need emotions, I need impact! நாளைக்கு காலைல 8 மணிக்கு எனக்கு புது ஸ்டோரி போர்டு டேபிள்ல இருக்கணும். இல்லைனா, நீயே உன்னோட ரெசிக்னேஷன் லெட்டரை கொடுத்துட்டு கிளம்பலாம். Get out!” அவன் அதட்டும் குரலில் சொன்னான்.

​அடுத்த நொடி அனைவரும் தெறித்து ஓடி விட்டார்கள். அதிரூபன் அங்கும் இங்கும் எழுந்து நடக்க, “எதுக்கு இத்தனை கோபம்?” என்று கேட்டபடி அகிலன் உள்ளே நுழைந்தான்.

​”இப்படி இருக்க தத்தி மூட்டைகளை வச்சுட்டு எப்படி ஒர்க் கரெக்டா பண்ண முடியும், அகிலன்?” என அதிரூபன் இன்னும் எரிந்து விழுந்தான்.

​அகிலன் சமாதானம் செய்யும் பொருட்டு, “விடுங்க அண்ணா, பார்த்துக்கலாம். And இப்போ முக்கியமான விஷயம் சொல்லத் தான் வந்தேன்,” என்றான்.

​”என்ன விஷயம்?” என அதிரூபனின் பார்வையில் அனல் தெரிந்தது.

​”அப்பா கால் பண்ணார். சிங்கப்பூர் பவர் கார்ப்பரேஷன் டெண்டர் ஓகே ஆகிடுச்சாம்,” என அகிலன் கூறினான்.

​”ஆதவன் என்ன பண்றான்?” என புருவம் சுருங்கியது அதிரூபனுக்கு.

​ஆதவன் என்ற பெயரை கேட்டதும் அகிலன் ஒரு நொடி நிறுத்தி விட்டு, “ஆதவன் அங்க பிஸியா இருக்கான். அப்பா இப்போவே அஞ்சனாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு சீக்கிரம் வரச் சொன்னார்,” என்றான் அகிலன்.

​அதிரூபன் ஒரு மூச்சை விட்டபடி, தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு எழுந்தவன், கம்பீர நடையுடன் வெளியே வந்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு திமிர், கம்பீரம் என அனைத்தும் இருந்தும், ஒரு சிறு யோசனை தெரிந்தது.

​”என்ன அண்ணா, தீவிரமா யோசிச்சுட்டு இருக்க?”

​”வீட்டுக்கு வரத நினைச்சா irritating ஆக இருக்கு…” என்றான் அதிரூபன் சுரத்தே இல்லாமல். அகிலனுக்கு தனது அண்ணன் சொன்னது நன்றாகவே புரிந்தது; அவனும் எதுவும் சொல்லவில்லை. அதற்கு காரணம், ஆதவனின் காதல் விவகாரம் தான். அதற்கு குறுக்கில் நிற்பது அதிரூபன்.

​ஒரு வழியாக இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மித்ராவின் முகம் வீங்கி இருந்தது; அஞ்சான் தனது மனைவியை சோர்வுடன் பார்த்தார்.

​அதிரூபன் தனது அன்னையை முறைத்தபடி வந்து சேர்ந்தான். “டாடி!” என அஞ்சனா ஓடி வந்து மடியில் அமர்ந்து கொண்டாள்.

​”ம்ம் அஞ்சு மா! அம்மாவ பார்த்துக்கோங்க, அப்பா வர ரெண்டு மாசம் ஆகும். நானும் ஆதவனும் சிங்கப்பூர் போறோம்,” என்று கூறி கொண்டிருந்தார் அஞ்சான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

​மித்ரா எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தார். என்ன பேசி விட முடியும்? இந்த வீட்டில் யாருமே அவளின் பேச்சை கேட்பது இல்லை; முக்கியமாக அதிரூபன், அஞ்சனா மற்றும் அவளின் காதல் கணவன் அஞ்சாநெஞ்சன்.

​அஞ்சான் தனது மூத்த மகனை அழைத்து, “அவளை பார்த்துக்கோ! ஹார்ஷா நடந்துக்க வேணாம் ரூபன். நீ அப்பா சொல்றத கேளு டா,” என்றார்.

​”என்ன கேட்கணும்? இல்ல என்ன கேட்கணும்னு சொல்லுங்க?” என கொதித்து எழுந்தான் அதிரூபன்.

​அதிரூபனின் குரலை கேட்டதும் அகிலன், அஞ்சனா இருவரும் கப்சிப்பென ஆகி விட்டார்கள். அண்ணா என்றால் மரியாதை அதிகம். ஆனால், சங்க மித்ராவுக்கு ஆதவன் என்றால் உயிர்; எதனால் என தெரியவில்லை. அவனை பார்த்தால் அப்படியே தனஞ்செயன் மற்றும் ரங்கராஜனின் சாயல் அதிகமாக இருக்கும்; பிறந்த வீட்டு ஒட்டுதல் இரண்டாவது மகனிடம் அதிகம் இருக்கும், அதனால் இருக்கலாமோ என்னமோ! ஆனால் அதிரூபனுக்கு அன்னை என்றால் கொள்ளை ஆசை, அதே சமமாக தந்தையிடம் இருக்கும்.

​மித்ரா கலங்கிய விழிகளில் ஏறிட்டு பார்க்க, ஆதவன் தனது அம்மாவின் கையை பற்றி கொண்டான்.

​அதிரூபன் திட்டமான பார்வையுடன், “அந்த வீட்டுக்கு போய் படி ஏறி அவமானப்பட்டு வந்தது பத்தாதா? இன்னும் அவமானப்பட சொல்றாங்களா சங்க மித்ரா? இந்த வீட்ல நம்மள எல்லாம் பார்த்தால் மனுஷரா தெரியலையா டாடி, உங்க மனைவிக்கு? எப்போ பாரு தனா அண்ணா, அப்பா, வேலு அண்ணா, அபி அம்மா அப்டின்னு நிமிஷத்துக்கு நிமிஷம் நினைக்கிற சங்க மித்ராவை கேவலப்படுத்தினது மறந்து போச்சா? இல்ல, எத்தனை தடவை மலேசியா வந்து பார்த்திருப்பாங்க?” என்றவன், ஆதவனின் பக்கம் திரும்பி, “அதை விட ஆதவனுக்கும் இவங்களோட அண்ணா பொண்ணு தனலட்சுமிக்கும் ரெண்டு வயசு வித்தியாசம். அப்படி ஒத்த காலில் அவளையே கட்டணும்னு நிக்க காரணம் என்ன?” என்று சொல்லி விட, சங்க மித்ரா ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்.

​அஞ்சான் தனது மனைவியை அதிர்ந்து பார்க்க, “அம்மா!” என்று ஒரு சேர கத்தினார்கள் அகிலன், அஞ்சனா இருவரும்.

​”என்ன காரியம் பண்ற மித்ரா?” என கோபத்துக்கு வந்தார் அஞ்சான்.

​”பா விடுங்க,” என அதிரூபன் கூற, அஞ்சான் கோபத்துடன், “இப்போ உனக்கு என்ன, உங்க வீட்டுக்கு போகணும்… அவ்ளோ தானே? போ! இப்போவே போ!” என்றார் ஆத்திரத்துடன்.

​மித்ரா கேவி கொண்டே, “மாட்டேன், போக மாட்டேன். எனக்கு எல்லாரையும் விட என் புருஷன் தான் முக்கியம். ஆனால், ஆதவனுக்கு தனலட்சுமி தான் பொண்டாட்டி; அதை யாராலும் தடுக்க முடியாது,” என்றவர், ஆதவனின் நெற்றியில் முத்தமிட்டு, “நீ போயிட்டு வா ஆதவா. தனலட்சுமி தான் இந்த வீட்டு மருமகள்,” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.

​”என்னால முடியாது, என் பின்னாடி சுத்தாத அபிமா!” என சிவாங்கி இரண்டு நாட்களாக அபிராமியின் கண் முன்னால் வராமல் சுற்றி கொண்டிருக்க…

​கற்பூர தட்டை எடுத்து கொண்டு, தனது பேத்தியின் முன்னால் சென்று நின்றார் அபிராமி.

​”பிளீஸ் டி சிவகாமி! உன்னோட அக்கா தனலட்சுமிகாக நீ மலேசியா போய் தான் ஆகணும்.”

​”கிழவி!!!” என பற்களை கடித்து கொண்டு சிவாங்கி பார்க்க…

​”ஆமாடி சிவகாமி, என்னோட குலசாமி நீ தான். உன்னால தான், உன் கையில் தான் எல்லாமே இருக்கு. என்னை கண்டிப்பா உன் அம்மாக்காரி விட மாட்டாள், கிராதகி,” என அபிராமி பிதற்றினார்.

​”அக்னி அக்கா இல்லேன்னாலும் கிழவியை கையில பிடிக்க முடியாது,” என்றாள் ஸ்ரீ வள்ளி.

​”என்ன?” என அபிராமி கேட்க…

​”அய்யோ அய்யோ இல்ல அத்தை… அது வந்து அக்னி அக்காவுக்கு விஷயம் தெரிஞ்சா கிழவி வேஷம் கலைஞ்சிடும் அப்படின்னு சொல்ல வந்து, தெரியாம சரியா சொல்லிட்டேன்,” என்றாள்.

​அபிராமி முறைத்து பார்த்து கொண்டிருக்க, அதே நேரம் மலேசியாவில் இருந்து மித்ராவுக்கு உடம்பு முடியவில்லை என அழைப்பு வந்தது.

​”சிவாங்கி!!” என அபிராமி காலில் விழும் அளவுக்கு வந்து விட, வள்ளி கையை பற்றி கொண்டு பார்த்தார்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

​சிவாங்கி உதட்டை பிதுக்கிக் கொண்டு “போறேன்” என ஒத்து கொண்டவள், இரண்டு கண்டிஷன் போட்டாள்.

​தொடரும்…

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 1 comment

Share your thoughts

error: Content is protected !!