
கள்ள கணவன் கர்ணன்
- 11 Apr 2026
- 432 reads
- ☆ No ratings yet
- 8 min read
Epi -2
கஷ்டபட்டு ஆட்டாங்கல்லில் அரைத்து எடுத்த சாந்து கரைசலை எடுத்து கொண்டு எழுந்தவளது காலை மியாவ் என கத்தியபடி மீனு துளசியின் பாதத்தை பாசத்துடன் நக்கியது.
ஹக் என துள்ளியபடி அவள் கையில் இருக்கும் பாத்திரத்தை பயத்துடன் பாத்திரத்தை தவறவிட்டாள்.
கர்ணன் அவளை பார்க்காமல் பாட்டுக்கு வைப் செய்து கொண்டிருந்தான்.
துளசிக்கு கோபமும் ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. பூனை வளத்திறான் பெரிய பூனை.. ச்சீ இந்த கிரகத்தை பார்க்க வியாக்.. அவனை போல அசிங்கமா அருவருப்பா என மனதுக்குள் அர்ச்சித்து கொண்டவள் உதட்டை பிதுக்கியபடி சென்றாள் உள்ளே..
மியாவ் மியாவ் என கத்தியபடி தனது ஓனர் கர்ணனின் நெஞ்சின் மேல் தாவி கொண்டு வந்து படுத்து கொண்டாள் மீனு.
என்ன மீனு குட்டி? நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போற? என மிரட்டினான்.
மியாவ் மியாவ் என பூனை கத்தியபடி அவனது மார்பில் சுருண்டு படுத்து கொண்டது. ஆறு மணி வரை படுக்கையில் கிடந்தவன் உடலை முறித்து கொண்டு சவாரிக்கு கிளம்பினான் கர்ணன்.
வெளியில் அவன் வந்ததும் ஓடி வந்தான் மணி. வவ் வெவ் என குறைத்து கொண்டே, மணி செல்லம் என கொஞ்சி தலையை தடவி கொடுத்தவன். பிஸ்கட் பாக்கெட்டை மொத்தமாக போட்டான். கவ்வி கவ்வி சாப்பிட்டான் மணி பையன். சரி போயிட்டு வரேன் வீட்டை பார்த்துக்கோ என மீசையை முறுக்கியபடி வேஷ்டியை சரி செய்து கட்டினான் கர்ணன்.
அதே நேரம் ரத்னம் ஆத்து மீனை வாங்கி கொண்டு வர கூடவே கார்த்திகா அவளது மகனை தூக்கி கொண்டு வந்தாள்.
கர்ணன் அவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை முன்னால் நடந்தான். ரத்னத்துக்கு அவனை பார்த்ததுமே பயம் பதட்டம் உள்ளுக்குள் தோன்றியது. அதை தாண்டி ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. கர்ணன் ஒரு முரடன்.. கோபம் எப்போ வரும் எப்டி வரும்ன்னு தெரியாது. சிறு வயதில் இருந்தே அந்த கோபத்தில் ஊறி இருக்கிறான்.
அவனை பார்த்ததும் கார்த்திகா தனது அப்பாவின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். கைக்குட்டையை சுழற்றி கட்டி கொண்டு சென்றான் கர்ணன். யாருக்கும் பயப்படவில்லை..
இங்கே துளசி வெளியே வந்து எட்டி பார்த்தாள். கர்ணன் இல்லை. உள்ளுக்குள் நிம்மதி பரவியது. அப்பாடி கிரகம் புடிச்சவன் போயிட்டான். அவனும் அவனோட முகர கட்டையும். என நினைத்தவளுக்கு கர்ணனின் நெற்றியில் இருந்த கீறல் தழும்பு கண் முன் வந்து போனது. அவள் ஒருவாறு தன்னை சரி செய்து கொண்டு உள்ளே சமையலறை செல்ல.. கார்த்திகா வந்து விட்டாள்.
துளசி!! டீ வை! என அதிகாரத்துடன் நுழைந்தாள். கார்த்திகா இதோ இப்போவே வைக்கிறேன் என உள்ளே ஓடினாள்.
அத்தை என பூர்வீகா அழைக்க.. அழகி! என முத்தமிட்டு தூக்கி கொண்ட துளசி. அத்தை சமைச்சிட்டு வரேன் விளையாடலாம் ஓகே வா தங்கம் என அனுப்பி வைத்தவள். டீ வைத்து கொடுத்து விட்டு, மீனை கழுவி சுத்தம் செய்து வறுக்க தனியாக எடுத்து வைத்தாள். குழம்புக்கு தலையையும் வாலையும் போட்டு மணக்க மணக்க வைத்தாள்.
சோர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன். அவன் வீட்டுக்கு வந்த அடுத்த நொடி பார்த்து பார்த்து கவனித்தாள் கணவனை.
என்ன இந்த புடவை கட்டியிருக்க? என அர்ஜுன் டீயை ஒரு முடுக்கு குடித்தபடி கேட்டான்.
துளசியின் முகத்தில் பயம் ஒட்டி கொண்டது. என்னங்க? இந்த புடவையில் என்ன இருக்கு? என திக்கி திணறி கேட்டாள்.
அர்ஜுன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன். என்ன இருக்குன்னு கேட்கிற? இதோ உன்னோட இடுப்பு அப்பட்டமா தெரியுது. புடவை ரொம்ப லேசா இருக்கே? இப்படி நான் உனக்கு வாங்கி தரவே இல்லையே? எவன் வாங்கி கொடுத்தான் என கேட்டான் சாதாரணமாக..
துளசியின் கண்களில் நீர் கொட்டியது. நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. இது நீங்க தான் கல்யாணம் ஆன புதுசுல எடுத்து கொடுத்த புடவை என கண்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது அவளுக்கு.
அர்ஜுன் ஒரே மூச்சில் டீயை குடித்து விட்டு அருகில் கிளாஸை வைத்தவன். அவளை அருகில் இழுத்தான்.
துளசி அழுகையுடன் அவனது பிடிக்கு நின்றிருந்தாள். அவளை முகர்ந்து பார்த்தான்.
எதுவும் பேசாமல் கண்களை மூடியபடி நின்றாள். உள்ளுக்குள் வேதனை வெறுமை. அதையெல்லாம் வெளியில் காட்டி கொள்வதில்லை அவள்.
அர்ஜுனின் சோதனைகள் நீண்டு கொண்டே போனது. அவன் அவளின் சடையை இழுத்து முகர்ந்து பார்த்தான். துளசி தலையை வாரி பின்னி பூ வாங்கி வைக்க கூடாது. அப்படி வைத்தால் எவனை மயக்க இந்த பூ, இல்ல எவனாவது வாங்கி கொடுத்தானா? என வார்த்தைகளில் பாரபட்சமில்லாமல் கேட்பான். மல்லிகா ஒரு படி மேலே போய் பூ வாடினதும் குப்பைக்கு போயிடும். நீ குத்தும் குலையுமா மினுக்கிட்டு இருக்க? ஆனால் உன் வயித்துல தான் ஒரு புழு பூச்சி உண்டாகல என கூறுவாள். அதனால் துளசி பூக்களே வைத்து கொள்ள மாட்டாள்.
கார்த்திகாவை விட முடி நீளம் இருக்க, குழந்தையே இல்ல உனக்கு? எதுக்கு இத்தனை நீளமாக முடி? என கேட்டு அந்த முடி பாதியானது. தலைக்கு குளித்தால் அதற்கும் குத்தம். நல்ல நாட்களில் துளசிக்கு மாதவிடாய் வந்தால் தீண்டாமை ஒரு பெருகுற்றம் அல்ல.. மல்லிகாவின் மருமகள் ஆவது பெருங்குற்றம், அர்ஜுனனது பொண்டாடியாக இருப்பது பாவசெயல் எனும் வரிகளாக மாறி விடும்.
மூச்சை இழுத்து விட்டவனுக்கு சோதனை முடிவுகள் தெரிந்து இருந்தது. துளசி அவனை வேதனையுடன் பார்க்க, இத்தனை நேரமும் கோபமாக இருந்தவன் சட்டென புன்னகையுடன், துளசி என அவளின் உதட்டை கவ்வி கொண்டான் அர்ஜுன்.
பைத்தியமா இவன் என நினைக்கலாம். ஆம் இவன் இப்படித்தான்.
துளசி தேம்பி அழுதாள். அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன். போய் குளி இனி இந்த புடவைய நான் என் கண்ணுல பார்க்கவே கூடாது. புரியுதா? என கழுத்தில் முத்தமிட்டான் அர்ஜுன்.
ம்ம் என்றாள் தயக்கத்துடன்..
அவள் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து, எதுக்கு டி நிக்கிற போய் குளி.
ம்ம் நீங்களே எது கட்டுறதுன்னு எடுத்து கொடுங்க என பீரோவை திறந்து காட்டினாள் துளசி.
இப்போ நான் கூட இருக்கேன்ல அதனால புது புடவை கட்டிக்கோ என எடுத்து வைத்தவன். சட்டென எதையோ யோசித்தபடி, வேணாம் வேணாம் இப்போ நீ இதை கட்டிக்கோ நையிட்டு நம்ம அறைக்குள்ள வந்ததும் வேற புடவை அதுவும் நான் சொல்ற புடவைய கட்டிக்கோ என்றான் அர்ஜுன்.
ஒரு பெருமூச்சுடன் அவன் சொல்வதை கேட்டு கொண்டு பாத்ரூம் சென்றாள்.
குளியலறைக்குள் சென்றதும் அத்தனை அழுகை கொட்டியது அவளுக்கு. வாழ்க்கையே நரகமாக இருந்தது. அதற்கு காரணம் அவளின் வீட்டில் நான்கு பெண் குழந்தைகள். துளசி தான் மூத்தவள். அவளுக்கு பிறகு தாமரை, ரோஜா, செம்பருத்தி, சம்பூர்ணா என வரிசை கட்டி நின்றார்கள்.
திருமணம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் பதினெட்டு வயது பூர்த்தியானதும் கல்யாணம். வாழ்க்கையில் எதையுமே பார்க்கவில்லை. ஏழு வருடங்களாக அவளின் ஒரே நோக்கம் கொள்கை அனைத்துமே ஒரு குழந்தை தான். அது லட்சியம் என்றே சொல்லலாம். எனக்கு ஏன் குழந்தை இல்லை? என்ற கேள்வி அவள் மனதில் ஒரு பக்கம். பெரிய பெரிய மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க நினைத்திருந்தாள் துளசி.
ஆனால் அதற்கு பணம்? அதை விட அதையெல்லாம் அர்ஜுனிடம் சொல்ல முடியுமா? இப்படி ஆயிரம் கவலைகளில் ஒவ்வொரு நாளும் முள் தடத்தில் நடப்பது போல ஓடி கொண்டிருந்தது.
குளித்து முடித்து வந்ததும் மீன் பொரித்து அனைவருக்கும் போட்டு கொடுத்தாள்.
அர்ஜுன் டிவியை பார்த்து கொண்டு இருக்க துளசி அவனுக்கு அருகில் அமர்ந்து முள் எடுத்து சதைகளை அவனது தட்டில் வைக்க, திருப்தியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
கர்ணன் வீட்டில் இல்லை அதனால் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
களுக் களுக் சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார் மல்லிகா.
ரத்னம் பூர்வீகாவை மடியில் அமர்த்தி கொண்டு மீன் ஊட்டி கொண்டிருந்தார். எப்படி இருந்தது மா? சீமந்தம்? என கேட்டாள் கார்த்திகா.
அதெல்லாம் பிரமாதமாக நடந்துடுச்து. எவ்ளோ சனம் தெரியுமா? சாப்பாடு உன்னோட சீமந்தத்தில் பண்ணது மாதிரி இல்ல அவ்ளோ சூப்பரா இல்ல. சோறு விறைச்சு கிடந்தது. இந்த ஜனம் அந்த சோத்துக்கு அலையுது என கூறியவர். புடவையை மாற்றி கொண்டு வந்தார்.
அத்தை சாப்பாடு ரெடிங்க! கார்த்திகா நான் எடுத்து வைக்கவா? என கேட்டாள் துளசி.
பூர்விக்கு ஊட்டி விட்டுடு துளசி என்று விட்டு ஆயாளும் மகளும் புறணி பேசினார்கள். குழந்தைக்கு உணவை ஊட்டி விட்டவள். அர்ஜுனை பார்த்து சாப்பாடு எடுத்து வைக்கவா என கேட்டாள்.
ம்ம் எடுத்திட்டு வா என்றவன் ஆர்வமாக அமர்ந்திருந்தான் டீவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டே..
துளசி மீன் குழம்பை ஊற்றி சாதத்துடன் கொண்டு வந்தாள். இரண்டு வாய் சாப்பிட்டவன் முகம் சடுதியில் மாறி போனது.
மாமா உங்களுக்கு போட்டு எடுத்திட்டு வரேன் என அவள் உள்ளே செல்ல..
துளசி என்னடி குழம்பு வச்ச? இது வேற மாதிரி இருக்கு? என அர்ஜுன் உடனே எழுந்து கொண்டான்.
சட்டென திரும்பிய மல்லிகா தனது மகனை பார்த்து, என்னடா ஆச்சு? ஏன் பாதியிலேயே எழுந்துக்குற? என கேட்க..
எனக்கு வேணாம் குழம்பு நல்லாவே இல்ல என அதிலேயே கையை கழுவினான்.
ஹே துளசி என கோபமாக அழைத்தார் மல்லிகா.
அத்தை என பதட்டத்துடன் ஓடி வந்தாள் துளசி.
என்னாச்சு? குளம்பு நல்லா இல்லன்னு சொல்றான்? என கேட்டாள் கோபத்துடன்..
அத்தை இன்னிக்கு அம்மியில் அறைக்கல… கடை செலவு போட்டு வச்சேன். என துளசி கூற..
மல்லிகா வஞ்சனை நாக்குடன், நல்ல குடும்பம் அப்டின்னு நினைச்சு தராதரம் பார்க்காம பொண்ணு எடுத்ததுக்கு இன்னிக்கி வரைக்கும் புழு பூச்சி இல்ல. இப்போ மகாராணிக்கு புருஷனுக்கு சமைச்சு போட கூட ஏகப்பட்ட மொடை.. ரொம்ப நல்லாருக்கு என கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.
துளசி..?
***
கர்ணா கல்யாணம் பண்ணிக்கலாம் வரியா? என கட்டியணைத்தாள் அருணா.
தொடரும்..










💬 Be the first to comment