🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
2. சர்வாதிகாரியின் சதி தேவி
சர்வாதிகாரியின் சதி தேவி
📖 சர்வாதிகாரியின் சதி தேவி · Chapter 2 of 67

சர்வாதிகாரியின் சதி தேவி

  • 7 Jul 2025
  • 1,720 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

அத்தியாயம் -2

யாரது புது நம்பரிலிருந்து? எடுக்கலாமா? வேண்டாமா? என யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மீண்டும் அழைப்பு முழு ரிங் ஆனது. சகுந்தலா போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள். நேற்று இரவு நடந்த காரியம் மிகவும் பெரிது. சத்தியமாக அவளுக்கும் நடந்த சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அடுத்த நாள் மாலைதான் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினாள். அவள் வெளியே வந்தவள் நேராக பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்றாள். மிகவும் களைப்பாக உணர்ந்தாள். வீட்டுக்குச் சென்றதும் உறங்க வேண்டும். அதைவிட, நேற்று நடந்த விபரீதத்தில் கரு? என நினைக்கவே தூக்கிவாரிப் போட்டது. இப்படி பலவாறு சிந்தனையில் உழன்றுகொண்டே அங்கு சென்று நின்று காத்திருந்தாள் பேருந்துக்காக.

ஆனால் அவளுக்கு எதிரில் சர்வா நின்றிருந்தான். இதயம் படபடவென அடித்துக்கொள்ள, வியர்த்துக்கொட்டியது.

மீண்டும் அழைப்பு வந்தது.

அவள் போனை எடுத்துப் பார்க்க, இங்கே சர்வா காதில் வைத்தபடி நின்றிருந்தான். ‘அப்போ காலையில் போன் பண்ணது இவர்தானா? இவரு யாரு?’ என மலங்க மலங்க விழித்தாள்.

“ஹே, போனை எடுடீ!” என சர்வாவின் உதடுகள் கோபத்தில் அசைய,

அழைப்பை ஏற்றவள், “சார்…” என சகுந்தலா பேச வர,

“ஒழுங்கா கார்ல வந்து இப்போ ஏறுறியா? இல்லன்னா, கையைக் காலைக் கட்டி தூக்கிட்டு போவேன்.”

“சார், ப்ளீஸ் சார், அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க. சத்தியமா நேத்து நடந்ததுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல சார்!”

“நான் உன்னை வரச் சொன்னேன்!” என சர்வா பல்லைக் கடிக்க,

வேறு வழியில்லாமல் அமைதியாக கார் பக்கம் வந்தாள்.

“உள்ளே ஏறு! ம்ம்” என அதட்டல் குரல்.

வேறு வழியில்லாமல் காரில் ஏறிக்கொண்டாள்.

“இந்த வேலை பண்ண உன்னோட ஹாஸ்பிடல் டீன் ஹர்ஷவர்த்தன் தான சொன்னான்? எவ்வளவு காசு வாங்கிட்டு இந்த மாதிரி கேவலமான வேலை பண்ண? சொல்லுடீ!”

சகுவின் கண்களில் நீர் வழிய, “சார், சத்தியமா நான் இதுவரை ஹர்ஷா சாரைப் பார்த்ததே இல்ல. அவருக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. ப்ளீஸ், என்னை நம்புங்க.”

“உனக்கு அசிங்கமா இல்லையாடீ!” என சர்வா கேட்க,

“சார், ப்ளீஸ், நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க! எனக்கு இதை எப்படி சரி பண்றதுன்னு தெரியல” என்றாள் உருக்கமாக.

சர்வா அவளின் முகத்தைப் பார்த்தான். பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் அனுஷா, மற்றும் தன் அன்னை ராஜம், தந்தை ஈஸ்வரன்கிட்ட என்ன பதில் சொல்வான்? ‘தெரியாமல் தவறு நடந்துவிட்டது’ என்றா சொல்ல முடியும்? என மனதில் தோன்றியது.

சகுந்தலா தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்க,

“உன்னோட பேர் சகுந்தலா, ரைட்?”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சகுந்தலா தேவி!”

“ஓகே சகுந்தலா தேவி! நேத்து நடந்த விஷயத்தை வெச்சு உன்னை மேரேஜ் பண்ண முடியாது என்னால!”

“நானும் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. இட்ஸ் ஆக்சிடன்ட்.”

“அப்போ பணம் எவ்வளவு எதிர்பார்க்கிற? ஏன்னா, எனக்கு இதை இத்தோட கட் பண்ணனும்” என்றான் சர்வா.

“நான் பணத்துக்காக உங்ககூட இருக்கல! இது விபத்து, அவ்வளவுதான். ப்ளீஸ், நீங்களும் மறந்திடுங்க, நானும் இதை மறந்திடுறேன்” என்றாள் சகுந்தலா.

கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. சர்வா இறங்கிக்கொள்ள, அதேபோல சகுந்தலாவும் இறங்கினாள்.

கையை கட்டியபடி அவளையே வெறித்துப் பார்த்தான்.

சகுந்தலா தலையைத் தாழ்த்திக்கொண்டு நின்றாள்.

“நீ இனி பிரச்சினை பண்ண மாட்டேன்னு நம்புறேன். எக்காரணத்தைக்கொண்டும் என்னை தேடி வர வேணாம். அதேபோல, நான் ஒரு டாக்டர், எனக்குன்னு சில மதிப்பு மரியாதை இந்தச் சொசைட்டில இருக்கு. நீ என்னோட பேச்சுக்கு ஒத்துப்போகலன்னா என்ன வேணும்னாலும் என்னால பண்ண முடியும்” என்றான் சர்வா.

சகுந்தலா நிமிர்ந்து அவனைப் பார்க்க,

“அன்னிக்கு நைட் நீ எதுக்கு அந்த ஹோட்டலுக்கு வந்த?”

“கான்பரன்ஸ்க்காக வந்தேன்.”

“பொய் சொல்லாதே!”

“சத்தியமா சார்!!” என சகு கழுத்தைப் பிடித்துக்கொண்டு கூறியவள், PPT பிரசன்டேஷன் டாக்குமென்ட்ஸ் விவரங்களை போனில் காட்டினாள்.

“சரி, அங்கே நீ எதுவும் சாப்பிட்டியா?” என சர்வா கேட்க,

“ஆமா சார், எல்லாரும் போலதான் சாப்பிட்டேன்.”

“எதுவும் ஜூஸ் குடிச்சியா?”

“இல்ல சார், தண்ணிதான் குடிச்சேன். ஸ்வீட்கூட சாப்பிடல” என்றாள் சகுந்தலா.

“ஓகே, எப்படி அந்த ரூமுக்கு வந்த?”

“எங்க ஹாஸ்பிடலுக்காக ரூம் புக் பண்ணிருந்தாங்க. அங்கே என்னோட பேக் இருந்தது, அதை எடுக்க வந்தேன். லிஃப்ட் வேலை செய்யல, ஸ்டெப்லதான் ஏறி வந்தேன். அப்பவே எனக்கு மயக்கமா இருந்தது. பேக் எடுத்துட்டு கிளம்பிடணும்னு வந்தேன்.”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அப்புறம் எப்படி என்னோட ரூம் உள்ளே வந்த?”

“சரியான ரூம் நம்பர் பார்த்துதான் உள்ளே வந்தேன். என்னோட பேக்கும்கூட ரூம்ல இருந்தது. நான் பேக் எடுத்துட்டு கிளம்பும்போது…” என நிறுத்தியவள் அவனைப் பார்த்தாள்.

“சொல்லு! என்னாச்சு?”

“நீங்க ரூமுக்குள்ள வந்துட்டீங்க!”

“அப்புறம்?” என சர்வா கேட்க,

“உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என சகுந்தலா கேட்க,

“ஹே, என்னைக் கேள்வி கேட்கிறியா?” என மிரட்டினான்.

“சார், அது அப்படி இல்ல” எனத் தயங்கினாள் சகுந்தலா.

“என்ன? அப்படி பார்க்கிற? எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அப்படி பார்க்கிற பொண்ணு மேல பாயிற ஆள் நான் இல்ல. நீயும் நல்ல பொண்ணு மாதிரிதான் தெரிகிற.”

சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

“இதுதான் நம்ம கடைசி சந்திப்பா இருக்கணும், புரிஞ்சுதா? இனி நான் இருக்கிற திசை பக்கமே நீ வரக் கூடாது.”

“ஓகே சார், வர மாட்டேன்” என ஆட்டுக்குட்டி போல தலை ஆட்டினாள்.

“ஓகே, வெல் செட். இனி எந்தப் பிரச்சினையும் இல்ல” எனப் புறப்பட்டான் சர்வா.

ஒரு பெருமூச்சு விட்டபடி அவன் செல்வதைப் பார்த்தாள். ஏனோ அவள் கண்களுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தான் சர்வா. காரணம், இதுவரை எந்த ஆண்மகனையும் அவள் நிமிர்ந்து பார்த்ததில்லை. சரவணனுக்கு ஒரு முறை காய்ச்சல் ஏற்பட்டு உணவு கொடுக்க உள்ளே சென்றாள். அவன் கைகளைப் பிடித்து காய்ச்சலைப் பார்த்ததில் உடலெல்லாம் சிவந்து தடித்து எழுந்து கொண்டது.

ஆனால் சர்வா? ‘என்னோட விதி இதுதான் போலயே? இவனால என்னை தொட முடியுது. ஆனால் அவன் கூட என்னால சேர்ந்து வாழ முடியாது’ என மனம் அடித்துக்கொண்டது.

சிறு வயதிலிருந்து படித்த பள்ளிகள் அனைத்தும் மகளீர் மட்டும். மேற்படிப்பு என்ன படிக்கலாம்? என வரும்போது அவளுக்குப் பிடித்தது மருத்துவம் தான். பிரகாஷ் மகள் சாந்தினி மருத்துவம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தவள். “நீ டாக்டருக்குப் படிக்கப் போறியா? யோசிச்சுதான் பேசுறியா? ட்ரெயினி டாக்டரா எல்லாருக்கும் மருத்துவம் பார்க்கணும். அதுக்குத் தயாரா இருக்கியா? அங்கே வந்து நீ படுத்துக்கிட்டா என்ன பண்றது?” என கொடுக்கு போல கொட்டினாள் சாந்தினி.

அவள் அப்படி பேசக் காரணம், சகுந்தலா சாந்தினியைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.

“பாப்பா சகு, அவளோட ஆசையை சொன்னா. நீ தேவையில்லாம பேசிட்டு இருக்காத” என பிரகாஷ் சப்போர்ட்டுக்கு வர,

“மாமா விடுங்க, நான் நர்சிங் ஜாயின் பண்ணிக்கிறேன். மகப்பேறு மருத்துவமனையிலதானே வேலை இருக்கும். அங்கே என்னைச் சுத்தி பொண்ணுங்கதான் இருப்பாங்க. வேலையிலும் அப்படித்தான். அதனாலே நான் அங்கே ஜாயின் பண்றேன், ப்ளீஸ்” என்று சொல்லி சென்றுவிட்டாள்.

இப்படிதான் சகுந்தலா நர்சிங் சேர்ந்தாள். படித்து முடித்து அவள் நினைத்ததைப் போலவே நர்ஸ் ஆகி வந்தாள். சாந்தினி டாக்டராகப் பணிபுரியும் அதே ஹாஸ்பிடலில் நர்ஸாகச் சேர்ந்துகொண்டாள் சகுந்தலா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஓ காட்! ஒரு தொல்லை முடிஞ்சது. இனி அவள் நம்ம வழியில் வர மாட்டாள்” என சர்வா நேராக ஹாஸ்பிடல் சென்றான்.

சகுந்தலா அவன் வழிக்கு வரப்போவதில்லை. சர்வா தான் சகுந்தலாவின் வழிக்கு வரப்போகிறான்.

பார்ப்போம்.

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!