
சர்வாதிகாரியின் சதி தேவி
- 7 Jul 2025
- 1,533 reads
- ★ 5.0 (1)
- 7 min read
அத்தியாயம் -3
மென்மையான உதடுகளை ஆக்ரோஷமாகக் கவ்விக்கொண்டான் சர்வா. உடலில் உள்ள செல்கள் அனைத்தும் அவளைச் சுற்றி இருந்தன. அவளின் முட்டை கண் விழி அழகும், சிறிய அலகும், அதனுடன் அழகான ஆரஞ்சு பப்பிள் வாசனை வீசும் உதடுகளும், அதை பப்பிள் கம் போட்டு கடித்து முழுங்கிவிட வேண்டும் என மோகமும் கரைபுரண்டு ஓட, நிதானத்துக்கு வழியில்லாமல் போக, வேகமாக அவளுக்கு மேல் வந்தான்.
“விடுங்க” என சகுவின் சிணுங்கல் மொழிகள் காதில் கேட்க, இதோ பெண்மையிடம் ஆணின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சகுவின் உதட்டைக் கவ்விக்கொண்டு தளர்ந்து போனான் சர்வா.
போன் விடாமல் சிணுங்கிக்கொண்டிருக்க, சட்டென எழுந்து அமர்ந்தான். உடலெல்லாம் வியர்த்துக்கொட்டியது. வெட் ட்ரீம்ஸா? அதுவும் இந்த அளவுக்கா? எனத் தோன்றியது. போனில் யாரெனப் பார்க்க, அனுஷா.
அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு அழைப்பை ஏற்றான்.
“சர்வா! என்னோட வீட்ல அப்பா அலைன்ஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டார்.”
“நீ ஒத்துக்கிட்டியா?” என முகத்தில் கோபம் குடிகொள்ள, “அனு, நான் இன்னைக்கே அம்மாவைக் கூட்டிட்டு வரேன்” என அனுஷா பதட்டப்பட, “நான் வரேன்” என்று போனை வைத்தான்.
ராஜி – தணிகாசலம் இருவருக்கும் சர்வேஷ், ஸ்ரீமதி என இரண்டு பிள்ளைகள். ராஜி கூட மருத்துவர்தான். ஸ்ரீமதி கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறாள். ஸ்ரீமதி பிறந்த நேரத்தில் பிஸ்னஸ் ட்ரிப் சென்ற தணிகாசலம், ஆக்சிடன்ட் ஆகி ஸ்பாட் அவுட். ராஜிதான் இரண்டு பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். சர்வேஷ் தனது ஆசை மற்றும் தன் அன்னையின் ஆசைப்படி மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தான். மருத்துவமனை வாங்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை தன் மகனின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். இப்போது மகனுக்குத் திருமணம் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறார்.
அனுஷாவிடம் பேசிவிட்டு வைத்தவன், “Oh, என்னாச்சு சர்வா உனக்கு? அந்த கேர்ள்! அவளை நினைச்சு இப்படி பண்ணி வச்சிருக்க? ச்ச…” எனத் தலையைக் கோதினான். மனம் முழுக்க அனுஷாதான் இருக்கிறாள். அது அவனுக்கும் தெரியும். அவனைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தெரியும். அனுஷா அழகிய பதுமையான பெண். சர்வா மற்றும் அனுஷா இருவரும் ஒன்றாக மருத்துவம் பயின்றார்கள். ஆதி கவுன்சிலிங்கில் இவர்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். அவனுக்குச் சேலம். அனுஷா மற்றும் சர்வேஷ் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள மெடிக்கல் காலேஜில் படித்தார்கள்.
கல்லூரியில் படிக்கும் பிராயத்தில் இருந்தே காதல் தான். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் சர்வேஷ். முதலில் காதலிக்கிறேன் என இருவரும் சொல்லிக்கொண்டார்கள். அனைத்தும் நன்றாகத்தான் சென்றது. ஆனால் சர்வேஷின் பிறந்தநாள் அன்று அனுஷா முத்தமிட அருகில் வந்தாள். இதுவே முதல் முத்தமும் கூட. அப்பொழுதுதான் அவனிடம் இருக்கும் குறையே தெரிய வந்தது. குறை என்று சொல்லிவிட முடியாது. அந்த உணர்வுகள் அவள் மேல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் மனம் முழுவதும் அனுஷாதான் இருக்கிறாள். ‘சரி, கல்யாணத்தைப் பற்றி அம்மா கிட்ட பேசலாம்’ என கீழே சென்றான்.
“உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? எதுக்கு என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றீங்க? நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை” என கோபத்துடன் புறப்பட்டாள் சகுந்தலா.
“சொல்றத கேளு சகுந்தலா! என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? என்னைக்கு உன்னை மெடிக்கல் காலேஜில் பார்த்தேனோ, அன்னையிலிருந்து உன்மேல எனக்கு விருப்பம். ப்ளீஸ் சகு! மத்த ஆண்பிள்ளை மாதிரி நான் இல்ல. உனக்கு ஏன் புரிய மாட்டிக்கிது?” எனப் பின்னால் சுற்றினான் ஆதி.
சகுந்தலா கோபத்துடன் அவன் பக்கம் திரும்பியவள், “நீங்க ஆசைப்படுற விஷயம் என் கிட்ட நடக்காது. எதுக்கு இப்படி அலையிறீங்க?” எனக் கண்களில் நீருடன் விசும்பிக்கொண்டே பார்த்தாள்.
ஆதிக்கு மிகவும் வேதனையாகிப் போக, எதுவும் பேசாமல் அப்படியே அவளை வெற்றுப் பார்வை பார்த்தான்.
“ப்ளீஸ், என்னை விட்டுடுங்க. என் பின்னாடி வந்து தொந்தரவு பண்ணாதீங்க” எனச் சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள்.
“சகுந்தலா, ப்ளீஸ்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என அவளின் கையைப் பிடித்துவிட்டான் ஆதி. அத்தோடு நில்லாமல், “உன்னை ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்கிறேன் சகு. நான் உன்னை ஏமாத்த மாட்டேன். நீ என்னை நம்பலாம். ப்ளீஸ்” என அவன் சொல்லிக்கொண்டிருக்க,
சகுந்தலாவின் கைகளில் தடித்துச் சிவக்க ஆரம்பித்தது. ஆதியின் உள்ளங்கை வியர்வை சகுந்தலாவின் மணிக்கட்டில் பட அடுத்த நொடி எரிய ஆரம்பித்தது.
வேதனையான விழிகளில் அவனைப் பார்த்தவள், “ஒரு நிமிஷம் கைய எடுங்க” என அவள் கூற,
“ஒத்துக்கிட்டியா?” என ஆதியின் முகத்தில் புன்னகை.
அவன் பிடித்த இடத்தைக் காட்டினாள். “பார்த்துக்கோங்க! நீங்க என்னை தொட்ட இடத்தை…” என வலியிலும் வேதனையிலும் பார்த்தாள். தக்காளி போல வீங்கி, தடித்துச் சிவப்பாக மாறியது மணிக்கட்டு.
ஆதி பதட்டத்துடன், “எப்படி ஆச்சு? வா ஹாஸ்பிடல் போலாம்” என மீண்டும் கை பிடிக்க வந்தான்.
“போதும், ஜஸ்ட் ஸ்டாப் இட்!” எனக் கத்தியவளின் முகம் வலியிலும் வேதனையிலும் மாறிப்போனது.
ஆதி ஒன்றும் புரியாமல் பார்த்தான்.
“எனக்கு நோய்! எனக்கு ஆண்கள் தொட்டால் இப்படி ஆகிடும். இதுதான் என் வாழ்க்கையில் சாபம். நான் யார் கூடவும் வாழ முடியாது. யாரையும் காதலிக்க முடியாது. இது என்னோட அஞ்சு வயசுல இருந்து இருக்கு. என்னை வேணாம்னு பெத்தவங்களே தூக்கிப் போட்டுட்டாங்க.”
“என்ன சொல்ற நீ?” என ஆதி அதிர்ச்சியும் வேதனையும் கலந்து பார்த்தான்.
“இதுதான் உண்மை. சின்ன குழந்தை எப்படி மண்ணில் விளையாடும்போது அந்த மண்ணு பட்டதும் ராஷஸ், அலர்ஜி வருதோ, அதுபோல எனக்கு ஆண்கள் எச்சில், வியர்வை, கண்ணீர், அவங்களோட ஸ்பரிசம் எதுவும் ஒத்துக்காது. என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. யாரும் என்னை கல்யாணம் பண்ணி வாழ நினைச்சா அவங்களோட வாழ்க்கை நரகம். அதான் நடை பிணமாக வாழ்ந்துட்டு இருக்கேன். ப்ளீஸ், உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன், என்னை தொந்தரவு பண்ணாதீங்க” என்றாள் சகுந்தலா.
ஆதிக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. சுயநினைவுக்கு வந்தவன், “அப்போ இதை குணப்படுத்த மருந்து? இப்போ இந்த வீக்கம் எப்படி சரியாகும்?”
“மூணு நாள் எடுத்துக்கும், அதுவா குறையிற வரை நான் வெயிட் பண்ணுவேன். வேற வழி எனக்கு இல்லை. அதிகமா போயிட்டா காய்ச்சல் வந்திடும்” என்றாள் சகுந்தலா.
ஆதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, அதை மறைத்தான்.
“நீங்க வருத்தப்பட வேணாம் ஆதி. வேற வழி இல்ல. நான் புறப்படுறேன்” என சகுந்தலா திரும்ப,
“சாரி சகுந்தலா! ப்ளீஸ் சகு, உனக்கு இவ்வளவு பெரிய விஷயம் இருக்குன்னு தெரியாம உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். ஐ ஆம் சாரி!” என்றான் ஆதி.
“பரவாயில்லை ஆதி!” என சகுந்தலா அவ்விடத்தை விட்டுச் செல்ல,
“ஒருவேளை இது சரி ஆகிட்டா, நீ என்னை கல்யாணம் செஞ்சுக்குவியா?” என ஆதி மீண்டும் கேட்டான்.
“இல்ல ஆதி, இது சரியாகாது.”
“ஏன் அப்படி சொல்ற?”
“5 வயசில இருந்து இருக்கு. இதுவரைக்கும் எந்த மாற்றமும் இல்ல. சின்ன வயசுலயே குணப்படுத்த முயற்சி செஞ்சாங்க என்னோட அம்மா. ஆனால் சொத்தை வித்து மருத்துவம் பார்த்து கூட ஒன்னும் பண்ண முடியல.”
“அப்போ டெக்னாலஜி இல்ல. ஆனால் இன்னைக்கு ஒன்னும் அப்படி இல்லையே.”
“சரியே ஆனாலும் என்னால உங்களை ஏத்துக்க முடியாது.”
“உன்னோட மனசுல…?”
“ஆமா, என்னோட மனசுல வேற ஒருத்தர் இருக்கார். அவரை நினைச்சிட்டு வாழ்ந்திடுவேன்.”
ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “உங்களோட காதலுக்கு நான் தகுதியானவள் இல்ல. நான் மனசுக்குப் பிடிச்சவரை என்னாலையும் கட்டிக்க முடியாது. அவரு எட்டாத தூரத்தில் இருக்கார்” என்றாள் சகுந்தலா.
அவளை வெற்றுப் பார்வை பார்த்தான். சகுந்தலா இரண்டு அடிகள் வைத்தவள், “ஆதி!” என அழைத்தாள்.
“ம்ம் சகு” எனப் பதில் கூறினான்.
“எனக்கு பசங்க பிரெண்ட் யாருமே இல்ல. நீங்க என் கூட பிரெண்டா இருப்பீங்களா? எனக்கும் ஜாலியா பேசணும்னு ஆசை! ஆனால் எனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கிறது தெரிஞ்சு அவங்க ஒதுங்கிட்டா என்ன பண்றது? இல்ல வேணாம் விடுங்க” என நகர்ந்தாள்.
“ஹே சகு! என்ன இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்ட? நான் உன் கூட எப்போவும் இருப்பேன். உன்னோட நம்பர் சொல்லு!” எனக் கேட்டான் ஆதி.
“நிஜமா ஃப்ரெண்ட்ஸ் தான?” என சகுந்தலா கேட்க,
“சத்தியமா” என்றான் ஆதி.
அவளின் முகத்தில் உற்சாகம் தாண்டவமாடியது. ஆதியும் அவளை கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அவளைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.
இருவரும் எண்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
“வீட்டுக்கு எப்படி போவ?” என ஆதி கேட்க,
“லேடிஸ் பஸ்ல போவேன். அது கொஞ்சம் சேஃப்” எனக் காயத்தை கர்சீப் கொண்டு மறைத்தாள்.
“சாரி, தெரியாம பண்ணிட்டேன்.”
“பரவாயில்லை ஆதி! நீங்க எனக்கு பிரெண்டா இருக்கிறதே எனக்கு எவ்ளோ சந்தோஷமா தெரியுமா? எனக்கு யாருமே பிரெண்ட் இல்ல. நான் யார் கிட்டயும் பேச மாட்டேன். எனக்கு ஒரு பிரெண்ட் அது நீங்க மட்டும்தான்” என்றாள் சகுந்தலா. மிகவும் பாவமாக இருந்தது அவனுக்கு.
இதோ பேருந்து வந்தது. அவனுக்குக் கை அசைத்துவிட்டு ஏறிக்கொண்டாள்.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment