Home நெஞ்சோடு கலந்தவளே

நெஞ்சோடு கலந்தவளே

Episode-18

சிவாவின் செல்லக் கேள்வி“அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. அதனால அப்படித்தான் இருப்பாங்க,” என்று உமையாள் கூறிக்கொண்டே அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.சிவா அவளின் அருகில் நெருங்கியபடி, “அப்போ நம்ம?” என்று புருவத்தைச் சுருக்கியபடியே கேட்டான்.“நம்ம… ஹான், நமக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்கு மேலாகப் போகுது.”“அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்கு மேலாகப் போகுது. அவள் புதுசா கல்யாணம் ஆன கப்பிள்னா நம்மளும் தானே!” என்று வினவினான் சிவா.

முட்டைக்கண் விழிகளுடன் உருட்டிக்கொண்டே பார்த்தவள், “சும்மா சமாளிஃபிகேஷன் பண்ணேன் பா! அதைச் சீரியஸா எடுத்துட்டு அடுத்து பேசச் சொன்னா, நான் என்ன பேசட்டும்?” என்று கேட்டாள்.சிவா சிரித்தபடி, “ஒண்ணும் பேச வேண்டாம். வா சாப்பிடப் போலாம்,” என்று அவளை அழைத்துச் சென்றான்.“உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இங்க இல்லையா?” என்று உமையாள் கேட்க, “நம்ம வரக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதனால அவங்க கிளம்பிப் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இந்த வீக் எண்டுக்குள்ள மீட்டிங் வச்சு உன்னை அவங்ககிட்ட காட்டிடணும். என்னை துருவித் துருவி கேள்வி கேக்குறாங்க,” என்று கூறினான் சிவா.“அப்படியா? சரி ஓகே,” என்று இருவரும் சாப்பிட்டு முடித்த படி, மீனாவுக்கு வாங்கிய நினைவுப் பரிசைக் கொடுத்துவிட்டு, அவளிடம் விடைபெற்றுக் கொள்ள நின்றான் சிவா.“இப்போ எதுக்கு இப்படி மூஞ்சை வச்சிட்டு இருக்க?” என்று சிவா அவளிடம் கேட்க, “உண்மையாவே நான் உன்னை மிஸ் பண்ணுவேன்டா!” என்றாள் வருத்தத்துடன்.“அப்போ இங்கேயே இருந்திடு மீனு! எதுக்கு ஃபாரின் போற?” என சிவா அவளிடம் கூற, மீனா அவனை ஏற இறங்கப் பார்த்தவள், “இங்கே இருந்தாலும் அப்படியே சாரு பேசித் தள்ளிடுவாரு. எப்போ பாரு முறைச்சு தானடா பார்ப்ப? எப்போ சிரிச்சிருக்க? ஆபீஸ் விஷயம் மட்டும் தானே பேசுவ? ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போலாம்னு சொன்னால் கூட வர மாட்ட! இப்போ கல்யாணம் ஆகிடுச்சு, சொல்லவே தேவையில்லை. உன் பொண்டாட்டி மயமா இருக்க. சும்மா சொல்லக்கூடாது உன் பொண்டாட்டி அழகா இருக்கா. உங்க ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு,” என்று கூறினாள் மீனா.“உனக்குத்தான் என்னைப் பத்தி தெரியும் தானே! காலேஜ்ல இருந்தே நான் அப்படித்தான்,” என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தாள் உமையாள்.

மீனாவிடம் அவன் எடுத்துக்கொண்ட உரிமை உமையாளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சிரித்துப் பேசுவதைப் பார்த்த ராமுக்கு ஏகத்துக்கும் எரிச்சல் வர, “எத்தனை தடவை சொன்னாலும் திருந்த மாட்டா. என்கூட இப்படிப் பேசிருப்பாளா?” என்று வேகமாக அவர்களின் அருகில் சென்றான்.சிவா அவனைப் பார்த்ததும் சின்ன சிரிப்புடன் இருவரிடமும், “சரி பத்திரமா போயிட்டு வாங்க. போயிட்டு போன் பண்ணு மீனு,” என்று விட்டு விடைபெற்றான்.அவன் கிளம்பிய அடுத்த நொடி ராம் மீனாவின் இடையை அழுத்திப் பிடித்தான்.

அவள் சட்டென திரும்பித் தன் கணவனைப் பார்க்க, “வீட்டுக்கு வாடி, உனக்கு இருக்கு,” என்று பற்களைக் கடித்து நரநரத்துக்கொண்டே அவளை அழைத்துச் சென்றான்.உமையாளின் உள்ளப் போராட்டம்காரில் வரும்போது உமையாள் மிகவும் அமைதியாக ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, சிவா ஏதோ வித்தியாச மனநிலையில் வந்தான். அதனால் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அருகில் உமையாள் இருப்பதைப் பார்த்துவிட்டு, “மேடம் ரொம்ப அமைதியா வர்றீங்க! வரும்போது அவ்வளவு வாய் பேசினீங்க! இப்போ சரியில்லையே? என்னாச்சு?” என்று கேட்டான்.“ஒண்ணும் இல்லை,” என்று திரும்பிக்கொண்டாள். சிவாவும் அதற்கு மேல் அவளிடம் பேசவில்லை. அவனுக்கு திடீரென சிந்தையில் ராம் நினைவுகள். ஏனோ ராமைப் பார்க்க அவனுக்குத் தவறாகவே பட்டது. ‘ரொம்ப அதிகமா யோசிக்கிறோம்னு நினைக்கிறேன். சரி இதை விட்டுடுவோம்.’ என அருகில் இருக்கும் மனையாளைப் பார்த்தான்.“க்கும்!!” என தொண்டையை கனைத்தாள் உமையாள். “என்னாச்சு, தண்ணி வேணுமா?” என்று சிவா அவளிடம் கேட்க, “அது அந்த மீனா உங்களுக்குக் க்ளோஸ் ஃப்ரெண்டா?” என்று அவனது முகத்தைப் பார்த்தாள்.“என்ன திடீர்னு?” என சிவா அவளைப் பார்க்க, “சும்மா கேட்டேன்!” என்று திரும்பிக்கொண்டாள்.

அவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்த, மீண்டும் கேட்டாள், “அது என்ன மீனுன்னு கூப்பிடுறீங்க?” என்று உமையாள் துருவ, “மோஸ்ட்லி என்னோட வைபும் அவளோட வைபும் கொஞ்சம் மேட்ச் ஆகும். நாங்க யாருகிட்டயும் அதிகமா பேசிக்க மாட்டோம். பர்டிகுலரா நானும் அவளும் எங்க கேங்கில் ஒரே போல இருப்போம்,” என சிவா கூறினான்.அவளுக்கு ஏனோ இதைக் கேட்கப் பிடிக்கவில்லை, எந்தப் பதிலும் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள். செல்லும் வழியில் ஐஸ்கிரீம் பார்லர் இருக்க, “ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்றான் சிவா. “வீட்டுக்குப் போகணும், தலை வலிக்குது,” என்று மறுத்துவிட்டாள்.“சரி, இந்த வாரம் ஃப்ரெண்ட்ஸ் மீட் இருக்கு, உனக்கு ஓகே தானே? டியூட்டி ஏதாவது இருக்கா?” என சிவா அடுத்த கேள்வி கணை தொடுத்தான்.“அதுவா, அப்புறம் சொல்றேன்,” என்று பதில் பேசவில்லை. கொஞ்ச தூரம் போனதுமே மெல்ல மெல்ல மழை வர, “உமையா மழை வருதுடி. உனக்கு மழைன்னா பிடிக்குமா?” என அவன் அடுத்து பேச வர, உடனே தடுத்தாள்.

சிவா அவளிடம் எதைப் பேசினாலும் பிடி கொடுக்காமலும் வேண்டா வெறுப்பாகப் பேசிக்கொண்டு வருவதைக் கவனித்தவன். “இப்போ என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என்று மீண்டும் அவளிடம் கேட்க, “எனக்கு தலை வலிக்குது! வீட்டுக்குப் போலாம் முதல்ல,” என்று ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொண்டாள்.அதற்கு மேல் சிவா எதுவும் பேசாமல் வீட்டுக்குச் சென்றதும் இதைப் பற்றி அவளிடம் கேட்டுக்கொள்ளலாம் என அமைதியாக காரை ஓட்டினான். வீட்டுக்கு வந்ததும் அவனுக்கு முன் வேகமாக இறங்கி ஓடிவிட்டாள் உமையாள்.“உமையாள்,” எனப் பேச வருவதற்குள் அவள் அங்கு இருந்தால் தானே! “இந்த பொண்ணு!” எனப் புன்னகையுடன் லிஃப்ட்டில் ஏறினான்.இங்கே வீட்டுக்குள் வந்த உமையாளின் நிலையோ திண்டாட்டம் ஆகிப்போனது.

மனதில் குழப்பம் அப்பிக் கிடக்க, கூடவே சஞ்சலம் இன்னும் ஆட்டுவித்தது. படுக்கையில் போனை வீசிவிட்டு கண்ணாடியின் முன் வந்து நின்றவள் இரு கைகளையும் டிரெஸ்ஸிங் டேபிளின் மீது ஊன்றி அவளையே பார்த்துக் கொண்டாள். “என்… எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது? அவர் யார் கூட பேசினால் உனக்கென்ன? நீ அவரை விரும்ப ஆரம்பிச்சுட்டியா? இல்லை இல்லையே! அதெப்படி ஆறு வருஷ காதலை இந்த நாலு மாசத்துல மறக்க முடியும். அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? இந்த வாழ்க்கையில் நீ பொருத்திக்கிட்ட அப்படி தானே! உனக்கு சிவாவைப் பிடிக்குது!” என மனசாட்சி ஆயிரம் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டு வரிசைகட்டி நின்றது.அபி என்னும் ஒருவனைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் யோசிக்கிறாள்.

ஆனால் அவளின் எண்ணத்தில்? ‘எப்படி சிவா கிட்ட அபியைப் பத்தி சொல்வேன்? சொல்லணும், கட்டாயம் சொல்லணும். சொல்லி முடிச்சதும் அவர் கிட்ட நான்…’ என அவள் நினைத்துக்கொண்டிருக்க, “என்னாச்சு?” என அவளின் பின்னால் சிவா.“ஒண்ணும் இல்ல!” என அவள் கப்போர்டு திறந்து கொண்டே உடையைத் தேடினாள்.“இல்லை, என்னமோ இருக்கு. எதுக்கு இத்தனை கோபம்?”“எனக்கா? எனக்கெல்லாம் என்ன கோபம்! அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்குத் தூக்கம் வருது. நாளைக்கு ஆபீஸ் போகணும்,” என அவள் அவனது முகத்தைப் பார்க்காமல் தவிர்த்துப் பேசினாள்.அவளின் அருகில் நெருங்கியவன், “உமையா! என்னாச்சு? கண்டிப்பா ஏதோ இருக்கு. அங்கே போகும் போது நல்லாத்தானே இருந்த? வரும் போது என்னாச்சு? மீனா எதுவும் சொன்னாளா? இல்லை, அவள் அப்படி எல்லாம் பேச வாய்ப்பு இல்லையே,” என சிவா கூறியதும் உமையாள் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.அவன் கருப்பாக இருக்கிறான். எல்லாரிடமும் எரிந்து விழுவான். பேச மாட்டான். யாருக்கும் அவனைப் பிடிக்காது.

ஆனால் மீனாவிடம் உரிமையாகப் பேசியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உமையாளே ஆரம்பத்தில் அவனை கிண்டலாக, கேவலமாக நினைத்திருக்கிறாள். அவன் உருகி உருகி தன்னைப் பார்த்துக்கொள்வதை நினைத்து அகம்பாவம், கர்வம், திமிரும் கூடவே இருந்தது. பூனை போல தன்னைச் சுற்றி வருகிறான் என நினைத்தாள்.ஆனால் இன்று தன்னைப்போலவே கனிவுடன் இன்னொரு பெண்ணிடம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளுக்கு, அழுதுவிட்டாள். இருவர் கண்களிலும் நட்பைத் தவிர எந்த சபலமும் இல்லை என்றாலும் சாதாரண பேச்சைக் கூடக் கேட்க முடியவில்லை.

சிவா, அவனது மேனரிசம் வேறு மாதிரி. கட்டுப்பாட்டில், பாதுகாப்பில் வைத்து சுதந்திரமாகச் சுற்றி விடுவான், அது அவனின் தனித்துவம். அப்படி இருக்கையில் மீனா பற்றிப் பேசியது கண்ணீர் முட்டிக்கொண்டு வர, அழுதுவிட்டாள்.அவனைப் பார்க்காமல் பாத்ரூம் செல்லப் போக, அவளின் கையைப் பிடித்தான் சிவா.“ப்ச் விடுங்க,” என விலக்கிக்கொள்ள முயற்சி செய்தாள்.“என்னன்னு சொல்லு! எதுக்கு இப்படி நடந்துகிற? எனக்குக் கஷ்டமா இருக்குடி!” என அவளைத் தன்புறம் இழுத்தான் சிவா.உமையாள்…?

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.