Episode-38
எனக்கு அம்மு மா வேணும்! எனக்கு அம்மு மாவை பார்க்கணும்! எனக்கு டான் பாஸ்கோ ஸ்கூல் போகனும். எனக்கு வீரா டாடி கூட இருக்கணும். எனக்கு பாப்பா கூட பிளே பண்ணனும். என்னை கூட்டிட்டு போ மா! எனக்கு இங்கே பிடிக்கல! எனக்கு அங்கே தான் பிடிக்குது! எனக்கு கூட்டிட்டு போ மா! என ஓயாமல் அழுது இராவடி செய்தான் ஆரு.
போலாம் ஆரு இது குட் ஹாபிட் இல்ல. இது டிசிப்லின் மேனர்ஸ் இல்ல. நீ டிக்னிட்டியா இருக்கும் போது தான் நான் உன்னை அங்கே அழைச்சிட்டு போவேன். வா தூங்க போலாம் என அழைத்தாள்.
“Noooo! நான் மாட்டேன். I don’t like to slept with you! எனக்கு இங்கே பிடிக்கல! எனக்கு இங்கே வேணாம் மா! இது நம்ம வீடு இல்ல. நம்ம அங்கே போலாம். நீ ஆபிஸ் போ நான் ஸ்கூலுக்கு போறன். நீ இப்போ ஏன் வீட்டிலேயே இருக்க? உனக்கு ஒர்க் இல்லையா? எனக்கு இங்க இருக்க புடிக்கல. ப்ளீஸ் எனக்கு வீட்டுக்கு போகணும். ப்ளீஸ் ப்ளீஸ்… நீ ஏன் கூட்டிட்டு போகல… நீ இப்போவே கூட்டிட்டு போறேன்னு சொல்லு அப்பதான் நான் தூங்க வருவேன். இல்லைன்னா! நைட் ஃபுல்லா நான் இங்கேயே ஸ்டாண்ட் பண்ணிட்டே நிப்பேன்! நான் வந்து அப்படியே நிப்பேன்! சொல்லிட்டேன்” என்று ஆரு அதே இடத்தில் நின்றான்.
“ஆரு குறும்பு பண்ணிட்டு இருக்காத! அப்புறம் அடி வாங்குவ! நீ ஒழுங்கா வந்து படுத்துக்கோ! காலையில ஸ்கூலுக்கு போகணும்!” என சைத்ரா கூறிய படி தன் மகனை பார்க்க..
“மாட்டேன்! எனக்கு போகனும்! எனக்கு இந்தியா போகனும்!” அப்பாவுக்கு வீடியோ கால் பண்ணு. நான் வீரா டாடி கிட்ட பேசணும்! என் கூட படிக்கிற ஸ்மித் அவனை அவங்க டாடி தான் கொண்டு வந்து விடுறார். ஆனால் எனக்கு? லியாவை அவங்க டாடி ஃபெராரில ட்ராப் பண்றார். ஆனால் நான் டாடி கூட இல்ல. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் இந்த கண்ட்ரி எனக்கு பிடிக்கல” என கைகளை கட்டிய படி முறைத்தான்.
“ஆரு குறும்பு பண்ணாத! நம்ம இங்கே தான் இருக்கணும். இது தான் நம்ம வீடு! நீ வந்து தூங்கு” என சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றாள் சக்தி.
விடிய விடிய அவளும் தூங்கவில்லை. ஆரு நின்ற இடத்திலேயே தூங்கி விழுந்தானே தவிர அமரவே இல்லை. அத்தனை பிடிவாதம். என்னை ஏமாத்திட்ட! பொய் சொல்லி கூட்டிட்டு வந்துட்ட! நீ லை பண்ற நிறைய! என்கிட்ட நீ என்ன சொன்ன? பாப்பாவ தம்பிய இங்க கூட்டிட்டு வரலாம்ன்னு தானே சொன்ன! இப்போ ஏன் நீ கூட்டிட்டு வரல? நீ என்னை ரொம்ப நாளா ஏமாத்திட்டு இருக்க! ஐ ஹேட் யூ! உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை! என்னை தயவு செஞ்சு இந்தியா கொண்டு போய் விட்டுடு! எனக்கு அம்மு ம்மா கூட இருக்கணும். எனக்கு பாப்பா கூட இருக்கணும். எனக்கு தனியா இருக்க வேண்டாம். எனக்கு பயமா இருக்கு. எனக்கு லோன்லியா இருக்கு. ப்ளீஸ் உன்கிட்ட நான் கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன். என்னை ஏமாத்தி சொல்லி கூட்டிட்டு வந்துட்ட! உன்னை நான் போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன்! அம்மா பிளீஸ் கூட்டி போடி! என பிதற்றியபடி நின்று அழுது முகத்துடன் நின்றிருந்தான் ஆரு.
ஆம் சக்தி ஆருத்ரனை அழைத்துக் கொண்டு லண்டன் வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிய போகிறது. முன்பெல்லாம் குழந்தை எதுவும் கேட்கவில்லை. ஆனால் லண்டன் வந்து ஒரு வாரம் ஆகியிருந்த நிலையில் “எப்போ இந்தியா போக போறோம்? அம்முமாகிட்ட பேசணும். பாப்பா கூட விளையாடனும். அப்பா எப்போ வருவாங்க? வீரா டாடி எப்போ வருவாங்க? நீ ஏன் ஆபீஸ் போகல? அம்முமா எப்ப வருவாங்க?” என கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட இன்று வரை கேட்டுக் கொண்டிருக்கிறான். 6 மாதங்களாக சக்தி அவனிடம் “போலாம் கண்ணா! கூட்டிட்டு போறேன் லீவ் விட்டதும் போகலாம்” என்று காரணத்தை சொல்லி ஓட்டினாள். இப்படியே சொல்லி ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.
ஆரு தினமும் நம்பிக்கையுடன் பள்ளி சென்று வருவான். ஆனால் அவன் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தான். அம்மு வீராவுடன் வீடியோ காலில் ஒரு முறை பேசி அது விபரீதமாகி அழுது இரண்டு நாட்கள் காய்ச்சலே வந்துவிட்டது.
ஆனால் சக்தியின் மனம் மாறவில்லை. அம்மு எவ்வளவோ முறை போன்செய்து சக்தி ப்ளீஸ் இங்கேயே ஆருவ கூட்டிட்டு வந்துருங்க! குழந்தை ரொம்ப தவிக்கிறான்! எலச்சி போயிட்டான். நீங்க சாப்பாடு சரியா ஊட்டி விடுறீங்களா? இதை கேட்கக்கூடாது தான்! தப்பு தான்! ஆனாலும் என் மனசு கேட்க மாட்டேங்குது. நான்தான் அவனை குழந்தையிலிருந்து வளர்த்தேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சக்தி. நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க கூட்டிட்டு போயிட்டீங்களே! என்று எவ்வளவோமுறை அம்மு எடுத்து சொல்லி யும் கூட சக்தியின் மனம் மாறவில்லை.
அதற்கு பதிலாக வீராவுக்கும் அம்முவுக்கும் தான் சண்டை வந்தது மிச்சம். அதன்பின் அம்மு போன் செய்வதை நிறுத்தி இருந்தாள். மிகவும் கவலையாக இருந்தது.
வீரா மட்டும் அவ்வப்பொழுது சக்தியிடம் பேசுவான் எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய் என்று அவ்வளவே!
ஆரு கிளம்பு ஸ்கூல் போகலாம் என்று எழுந்து அவனுக்கான அனைத்தையும் தயார் செய்தாள் சக்தி.
இப்போ நீ வர போறியா? இல்லையா ப்ரேக் பாஸ்ட் ரெடி! என சக்தி கத்த.. வேகமாக குளிக்க ஓடினான்.
நகரு நான் வரேன் என சக்தி பாத்ரூம் நுழைய வர.. வேணாம் போடி என கத்திய படி அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.
நீ ஸ்கூல் லேட்டா போனா உனக்கு தான் டிதென்ஷன் கொடுப்பாங்க எனக்கு பிரச்னை இல்ல இந்தா ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு என தட்டை தள்ளினாள்.
“நீ எப்போ இந்தியா கூட்டி போறயோ அன்னிக்கு தான் நான் சாப்பிடுவேன்.”
“அப்போ அது வரை? சாப்பிட மாட்டியா?” என சக்தி புன்னகையுடன் கேட்க..
“Definitely” நான் பாஸ்ட்டிங் பண்ண போறேன் என சாப்பிடாமல் பள்ளி சென்றான் ஆரு.
வயிறு வலிக்கும் ஆரு அடி வாங்க போற நீ! என சக்தி சொல்ல..
மாட்டேன் என முன்னால் நடந்தான். விம்மி கொண்டே..
ஆரு இப்போ அம்மு மா இந்தியால இல்ல. அவங்க ஆஸ்திரேலியா போயிருக்காங்க ஒரு வேலையா! அதான் நான் உன்கிட்ட அப்படி சொன்னேன். அவங்க வந்ததும் உன்னை கூட்டிட்டு போறேன் டா கண்ணா அம்மாவை நம்பு என சக்தி கூற..
பிராமிசா? இல்ல நீ பொய் சொல்லுவ! எனக்கு அம்முமா கிட்ட வீடியோ கால் போடு நான் பேசணும் என பிடிவாதம் பிடித்தவனை சமாதானம் செய்து அனுப்பினாள் சக்தி.
ஒவ்வொரு நாளும் அவள் சொல்லும் விதவிதமான பொய்களை நம்பி எதோ ஒரு நம்பிக்கையில் பள்ளிக்கு சென்று வருகிறான் ஆரு. என்றாவது இவள் தன்னை தன் அம்முமாவிடம் அழைத்து செல்ல மாட்டாளா என்று.
இதோ பிறந்த நாள் வந்தது. ஹாப்பி பர்த்டே ஆரு இன்னிக்கு உனக்கு என்ன வேணுமோ சொல்லு! அம்மா உனக்காக அந்த விஸ்ஷ கண்டிப்பா பண்ணுவேன் தங்கம் என்ன சக்தி உற்சாகமாக இருக்க…
கண்டிப்பா? என ஆரு கேட்க..
நிஜமாவே உனக்கு என்ன வேணும்?
எது கேட்டாலும் கிடைக்குமா? நீ செய்வியா மா! என மின்னும் கண்களில் அப்பாவியாக கேட்டான்.
நிஜமா டா தங்கம்! உனக்கு என்ன வேணும்?
பிராமிஸ் பண்ணு அப்போ சொல்றேன்.
பிராமிஸ் என சக்தி கை நீட்ட…
பிளீஸ் மா என்னை அம்முமா கிட்ட கூட்டிட்டு போவியா? எனக்கு இங்க பிடிக்கல! இதுதான் என்னோட விஷ்! ப்ளீஸ் கூட்டிட்டு போவியா? என்று கையெடுத்து கும்பிட்டான் அந்த சின்ன மனிதன்.
சக்தி தன் மகனை பார்க்க அதே நேரம் சஞ்சயிடம் இருந்து அழைப்பு வந்தது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Super super super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️