🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
40. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 40 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 334 reads
  • ★ 5.0 (1)
  • 9 min read

Episode -39

“மம்மி மா! பிளீஸ் மா!” என கையெடுத்து கும்பிட்ட தன் மகனை பார்த்த சக்திக்கு கண்களில் நீர் வழிந்தது. “அம்மு சொன்னது சரி தான். என்னை மாதிரி குழந்தை ஏன் தனியா இருக்கணும்? இத்தனை ஏக்கம்?” என சக்தியின் கண்களில் நீர் வழிந்தது. அவள் அதே இடத்தில் அமர்ந்து தன் மகனது கைகளை பிடித்து கொண்டவள் முத்தமிட்ட படி மடியில் அமர்த்தி கொண்டாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

தன் குழந்தைக்கு தனது வழி தான் நல்லது என நினைத்து அவள் அழைத்து வந்தது இப்பொழுது பெரிய தவறாகி போனது. மவுனமாக அழும் சக்தியை நிமிர்ந்து பார்த்தான் ஆருத்ரன். 

மா! என ஆரு அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன். “Don’t cry.. இனி உன்னை ராவடி பண்ண மாட்டேன் நான்! I’m sware! நான் அழாம ஸ்கூல் போறேன். உன்கிட்ட நான் ஹார்ஷா நடந்துக்கிறேன்! I’m sorry மா! நீ அழ வேணாம். நான் தப்பு தான் இனி பண்ண மாட்டேன் பிளீஸ் அழாத. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. எனக்கு அழுகை வருது!” என அவனும் அழுதான். 

“அய்யோ ஆரு தங்கம் இல்ல டா! நீ இல்லன்னா அம்மா இல்ல. எனக்கு எல்லாமே நீ தான் தங்கம். நான் அழல தங்கம். இப்போ உனக்கு என்ன வேணும்? அங்கே அம்மு மா கிட்ட போகணுமா? பாப்பாவை பார்க்கணுமா? இப்போ உடனே இப்போவே டிக்கெட் போடுறேன். நீ அங்கே இருந்தே ஸ்கூல் போ! அருவி கூட ஆதி கூட நீ பிளே பண்ணலாம். டாடி கூட இருக்கலாம். நான் உன்னை கூட்டி போறேன்.” என உடனே போனை எடுக்க சென்றாள். 

“அம்மாஆஆ!” என ஆர்பரிக்க முகமெல்லாம் புன்னகையுடன் நிஜமாவா? போறோமா? என உற்சாகமாக ஆருத்ரன் கேட்க.. “ம்ம் ஆருவுக்காக தான் அம்மா! அவன் கேட்டால் எது வேணாலும் அம்மா செய்வா! உன்னை விட்டுட்டு அம்மா இங்கே வந்துடுறேன்” என கூற.. 

“ஒன் நிமிட்!”

“என்ன தங்கம்?”

“என்னை மட்டும் விட்டுட்டு நீ ஆபிஸ் போவியா?” 

“ஆமா அம்மா நான் இங்கே வந்துடுவேன்.”

“No no நீயும் என் கூட இருக்கணும்.” என ஆரு கூற.. 

“அம்மா வேலைக்கு போயி சம்பாதிச்சா தானே ஆரு ஸ்கூல் போக முடியும் படிக்க முடியும் நிறைய பணம் செலவாகும் அது வேலைக்கு போனால் தானே கிடைக்கும்.” 

“இல்ல நீ என் கூட இருக்கணும். முடியாது உன்னை விட மாட்டேன்” என ஆரு அழுதான். 

“உனக்கு அம்மு மா வேணுமா? இல்ல நான் வேணுமா?” என சக்தி அவனது கண்களை துடைத்து விட்டபடி கேட்க.. 

“ஹாங்” என கண்களை தேய்த்து கொண்டே கேட்டான். 

“ம்ம் சொல்லு உனக்கு அம்மு மா வேணுமா? இல்ல நான் வேணுமா?”

“எனக்கு  அம்மு மா அப் அப்புறம் நீ ரெண்டு பேரும் வேணும்!” என குழந்தை விசும்ப.. 

அதற்குள் அவளது போன் விடாமல் சிணுங்கி கொண்டிருக்க..  இந்நேரத்தில் கண்டிப்பா அதிராவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வேற யாரு கால் பண்ணுவா? என போனை பார்த்தாள். 

புதிய எண்ணில் இருந்து அழைப்பு திரும்ப திரும்ப வந்திருந்தது. அதனுடன் சில குறுஞ்செய்திகள் என அனைத்தும் வர.. சில செய்தி தாள்களில் இருக்கும் துணுக்கு செய்திகளின் விவரங்கள் அதில் இருக்க.. வேகமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். 

சஞ்சய் தான் அழைத்திருந்தான். மறு பக்கம் என்ன சொல்ல பட்டதோ தெரியவில்லை கண்களில் இருந்து நீர் கொட்ட.. நா… நான் நேரில் வரேன் இப் இப்போவே என புறப்பட்டாள். 

மா! என ஆரு அவளின் காலை கட்டிக் கொள்ள..  வேகமாக பிஸ்னஸ் கிளாஸ் புக் செய்தவள் உடனே கிளம்பினாள். 

“எங்கே போறோம் மா?” 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அப்பாவை பார்க்க!” என சக்தியின் கண்களில் நீர் வழிந்தது. 

ஹை ஜாலி! ஜாலி என குழந்தை குதித்து பின் மீண்டும் சோகமாக.. “மா மறுபடியும் இங்கே வருவோமா? நான் இங்கே தான் ஸ்கூல் போவேனா?” என ஆரு கவலையுடன் கேட்க.. 

“இல்ல இனி ஆரு இந்தியாவிலயே ஸ்கூல் சேர்ந்துக்கலாம் இங்கே வர தேவையில்லை. ஓகே வா!” என வீட்டை பூட்டி விட்டு கிளம்பினாள். 

“ஹை ஜாலி லவ் யூ மா! லவ் யூ” என முத்தமிட்டான் ஆரு. 

சக்தி மற்றும் ஆருத்ரன் இருவரும் இந்தியா கிளம்பினார்கள். 

***

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? உன்னை யாரு டா அவள் கிட்ட சொல்ல சொன்னது?” என படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் அஸ்வத்தாமன். 

“ஒரு உண்மைய சொல்லுட்டா மச்சான்! அந்த சக்தி உன்னோட வாழ்க்கையில் வந்திருக்க கூடாது. அவளால தான் நீ இத்தனை கஷ்ட படுற! அவள் வராமல் இருந்திருக்க நீ நிம்மதியா இருந்திருப்ப டா!” என ஆற்றாமையுடன் வெடித்தான் சஞ்சய். 

அப்படி என்னாச்சு அஸ்வத்தாமன்க்கு? சக்தி சென்றதில் இருந்து ஆறு மாதம் குடித்து புகைத்து மஞ்சள் காமாலை வந்து விட்டது. ஆம் ஹாஸ்பிடலில் இருக்கிறான் தமன். பிலிரூபின் அளவு அதிகமாகி சாவின் விளிம்பில் தான் மருத்துவ சிகிச்சை கொடுத்து முகமெல்லாம் மஞ்சள் குளித்து வேறு ஒரு மனிதனாக இருக்கிறான்.

“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன்.” 

“மண்ணாங்கட்டி வாய மூடு டா! இன்னும் கொஞ்சம் விட்டால் செத்திருப்ப அவளை எல்லாம் நாக்கை புடுங்கிற மாதிரி கேட்கணும் டா! இப்படி ஒரு பொண்ணா” என ஒரு பக்கம் சஞ்சய் அமர்ந்து கொண்டான்..

“உன்னை கொண்ணுடுவேன் டா ராஸ்கல்! அவளை பத்தி சொல்ல யாருக்கும் ரைட்ஸ் இல்ல. என்னோட சக்தி! அவள் சந்தோசமா நிம்மதியா இருக்கணும் இன்னொரு தடவை அவளை பத்தி எதாவது சொல்லி பாரு! உன்னை என்ன செய்கிறேன் பார்!” என மூச்சை பிடித்து பேசியவன் மெல்ல ஹாஸ்பிடல் படுக்கையில் சாய்ந்தான். 

பத்திய உணவாக சமைத்து கொண்டு வருகிறார் பத்மினி. அந்த வயதான ஜோடிகள் மகனின் வாழ்க்கையை எண்ணி வேதனையில் தவித்தார்கள். 

சக்தியை ஏர் போர்டில் இருந்து வீரா பிக் செய்து கொண்டான். அவள் தேம்பி அழுது கொண்டே “ஏன் அதிரா ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்லை.”

“உனக்கு கேட்கணும்ன்னு ஏன் தோணல?” என கேட்டான் வீரா. 

சக்தி முகத்தை மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள். 

ஆருவை உன்னால பார்த்துக்க முடியலண்ணு தெரியுதுல்ல! அவ்ளோ வீம்பு வீராப்புக்கு கூட்டிட்டு போயே ஆகணுமா? அஸ்வத்தாமன் என்னோட இரத்தம் ஸ்டில் இப்போ கூட எனக்கு அவனை பிடிக்காது. பட் அவனை கஷ்ட படுத்தனுண்ணு நான் நினைக்க மாட்டேன். ஏன்னா எனக்கு கண்ணாடி மாதிரி அவன். உனக்கு அட்வைஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல. உனக்கு எது சரியோ அதை பண்ணு. அண்ட் ஆருவை உன்கூட என்னால அனுப்ப முடியாது நான் தான் அவனை வளக்க போறேன். என்று விட்டு தன் மேல் உறங்கி கொண்டிருக்கும் ஆருவின் தலையில் முத்தம் பதித்தான் வீரா. 

சக்தி எதுவும் பேசாமல் மவுனமாக அழுதாள்.. வீட்டுக்கு போகும் வழியில் வண்டி திரும்ப.. 

“வண்டிய ஹாஸ்பிடல் விடுங்க!”

“ஹாங்! என்ன சொன்ன?” 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“வண்டிய ஹாஸ்பிடல் விடுங்க நான் அஸ்வந்த பார்க்கணும்.”

“ஓ அஸ்வந்த்! ம்ம் பார்க்கலாமே என வண்டிய ஹாஸ்பிடல் விடுங்க..” என கூறினான் வீரா. 

சக்தி எதுவும் பேசாமல் ஜன்னலில் சாய்ந்து கொண்டாள். சஞ்சய் போன் செய்து “எதுக்கு நீ தமன் வாழ்க்கைக்குள் வந்த? உன்னால தான் எல்லா பிரச்னையும்! அவன் நிம்மதியா இருக்ககூடாது. அதுதானே உனக்கு வேணும். உன்னை பார்க்காததுக்கு முன்னாடி அவன் நிம்மதியா இருந்தான். என்னைக்கு நீ அவன் வாழ்க்கைக்குள் வந்துட்டு போனியோ! அப்போ பிடிச்சது சனியன். உன்னோட மனசுல நீ உலக அழகினு நினைச்சுட்டு இருக்கியா?”

“உன் காலடியில் அஸ்வத்தாமன் வந்து கெஞ்சனுமா? அவன அவ்வளவு கஷ்டப்படுத்துற? அவன் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? எத்தனை பேருக்கு ஹெல்ப் பண்ணி இருக்கான் தெரியுமா? அசால்டா அவனை தூக்கி போட்டுட்டு போற! அவன் கெட்டவன் இல்ல. யாரோட வாழ்க்கையையும் சீரழிக்கல! ஆனால் உன்னால உன்னால தான் இப்போ அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான் உன்னை நினைச்சு நினைச்சு இந்த ஆறு மாசமா குடிச்சு மஞ்ச காமாலை வந்து இப்போ ரொம்ப கஷ்டத்துல இருக்கான்.  அவனைப் பார்க்க எவ்வளவு கஷ்டமாருக்கு தெரியுமா நீ எல்லாம் ஒரு பொண்ணா?” என இஷ்டத்த்துக்கு பேசி விட்டு போனை வைத்தான். 

கிட்டத்தட்ட அஸ்வத்தாமனை விட்டு பிரிந்து வந்த நாளிலிருந்து அவளது எண்ணம் முழுவதையும் அவன் தன் ஆக்கிரமித்திருந்தான். மோகம் முத்தாடுது, சூரியனோ? சந்திரனோ?, ஹலோ மிஸ்டர் காதலா!, அகம்பாவம், என அவனுடன் நடித்த அத்தனை படத்தையும் ஆயிரம் தடவை பார்த்திருப்பாள். 

அதுவும் மோகம் முத்தாடுது மற்றும் அகம்பாவம் இந்த இரண்டு படங்களையும் சொல்லவா வேண்டும்? அத்தனை முறை பார்த்திருக்கிறாள். 

அவனுடன் இருக்க வேண்டும்! என்று ஆசைதான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு ஈகோ எக்கச்சக்கம். அது தடுத்து தான் இவ்வளவு நாளும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்தாள். 

ஆனால் அவனுக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்ததும் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. இருந்திருந்தால் செத்திருப்பாள்.  அவளுக்கு அஸ்வத்தாமனை பிடிக்காதா?  மிகவும் பிடிக்கும். அவன் மேல் பைத்தியமாக தானே திரிந்தாள். ஆனால் அவன் ஏமாற்றியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  தப்பு என்றால் தப்புதான். ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் அதே விதி தான். 

இப்பொழுது அவன் அவனது தப்பை திருத்திக் கொண்டு மீண்டும் எந்த தவறுகளிலும் ஈடுபடாமல் அமைதியாக அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருக்கிறான். என்று தான் விட்டிருந்தாள். ஆனால் இத்தனை நாளும் தன்னை நினைத்து அவன் வருந்தி கிடப்பான்.  என்று அவள் நினைக்கவில்லை. 

அது தெரிந்தாலும் அவளாக அவன் முன் போய் நிற்க அவளுக்கு திராணியில்லை. 

ஹாஸ்பிடல் வாந்தாகிற்று. வீடு வந்தாச்சா? என பாப்பா என கொட்டாவி விட்டு கொண்டே ஆரு எழுந்திருக்க.. 

நம்ம அப்பாவை பார்க்க வந்திருக்கோம்! என சக்தி கூறி கொண்டே முன்னால் நடக்க.. 

அப்பா இங்கே இருக்காங்க அங்கே யாரை பார்க்க போறோம்! குட்டி பாப்பா வருமா? என ஆரு அங்கிருக்கும் குழந்தை படங்களை பார்த்து கொண்டு கேட்க… 

ஹான் இனி வரும் என்றான் வீரா. 

அதிரா கொஞ்சம் கம்முன்னு வாங்க! அவனை இறக்கி விடுங்க! என அதட்டியவள் உன்னோட அப்பா அவர் இல்ல. இப்போ பார்க்க போறோம் பாரு அவர் தான் உன்னோட அப்பா! 

ஓ அஸ்வத்தாலன் தான! 

அது அஸ்வத்தாமன் என மூவரும் சென்றார்கள். 

பத்மினி ஆதிசங்கரன் இருவரும் இருக்க.. தாத்தா! பாட்டி என புன்னகையுடன் ஆரு வரவும் தூக்கி கொண்டார். 

ஆரு வந்திருக்கானா? என அலைப்புற சுற்றி பார்த்தான். 

சக்தியின் கண்களில் நீர் கோர்க்க நின்றிருக்க..  அவனுக்காக நாங்க உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம் மா அவனை விட்டு போகாத என கலங்கிய முகத்துடன் இருவரும் சொல்ல.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

போதும் சக்தி நீ உள்ளே போயி பாரு என வீரா அவர்களை கலைத்து விட்டான். 

ஆரு போடா! போய் அவனை எட்டி உதைச்சிட்டு வா வீட்டுக்கு போலாம் அம்மு மா வெயிட்டிங் என வீரா சொல்ல..

ஹே அப்பா! என சொல்லி கொண்டே உள்ளே வந்தான் ஆரு. 

அவனைப் பார்த்ததும் அஸ்வத்தாமனின் முகம் புன்னகையை பிரதிபலிக்க “ஆரு வந்துட்டியா என்ன பாக்க வந்தியா?” என்று சிரிப்புடன் அவன் கேட்க…

“நீ ரொம்ப பாவம். உனக்கு என்ன ஆச்சு? டாடி இந்த அப்பா ரொம்ப பாவமா இருக்கான். அவனை எட்டி உதைக்க வேண்டாம்? அவனுக்கு ஊசி போட்ருக்காங்க!!” என அருகில் சென்றவன் சீக்கிரம் சரியாயிடும் கவலைப்படாத! என்று ஆரு சொல்ல.. 

அஸ்வத்தாமன் வீராவை முறைத்துப் பார்த்தான். 

சரி அவன் நல்லா இருக்கான். இப்போ  அம்முமாவை பார்க்க போலாம் வரியா? என்று வீரா ஆருவரிடம் கேட்க..

ம்ம் டன் மம்மி மா!  நான் அம்மும்மாவையும் பாப்பாவையும் பார்க்க போறேன் என்று கொண்டாட்டத்துடன் கிளம்பிய குழந்தை ஒரு நிமிடம் தன் தந்தையை திரும்பி பார்த்து,  அருகில் வந்து அஸ்வத்தாமன் கன்னத்தில் முத்தமிட்டு “சீக்கிரம் சரியாயிடும்; நான் பிரே பண்ணுவேன். நீங்க வந்துடுங்க நம்ம கார் ஓட்டலாம் என்று குழந்தை கூற..

அஸ்வத்தாமன் நெகிழ்ச்சியுடன் அவனது கன்னத்தில் முத்தமிட்டு, கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டவன். 

கண்டிப்பா ஓட்டலாம் என தலையில் சரி செய்து வருடி விட்டு அனுப்பி வைத்தான். 

இப்பொழுது அந்த இடத்தில் சக்தி மற்றும் அஸ்வத்தாமன் மட்டுமே.. 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!