
மயிலிறகாய் வருடுகிறாய்
- 10 Sep 2025
- 626 reads
- ☆ No ratings yet
- 8 min read
Episode-2
தன் காதலனுக்காக கொடுப்பதற்காக ஆசை ஆசையாக பரிசுகளை வாங்கி வந்தாள் அகன்யா! ஆனால் காதலன் அரவிந்த் தனக்காக கொடுத்த இந்த பரிசினை கண்களால் கண்டு சுக்கு நூறாக உடைந்தாள். கண்களில் நீரோடியது வேகமாக துடித்த இதயம் நிற்பதற்கு ஏங்கியது.
அப்படியே மெதுவாக வெளியே நடந்த அகன்யா அவள் வாங்கி வந்த பரிசுகளை வெற்று சிரிப்புடன் பார்த்து வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
அகன்யா தன் முழு வாழ்க்கையையும் வெறுத்தாள்.
மழை சற்று வேகமாக பெய்து கொண்டிருந்தது. அகன்யாவின் மனக்குமுறல்களுக்கு ஏற்றவாறு இடியும் மழையும் அவளுக்கு ஏற்றவாறு இசையமைத்துக் கொண்டிருந்தது.
சாலையில் நடந்து செல்பவர்கள் அகன்யாவை ஒவ்வொரு பார்வைகளில் பார்த்தனர்.ஒருவர் அவளை பார்த்த மிகவும் பாவப்பட்டார், இன்னொருவர் அவளைப் பார்த்து மிகவும் கோபப்பட்டார், அவளின் இந்த தோற்றத்தை கண்டு சிலர் எதிர்மறையாக அவளை சித்தரித்தனர் தங்கள் மனதில்.
இது எல்லாவற்றையும் கடந்து அவள் கொஞ்ச தூரம் சென்ற பின் அவளை சுற்றி மரங்கள் இருந்தன. மழை மிக வேகமாக பெய்து கொண்டிருந்தது.இடியும் மின்னலும் கொஞ்சம் குறைந்தது. மழை மட்டும் சற்று கணிசமாக இருந்த நேரம் அப்படியே மழை கொட்டி தீர்ப்பது போல் தன் மொத்த சோகத்தையும் தன் ஒட்டுமொத்த குரல்வலையும் கிழியும் அளவிற்கு கத்தினால் கதறினால் அழுதால் அவள் கண்ணீர் எது? மழைத்துளி எது? என்று கண்டறியாத வண்ணம் தன் சோகத்தை முழுமையாக வெளிப்படுத்தினால் அவன்யா.
அவ்வளவு கத்தியும் கதறியும் கூட அகன்யாவின் மூளை தன் காதலனை வேறொரு பெண்ணுடன் பார்த்த காட்சியை தேய்ந்து போன ரெக்கார்டு போல் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தது.
தன் காதலன் கொடுத்த பரிசினை நினைத்து கால் போன போக்கில் நடந்தாள்.
அவளின் மனதில் ஒவ்வொரு நொடியும் அவள் மூளையில் ஒவ்வொரு மின்னல் இயக்கமும் அரவிந்த்துடன் வேறொரு பெண் இருக்கும் அந்த படுக்கை காட்சியே ஓடிக்கொண்டிருந்தது.
அப்படியே நடந்து சென்றவள் ஒரு இடத்தில் நின்றாள். அவள் நின்றது ஒரு உயர் ரக மதுபான BAR. அவள் தற்போது இருக்கும் மனநிலையில் மதுபானம் அருந்துவது சரியான தீர்வாக இருக்கும் என எண்ணினாள். சற்றும் யோசிக்காமல் உள்ளே நுழைந்தாள்.
Bar-இன் வெளியில் நின்று கொண்டிருந்த காவலாளிகள் இருவர் இராஜ மரியாதையுடன் அகன்யாவை வரவேற்றனர்.
அன்று அந்த பாரில் ஏதோ ஒரு special day கடைபிடிக்கபட்டு இருந்தது. அதன் காரணமாக விலை உயர்ந்த மதுபானம் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கப்பட்டது.
பணக்காரர்கள் மட்டுமே செல்லும் அந்த விலை உயர்ந்த bar-க்கு இன்று அகன்யாவும் சென்றாள். இந்த நிகழ்வு அவள் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறது என்பதை அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அகன்யா கையில் ஒரு பரிசு பெட்டி! காலையில் இருந்து ஓடி ஓடி வேலை செய்தால் உடையில் ஆங்காங்கே அழுக்கு கறை! ஆடைகளில் நூல் பிரிந்து தொங்கி கொண்டு இருந்தது.அவள் முகத்தில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் வியர்வை மற்றும் மழையுடன் கலந்து துர்நாற்றம் வீசும் அளவிற்கு அகன்யாவின் தோற்றம் காணப்பட்டது! பார்ப்பதற்கு மிகவும் பாவமாக காணப்பட்டாள்.
Bar-ல் உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த பார்டெண்டர் அவளை புண் சிரிப்போடு வரவேற்றார். அவளின் தோற்றத்தை பற்றி அவருக்கு எந்த ஒரு எதிர்மறை எண்ணமும் இல்லை இன்முகத்துடன் அவளை வரவேற்று அமரச் செய்தார்.
“Welcome mam! have special drink this is for everyone have it with full joy happiness thank you mam!” என்றவர் அகன்யாவிற்கு முன்னால் ஒரு ரெட் வைன் கோப்பையை வைத்தார்.
அதைப் பார்த்து குடிக்கலாமா வேண்டாமா என்று சிந்தனையில் மூழ்கி இருந்தால் அனன்யா.
எதிரில் ஒரு கண்ணாடி தெரிய அதில் தன் பிம்பத்தை பார்த்தால் அகன்யா. இப்பொழுது தான் அவளுக்கு தன் தோற்றமே நினைவுக்கு வந்தது. அகன்யா மனதிற்குள்,”கடவுளே எவ்வளவு பெரிய Bar! அய்யோ அகன்யா நீ இதுக்குள்ள வந்துட்டியா? உன்னுடைய தோற்றம் பாரு எப்படி இருக்குன்னு? எல்லாரும் உன்ன பத்தி எப்படி நினைப்பாங்க இதுவரைக்கும் நீ இந்த மாதிரி ஒரு தப்பான விஷயத்தை பண்ணுனதே இல்லையே! இது நமக்கு வேணாம்! பரவால்ல வா அவன் பண்ண துரோகத்துக்காக இதை நீ பண்ணனும்னு அவசியம் இல்ல!” என தன் மனதில் நினைத்து கொண்டாள்.
எவ்வளவு இன்னல்களுடன் வந்த தன்னை இன்முகத்துடன் வரவேற்ற பார்டெண்ருக்கு தனது நன்றியை கூறிவிட்டு வெளியே கிளம்பினால் அகன்யா.
அந்த நேரம் பார்த்து அகன்யாவின் நண்பர்களும் தோழிகளும் சிலர் பாருக்கு வெளியே நின்று கொண்டிருக்க மறைந்து மறைந்து செல்லும் அகன்யாவை தடுத்து நிறுத்தினர்.
“ஹே என்ன அகன்யா எப்பவுமே கூட்டுறது துடைப்பதுன்னு அப்படித்தானே இருப்ப! இப்ப என்ன புதுசா பார்பகமெல்லாம் வந்திருக்க அது மட்டும் இல்லாம பணக்காரங்க வந்து பாரு ஒரு வேலை கூட்ட பெருக்க ஜாயின் பண்ணிட்டியா என்ன?” என ஒருவன் கேட்க.
“இல்ல அப்படி எல்லாம் இல்ல ஏதோ special day என்று போட்டிருந்தாங்க அதனால தான் இந்த பக்கம் வந்தேன் சரி நான் கிளம்புறேன்!” என அகன்யா அவர்களை தவிர்த்து விட்டு நடக்க முற்பட்டாள்.
“இல்ல பரவால்ல பரவால்ல வா! எங்க ஓட பார்க்கிற! வா வா வந்தது வந்துட்ட எங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு!” என அவளுடைய தோழிகள் மீண்டும் அவளை அழைக்க.
அகன்யா வேறு வழியில்லாமல் தன் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் உள்ளே சென்று ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு அருகில் மற்றவர்கள் இருப்பது அவளுக்கு அசரவை சௌகரியமாக தோன்றியது. அதுமட்டுமில்லாமல் அகன்யா இதுவரை ஒருமுறை கூட மது அருந்தியதில்லை.
எல்லாவற்றையும் கணக்கு போட்ட அகன்யா,” அகன்யா இது நமக்கு சரிவராது போயும் போயும் அந்த துரோகம் செஞ்சவனுக்கு வாங்குண இந்த கிஃப்ட்ட வர கோபத்துக்கு குப்பைல தூக்கி போடணும்னு தோணுது! ஆனா அதனால எனக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்ல அந்த கடையிலேயே கொண்டு போய் கொடுத்தரலாம்! முதல்ல இந்த பிரெண்ட்ஸ் கிட்ட இருந்து வெளியில போகணும்!” என எழுந்து வெளியே கிளம்பினாள்.
“ஹே வெயிட் பண்ணு அகன்யா? இவ்ளோ தூரம் வந்துட்ட, கொஞ்சம் டிரிங்க் பண்ணிட்டு போகலாம்ல! ஏன் மேடம் ஜூஸ் தான் குடிப்பீங்களா? டிரிங்க்லாம் பண்ண மாட்டீங்களா! இன்னைக்கு எதோ ஸ்பெஷல் day வாம் ஸ்பெஷல் டிரிங்கா வெல்கம் டிரிங்க ஒன்னு குடுக்குறாங்க எதையாவது குடிச்சுட்டு போ!” என நண்பர்கள் அவளை கட்டாயப்படுத்தினர்.
“சாரி காய்ஸ் நீங்க ட்ரை பண்ணுங்க! நான் வந்துடறேன்!” என அவர்களிடம் இருந்து தப்பிக்க முன்புறம் வாசலுக்கு வந்தாள் அகன்யா. ஆனால் அங்கேதான் அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
பாரில் இருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரும் வியக்கும் வண்ணம் ஃபெராரி காரில் ஒருவர் வந்து இறங்கினார்.
அதே சமயம் அந்த இருண்ட வேலையின் மலையின் சாரலில் நனைந்த வாரே தனக்கு துரோகம் செய்தவன் அரவிந்த் வேறொரு பெண்ணுடன் உள்ளே வந்தான் இதை பார்த்து அகன்யா அருகில் இருந்த தூணில் ஒளிந்து நின்றாள்.
மற்றவர்கள் எல்லாம் ஃபெராரி காரில் வந்த அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், காரையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க அகன்யா தனக்கு துரோகம் செய்த காதலன் அரவிந்தை பார்த்து பயத்தில் ஒதுங்கி நின்றாள்.
அப்போது அவள் மனதிற்குள்,“ என்ன அகன்யா நீ எதுக்கு பயந்துக்கிற நீயா அவனுக்கு துரோகம் பண்ண? அவன் தான் உனக்கு துரோகம் பண்ணான்! நீ தைரியமா வெளியில போ!” என தன் மனதிற்குள் தைரியத்தை வரவைத்து தன் நண்பர்களுடனே சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம் என வெளியே வந்தாள் அகன்யா. அப்போது ஃபெராரி காரில் இருந்து வந்த அந்த நபரின் மீது சென்று எதிர்பாராத விதமாக மோதினாள்.
அகன்யா நிலைமையை புரிந்து கொண்டு “சாரி சார்! சாரி சாரி தெரியாம மோதிட்டேன்! நீங்க போகலாம் சாரி!” என மன்னிப்பு கேட்டு அவருக்கு வழி விட்டாள். அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பெருந்தன்மையாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
தன் காதலன் அரவிந்த் கண்ணில் படாதபடி மீண்டும் தன் தோழிகளுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஆனால் அகன்யாவிற்கு தன் காதலனும் அந்தப் பெண்ணும் இருவரும் கொஞ்சி கொஞ்சி பேசுவதும், முணுங்கள் சத்தங்கள் கேட்பது மீண்டும் அவளுக்கு ஒரு வெறியை உண்டாக்கியது.
அப்போது சடாரென அகன்யா இருக்கையில் இருந்து எழுந்தாள்.
இதை அரவிந்த்தும் அவனுடன் வந்த பெண்ணும் பார்த்துவிட்டனர்.
அப்போது அரவிந்த்துடன் வந்த பெண், “ஹே அரவிந்த் இவ லவ் ஃபெயிலியர்ல குடிச்சிட்டு ஊர் சுத்துற அளவுக்கு முன்னேறிட்டா போல! அய்யோ பாவம்!” என அரவிந்த் தோள்களில் தொங்கியபடி அகன்யாவை பார்த்து கூறினாள்
அந்த பெண் கூறிய வார்த்தைகள் அகன்யாவிற்கு மேலும் வெறியை உண்டாக்கியது.
அகன்யா சத்தமாக கத்திய போதும் அழுத போதும் தன் காதலன் வேறு பெண்ணுடன் இருந்த போதும் அவள் உணராததை இப்போது உணர்ந்தாள்.
அகன்யா தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை இப்போது தான் உணர்ந்தாள். அதைப் பற்றி தன் காதலனுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வேறொரு பெண்ணை பேச விட்டு வேடிக்கை பார்ப்பதை பார்த்த அவள் திடீரென்று ஒரு முடிவெடுத்தாள்.
அகன்யா மனதிற்குள்,”சச்ச அகன்யா கேவலம் துரோகத்தை செஞ்சுட்டு இவனே இவ்வளவு கெத்தா சுத்தும்போது உனக்கு என்ன? சரியான பாடத்தை இவனுக்கு கற்றுக் கொடுக்கணும்! ப்ளீஸ் அகன்யா இவன் முன்னாடி உன்ன பலவீனமா காட்டிக்காத!” என முனுமுனுத்தவள்.
இப்பொழுது அரவிந்த் மற்றும் அவனுடைய புதிய காதலியின் காதில் கேட்குமாறு தைரியத்தோடு மிக சத்தமாக,” ஆமா… ஆமா… வேற ஒருத்தவங்களோட காதலன எப்படி வளைச்சு போடுறதுன்னு உங்ககிட்ட தான் மேடம் கத்துக்கணும் வாட் எ கிரேட் ஜாப்!” என்றாள்.
அந்தப் பெண்,”ஏய் நீ ரொம்ப ஓவரா பேசுற? என்ன என்னமோ அரவிந்துக்கு வேற பெண்ணே கிடைக்காத மாதிரி நீ தான் பெரிய உலக அழகி மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்த! இப்ப இப்படி லவ் ஃபெயிலியர்ல இருக்க அதை மறைக்கிறதுக்கு இப்படி பேசி நடிக்காத நீ!”.
அகன்யா,”ஓஹோ போடி பைத்தியம் இவன் என் லைஃப்ல வராததற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அது மட்டும் இல்ல எனக்கு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் இந்த நிமிஷம் கூட இந்த பார்ல இருக்கிற ஒரு அழகான பர்சன் கிட்ட என்னால லவ் ப்ரொபோஸ் பண்ணி டேட்டிங் போக முடியும். உனக்கு ஒரு சாம்பிள் காட்டவா?”என்றாள்.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment