
மயிலிறகாய் வருடுகிறாய்
- 10 Sep 2025
- 562 reads
- ☆ No ratings yet
- 8 min read
Episode-3
அகன்யா இப்படி பேசுவதை பார்த்த அங்கிருந்த எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
அப்போது அரவிந்த்தின் புதிய காதலி,“ஹே… அரவிந்த்… இங்க பாரேன்… உன் ex(முன்னாள் காதலி) நல்லா காமெடி பண்றா…! அவகிட்ட இவ்வளவு humour sence இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட நான் நெனச்சே பார்க்கல!” என சிரிக்க.
அவளின் வார்த்தைகளும் சிரிப்பும் அரவிந்த்-ன் துரோகத்தை அவளுக்கு நினைவு படுத்தியது.அவளின் சிரிப்பு அகன்யாவிற்கு ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியது. அகன்யாவிற்கு ஒரு வித வேகம் ஏற்பட்டது உடலில் அதேசமயம் இரத்த ஓட்டம் அதிகரிக்க இதயம் படபடப்போடு உடலிலும் மனதிலும் ஒரு வேகம் தோன்றியது.
Bar-ல் அன்றைய நாளிற்க்கு கொடுக்கப்பட்ட special drink-ஐ பார்த்தாள். அகன்யா சிறிதும் சிந்திக்காமல் அதை எடுத்து ஒரே மடங்காக கட கடவென குடித்தாள்.
அகன்யாவின் இந்த செயல் அரவிந்த்-ற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அகன்யா இதுவரை மது அருந்தியதில்லை என்பது அரவிந்துக்கு தெரியும்.
அவன் கண்கொட்டாமல் அகன்யாவை பார்த்து கொண்டு இருந்தான்.
இதை பார்த்து கொண்டு இருந்த அரவிந்த்தின் புது காதலி பூஜா, “டார்லிங்…. உன்னோட ex-க்கு பைத்தியம் முத்திடுச்சு போல! நாம் வந்த வேலைய முடிச்சிட்டு கிலம்பலாம்! நம்ம ரொமான்ஸ் தான் பாதிலயே நிக்குதே வாங்க போலாம்! ” என அவர்கள் order செய்த மதுபான பார்சல் வாங்க அதற்கான இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் சில அடிகள் எடுத்து வைத்த நிலையில் அகன்யா Bar-ஐ சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அப்போது அதே Bar-ல் vodka-shots அருந்தி கொண்டு இருந்த ஒரு நபர் அகன்யா கண்ணில் பட்டார். அவன் மிகவும் அழகாகவும், பார்ப்பதற்க்கு பெரிய இடத்தை சேர்ந்தவன் போல் காட்சியளித்தான். தனது மொபைலில் ஏதோ பார்த்தபடி அவன் தனது தீர்ந்த vodka-shots-ஐ மீண்டும் ஆர்டர் செய்தார்.
அந்த நேரம் அகன்யா மனதில் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, இரண்டு மூன்று முறை பெருமூச்சு விட்டபடி அந்த இளைஞன் அமர்ந்து இருக்கும் டேபிள்க்கு சென்று அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அகன்யாவின் நண்பர்கள் இதை பார்த்து முணுமுணுத்தனர்,“ஹே… இந்த அகன்யா என்ன பண்றா பாரு! … “. இது அரவிந்த் காதில் விழுந்தது. அவனும் அகன்யாவை பார்த்தன்.
Bar-ல் எல்லோர் கண்ணும் அகன்யாவின் மீதும் அந்த இளைஞன் மீதும் இருந்தது.
அப்போது அகன்யா அந்த இளைஞனிடம்,” Hii…! Handsome! I love you so much! ” என சொல்லி மொபைலை பார்த்து கொண்டு இருந்த இளைஞனை நெருங்கி உதட்டோடு உதடாக முத்தத்தை பதித்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத அவனோ தன் மொபைலை கீழே தவறவிட்டான்.
அகன்யாவின் பிடியில் இருந்து அவன் மீள முயன்றான் அப்போது அகன்யா இதழ் பதிப்பை நிறுத்தி, அவனை கட்டியணைத்தபடி அவன் காதுகளில் முணுமுணுத்தாள்,“ sorry sir! Please என்னோட நிலைமைய புரிஞ்சுகோங்க! Please sorry!” என்றாள்.
அந்த இளைஞனும் Bar-ல் இவர்கள் பேசிய சில விசயங்களை நினைவில் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.அப்படியே பையில் இருந்த gifts and cake அந்த இளைஞன் கண்ணில் படவே அகன்யாவின் நிலை இளைஞனுக்கு நன்றாகவே புரிந்தது.
அகன்யா அந்த இளைஞனை கட்டியணைப்பதை நிறுத்தினாள்.அந்த டேபிளில் புதிதாக வைக்கப்பட்ட சிறிய vodka shots-ஐ மடமடவென குடித்தாள்.
அகன்யாவிற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏற ஏற உளறத் தொடங்கினாள்.
“ஹாய்… Darling… இன்னைக்கு தான் நாம மீட் பண்ணோம்! நம்ம first dating எப்ப போலாம்? சொல்லுங்க… I’m madly love you!”என கண்களில் நீர் வழிய அந்த இளைஞனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
இதெல்லாம் கவனித்து கொண்டிருந்த அரவிந்த்திற்கும் பூஜாவிற்கும் அகன்யாவின் செயல் நல்ல பதிலடியாக இருந்தது.
இதை பார்த்த நண்பர்களோ,“பாருங்க guys! நம்ம அகன்யாவா இது மாஸ் காட்டினாள் ஏ!”என ஒருவன் கூறினான்.
அதற்கு மற்றொரு தோழியோ,“அரவிந்த் ஏமாத்துனத அவ கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்ல! அவ உண்மையா இருந்த அரவிந்த் ஏமாத்துனான்! இப்ப அகன்யா பண்ணது சரியான பதிலடி!” என்றாள்.
இது பூஜா காதில் நன்றாகவே விழுந்தது. பூஜா அரவிந்த்-ஐ பார்த்து முறைத்தாள்.அங்கிருந்து கோபமாக வெளியே நடந்து சென்றாள்.
அதையும் அகன்யாவின் தோழி ஒருத்தி,“பாருடா… பாருடா…. அகன்யாவை பைத்தியம்-ன்னு சொன்னாள் பூஜா! இப்ப அவ தான் உண்மையான looser!” என சொல்லி சிரித்தனர்.
அகன்யா மது அருந்தி இருந்தாள் போதையில்,“Hii gentle man! நீங்க நெஜமாவே ரொம்ப Handsome-அ இருக்கீங்க! எனக்கு ஒரு doubt அது clear பண்றீங்களா?” என கேட்டவறே சோகம் தாங்காமல் கண்ணீரில் தத்தளித்தாள்.
அந்த இளைஞனும் தலையசைத்தான்,” எனக்கு இன்னைக்கு பெரிய துரோகம் நடந்துச்சு அதுக்காக சோகத்துல குடிக்குறேனா? இல்ல யார் என்னன்னே தெரியாம உங்க பேர் என்னன்னு கூட தெரிய உங்க கூட commit ஆன சந்தோஷத்துல குடிக்குறேனா?” என போதையில் உளற ஆரம்பத்தாள்.
அகன்யாவின் நிலையை அறிந்த அவன் இருக்கும் இடத்தின் தன்மையும் அறிந்தான்.
உடனே அந்த இளைஞன் தன் மார்பில் சாய்ந்து சிணுங்கி கொண்டிருந்த அகன்யா-வை அலுங்காமல் தூக்கி நிற்க வைக்க முயன்றான். ஆனால் அகன்யா தள்ளாடி அவன் மீது சாய்ந்தாள். அவளை தாங்கி பிடித்து மீண்டும் நிறுத்த முற்பட்டான்.அவள் மீண்டும் தள்ளாடி அவன் மீதே விழுந்தாள்.
மூன்றாவது முறை அவன் மீது சாய வந்த அகன்யாவை சட்டென இடது கையால் தாங்கினான். பின் அவளை தூக்கினான்.
அதுவரை அமைதியாக முணுமுணுத்த அகன்யா,“ Handsome sir! என்ன நெறைய drink பண்டிங்களா? இவ்வளவு தள்ளாட்டத்தோட இருக்கீங்க?” என்றாள்.
அவளை தூக்கி சில அடிகள் அவன் வெளியே செல்ல முற்பட்டான்.
அப்போது மீண்டும் அகன்யா,” நான் பேசியது உங்களுக்கு கேக்குதா ? துரோகத்தோட பரிசு அங்க இருக்கு அதையும் எடுத்துட்டு போலாம்! அப்படியே இன்னும் கொஞ்சம் drinks வேணும்! ” என்றாள்.
அந்த இளைஞன் கண் அசைக்க அங்கு பாரில் வேலையாள் ஒருவர் அகன்யாவின் Bag-ஐ அவளிடம் எடுத்து கொடுத்தார்.
பின் அகன்யாவை தூக்கிக்கொண்டு வெளியே சென்று தன் Ferrari-ல் அவளை உட்கார வைத்தான்.
அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு மீண்டும் பாரினுள் வந்தான். Bill counter-ல் அகன்யாவிற்கும் சேர்த்து பணம் கொடுத்து விட்டு அவன் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.
இதை பார்த்த அரவிந்த்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தன்.
அந்த இளைஞன் காரின் அருகில் சென்றான்.
அகன்யா இன்னமும் காரில் புலம்பியவண்ணமே இருந்தாள். அவள் கைகளில் அந்த பாட்டிலை கொடுத்தான்.
அதையும் அகன்யா வாங்கி குடித்தாள். அதன் பின் அகன்யா முணுமுணுத்தாள்,“என்ன மாதிரி ஏமாளி யாரும் இருக்க மாட்டாங்க கடவுளே! உண்மையான அன்பு செஞ்சா ஏமாற்றம் தான் மிஞ்சும் போல! நான் ஒரு ஏமாளி!”.
அகன்யாவின் தோற்றம் அந்த இளைஞனுக்கு சற்று விசித்திறமாக இருந்தது. அவன் யாரோ ஒரு நபருக்கு call செய்ய முற்பட்டான். பின் அகன்யாவின் நிலையை பார்த்துவிட்டு போனை வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.
அப்போது அகன்யா அந்த பாட்டிலை முழுவதும் கொடுத்து விட்டு மிகவும் போதையாக இருந்தாள். தான் எங்கே இருக்கிறோம் என்பதே அவளுக்கு தெரியவில்லை.
கார் மிக வேகமாக செல்ல அது அவளுக்கு இன்னும் ஒரு வித தள்ளாட்டத்தை ஏற்படுத்த ஒரு கட்டத்தில் அவள் கொடுத்த எல்லா மது பானத்தையும் காரினுள்ளே vomit செய்துவிட்டாள்.
இதை பார்த்த அந்த இளைஞனுக்கு கோபம் வந்துவிட்டது.
ஆனாலும் அகன்யாவின் குழந்தைத்தனமான அந்த அழுத முகத்தை பார்த்து அவன் தன் கோபத்தை அடக்கி கொண்டான். இப்போது மீண்டும் யாரோ ஒரு நபருக்கு கால் செய்தான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கே இன்னொரு ஃபெராரி காரில் ஒருவர் வந்து இறங்கினார்.
அந்த இளைஞன் அகன்யாவையும் அவள் வைத்திருந்த பையையும் தூக்கிக்கொண்டு இன்னொரு காரில் ஏறினான். இந்த காரின் சாவியை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான்.
இப்போது மிதமான வேகத்தில் சென்ற அந்த கார் ஒரு உயர்தரமான கெஸ்ட் ஹவுஸ் முன் நின்றது.
பின் அவளை உள்ளே தூக்கிச் சென்ற அவன் அங்கே இருந்த ஒரு படுக்கையறைக்குள் நுழைந்து அவளை படுக்கையில் மெதுவாக படுக்க வைத்தான்.
அகன்யா அவள் கையில் வைத்திருந்த பையைப் பார்த்தான் அதில் அரவிந்திற்காக வாங்கிய கேக்கின் மேல் எழுதப்பட்டிருந்த வாசகத்தை படித்தான். மேலும் அவள் வாங்கிய பரிசு பொருட்களையும் பார்த்தான் இதை பார்த்து அகன்யாவின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை ஓரளவு புரிந்து கொண்டான்.
அன்றைய இரவு அகன்யாவிற்கு மிகவும் நீண்ட இரவாக இருந்தது.
அடுத்த நாள் காலை விடிந்தது.
அகன்யா கண்விழித்தாள். அவள் இருக்கும் இடம் தான் எப்போதும் கண்விழிக்கும் தன் அறை போல் இல்லை என்று தோன்றியது.
அகன்யா,” அடக்கடவுளே நான் எங்க இருக்கேன்… அகன்யா உனக்கு என்ன ஆச்சு?” என சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த இடமே அவளுக்கு புதிதாக இருந்தது.
அவளுடைய தலை மிகவும் பாரமாக வலித்தது.தனது இரு கைகளையும் தலையில் வைத்து பிடித்துக் கொண்டு நேற்று இரவு நடந்த விஷயங்களை நினைவு கூற முயன்றாள்.
அப்படி அவள் நினைவு கூற முயன்றாள். இறுதியாக ஒரு முகம் தெரியாத நபருக்கு முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொன்னது மட்டுமே அவள் ஞாபகத்தில் வந்தது.
அதை நினைத்துக் கொண்டே அகன்யா அவள் அணிந்திருந்த உடையை பார்த்தாள். அடுத்த அதிர்ச்சி அவளுக்கு காத்திருந்தது.
திடீரென அவளின் உடையை பார்த்தால்,பிறகு அவள் சிந்தனையே ஸ்தம்பித்து போனது.
அகன்யா,“அட கடவுளே இது என்னோட dress இல்லையே! என்னோட shop uniform-ல தான இருந்தேன்! என்ன நடந்ததோ தெரியலையே!” என மனதில் கவலைகள் ஒவ்வொன்றாக எழ ஆரம்பித்தது.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment