promo
அறைக் கதவை இறுக்கமாகச் சாத்திவிட்டு, புலி கூண்டுக்குள் நடப்பது போல ஆக்ரோஷமாக நடந்துகொண்டிருந்தாள் சிவாங்கி.
“ஏய்… கிழவி!!” என்று கத்தினாள்.போன் ஸ்பீக்கரில் இருந்தது.
எதிர்முனையில் ஸ்ரீவள்ளி, “அத்தை… உங்களைத்தான்…” என்று போனை நீட்ட, அதை வாங்கிய ஒரிஜினல் அபிராமி பாட்டி உற்சாகமாக,”ஹலோ… சிவகாமசுந்தரி… என் குலசாமி… சௌக்கியமா?” என்றார் குதூகலமாக.
“சௌக்கியமா? இங்கே எனக்கு சங்கு ஊதாத குறைதான் பாக்கி! உன்ன சும்மா விடமாட்டேன் டி… போச்சு எல்லாம் போச்சு! உன்னால… எல்லாம் உன்னால!” என்று தலையில் அடித்துக்கொண்டாள் சிவாங்கி
.”ஏண்டி… நான் என்னடி பண்ணேன்? உன் தங்கச்சி தனலட்சுமி காதலுக்காக தான அனுப்பி வச்சிருக்கேன். ஏன் குதிக்கிற?” அபிராமி அப்பாவியாகக் கேட்டார்.
“இது டார்ச்சர் சேம்பர் டி! அய்யோ… உன்னால அந்த ஹிட்லர் கிட்ட நான் மாட்டிகிட்டேன்…””என் செல்லப் பேரன் என்ன பண்ணான்?””
என்ன பண்ணான்னு கேட்காத… என்ன பண்ணலன்னு கேளு! என்னை அபிராமி பாட்டின்னு நெனச்சு காலில் விழறான்… சரி மரியாதைன்னு விட்டுட்டேன். ஆனா அவன் பண்றதெல்லாம் ஓவர் டி ஓவர்!”சிவாங்கி மூச்சு வாங்கப் பேசினாள். “கிழவி… நான் வேஷம் போட்டு வந்திருக்க சிவாங்கின்னு மட்டும் அந்த ‘மெட்டல் மண்டையனுக்கு’ தெரிஞ்சது… நான் அவ்ளோ தான்! என் எலும்பு கூட தேறாது!”
“அதுக்கு ஏன்டி பதறற? பேரன் பாட்டி மேல பாசமா இருக்கான். இது தப்பா?” என்று ஸ்ரீவள்ளி குறுக்கே புகுந்தார்.”
அய்யோ சித்தி!! உங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்?” என்று நெஞ்சில் கை வைத்துத் துடித்தவள், மனதிற்குள், பாசமா? இதுக்கு பேரு பாசமா? ராட்சசன் மாதிரி இருக்கான். பின்னாடி வந்து ‘அம்மாச்சி’னு சொல்லி இருக்கிக் கட்டிப் பிடிக்கிறான் பாவி! என் மடியில படுத்துக்குறான். அவனுக்குத் தலையை வேற கோதி விடணுமாம்! நேத்து என்னடான்னா… ‘பாட்டி எனக்குத் தலை வலிக்குது, ஆயில் மசாஜ் பண்ணி விடுங்க’னு வந்து உக்காந்துட்டான். நான் நடுங்கிக்கிட்டே எண்ணெய் தேய்க்கிறேன்… அவன் சுகமா கண்ணை மூடிக்கிட்டு, ‘பாட்டி உங்க கை பட்டு தலைவலியே போச்சு’ங்கிறான். டேய்… என் கை பட்டதுல எனக்கு இங்கே ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல இருக்கு! எப்போ பாரு உரசிகிட்டு… இவன் பாசத்துல பண்றானா இல்ல எதாச்சும் பிளான் பண்ணி பண்றானானே தெரியலையே!)சிவாங்கி தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு, “சே… … என் வாழ்க்கையில விளையாடுறியேடா…” என்று புலம்பினாள்.
“ஹே சுந்தரி… சிவகாமி… கூல் டவுன்! இதெல்லாம் யாருக்காக? உன்னோட தங்கச்சி தனாவுக்காகத் தானே? அவ அந்த ஆதவன் கூட சேரணுமா வேணாமா? பொறுத்துக்கோடி என் செல்லம்…” என்று ஐஸ் வைத்தார் அபிராமி.”
எங்க அம்மாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது… கண்டிப்பா உன்னை மாட்டி விட்டுருவேன் டி! அப்புறம் நீதான் இங்கே வந்து அந்த அசுரன் கிட்ட ஆயில் மசாஜ் பண்ணி விடணும்… பாத்துக்கோ!” என்று சிவாங்கி மிரட்டினாள்
.திடீரென்று வாசலில், “அபி அம்மாச்சீ….” என்ற அதிரூபனின் குரல் குழைவாகக் கேட்டது.சிவாங்கிக்குத் தூக்கி வாரிப் போட்டது.”போச்சு… எமதர்மன் கூப்பிடுறான்! கடன்காரன் வந்துட்டானே!! ஹே அபிராமி… உன்னை தமிழ்நாடு வந்து வச்சுக்கிறேன் டி! என்னை இங்கே கோர்த்து விட்டுட்டு நீ ஜாலியா சீரியல் பாக்குறல… இருடி வர்றேன்…”பதற்றத்தில் போனை கட் செய்தவள், அதை ‘ப்ளைட் மோட்’டில் போட்டு, பில்லோ கவருக்குள் திணித்தாள்.
கண்ணாடியைப் பார்த்து, அவசர அவசரமாகத் தனது நரைமுடி விக்கை எடுத்துத் தலையில் மாட்டினாள். அவசரத்தில் விக் கொஞ்சம் கோணலாக மாற, “அய்யோ கடவுளே!” என்று அதைச் சரி செய்து, அந்த சோடாப்புட்டி மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டாள்.
நொடியில்… ‘மாடர்ன் மங்கை’ சிவாங்கி, ‘தள்ளாடும்’ அபிராமி பாட்டியாக மாறினாள்.கதவு தட்டப்பட்டது.”என்ன பண்றீங்க அம்மாச்சி? உள்ள தனியா பேசிட்டு இருந்த மாதிரி சத்தம் கேட்டுச்சு? அண்ணா உங்களைக் கூப்பிட்டாங்க…” என்று அகிலன் குரல் கொடுத்தான்.
சிவாங்கி உடனே குரலை மாற்றி, இருமிக்கொண்டே, “ஒ… ஒன்னுமில்லப்பா… சாமிகிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன்…” என்று கரகரப்பான குரலில் கத்தினாள்.
மனதிற்குள், “ஐயோ… இந்தக் குடும்பமே சிஐடி குடும்பமா இருக்கும் போலயே! எல்லா கிடாயன்களும் ஒண்ணா சேர்ந்து என் உயிரை வாங்குறாய்ங்களே!” என்று நினைத்தபடி, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, நடுக்கத்துடன் கதவைத் திறந்தாள்.
விரைவில்…











💬 Be the first to comment