🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
1. சர்வாதிகாரியின் சதி தேவி
சர்வாதிகாரியின் சதி தேவி
📖 சர்வாதிகாரியின் சதி தேவி · Chapter 1 of 67

சர்வாதிகாரியின் சதி தேவி

  • 7 Jul 2025
  • 2,815 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

அத்தியாயம்-1

கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளின் இடையைக் கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் சர்வா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ரூம் சர்வீஸ்” என அறையின் கதவு தட்டப்பட, அதனுடன் லேண்ட் லைன் போன் விடாமல் அலறிக்கொண்டிருக்க, ‘ப்ச்’ என உச்சி கொட்டியபடி கண்களை மெதுவாகத் திறந்தான்.

தனக்கு எதிரில் இருந்த பெண்ணைப் பார்த்ததும் திரும்பிக்கொண்டவன், சட்டென எழுந்து அமர்ந்தான். அப்படியே தன்னையும் பார்த்துக்கொண்டான். ஒட்டு துணிகூட இல்லை. அதைவிட, அந்தப் படுக்கையில் ரத்தக்கசிவு ஒட்டிக்கொண்டிருக்க, எதிரில் இருக்கும் பெண்ணைப் பார்த்தான்.

அவளிடமிருந்து எழும் சமயத்தில் முனகல் சத்தம், சிணுங்கல் சத்தம். “போதும், கூசுது! தள்ளிப்போ! நான் எங்கே இருக்கேன்! விட்ரா! அய்யோ, தொடாதே!” எனப் பிதற்றியபடி உளறினாள் அந்தப் பெண். முக்கியக் குறிப்பு: அவளின் உடலிலும் ஒட்டு துணி இல்லை. ஆனால் அவளைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ செய்ய, வேகமாகப் பாத்ரூம் சென்றுவிட்டிருந்தான் சர்வா.

குளிர்ந்த நீர் தலையில் கொட்டிக்கொண்டிருக்க, “How is it possible?” என தன்னைத்தானே கேட்டுக்கொண்டது. ‘ஆஸ்திரேலிய நெருப்புக் கோழி! ம்ம், அப்படிதான் இருப்பான் சர்வா! ஆறடி காற்று.’ இரவு கான்ஃபரன்ஸில் உணவைச் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான். ஆனால் எப்படி இந்த அறைக்கு வந்தோம் எனத் துளிகூட யோசனை இல்லை. நினைவும் இல்லை. சட்டெனப் பொறி தட்ட, ‘இவள் யாரு? நம்ம ரூம்ல இவள் எப்படி?’ என ஆயிரம் கேள்விகள் தோன்ற, குளிப்பதில் கவனம் செலுத்தினான்.

இரவில் நடந்த விஷயங்களைக் கஷ்டப்பட்டு நிலைப்படுத்தி, குளிப்பதில் கவனம் செலுத்தினான். ஆனால் எண்ணம் முழுவதும் அவள் மேல்! கண்களை மூடினால் மங்கலாகத் தோன்றியது காட்சிகள். சர்வா அவனது கை விரல்களைப் பார்த்தான்.

இங்கே படுக்கையில் கிடப்பவளின் நிலை… தான் ஒருத்தனிடம் கற்பை இழந்துவிட்டோம் எனத் தெரியாமல் உறக்கம்.

உறக்கமா? அது உறக்கம் அல்ல; சோர்வு. இரவு நடந்த காட்சிகளின் விளைவு. முரட்டு உதடுகள் அவளின் மென் உதட்டைக் கவ்விக்கொண்டு விடிய விடிய சிறையிட்டு வைத்திருந்தது. பாவம், பெண்ணவளுக்குத் தெரியவில்லை.

மீண்டும் ரூம் சர்வீஸ் கதவைத் தட்ட, சட்டென விழித்தாள் சகுந்தலா தேவி.

“நான் எங்கே இருக்கேன்? இது என்னோட ரூம் போல தெரியலையே? உடம்பு ஏன் இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குது?” எனச் சுற்றிலும் பார்த்தாள். அப்படியே தன் கழுத்துக்குக் கீழ் பார்த்தவள் அரண்டுவிட்டாள். கைகள் கிடுகிடுவென நடுங்கின. ‘என்னாச்சு எனக்கு? உடலில் ஏகப்பட்ட வலி.’ கண்ணாடியைப் பார்த்தாள். எந்தவிதத் தழும்பும் இல்லை. ஒவ்வாமைத் தொற்றும் வரவில்லை. “ஆனால்… ஆனால்… நான்… நான்…” என கண்களில் நீர் வழிந்தது. உடல்கள் ஒரு நிமிடம் உதிரி எடுத்தது. வேகமாக அங்கு சிதறிக் கிடக்கும் உடையைப் பொறுக்கிப் போட்டுக்கொண்டாள். அவள் அறையிலிருந்து வெளியேற முயற்சி செய்யவும், சர்வா பாத்ரூமிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

“ஹே, நில்லுடீஈஈ!” என உயிரை உறைய வைக்கும் குரல்!

எச்சிலை கூட்டி விழுங்கியவள் ஒருவிதப் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். தலையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, கண்கள் இரண்டும் சிவந்தபடி அவனது பார்வை கூறு போடும் நோக்கில் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க, சகுவின் உள்ளே ஒருவிதப் பயம் பரவியது.

“இது ஒரு ஆக்சிடன்ட், நான் வேணும்னு பண்ணல” என்றவள் சட்டெனக் கதவைத் திறந்துகொண்டு ஓடிவிட்டாள்.

“யூ பிளடி இடியட்! ஓடாதே, நில்லு” எனக் கத்தியபடி கதவைத் திறந்த சர்வா அப்பொழுதுதான் தனது உடையைப் பார்த்தான்.

“ப்ச்… பிடிக்கிறேன் டி! கையில் மாட்டு!” என வாய்க்குள் முனகியவன் உடனே தனது நண்பனுக்கு அழைத்தான்.

“ஹலோ, சொல்லுடா. கான்பரன்ஸ் எப்படி போச்சு?” என ஆதி சோர்வுடன் கேட்க,

“மண்ணாங்கட்டி! இங்கே ஒரு பிரச்சினை ஆகிப்போச்சு!”

“என்ன சொல்ற? என்னடா பிரச்சினை?” என ஆதி கேட்க,

“ஒருத்தி என்கிட்ட அத்துமீறி நடந்துட்டு போயிட்டா!”

“என்னடா சொல்ற? உன்னை அடிச்சிட்டாளா?”

“ஜஸ்ட் ஷட் அப் அண்ட் லிசன்” என நெற்றியைத் தேய்த்தபடி விவரத்தைக் கூறினான் சர்வா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“டேய், சாதிச்சிட்ட மச்சான்! நீ சாதிச்சுட்ட! அனுஷா மேல வராத இந்த மேட்டர் வேற ஒரு பொண்ணு மேல வந்து எல்லாமே முடிஞ்சிடுச்சு. அப்போ நீ இம்போடென்ட் இல்லடா!” என உற்சாகமாகக் கூறினான் ஆதி.

“நேர்ல வந்து உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியபடி போனை கட் செய்தான் சர்வா.

“சகு, இன்னும் நீ வீட்டுக்கே வரல? எங்கே இருக்க நீ?” என தாய்மாமன் பிரகாஷ் அழைத்தார்.

“மாமா, அது வந்து!” என குரல் கமறியது.

“என்னாச்சு சகு? பதில் சொல்லு. உன்னோட குரல் சரி இல்லையே! நீ எங்கே இருக்க பொண்ணு?” என பிரகாஷ் மீண்டும் கேட்க,

“இல்… இல்ல மாமா, நான் நல்லா இருக்கேன். கான்பரன்ஸ் போனேன். அதான் வர முடியல. நைட்டு ரொம்ப லேட் ஆகிடுச்சு. அப்படியே டூட்டிக்கு வந்துட்டேன். நான் சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன். நீங்க எதையும் நினைக்காம ஆபிஸ் போங்க.”

“சாமீ, சாப்பாடு கண்ணு? நான் வேணும்னா சாந்தினி கிட்ட கொடுத்து அனுப்பவா?” எனக் கேட்டார்.

“வேணாம் மாமா! நான் இங்கே கேன்டீன்ல சாப்பிட்டேன்” என்றாள் சகுந்தலா.

“சரி பொண்ணு, ஒன்னும் பிரச்சினை இல்லல்ல?”

“இல்ல மாமா” எனக்கூறியவள், இரண்டு வார்த்தை பேசிவிட்டு போனை வைத்தாள். பிரகாஷ் குடும்பம்தான் அவளை வளர்த்துக்கொண்டிருக்கிறது. பிரகாஷின் மனைவி உமாவுக்கு சுத்தமாக இவளைப் பிடிக்காது. அதற்கு காரணம் இவளுக்கு இருக்கும் ஒவ்வாமை நோய். அதனால் ஒன்றும் சும்மா விட்டுவிடவில்லை. சகுந்தலாவின் சம்பளப் பணம் ஏறும் ATM கார்டு உமாவிடம் தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சகுந்தலாவின் தந்தை தேவநாதன் வருடத்துக்கு ஒருமுறை பணம் அனுப்பி வைப்பார். அவளைத் தீண்டத் தகாத ஜந்து போல ஒதுக்கி வைத்திருக்கிறார். அதைவிட, பிரகாஷ் தன் மகன் சரவணனுக்கு அவளை மணமுடித்து வைத்தால் மகனின் நிலை என்ன? என நினைத்தவர் அவனை ஹாஸ்டலில் தங்க வைத்திருக்கிறார்.

சகுந்தலா இங்கு இருக்கக் காரணம் என்ன? அவளின் அன்னை லட்சுமி மிகப்பெரிய மருத்துவர். தந்தை தேவநாதன் பெட்ரோல் பங்க் உரிமையாளராக இருந்தார். சகுந்தலா பிறந்ததும் நன்றாகத்தான் இருந்தாள். நான்கு வயதுக்கு மேல் அவளுக்கு ஒவ்வாமை கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான செலவில் தேவநாதன் பெட்ரோல் பங்கை இழந்துவிட்டார்.

லட்சுமி எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பயனில்லை. தேவநாதனுக்கு சகுந்தளாவின் மீதுள்ள பிடிப்பு போய்விட, வீட்டில் சண்டை முற்றிப்போனது. “இது இப்படியே போனால் சரி வராது” என லட்சுமியின் அம்மா தாயம்மாள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் மகன் பிரகாஷ் வீட்டுக்கு வந்துவிட்டார்.

தேவநாதனுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். சகுந்தலா லட்சுமியின் அருகில் இருந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் சொல்லிவிட, லட்சுமியை மொத்தமாக சகுந்தலாவிடம் இருந்து பிரித்துவிட்டார். சகுந்தலாவுக்கு சூரியா எனத் தம்பி இருக்கிறான். அவனை இதுவரை அவள் போட்டோவில் தான் பார்த்திருக்கிறாள். தாயம்மாள் இருந்த வரை அனைத்தும் நன்றாகத்தான் போனது. 7-ம் வகுப்பு அவள் பெரிய மனுஷி ஆன ஒரு மாதத்தில் தாயம்மாள் இயற்கை எய்த, சகுந்தலா தீண்டத் தகாத பெண்ணாகிப் போனாள்.

இது அனைத்தையும் பிரகாஷுக்குத் தெரியாமல் இதுவரை செய்துகொண்டிருக்கிறாள் உமா. பிரகாஷ் மற்றும் உமா தம்பதிக்கு சரவணன், சாந்தினி என இரண்டு பிள்ளைகள். சரவணன் பொறியியல் முடித்துவிட்டு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். சாந்தினி பயிற்சி மருத்துவராக ஹர்ஷவர்த்தன் ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். அதே ஹாஸ்பிடலில் தான் சகுந்தலா செவிலிப் பெண்ணாக இருக்கிறாள்.

சகுந்தலா டிரஸ்ஸிங் ரூமில் ஒரு மூலையில் தலை சாய்த்து தன் வாழ்க்கையை எண்ணி நொந்துகொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அவளின் போனுக்குத் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!