🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
3. ரெக்கை கட்டி பறக்குது மனசு
ரெக்கை கட்டி பறக்குது மனசு
📖 ரெக்கை கட்டி பறக்குது மனசு · Chapter 3 of 55

ரெக்கை கட்டி பறக்குது மனசு

  • 9 Aug 2025
  • 668 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

Episode -3

இளவேனில் நடந்துபோய்க்கொண்டே போனை எடுத்து, தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷமான விஷயத்தை தன் அத்தை மகன் தினேஷுக்குச் சொல்ல கால் பண்ணினாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அதே நேரம், தினேஷ் கார்டியாலஜி வார்டுல இருந்து வேகமா, ரத்தப் பிரிவு OPD-க்கு (புற நோயாளிகள் பிரிவு) போய்க்கொண்டிருந்தான். அடர்த்தியா வளர்ந்திருந்த தலைமுடியும், தாடியும், வேலைப் பளுவால கவனிச்சுக்காததால காட்டு மாதிரி இருந்துச்சு. போன் சத்தம் வர, நீண்ட உயரமான அவன் கையில போனை எடுத்து காதுல வெச்சான். அவன் குரல் கம்பீரமா இல்லை, ஆனா என்ன நினைக்கிறான்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கடுமையானதா இருந்துச்சு. நிறைய படிச்சதால கண்ணாடி போட்டிருந்தான். கழுத்துல ஸ்டெதஸ்கோப் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. அவனோட கண்கள், ரெண்டு நட்சத்திரங்களை வெட்டி எடுத்த மாதிரி இருக்கும். அதுதான் ஒவ்வொரு நோயாளிக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும். சிரிச்சா ரொம்ப அழகா இருப்பான். ஆனா, நம்ம டாக்டர் மனோஜ் குமார் சிரிக்கவே மாட்டார். மொத்தத்துல, 28 வயசான வாலிபன், டாக்டர் மனோஜ் குமார். MBBS, MD முடிச்சுட்டு பயிற்சி மருத்துவராக இருந்தான்.

அவன் வேகமா “I’m on the way”ன்னு சொல்லிக்கிட்டே இளவேனிலை கடந்து போனான். இருவரும் ஒரே இடத்துல இருந்தும், வெவ்வேறு உலகத்துல இருந்தாங்க. ஆனா, கூடிய சீக்கிரம் ஒருத்தருக்காக ஒருத்தர் ஏங்கி ஒரே உலகத்துல பயணிக்கப்போறோம்னு தெரியாம கடந்து சென்றார்கள்.

மனோஜ் நேரா இளவேனிலைக் கடந்து, OPD-க்கு போயிடுறான். இங்க இளவேனிலுக்கு ஒவ்வொரு அடியும் கஷ்டமா இருந்துச்சு. “ஹலோ மாமா, நான்…”ன்னு அவள் பேச ஆரம்பிக்க, “இப்போ உனக்கு வேலை கிடைச்சு என்ன ஆகப்போகுது?”ன்னு தினேஷ் கோபமா கத்துறான். அவ அப்படியே உறைஞ்சுபோய் நின்றாள்.

இவ்வளவு நேரம் தைரியமா இருந்த அவ கண்ணுல, இப்போ கண்ணீர் துளிகள் கோர்த்துக்கிட்டு நிக்குது. “ஏன் வேணி, நான் சொல்றத புரிஞ்சுக்க மாட்டேங்குற?”ன்னு தினேஷ் கொஞ்சம் வருத்தமா பேசினான்.

தினேஷோட அம்மா செல்வி, இளவேனிலோட சொந்த அத்தை. தினேஷ் அவளோட அத்தை மகன். இப்போ அவன் இளவேனில் மேல கோபமா இருக்கக் காரணம், செல்விக்கு இளவேனில தன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பம் இல்ல. இப்போ இளவேனில் அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, தன் இரண்டாவது சித்தப்பா வீட்ல இருக்கா. ஆனா, சின்ன வயசுல இருந்தே ‘இவ உனக்குத்தான்’னு பேசிப் பேசி தினேஷுக்கு இளவேனில் மேல கொள்ளை பிரியம். அதே மாதிரி இளவேனிலும் அத்தை மகன் மேல ரொம்பப் பிரியமா இருக்கா. அவன்தான் தன்னோட வாழ்க்கைத் துணையா இருக்கணும்னு நினைச்சுட்டு இருக்கா. ஆனா, அவ அம்மா, அப்பா விபத்துல இறந்ததுல இருந்து, உறவுகளோட பேச்சு அவளுக்குள்ள ஆறாத வடுக்களை உண்டாக்கியிருக்கு. அதனால, தன் சித்தப்பாவுக்கு எந்த அவமானத்தையும், சங்கடத்தையும் கொடுத்துடக் கூடாதுன்னு இருக்கா.

இப்போ செல்வி, “வேணி வேண்டாம்”னு சொல்லி, தினேஷுக்கு வேற பொண்ணு பார்க்க ரொம்பத் தீவிரமா இருக்காங்க. அதனால தினேஷ் அவளைப் பார்த்து, “வா வேணி, இப்போதே உன்னக் கூட்டிட்டுப் போய் பதிவுத் திருமணம் பண்ணிக்கிறேன். நீயும் நானும் சேர்ந்து கல்யாணம் பண்ணிப்போம்,”ன்னு சொல்றான்.

“இல்ல மாமா, என்னால உங்கள அத்தையோட சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க முடியாது,”ன்னு சொல்றா இளவேனில். தினேஷ் அவளோட பேச்சுல கடுப்பாகி, “வேணி, உனக்கு நான் வேண்டாமா?”ன்னு கேக்குறான். அவ கண்ணுல கண்ணீர் வருது. “மாமா, இது தப்பு. நீங்க அத்தை கிட்ட பேசுங்க. இப்போ என் கை நிறைய சம்பளம் இருக்கு. நான் வந்து புரிய வைக்கிறேன். ஆனா ஓடிப்போகணும்னு என்னால நினைக்க முடியாது மாமா. அண்ட் இப்போ எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நான் இந்தத் தடவை ஊருக்கு வரும்போது உங்கள வந்து பார்க்கிறேன்,”ன்னு சொல்லி வெச்சுட்டா. ஆனா, தினேஷ் அவள் ஊருக்கு வந்ததும் எப்படியும் கல்யாணம் பண்ணி வெச்சுடணும்னு திட்டம் போட்டான். என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

இளவேனில் தன்னைச் சரி செஞ்சுக்கிட்டு மேலே நடந்து வந்தவள், ரத்த துறைக்குள்ள நுழைஞ்சா. அங்க இருந்த நோயாளிகளைப் பார்த்து, ‘எல்லாருக்கும் சீக்கிரம் குணமாகணும் கடவுளே’ன்னு வேண்டிக்கிட்டே, அப்பாயின்ட்மென்ட் லெட்டர எடுத்துக்கிட்டு மக்கள் தொடர்பு அறைக்குள்ள போனா. அங்க மொத்தம் ஆறு பணியாளர்கள் இருந்தாங்க. இவ ஏழாவதா வந்திருக்கா. அவங்களோட தலைமைப் பொறுப்புல இருந்த கீதா ரொம்பக் கண்டிப்பான பொண்ணு. இளவேனில் அனுமதி கேட்டு உள்ளே வந்து, அவ கிட்ட லெட்டரைக் காட்ட, அதைப் பார்த்துட்டு அகிலான்னு இன்னொரு பொண்ணு கிட்ட அவள அறிமுகப்படுத்தி வைக்கிறா. அகிலா, அந்தத் துறை பத்தியும், இளவேனிலுக்கான எல்லா வேலைகளையும் விளக்குனா.

கொஞ்ச நேரத்துல, ஒவ்வொருத்தருக்கும் சுழற்சி முறையில இடைவேளை கொடுக்க, அகிலா இளவேனில்கூட கொஞ்சம் நட்பா பழக ஆரம்பிச்சா. வரிசையா நோயாளிகள் டாக்டரப் பார்த்துட்டுப் போய்க்கிட்டு இருக்க, அதே நேரம் பார்மசி பக்கமும், அப்பாயின்மென்ட் போடுற இடத்துலயும் பயங்கர கூட்டம்.

வேனியோட பார்வை, பார்மசி பக்கம் போனதும் அவ கை பரபரன்னு இருந்துச்சு. ‘எப்போ வேலையில சேர்ந்து மனசார வேலை செய்யப் போறோம்’னு நினைச்சுக்கிட்டே பெருமூச்சு விட்டாள். அகிலா, “ஹே இளவேனில், வா போகலாம், இல்லன்னா அந்த கீதா டெரர். நம்மள ரொம்பப் பேசுவாங்க…”-னு சொல்ல, “சரி மா”ன்னு சொல்லிக்கிட்டே ரெண்டு பேரும் அவங்களோட துறைக்கு போறாங்க.

அந்த நேரத்துல, மனோஜ் ஒரு நோயாளியோட ஃபைலை எடுத்துக்கிட்டு, அவனோட சீனியர் டாக்டரப் பார்க்கப் போயிருந்தான். திங்கள், வியாழன் மட்டும் இந்த ஆஸ்பத்திரில ரொம்பக் கூட்டமா இருக்கும்.

மனோஜ் அவனோட சந்தேகங்களைக் கேட்டுட்டு, வேகமா திரும்பி வரும்போது, இளவேனில் வழக்கம் போல நடந்து வர்றா. அவன் ஃபைலைப் புரட்டிக்கிட்டே நடந்து வர, அவ அத கவனிக்காம விட்டுட, ரெண்டு பேரும் நேருக்கு நேரா மோதி, கொஞ்சம் தடுமாறி இருப்பாங்க. நல்லவேளை, அவ சுதாரிச்சுத் திரும்ப, எதிர்பாராத முதல் மோதல் நடந்து போச்சு.

இளவேனில் அவன் மேல மோத, அந்த ஃபைல் அவ நெத்தியில உரசி கீழே விழுது. பேப்பர் எல்லாம் சிதறிப் போகுது. இளவேனில் அவனைப் பார்த்து முறைச்சுக்கிட்டே கோபமாப் பேச வர, அதுக்குள்ள அங்க இருந்த ஒருத்தர் “ஹே, இவர் ட்ரைனி டாக்டர்”னு சொல்ல, அவள் வந்த கோபத்த அடக்கிக்கிட்டு இருந்தா. மனோஜ் OPD பார்க்கும்போது எப்பவும் மாஸ்க் போட்டுக்குவான். மனோஜ் அவளைப் பார்த்துட்டான், ஆனா இளவேனில் அவனைப் பார்க்கல. அவள் தன் கோபத்த அடக்கிக்கிட்டே நகர்ந்து போனா.

மனோஜ் “சில்லி கேர்ள்”னு வாய்க்குள்ளேயே சொல்லிக்கிட்டே போனான். அதுக்கப்புறம் மணி மதியம் 2.00 ஆச்சு. கொஞ்சம் பசிக்க ஆரம்பிக்க, பக்கத்துல இருந்த கேன்டீன்ல ஃப்ரெஷ் ஜூஸ் ஆர்டர் பண்ணினான். அவனுக்கு ஆரஞ்சு ஜூஸ் ரொம்பப் பிடிக்கும். அதைக் குடிச்சுக்கிட்டே மீதி நோயாளிகளைப் பார்க்க, அவங்ககிட்ட மட்டும் கொஞ்சம் கனிவா நடந்துக்குவான்.

அதுக்கப்புறம் மணி 6.30 ஆக, வேலை நேரம் முடிஞ்சதும் எல்லாரும் கிளம்ப ஆரம்பிச்சாங்க. அன்னிக்கு மனோஜுக்கு ஜெனரல் வார்டுல டூட்டி. அதனால வேலைய முடிச்சுட்டு நேரா அங்க போயிட்டான். ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஓய்வுன்றதே கிடையாது. டாக்டர்களோட பணி சிறந்த பணி. அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்ததும் இளவேனில் வேலை கிடைச்ச விஷயத்த தன் சித்தப்பா, சித்தி, சித்தப்பா மகன் கிட்ட சொல்றா.

அடுத்த நாள் விடியலுக்காக இளவேனில் காத்திருக்க, மனோஜ் ஒரு அவசர கேஸ அட்டெண்ட் பண்றதுக்காக இன்னொரு தளத்துக்குப் போயிருந்தான். அன்னிக்கு இளவேனில் அழகா தன்னை தயார்படுத்திக்கிட்டு வேலைக்குப் புறப்பட்டா. ஆமா, அன்னிக்கு அவளோட ஃபிரண்ட் ஹேமாவை ஆஸ்பத்திரில சந்திக்கப் போறா.

அவ வழக்கம் போல, ஊழியர்களுக்கென இருந்த தனி பஸ்ல ஏறிக்கிட்டா. அங்க போனதும் அவளுக்காக ஹேமா ஒரு இடத்துல நின்னு காத்துட்டு இருந்தா. போன் பேசிக்கிட்டே அவளைக் கண்டுபிடிச்சு, கட்டிப் பிடிச்சுக்கிட்டா.

அதுக்கப்புறம் சாயந்திரம் சந்திக்கலாம்னு சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க. இங்க இளவேனில் அவ துறைக்கு வந்து இருக்க, எக்கச்சக்க வேலை ஒரு பக்கம் இருக்க, கீதா இளவேனிலைக் கூப்பிடுறாங்க.

தொடரும்….

do like and share pradhanyakuzhalinovels

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!