Episode -21
இங்கே மனோஜ்குமார் குளிச்சு முடிச்சு கீழே வந்தான். ஆஷா அவனை விழுங்கும் பார்வை பார்க்க, அவன் வந்து உட்கார்ந்தான்.
“என்ன விஷயம் மனோ?”னு புன்னகை முகமாக உட்கார்ந்திருந்தாள்.
அவன் அவகிட்ட, “Are you finished your breakfast?”
“ம்ம்… டன்.”
“ஓ… அண்ட் உன்னோட படிப்பு எப்படிப் போகுது?”
ஆஷாவுக்கு அவன் இவ்வளவு இனிமையாகப் பேசினதும் உள்ளுக்குள்ள இதயம் தாறுமாறா துடிச்சுச்சு. “என்ன மனோ டார்லிங், இன்னைக்கு ரொம்ப ஸ்வீட்டாப் பேசுறீங்க!”
மனோஜ் அவளோட இந்த அதீத உரிமைப் பேச்சில் சற்றுக் கடுப்பானவன். “ஆஷா, கொஞ்சம் புரிஞ்சுகொள். எனக்கு உன்மேல எந்தத் தாட்சும் இல்லை.”
இதைக் கேட்டதும் அவள் உள்ளுக்குள்ள கஷ்டப்பட்டாலும், அதைக் காட்டிக்காம, “இல்ல மனோ, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். நான் உங்களை அவ்ளோ லவ் பண்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கு, என்னோட லவ் உங்களை மாற்றும்.”
மனோஜ் ஒரு பெருமூச்சு விட்டு, “நீ பண்றது எல்லாமே எனக்கு உன்மேல வெறுப்பு மட்டும்தான் வர வைக்குது,”னு கடுமையுடன் சொன்னான்.
ஆஷா, “சரி, என்னை பிடிக்கலதானே?”
“ம்ம்,”னு ஒற்றை பதில் சொன்னான்.
ஆஷா, “சரி, அதுக்குச் சரியான ரீசன் சொல்லு. நான் அழகா இருக்கேன் தானே? அதுவும் இல்லாம, நீங்களும் டாக்டர், நானும் டாக்டர். அண்ட் உங்க வீட்ல எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும், தெரியும். அண்ட் அதேபோல உங்களைப்பத்தி எல்லாமே எங்க வீட்ல தெரியும். நம்ம ஃபேமிலி ரெண்டும் ஒரே ஸ்டேட்ல இருக்கோம். இதுக்குமேல என்ன வேணும், சொல்லு மனோ?”
மனோஜ் அவளைக் கடுப்பா பார்த்தான்.
“சொல்லு மனோ. நீ லவ் பண்ணலனா என்ன, என்னோட காதல் உன்னை மாற்றும்,”னு சொன்னாள்.
அவன் கண்ணாடியை மூக்குக்குத் தள்ளி, “It’s hypothetical think,” என்றான்.
ஆஷா கோபமாக, “சரி, நீ சொல்றதை நான் ஏத்துக்கிறேன்,” என்றாள். மனோஜ் அவளைத்தான் உறுத்து பார்த்துக்கிட்டு இருந்தான். ஆஷா ஒரு பெருமூச்சு விட்டு, “என் கூட ஒரு ஃப்ரெண்டா பழகு. அப்போதும் உனக்கு என்மேல எந்த ஃபீலும் வரலைன்னா, அதன் பிறகு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.”
“Never!”னு சொல்லிக்கிட்டே எழுந்து நின்றான்.
ஆஷா, “அப்போ நீ என்னை லவ் பண்ற. அதனாலதான் இப்படி சொல்ற,”னு தொடர்பே இல்லாம பேசினாள்.
மனோஜ் அவளை முறைச்சுகிட்டே, “ஒருவேளை உன்கூட ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கும்போது, வேற யார் மேலையாவது எனக்கு இன்ட்ரஸ்ட் வந்தா, நீ என்னை தொந்தரவு செய்யக் கூடாது. இதுக்கு ஓகேவா?”
ஆஷா கர்வமாக மனசுல, ‘நானே பேரழகி. என்னைவிட எந்த ஊரழகி உன்னை மயக்கப் போறா? நீ யார்னு எனக்குத் தெரியும்டா! நீ பெண்கள் விஷயத்துல நெருப்பு போன்றவன்னு எனக்குத் தெரியும். இதுவரை உனக்கு பெண் தோழிகள் ஒருத்தர் கூட இருந்தது இல்லைனு எனக்குத் தெரியும். அதையும் மீறி, உன்னுடன் பேசுறது நான் மட்டும்தான்டா. மனோஜ்குமார் is mine,’னு நினைச்சுகிட்டு இருந்தாள்.
“ஹலோ… என்ன ஆச்சு?” ஆஷா சிரிச்சுகிட்டே, “மாம், எனக்கு டீல்,”னு கைகளை நீட்டினாள். மனோஜ் “சரி”னு கைகுலுக்கினான். ஆஷாவுக்கு அவன் நெருப்பு மட்டும்தான் என்று தெரியும். ஆனால், இந்த நெருப்பு மெதுமெதுவான பஞ்சுபோல உள்ள இளவேனிலைப் பார்த்ததும் கப்பென்று பிடிச்சுக்கும். அது ஆஷாவுக்குத் தெரிய வரும் நாள் வெகு தூரத்துல இல்ல.
மனோஜ் அவள் கைகளை விட்டுத் திரும்பியதும், உடனே ஆஷா, “ஹே மனோ டார்லிங், இந்த மாசத்தோட எனக்கு இந்த படிப்பு முடியுது. அடுத்தபடியா நம்ம நட்பைத் தண்ணி ஊற்றி வளர வெக்க, நான் கோயம்புத்தூர் வரப் போறேன். அங்கதான் நீ வொர்க் பண்ற மெடிக்கல் காலேஜ்லதான் MD மெடிசின் ஜாயின் பண்ணப் போறேன். சோ, இனி படிப்பும் நீயும். இதை ரெண்டையும் அடையும் வரை உன் பக்கத்துலதான் இருக்கப் போறேன். சோ, டாக்டர், கொஞ்சம் ஹெல்த் பார்த்துக்கொள்ளுங்க,”னு சிரிச்சுகிட்டே சொன்னாள்.
மனோஜ் அதற்குப் பெரிதாக எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாம பார்த்தான். ஆஷாவை ஒரு ‘தொல்லை’ லிஸ்ட்லதான் வெச்சிருக்கான். இப்போ அது எல்லா நாட்களும் பக்கத்துல இருந்து தொந்தரவு செய்யும்னு நினைச்சுகிட்டு சாப்பிட மேசைக்குச் சென்றான்.
அவன் சென்ற அடுத்த நிமிஷத்துல ஆஷா மெசேஜ் செய்ய ஆரம்பித்தாள். “ஹலோ, குட் மார்னிங் டார்லிங்!” அவன் அவளோட எண்ணைப் பிளாக்ல போட்டுவிட்டான். அபிராமி உணவுகளைக் கொஞ்சம் பயந்தே எடுத்து வெச்சு, “கண்ணா, ஆஷா வந்தது எனக்குத் தெரியாதுடா!”
“It’s okay மா. அவள் சின்ன பொண்ணு. ஏதோ விளையாட்டுக்கு இப்படிச் செய்றாள். அவள்மேல எந்த ஒரு எண்ணமும் எனக்கு இல்லை,”னு கனிவா பதில் சொன்னான்.
மகனோட இந்தக் கனிவு அபியை ரொம்பவே கவர்ந்துச்சு. ‘பரவாயில்லை. நல்ல மாற்றம் நம் பையன்கிட்ட இருக்கு. இது நிரந்தரமா இருக்கணும் கடவுளே. இப்போவே கல்யாணப் பேச்சு பேசிவிடலாம்,’னு நினைச்சுகிட்டே, “மனோ!”
“ம்ம்…”
“அது… ஒரு பொண்ணு பார்த்து…”னு அவர் ஆரம்பிக்க, அவன் சாப்பிடுறதை நிறுத்திட்டு, அவன் மூச்சை அமைதிப்படுத்திக்கிட்டே தன் அன்னையைப் பார்த்தான்.
“மனோ, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுடா!”
“One minute!”
“என்ன கண்ணா!”
மனோஜ், “மேரேஜ் நான் தானே பண்ணிக்கப் போறேன்?”
“ம்ம்… ஆமா. அதுதான்டா அம்மா!”
அவன் உடனே கோபமாக, “நான் இன்னும் பேசி முடிக்கல…”
“சரி, சாரி… சொல்லு!”னு அபி பாவமா சொன்னார்.
மனோஜ், “உங்க விருப்பப்படி நான் கல்யாணம் செஞ்சுப்பேன்.”
இதைக் கேட்டதும் அவள் சிரிச்சுகிட்டே, “என்ன மனோ, நிஜமாவா!”
அவன் பற்களைக் கடிச்சுகிட்டு, “நான் இன்னும் பேசி முடிக்கவில்லை…”
“சரி, சாரி… சொல்லுடா!”
மனோஜ், “ஆனால், என்னோட பார்ட்னரை நான் தான் செலக்ட் பண்ணுவேன். நான் எந்தப் பொண்ணைக் காட்டுறேனோ, அவளைத்தான் நீங்க இந்த வீட்டுப் பெண்ணா ஏத்துக்கொள்ளணும்.”
இதைக் கேட்டதும் அபிராமி ஷாக் ஆகி, “என்னடா மனோஜ், இப்படிச் சொல்ற?”
அவன் கைகளைக் கழுவிக்கிட்டே, “நான் பிறந்ததிலிருந்து இந்த நிமிஷம் வரை உங்க விருப்பப்படிதான் போர்டிங் ஸ்கூல்ல படிச்சேன். அண்ட் வளர்ந்தேன்,”னு சொல்லிக்கிட்டே உதட்டைத் துடைச்சான். “கிட்டத்தட்ட இந்த இருபத்தி ஏழு வருஷமும் நான் வாழ்ந்த வாழ்க்கை உங்க முடிவு. ஆனால், இதுக்குமேல எடுக்கப்போற முடிவு அது,”னு மனோஜோட பார்வை அபியோட மேல பார்க்க…
அபிராமி என்ன சொல்றதுனு பார்த்தாள். இத்தனை நாள் பேச மாட்டானான்னு பார்த்தவளோட கண்கள்ல, தன் மகன் இவ்வளவு பேசுவானான்னு இருந்துச்சு.
மனோஜ் பார்வை தன் தாயோட மேல இருக்க, “என்ன பதில் சொல்லுங்க?”னு கேட்டான்.
அபிராமி, “அது… நான் அப்பா அப்பா கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்.”
மனோஜ் ஒரு நிமிஷம் இன்னும் எந்த வெளிப்பாடும் இல்லாம ஒரு பதில் சொன்னான்.
அதை கேட்டு அபி…?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels