Episode -23
மனோஜ் கோயம்புத்தூர் வந்து இறங்கினான். இளவேனில் வெள்ளிக்கிழமை வந்ததும், மீதி இரண்டு நாள் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அத்தனை ரணம் உள்ளுக்குள்ள இருந்துச்சு.
சரியா திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல மருத்துவமனை கிளம்பினாள். ஆனால், அவளோட முகம் எப்பவும் போல இல்ல. அது பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஊரடங்கு போட்டிருந்த நிலையில, அனைவரும் மாஸ்க் அணிஞ்சுகிட்டு அவங்க வேலையில் பிஸியா இருந்தாங்க.
மனோஜ் வந்ததும் அவன் வேலையை ஆரம்பித்தான். இன்னைக்கு வழக்கம் போல OPDனு நினைச்சுகிட்டு வந்த இளவேனிலுக்கு, அந்த இடத்துல கொஞ்சம் நோயாளிகள் குறைவா இருந்தாங்க. ஏற்கனவே கொரோனா அதிகமா பரவுறதால, எல்லா டாக்டர்களுக்கும் கூகுள் மீட் வழியா மீட்டிங் நடந்தது. அதன் படி, ஒரு நோயாளிக்கு ஒரே ஒரு அட்டெண்டர், அதுவும் வெளியே காத்திருக்கணும், மற்றும் அதீத பாதுகாப்பு, புதிதாக வந்த மருந்துகள் என அனைத்து பற்றியும் விவரிச்சிருந்தாங்க.
இளவேனில் வழக்கம் போல அவளோட ஐடி கார்டுல பதிவு செஞ்சுட்டு உள்ளே நுழைஞ்சாள். நேரா மனோஜ் மற்றும் அவள் வேலைசெய்யும் OPD அறைக்கு உள்ளே நுழைந்தாள். வழக்கம் போலத்தான் மனோஜ் வரல.
ஹேமா ஊர்லதான் இருந்தாள். கொரோனா காரணமாக பேருந்துகள் இயக்குறதுல கொஞ்சம் தடை இருக்க, அவள் ஊர்லயே மாட்டிக்கொண்டாள். அவளோட எண்ணைப் பார்த்ததும் இளவேனிலுக்கு உள்ளுக்குள்ள இனம் புரியாத ஒரு வெறுமை தோணுச்சு.
அதை ஏற்று, ஹேமா, “சாரி வேணி, என்னை மன்னிச்சுவிடு. அதைக் கேட்கக்கூட அருகதை இல்லை,”னு அழுது கரையத் தொடங்கினாள்.
“இனி எனக்கு போன் பண்ண வேண்டாம் மேடம். நீங்க இத்தனை வருஷம் என் கூடப் பழகி, என்னைப்பத்தி உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கு. சோ, அப்படியே இருந்துகொள்ளுங்க.”
இளவேனில், “என்னைப்பத்தித் தெரிந்தும் இவ்வளவு பண்ணியிருக்க. உன்கூடப் பழகினதுக்கு வெட்கமா இருக்கு. இப்போ பாரு, என் அத்தை என்னை எவ்வளவு ஆசீர்வாதம் பண்ணியிருக்காங்க! ரொம்ப சந்தோஷம். இனி நாம சந்திக்க வேண்டாம். குட் பை,”னு கட் செஞ்சாள்.
ஹேமா அதன் பின் வாட்ஸ்அப் செய்திகள், குறுஞ்செய்திகள் மற்றும் போன் கால்னு விடாமல் செஞ்சுகிட்டு இருக்க, அதே நேரம் மனோஜ் உள்ளே வந்தான். சந்தோஷ முகத்துடன் உள்ளே வந்த அவனுக்கு, அவளோட சோகமான முகம் தான் தெரிஞ்சுச்சு. அவன் வந்த அடுத்த நொடி அவள் மாஸ்க் அணிந்துகொண்டாள்.
மனோஜ் மனம், ‘பாரேன், இருக்கட்டும். என் ஸ்பிரிங் பேபிக்கு என்ன ஆச்சு?’னு நினைச்சுகிட்டே உள்ளே வந்து உட்கார்ந்தான். அவள் அமைதியாகவே இருந்தாள். அவள் கண்களைப் பார்க்க, அது நீர் வற்றிப் போயிருந்துச்சு. ‘What happened?’னு மனம் கேட்காமல் கேட்டுவிட்டான்.
அவள், “சார், OPD ஸ்டார்ட் பண்ணலாமா?”னு அவன் கேள்வியைத் தவிர்த்துப் பேசினாள். அவளோட இந்த ஒதுக்கம் இனம் புரியாத கோபத்தைக் கொடுக்க, கைகளை இறுக்கி மூடியவன், வேகமா தலையைக் கோதிவிட்டபடி, “ஸ்டார்ட் பண்ணலாம்,”னு பதில் சொன்னான்.
இப்போ இருவரும் வேலைங்கற உலகுக்குள்ள சென்றிருந்தார்கள். மதியம் எப்படி ஆனதுன்னே தெரியல. மனோஜ்க்கு அவள் ஒதுக்கியதும், அடுத்து அவகிட்ட எப்படிப் பேசுறதுனு தெரியல.
உணவு இடைவேளைக்கு அகிலா வந்து அழைக்க, எந்த உணர்ச்சியும் இல்லாம போற அவளைப் பார்த்து, அவனுக்கு எக்கச்சக்கமா ரத்தம் சூடாக ஆரம்பித்தது. ‘என்ன ஆச்சு? என்ன ஆச்சு? எப்படித் தெரிஞ்சுகொள்றது? ஒருவேளை நான் மெசேஜ் பண்ணாத காரணத்துக்காக இப்படி இருக்காளா?’
‘சான்ஸ் இல்லடா. இதுவரை அவள் உன்னை, உன்னோட முகத்தைக்கூடப் பார்த்துப் பேசியது இல்ல. அப்படி இருக்கும்போது, How?’னு யோசிச்சான்.
இங்கே அகிலா அவள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்சினைனு கண்டுகொண்டாள். “என்ன ஆச்சுடி?”னு அவளைக் கட்டி அணைச்சாள். இவ்வளவு நேரம் அடக்கி வெச்சிருந்த அழுகை மொத்தமும் மழைபோல கொட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.
“ஹே ஹே இளவேனில்! என்ன ஆச்சு ஹே!”னு அகிலாவுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது. அவள் அழுகை மட்டும் ஓயல. ஒரு பத்து நிமிஷம் அவளும் விட்டுவிட்டாள். அதன் பின் தன்னை ஒருவாறு சரிசெய்துகொண்டு கண்களைத் துடைத்தாள். அகிலா, “முதலில் ரெஸ்ட்ரூம் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரலாம், வா,”னு அழைச்சுச் சென்று முகத்தைக் கழுவித் துடைச்சு, பொட்டு வெச்சாள்.
அதன் பின் வெளியே வந்து உணவுகளைக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டாள். அகிலா அவள் பிரச்சினையை அப்புறம் கேட்டுக்கொள்ளலாம்னு விட்டுவிட்டாள். இங்கே மனோஜ் அவன் இருக்கையில் ஒய்யாரமா சாய்ஞ்சுகிட்டு, கேமராவை ஆன் செஞ்சு, தான் எவ்வாறு இருக்கிறோம், அழகா இருக்கோமான்னு ஆராய்ச்சியில் இறங்கினான்.
‘ஆஷாவுக்கு அழகாத் தெரியும். நம்ம இந்த ஸ்பிரிங் பேபி கண்ணுக்குத் தெரியலையா? ச்ச… இப்படி ஒரு சோதனை வந்திருக்கே,’னு அவன் தாடியை நீவினான். கேசம் முன்னால வந்து நிக்க, அதையும் கோதிவிட்டான். பக்கத்துல இருந்த அந்த மாதுளை ஜூஸை எடுத்து ஒரே மூச்சுல குடிச்சான். இளவேனில் கதவைத் தட்டிக்கிட்டே உள்ளே வந்தாள்.
அவள் முன்பு நிராகரிச்சது நினைவில் வர, ‘டேய் வெட்கம் கெட்டவனே, அவள் உன்னை அவாய்ட் பண்றாளே! அப்புறம் எதுக்கு அவளை நினைக்கிற?’னு மனம் சொல்ல, உடனே தன்னைச் சரிசெய்துகொண்டான். அதே நேரம் அவள் மாஸ்க்கைக் கழட்டிவிட்டு, கலைஞ்ச கேசத்தைக் காதுக்கு ஒதுக்கித் தண்ணி குடிக்க, அதுல ஒரு துளி அவள் உதடுல இருந்து வழிஞ்சு தொண்டைக் குழி பயணிச்சு கழுத்துல இறங்க, இப்போ மனோஜ் எனும் மானஸ்தன் உள்ளே சென்றுவிட்டு, வெட்கம் கெட்டவன் மிஸ்டர் குமாராக வெளியே வந்து அவளை அணுஅணுவா ரசிச்சுகிட்டு இருந்தான். அவன் கையில உள்ள பென்னை அழுத்திப் பிடிச்சுகிட்டு, ‘ச்ச’னு உச்சி கொட்ட, உள்ளுக்குள்ள தொண்டை கரகரத்தது.
அதே நேரம், டோக்கன் ஆரம்பித்ததன் சான்றாக கணினி குரல் கேட்க, சட்டென்று தன்னிலைக்க வந்தான். மனோஜோட மனம் இப்போ அடிச்சுக்கிட்டது. ‘அவள்கிட்ட என்ன இருக்கு?’னு அறிவு கேட்க, ‘என்ன இல்லை?’னு மனம் கேட்டது.
அந்த H2O இந்நேரம் எங்க போயிருக்கும்னு எண்ணம் அலைபாயுது. இருபத்தெட்டு வயசு ஆண்மகனுக்கு இந்தத் தோன்றுதல் சாதாரணம் தான். ஆனால், இன்னைக்குத்தான் சில ரசாயன மாற்றம் உடல்ல நிகழ ஆரம்பித்தது.
“மிஸ்டர் குமார்!”னு அதட்டல் கொண்டு ஒருத்தி கத்திக்கிட்டு இருக்க, இப்போதான் அவன் காதுகளுக்குக் கேட்டுச்சு. “ம்ம்… க்கும்…”னு தொண்டையைச் சரிசெய்தவன், உடனே பிரஷர் செக் செய்யப் போக, இளவேனில், “ஆல்ரெடி செக் பண்ணியாச்சு,”னு சொன்னாள். ‘மனோஜ்’னு தனக்குத் தானே அதட்டிக்கொண்டவன், அவனோட பார்வையை அவள்மேல வீசினான். அதுல அப்பட்டமா அந்தத் தடுமாற்றம் தெரிஞ்சுச்சு.
“பேஷன்ட் வந்தாச்சு,”னு அவன் முன்னாடி அந்த நோயாளியோட விவரம் அடங்கின ஃபைலை நீட்டினாள். மனோஜ் அதை பார்வை கூறாக்கிப் பார்த்தவன், அதை ஆராய்ந்து பார்த்துட்டு, “ம்ம்… பிளட் டெஸ்ட் நார்மல். இப்போ கொரோனா ரொம்ப ஸ்பீடாப் பரவுது. அதனால வீட்ல இருங்க. இப்போதைக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான மெடிசின் அப்லோட் பண்ணியிருக்கேன். அதைப் ஃபாலோ பண்ணுங்க. உங்க டாக்டர் கிட்ட கேட்டு வருகிறேன்,”னு அந்த ஃபைலைக் தூக்கிக்கொண்டு வெளியே சென்றான்.
அதன் பின் சிறிது நேரத்துல உள்ளே வந்தவன், அந்த நோயாளிகிட்ட, “எதுவும் எமர்ஜென்சின்னா மட்டும் வாங்க. மத்தபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. போகலாம்,”னு அனுப்பிவெச்சான்.
அந்த நாள் கடகடன்னு முடிஞ்சுபோச்சு. மாலை ஆனதும் அவள் வழக்கம் போல கிளம்பினாள். உள்ளுக்குள்ள அவகிட்ட பேசணும்னு தோணுச்சு. ஆனால், ‘என்ன பேச? என்னை எரிப்பதுபோலப் பார்க்கிறாள்!’னு தோணுச்சு. ஆனால், மனோஜ்குமாருக்கு இப்போ தைரியம் இல்லை.
அவள் அவனுக்கு வணக்கம் சொல்லிட்டுச் சென்றுவிட, இன்னைக்கு இல்லாத தைரியம் நாளைக்கு அவளை அணைச்சு ஆறுதல்படுத்தப் போறான். பார்க்கலாம்.
அடுத்த நாள், நான்காவது மாடி படிக்கட்டுல அவள் போனைப் பார்த்து அழுதுக்கிட்டு இருக்க, மனோஜ் ஜெனரல் வார்ட் பார்த்துட்டுப் படியில நடக்க, அங்க அவள் போனைப் பார்த்து அழுதுக்கிட்டு இருக்க…
அந்தப் போன்ல தினேஷ் மணக்கோலத்தில் காவ்யா என்ற பெண்ணுடன் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதுதான் அது.
மனோஜ் அவள் அருகில்…?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels