Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
"ஒரே வழி தான் இருக்கு சகலை நீங்க நம்ம மாமனார் கிட்ட போய் பேசுங்க!" என முத்து சாமி கூற..

"என்னன்னு பேச?"

"இப்போ மகிழ் சொல்லிட்டு போனது காதில் விழுந்தது தானே! ஊர்ல இருக்கிற எல்லாரும் என்ன பேசிக்கிறாங்கன்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்கனுமா? ஊர் வாய அடக்கவும், நம்ம சின்ன பாப்பா வாழ்க்கை நல்லாருக்கவும் ஒரே ஒரு வழி தான். அந்த அன்பு பையன நீங்க மருமகனாக்கிட்டா?" என முத்து சாமி கூறினார்.

"அவனா? இது முப்பெரும் தேவிகளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு தெரியுமா?" என முருகேசன் சிரிக்க..

"என்ன முத்து சொல்ற?" என குழப்பத்துடன் பார்த்தார் சிவராமன்.

"சகலை நம்ம இப்போ இப்படி செளிப்பா இருக்க காரணமே அந்த அன்பு பையன் சொத்துல தான்.நம்ம மாமனார் சக்கரவர்த்தி அந்த ஒத்தை வீட்டை மட்டும் வச்சுட்டு மொத்த சொத்தையும் மூணு பொண்ணுக்கும் சமமா பிரிச்சு கொடுத்திருக்கார். நீங்க மொத்த பஸ் டிராவல்ஸ் எடுத்துகிட்டீங்க, முருகேசன் ரைஸ் மில் எடுத்துட்டாப்ல, நான் தேங்காய் மண்டி கூடவே தென்ன தோப்பு மொத்தமும் எனக்கு வந்திடுச்சு."

"இது இல்லாம தன அன்னிக்கு 100 சவரன், என் வீட்டு காரிக்கு 70 சவரன், சந்தன கொடிக்கு அன்னிக்கு 70 சவரன், இத்தனையும் கொடுத்துட்டார். நம்ம சின்ன மாமியார் அன்னலட்சுமி கழுத்துல குண்டு மணி தங்கம் கூட இல்ல. அவர் கட்டின தாலி, பவள கம்மல் இது ரெண்டு தான் கொடுத்திருக்கார். இதுவே முப்பெரும் தேவிகளுக்கு சொந்த தம்பி இருந்திருந்தா இதெல்லாம் நம்ம கைக்கு வந்திருக்குமா? என் பொண்ணு மேனகா பூங்கொடி வயசுக்கு இருந்திருந்தால் நான் கண்டிப்பா அன்புக்கு கட்டி கொடுத்திருப்பேன்" என்றார் முத்து சாமி.

"சகலை சொல்றதும் சரி தான்! உங்க சொந்த அக்காவே உங்களை ஏமாத்த பாத்திருக்காங்க! இதுல நாங்க சொல்றதுல ஒன்னுமில்லை. நீங்களும் அண்ணியும் சேர்ந்து முடிவெடுங்க. முக்கியமா நம்ம சின்ன பாப்பா கிட்ட கேட்டு முடிவெடுங்க. உங்க அக்கா மகனை விட நம்ம பொண்ணெடுத்த குடும்பம் அதுவும் சொத்து இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி அந்த வீட்டு மருமகளா நம்ம பாப்பா போனதுன்னா மதிப்பும் மரியாதையும் அதிகம்" என்றார் முருகேசன்.

சிவராமன் தன் மகளை பார்த்தார். அவளோ கோபத்துடன் "கண்டிப்பா சதீஸ் அப்படி சொல்லிருக்க மாட்டான். என்னாச்சு மா!" என சத்தம் போட்டு கொண்டிருந்தாள் பூங்கொடி.

அந்த நேரம் பார்த்து மணிமேகலையின் எண்ணில் இருந்து வீடியோ வந்தது. சதீஸின் தங்கை சத்யா ஒரு ஆடவனுடன் ஹாஸ்பிடல் சென்று வருவது அதில் நன்றாக தெரிந்தது. அது மட்டுமா? முகத்தை கர்சீப் கொண்டு சுற்றியபடி அவள் அந்த ஆடவனுடன் ஒட்டி உரசி சுற்றுவது ஓடியது.

தனக்கொடி அழுதபடி அமர்ந்திருக்க.. மணிமேகலை வீட்டுக்கு வந்தாள் சத்யாவின் திருட்டு தனத்தை சொல்ல.. ஆனால் அங்கு வந்ததும் தான் தெரிந்தது. தனது உயிர் நட்பு திருமணம் நிற்கும் தருவாயில் இருக்கிறது என்று.

முத்து சாமி மற்றும் முருகேசன் இருவரும் வருத்தத்துடன் பூங்கொடியை பார்க்க, சிவராமன் ஒரு முடிவுடன் தனம் புறப்படு! என கிளம்பினார்.

எங்கே புறப்பட? உங்க அக்கா இப்படி காலை வாரி விட்டுடாங்களே என அழுதபடி பார்த்தார் தனம்.

நீ புறப்படுன்னு சொன்னேன்! அவ்ளோ தான் என உச்சஸ்தானியில் நின்று கத்திய சிவராமனை பார்த்து கப் சிப்பென வாய் மூடி கொண்ட தனம் கண்களை துடைத்தபடி புறப்பட்டார்.

ப்பா நீங்க எங்கே போறீங்க? வேணாம் பா! நீங்க சதீஷ் முன்னாடி போய் நின்னு எனக்காக கெஞ்ச வேணாம். அவன் என்னை பணையமா நினைக்கிறான்ல அவன் எனக்கு வேணாம் என அழுதபடி கூறினாள் பூங்கொடி.

இல்ல தங்கம் சதீஸ் உனக்கு வேணாம். அவன் முன்னாடி நான் என்னைக்கும் போய் நிக்க மாட்டேன். அப்பா சொல்றத நீ கேட்டால் போதும் என்றார்.

கண்டிப்பா டாடி! என உறுதியுடன் நின்றாள் பூங்கொடி.

ஜெயா, சந்தன கொடி, நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க! சகலை நான் போயிட்டு என்னன்னு போன் பண்றேன். என கிளம்பினார் சிவராமன்.

"என்னால ஒத்துக்க முடியாது. அதுக்கு பூங்கொடி சும்மா இருக்கலாம்? அவன் அவனுக்கு என் பொண்ணை கட்டி கொடுக்கணுமா? என்கூட ஜோடியா சேர்ந்து பிள்ளை பெத்தவ தானே அந்த அன்னலட்சுமி. அக்கா புருஷனை வளைச்சு போட்டவ என் பொண்ணுக்கு மாமியாரா? இதுக்கு நான் ஒருகாலும் ஒத்துக்க மாட்டேன்."

அப்படியா சரி என்னோட வார்த்தைய மீறி நீ தாராளமா எது வேணாலும் பண்ணு நான் பார்க்கிறேன். என சிவராமன் திட்டமாக கூறினார்.

"என்னங்க மாமா! அந்த அன்பு செல்வனுக்கு நம்ம பாப்பாவை? எனக்கு இதுல துளி கூட விருப்பமில்லை. ஆனால் நீங்க ஏன் இப்படி ஒரு முடிவு?" என தனம் குலப்பத்துடன் பார்த்தார்.

நான் எது செஞ்சாலும் என் பொண்ணுக்கு நல்லதை தான் செய்வேன். இதை நீ நம்புற தானே! என சிவராமன் பார்க்க.. தனம் எதுவும் பேசாமல் தன் கணவருடன் கிளம்பினார்.

என்னங்க பெரிய பாப்பா வந்திருக்கு! என அவசரமாக பின் பக்கம் வந்தார் அன்னலட்சுமி.

இந்த வீட்டில் மிதிக்க கூடாது என நினைத்த தனம் இப்பொழுது வேறு வழியில்லாமல் இந்த வீட்டுக்கு வந்தது உள்ளுக்குள் வேதனையை கொடுத்தது.

சக்கரவர்த்தி கயிற்று கட்டிலில் அமர்ந்திருக்க.. தண்ணீர் எடுத்து நீட்டினார் அன்னலட்சுமி.

என்ன வேணும் மாப்பிள்ளை என் சொத்து நிலபுலன் எல்லாத்தையும் என்னோட மூணு பொண்ணுங்க தனக்கொடி, ஜெயக்கொடி, சந்தனகொடி மூணு பேருக்கும் எழுதி கொடுத்திட்டேனே? என்கிட்ட இருக்கிறது இந்த வீடு மட்டும் தான் அது என்னோட பையன் அன்பு செல்வனுக்கு தான். அதையும் கேட்காதீங்க மாப்பிள்ளை இது என் மகனுக்கானது. என சக்கரவர்த்தி குமுறலுடன் பேசினார்.

அன்னலட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.

தனக்கொடி தன் தந்தையை பார்த்து உங்க பேத்தியோட வாழ்க்கை பிரச்னைக்காக வந்திருக்கோம். உங்க ஆசை நாயகி அன்னலட்சுமி என அவர் பேச வர..

அன்னலட்சுமியின் முகத்தில் கவலை ஒட்டி கொண்டது.

தனம் கொஞ்சம் கம்முன்னு இரு என பற்களை கடித்த சிவராமன். மாமா உங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்.

அன்னலட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க...

சக்கரவர்த்தி நிலைகொள்ளாமல் "என் பையன் அன்பு செல்வனை பிறந்ததை குத்தமா சொல்லி சொத்தை பிரிச்சிட்டு, அன்புவோட உறவு வேணாம்னு வெட்டிவிட்டு போன என் பொண்ணு தனக்கொடிக்கு இன்னிக்கி எப்படி என் பையன் நியாபகம் வந்தது?" என கேட்டார்.

ஏனுங்க கம்முன்னு இருங்க என அன்னலட்சுமி தடுக்க..

மாமா அவள் எதோ கூறுகெட்டு பேசிட்டா! பழசை மறந்திடுங்க. இப்போ அன்பு என்னோட மகள் பூங்கொடிய தான் கட்டிக்கனும். அவன் தானே தாய்மாமன். நீங்க என்ன சொல்றீங்க? என சிவராமன் கேட்க..

தனக்கொடி வெறுப்புடன் நின்றிருந்தார்.

சக்கரவர்த்தி என்ன செய்வதென தெரியாமல் தன் மனைவி அன்னலட்சுமியை பார்க்க,

மை விழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே!! வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி என பாடலை முணுமுனுத்தபடி அன்னம் தண்ணி வை என தன் தாயை செல்லமாக அழைத்தபடி கன்டெக்டர் டூட்டி முடித்து விட்டு உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் அன்பு.

அங்கிருக்கும் தன் அக்கா மாமாவை பார்த்ததும் புரியாமல் நின்றான் அன்பு.

அங்கிருக்கும் சிவராமன் மற்றும் தனக்கொடி இருவரை பார்த்ததும் திகைத்து போய் நின்றான். இவ்வளவு நேரமும் விரிந்திருந்த உதடுகளும் மிலிரி கொண்டிருந்த கண்ணகுழி சட்டென சுருங்கி கொண்டது. மரியாதை நிமித்தமாக வாங்க நல்லாருக்கீங்களா? என கேட்டான்.

சிவராமன் அவ்விடத்தில் இருந்து எழுந்து வாங்க மாப்பிள்ளை வேலை முடிஞ்சதா? என கேட்டார்.

உலகம் வேறு பக்கம் சுத்துதா? இவர் என்கிட்ட பேசுராரா? இத்தனை வருடத்தில் எத்தனையோ முறை நேருக்கு நேர் கடந்து போயிருக்கேன். ஆனால் ஒரு தடவை கூட அவர் பார்வை என் மேலே பட்டதே இல்லையே ஆனால் இன்னிக்கு? ஒருவேளை குடும்பம் ஒன்னு சேர்ந்துடுச்சா? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லயே? அக்காவோட முகம் கோபமா இருக்கே! என யோசனையுடன் நின்றான் அன்பு.

என்ன மாப்பிள்ளை என்கிட்ட பேச உங்களுக்கு பிடிக்களயா? நான் உன்னோட மாமா மாப்பிள்ளை. என்ன தயக்கம் என்கிட்ட?

அப்படி இல்லைங்க மாமா! என வசீகர புன்னகையை வீசினான் அன்பு. சக்கரவர்த்தியின் அந்த வசீகரிக்கும் கண்ணக்குளியை பெற்று பிறந்தது. இவன் மட்டும் தான் நான்கு பிள்ளைகளுக்கு மத்தியில்..

வாங்க மாப்பிள்ளை அப்புறம் என்ன தயக்கம் என அழைத்தார் சிவராமன்.

இவனெல்லாம் ஒரு மனுசனா? தன் குடும்பத்துக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் காலை பிடிப்பான். வேண்டாம் என்றால் காலை வாறும் குணம் வைத்திருக்கிறான். என சக்கரவர்த்தியின் மனம் அடித்து கொண்டது. அதற்கு காரணம். இந்த வீட்டு மூன்று மருமகன்களுக்கும் மனிதர்களை விட சொத்து தானே முக்கியம். தன் மகள்களுக்கு சொத்து கொடுத்தது பிரச்னை இல்லை. அதை பிரித்து கொண்டு போனவர்கள் தான் மீண்டும் 27 வருசம் கழித்து இன்று தான் இந்த வீட்டின் படி ஏறி இருக்கிறார்கள்.

அன்பு அவர்களின் அருகில் வந்தவன். புரியாமல் தன் அம்மாவை பார்த்தான்.

என்ன மாமா சொல்றீங்க? என சிவராமன் தன் மாமனார் பக்கம் திரும்பினார்.

இதை என்கிட்ட கேட்டதுக்கு பதிலாக நீங்க நேரடியாக உங்கள் மாப்பிள்ளை கிட்டயே கேளுங்க மாப்பிள்ளை. என கூறிய சக்கரவர்த்தி தன் மகனை பார்த்து அன்பு உன்னோட அக்கா பொண்ணு பூங்கொடிய நீ கல்யாணம் பண்ணிக்கனுமாம்! உங்க அக்கா கேட்டு வந்திருக்கா என்ன சொல்ற என சக்கரவர்த்தி கேட்டார்.

அன்பு வெடுக்கென சிவராமனை பார்த்தான்.

ஆமா மாப்பிள்ளை நீங்க தான் பூங்கொடிய கட்டிக்கிடனும். எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க கட்டிப்பீங்க! என அன்புவின் முகத்தை பார்த்தார் சிவராமன்.

தொடரும்..
 

Magi

Active member
Joined
Oct 6, 2024
Messages
136
Anbu mind voice semma😂🤭 atha vida song innum super 😄, intha moonu மருமகன் and co ellar vida bayangarama irukanunga, Pradhuma stories la vara Yara venalum nambalam but intha dady solli kittu vara charcter ah 😂koodathu athuthan kudaichal case ah varum, anyway superb story ♥️ 😍 and Pradhuma enga veetla camera vachi paakuringala 😂 just fun👍🏼 enga veetlaiyum 3 ponnu 1 paiyan
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
Story Superb and Anbu paaditu vara song asusual your song selection sema superb Sister👌👌👌🔥🔥🔥😍👍.
 

vedha

Member
Joined
Oct 7, 2024
Messages
61
Ne enna nenachu paarattu vandhiyo adhu nadakka pogudhu anbu. Aana andha aatakkaari enna solla poralo 🙄
 
Top