Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
மலரின் பின்னால் வெற்றியும் சேர்ந்து வெளியே வர அவர்களின் எதிரில் இளமாறன் நின்றான். அவனை பார்த்ததும் வெற்றியின் முகம் மாறி போக, மெதுவாக மலர் தன் கணவனின் பக்கம் திரும்பியவள். மாமா டிபன் ரெடி! வாங்க என அழைத்தாள்.

ஸ்ருதி உணவு மேஜையில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க, இளமாறன் தயக்கத்துடன் அண்ணனை பார்த்தான். ஆனால் மலர் எதையும் கண்டு கொள்ள வில்லை. மாமா டிபன் ரெடி! வாங்க வந்து சாப்பிடுங்க! என சமையலறையின் பக்கம் சென்றாள்.

வெற்றி எதுவும் பேசாமல் உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தான்.

என்ன மாறன் அப்படியே நின்னுட்ட! வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம். என ஸ்ருதி அழைக்க, ஹான் இது வரேன் என இளமாறன் அவளின் அருகில் அமர்ந்தான்.

மாமா ஒரு அஞ்சு நிமிசம் என பல்லவியை தள்ளி நிற்க வைத்து விட்டு வெற்றிக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தட்டில் நிரப்பி கொண்டு வந்தாள் மலர். .அங்கே தன் முன் அழகு ஓவியமாக அண்ணனை தேடி வரும் மலர் விழியின் மீது தான் இளமாறனது பார்வை பதிந்தது. இத்தனை அழகாக இருக்கிறாளே! நான் பொண்ணு பார்க்க போன போது கூட இப்படி இல்லையே! இன்னிக்கி எவ்ளோ அழகா இருக்கா! என மலர் விழி பூக்களில் இருந்து எழுந்து வந்தவள் போல அவனுக்கு தோன்றியது.

அருகில் ஸ்ருதி இருப்பதை மறந்து பார்த்து கொண்டிருந்தான் ஒரு நிமிடம். "அழகா இருக்காளா அந்த பொண்ணு?" என காதுக்கு அருகில் குரல் கேட்டது. சட்டென இளமாறன் திரும்பி பார்க்க... ஸ்ருதி தான் தனது கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அய்யயோ இவள் எதுக்கு இப்படி பார்க்கிறா? என இதயம் பதைக்க, இல்ல ஸ்ருதி don't think ராங். நான் எதார்த்தமாக தான் பார்த்தேன். வேற ஒன்னும் இல்லை. என உணவில் கவனம் செலுத்தினான். ஆனால் இது ஒரு இடத்தில் கொண்டு போய் விடும். அது மிகவும் கொடுமையாக இருக்க போகிறது என இளமாறனுக்கு தெரிய வில்லை.

வெற்றிக்கு அந்த நேரம் பார்த்து செக்யூரிட்டி ஆபிஸில் இருந்து போன் வந்தது. அவன் போனை எடுத்து பேச முற்பட ஆன் செய்து காதில் வைத்தாள் மலர் விழி. ம்ம் பேசுங்க மாமா! என மலர் கூற, சொல்லு சரவணா! இப்போவே வரணுமா? என ஒரு சில நிமிடங்கள் கழித்து, சரி ஓகே ப்ரேக் பாஸ்ட் பினிஷ் பண்ணிட்டு வரேன் டா! என சொல்ல, மலர் மெதுவாக கட் செய்து அருகில் வைத்தாள்.

பல்லவிக்கு அவர்களின் சம்பாசனையை பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. நல்ல புரிதலுடன் இருவரும் இருக்கிறார்கள் என்று. ஆனால் ஸ்ருதிக்கு தான் உள்ளுக்குள் பற்றி எரிந்தது. இந்த வீட்டில் புது மருமகள் நான் தான்! அதுவும் காதலிச்சு கட்டி கிட்டவ ஆனால் இவள்!! இவளை தான் எல்லாரும் பார்க்கிறார்கள் என ஆற்றாமை வேறு.

இன்னொரு இட்லி வைக்கவா? என மலர் வெற்றியை கவனிக்க, போதும் நீ சாப்பிடு என எழுந்து விட்டான். ஸ்ருதி, இளமாறன் இருவரும் உணவில் கவனம் செலுத்தினார்கள். வெற்றி கிளம்பும் நேரம் ஜெகபதி பாபு வந்தார். வரவேற்பு பற்றி பேச.. உள்ளே வரலாமா என கதவை தட்டிக் கொண்டு அவர் உள்ளே நுழைய.. வாங்க கார்ணல் என உணவில் இருந்து எழுந்தான் இளமாறன். பல்லவி வேறு வழி இல்லாமல் புன்னகையை உதிர்த்து வாங்க உள்ளே வாங்க என தண்ணீர் கொடுத்தார்.

அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை பாபு. அவரின் பார்வை முழுவதும் தன் மகள் மற்றும் மருமகன் மீது மட்டுமே இருந்தது.

அம்மா நான் ஆபிஸ் கிளம்புறேன் என வெற்றி வாசலை பார்த்து நடந்தான்.

மலர் வெற்றியின் பின்னால் வழி அனுப்ப சென்றாள்.

மா ஏற்கனவே நம்ம பேசியது தான். இப்போ இளமாறன் ஸ்ருதி ரெண்டு பேருக்கும் வரவேற்பு வைக்கணும்னு சொன்னேனே! இன்னும் ஒன் வீக் தான் இருக்கு. அதுக்கு ஏற்பாடு பன்றத பத்தி பேசிட்டு பணம் கொடுக்கலாம்ன்னு தான் வந்தேன் என்றார் பாபு.

அது பத்தி எனக்கு தெரியாதுங்க! அவரு போனதில் இருந்தே எல்லா விஷயத்தையும் என் பையன் வெற்றி தான் பார்த்துக்கிறான். என பல்லவி முடித்தார்.

பாபுவின் முகம் உடனே மாறி போனது. அவர் இளமாறன் முகத்தை பார்த்தார்.

எங்க டாடி எவ்ளோ பெரிய ஆள்! அவர் கிட்ட உங்க அம்மா! இப்படி... என்ன இதெல்லாம் இளமாறன். உங்க அண்ணாவுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியாதா! என காதை கடித்தாள் ஸ்ருதி.

அந்த நேரம் லேப் டாப்பை எடுக்க மீண்டும் அவசரமாக உள்ளே வந்தான் வெற்றி.

என்னாச்சுங்க? என மலர் வெற்றியின் பின்னால் செல்ல, அம்மா என இளமாறன் பல்லவியை அழைத்து வெற்றியை கண் காட்டினான்.

லேப் டாப்பை எடுத்துக் கொண்டு வெற்றி வெளியே வர, சம்மந்தி நீங்க உட்காருங்க நான் வெற்றி கிட்ட பேசுறன் என பல்லவி தன் மகன் பக்கம் சென்றவர். வெற்றி நம்ம மாறனுக்கு என பல்லவி மொத்த விசயத்தையும் கூற, நான் என்ன பண்ணட்டும்? அதுக்கு? என கூறிக் கொண்டு வேகமாக நடந்தான் வெற்றி.

மிஸ்டர் வெற்றி மாறன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல நானும் நேற்றில் இருந்து பார்க்கிறேன். டிசிப்ளின் ஸ்டேட்டஸ் தெரியாம என் பொண்ணு என பாபு வார்த்தைகளை கொட்டினார்.

மைண்ட் யுவெர் வெர்ட்ஸ் என சிங்கத்தின் கர்ஜனை மட்டுமே கேட்டது. சத்தமில்லை அதிகார குரல்.

பல்லவி முதற்கொண்டு மலர், ஸ்ருதி, இளமாறன், பாபு என அனைவரும் வெற்றியை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். கண்கள் சிவக்க நின்றிருந்தான் வெற்றி.

யாருக்கு மரியாதை ஒழுக்கம் இல்லன்னு சொல்றீங்க மிஸ்டர்? என் அப்பா உங்களுக்கு முன்னாடி ஒர்க் பண்ணி ரிட்டையர்ட் ஆனவர். கேட்டு பாருங்க கபிலன் பத்தி தெரியாத ஆட்களே இருக்க மாட்டாங்க. டிசிப்லின் ஹான் என அங்கும் இங்கும் நடந்தவன். மலரின் அருகில் வந்து என்னோட மனைவியை கல்யாணத்துக்கு முன்னாடி அம்போன்னு விட்டுட்டு போன உங்க மருமகன் கிட்ட டிஸிப்ளின் இருக்கா? இல்ல அதை சரி பன்றதுக்காக இங்கே எங்க வீட்டில் வந்து பங்ஷன் வைக்களாமான்னு கேட்கிறீங்கலே இல்ல இது தான் டிசிப்லீனா? என சரமாரியாக கேள்விகளை கேட்டான் வெற்றி.

அவனது கேள்விகளை கேட்க கேட்க ஸ்ருதி, பாபு இளமாறன் மூவருக்கும் மிக மிக அவமானமாக போனது.

என்னோட தம்பியாக இளமாறன நான் பார்க்கல அப்படி பார்த்திருந்தால் அவனோட தோல் கழண்டு போயிருக்கும். ஏன்னா இப்போ அவன் உங்களுக்கு மருமகன், உங்க பொண்ணுக்கு கணவன். ஒரு குழந்தைக்கு தகப்பன். என்ற வெற்றி. பாபுவின் முன்னால் வந்து இப்படி மூன்று இடத்தில் இருக்கும் உங்க மரும்கன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு போங்க! பொறுப்பா செஞ்சு கொடுப்பார். நான் ஏன் இதெல்லாம் செய்யணும்? இவனால் நான் பாதிக்க பட்டிருக்கேன் என்னோட மனைவி பாதிக்க பட்டிருக்கா! இனி தேவையில்லாம பேச வேணாம். என்னோட உணர்வுகளை கட்டு படுத்திட்டு பேசிட்டு இருக்கேன் தட்ஸ் இட் என சொல்லி விட்டு விறுவிறுவென்று கிளம்பி விட்டான் வெற்றி.

பல்லவிக்கும் அது சரியாகவே பட அவரும் அமைதியாக இருந்தார். பாபு அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க வில்லை. வேகமாக கிளம்பினார். மாமா! மாமா! என அவரை சமாதான படுத்தும் நோக்கத்துடன் பின்னால் சென்றான் இளமாறன்.

ஸ்ருதிக்கு மிகவும் வேதனையாகி போக அவளது அறைக்கு சென்று விட்டாள்.

இளமாறன் எப்படியோ ஒரு வழியாக தன் மாமனாரை சமாளித்து பிரம்மாண்டமாக ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு இருவருக்கும் ஒருவாரத்தில் தயார் செய்ய பட்டது. அனைத்தையும் ஈவன்ட் ஆர்கணைசிங் குழுவிடம் கொடுத்து சிறப்பாக செய்து விட்டார் பாபு.

ஆனால் ஸ்ருதியின் மனதில் வெற்றி மற்றும் மலரின் மேல் பொறாமையும் கோபமும் இருந்தது. தன் தந்தையை அவமான படுத்திய வெற்றியை பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்திருந்தாள். கூடவே மலரையும் தான். ஏன் என்றால் இளமாறனுக்கு மலரின் மேல் ஒரு கண்கள்.

வரவேற்பு எப்படி இருக்கும் பார்க்கலாம்.

தொடரும்...
 
Top