Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
என்ன சொல்ற? என கோபத்துடன் எழுந்தாள் பூங்கொடி.

மணிமேகலை பதட்டத்துடன் அய்யோ தெரியாம சொல்லிட்டேன் போலயே! இவள் வேற பிரச்னை பண்ணிட்டா என்ன பண்றது? என யோசித்தவள். ஹே பூங்கொடி! நான் அது வந்து அப்படி நடந்த மாதிரி நான் கனவு கண்டேன் டி!! என்றாள்.

ஹே ஒழுங்கா உண்மைய சொல்லு என பூங்கொடி அதட்டினாள்.

அது என மணிமேகலை தயங்கி கொண்டிருக்க.. நகரு டி என வேகமாக கோபத்துடன் வெளியே சென்றாள் பூங்கொடி.

அமுலி பாப்பா!! என ஜெயக்கொடி, சந்தனகொடி இருவரும் அழைத்தார்கள்.

என்ன நடக்குது இந்த வீட்ல? எங்கே போயிட்டு வந்தீங்க? என பூங்கொடி அனைவரையும் பார்த்து பத்ரகாலி ஆட்டம் ஆடினாள்.

தனக்கொடி கொஞ்சம் நிதானத்துடன் நான் சொல்றத கேளு பாப்பா! என அவளை கட்டு படுத்த முயன்றாள்.

நீங்க என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க? அதை மட்டும் முதல்ல சொல்லுங்க!! கேட்டதுக்கு பதில் சொல்லணும் என வேக மூச்சுடன் நெஞ்சு கூடு ஏறி இறங்க அவளின் கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.

அமுலி நான் சொல்றத கேளு தங்கம் என சந்தன கொடி, ஜெயக்கொடி இருவரும் அவளை கட்டு படுத்த முயற்சி செய்ய..

அனைவரையும் முறைத்து பார்த்தாள். அவள் மூச்சு விடும் சத்தம் வெகுவாக வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டது.

ஏனுங்க மாமா இங்க வாங்க என சந்தனகொடி அழைக்க..

என்னாச்சு என சிவராமன் வேகமாக அவ்விடத்துக்கு வந்தார். அவருடன் கூடவே முருகேசன், முத்து சாமி இருவரும் வந்தார்கள்.

அங்கே பூங்கொடி நின்றிருந்த கோலத்தை பார்த்ததும் அனைவரும் அரண்டு போயினர்.

தனக்கொடி பதட்டத்துடன் தன் கணவரை பார்க்க.. அமுளி நான் சொல்றத கேளு தங்கம். என அருகில் நெருங்கினார்.

கையை காட்டி தடுத்தவள். எங்கே போயிட்டு என்ன பேசிட்டு வந்தீங்க? என பூங்கொடி பார்த்தாள்.

சிவராமன் பெரு மூச்சை விட்டபடி உன்னை கேட்காமல் தான் அன்புவுக்கு உன்னை கட்டிக் கொடுக்க கேட்டு வந்தேன். எனக்கு அது தான் சரியா படுது. என் பேச்சை நீ கேட்பேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். குறிச்ச நாள்ல குறிச்ச தேதியில உனக்கும் அன்புவுக்கும் கல்யாணம் என்றார்.

ப்பா!! என உருக்கமாக அழைத்தவள். வேணாம் பா! எனக்கு அந்த வீட்டுக்கு போக பிடிக்கல! அந்த வீட்டுல போய் என்னை எப்டி பா கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தோணுச்சு? உங்களுக்கு? என கண்களில் நீர் வழிந்தது.

சிவராமன் தன் மகளின் முன்னால் சென்றவர். அப்பா உனக்கு எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் அமுலி தங்கம். நான் என் பொண்ணு வாழ்க்கைய கெடுப்பெனா என்ன? சொல்லு! உன்னை பத்திரமான இடத்தில் தான் கொண்டு போய் விடுவேன் டா மா!

இப் இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க? என பூங்கொடியின் குரல் தலுதலுத்தது.

"பூங்கொடி அன்பு செல்வனுக்கு தான் அப்டின்னு உங்க தாத்தா என்கிட்ட வெத்தலை பாக்கு மாத்திட்டார். உன்னோட மாமன் இதோ கொடி செய்ய காசு கொடுத்துட்டார்." என்றார்.

அங்கிருக்கும் அனைவரையும் முறைத்து பார்த்தவள் கண்களில் நீருடன் திரும்பினாள்.

மொத்த குடும்பமும் அவளை பார்க்க, பூங்கொடி எதுவும் பேசாமல் அவளறைக்கு சென்று விட்டாள்.

மாமா!! மாமா என ஜெயா மற்றும் சந்தனம் இருவரும் புலன்பியபடியே அழைத்தார்கள்.

தனக்கொடி அமைதியாக நின்றிருந்தாள். என்னாச்சு என சிவராமன் திரும்ப..

அமுலி பாப்பா அமைதியா போறத பார்த்தால் பயமா இருக்கு! கொஞ்ச நாள் போகட்டுமே! எதுக்கு மாமா அவசர பட்டுட்டு என்றார்கள் இரு பெண்களும்..

இல்ல சந்தனம் இந்த கல்யாணம் நடக்கணும். என் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போச்சுன்னு ஒரு பேச்சு இங்கே யாரும் பேச கூடாது ஜெயா!. அமுலி வாழ்க்கை அடுத்தவங்க வாய்க்கு அவல்பொரி ஆக கூடாது. அப்படி ஆகவும் விட மாட்டேன். என்றவர் கல்யாண வேலையில் சில மாற்றங்களை செய்யவும், தாலி கொடி செய்ய கொடுக்க நகை கடைக்கு அப்படி இப்படி என அலைந்தார்கள்.

அமுலி!! என தனகொடி எவ்வளவோ பேச.. மசியாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தாள். எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும். அந்த பொம்பளை பொறுக்கியை கட்டி கொள்ள கூடாது என உள்ளுக்குள் அசரீறி வேறு எப்பொழுதும் சொல்லி கொண்டிருக்கிறது.

இதோ கிளம்பி விட்டாள் பூங்கொடி.

எங்கே பாப்பா போற? என தனக்கொடி கேட்க.. அதற்குள் வீட்டுக்குள் நுழைந்தாள் மணிமேகலை.

அத்தை!! அவள் ஃபேசியல் பண்ணனும்னு சொன்னாள். இதோ கல்யாணத்துக்கு முன்னாடி கோல்டன் பேஷியல் பண்ணி விடணும் அப்போ தான் நல்லாருக்கும் என்றாள்.

ஓ அப்படியா? சரி இப்போ நீங்க எங்கே போறீங்க என அவளை சுற்றி வளைத்து கொண்டார்கள் ஜெயக்கொடி சந்தனம் இருவரும்..

நான் ஓடி போக மாட்டேன் சித்தி! என் டாடிய எந்த இடத்துலயும் அவமான படுத்த மாட்டேன். என்றாள் தீர்க்க பார்வையுடன்..

ஜெயக்கொடி பதறியபடி அய்யோ அமுலி நாங்க அப்படி சொல்லவே இல்லையே! கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள் தானே இருக்குது! அதுக்கு தான் கேட்டோம் என்றார்.

நம்ம காரில் தான் போறோம். பிரப் ரோட்டில் கிரீன் ட்ரெண்ட்ஸ் இருக்கு. அங்கே போயிட்டு வரேன். என்றவள் நேராக காரில் ஏறி கொண்டாள். கூடவே மணிமேகலை பின்னால் ஃபாலோ செய்ய..

மணி!! என இருவரும் அவளை வளைத்து, உன்னை நம்பி தான் விடுறோம். அவளை பத்திரமா பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வா! நடுவுல அந்த சதீஸ் பைய அவள் கிட்ட பேச வந்தான்னா உடனே போன் பண்ணு எங்களுக்கு என சொல்லி அனுப்பி விட..

சரிங்க அத்தை என்பது போல தலையை ஆட்டினாள் மணி.

அவர்கள் இருவரும் அத்தோடு நின்று விடவில்லை. டிரைவரை அழைத்து பூங்கொடியை பத்திரமாக பார்த்து கொள்ளும் படி கூறி அனுப்பினார்கள். கார் சீரான வேகத்தில் ஈரோடு டவுனை நோக்கி சென்றது.

மாட்டு சாலை வந்ததும் முகத்தை துப்பாட்டா கொண்டு கட்டியவள். அண்ணா வண்டிய நேராக ஈரோடு பஸ் ஸ்டான்ட் விடுங்க...

பாப்பா!! என ஓட்டுநர் திக்கென பார்க்க.. அண்ணா விடுங்க!! என அவரின் கைகளில் பணத்தை திணித்தாள் பூங்கொடி.

ஹே என்ன டி பண்ற? என்ன மூஞ்சியில கட்டிருக்க... என்று கேட்டு கொண்டே மணி பார்த்தாள்.

பணம் எதுக்கு பாப்பா? என ஓட்டுநர் சுந்தரேசன் கேட்க..

இங்கே வண்டிய நிருத்துற விசயத்தை பத்தி அப்பா கிட்ட சொல்ல கூடாது. அதுக்கு தான் இந்த பணம் என்றாள் பூங்கொடி.

இல்ல பாப்பா நான் சொல்ல மாட்டேன் எனக்கு பணம் வேணாம் என்றார்.

இல்ல வாங்கிக்கோங்க என விடாப்பிடியாக பணத்தை தினித்தவள். நேராக பஸ்ஸ்டாண்ட் பக்கம் செல்ல..

பாப்பா எங்கே போற? என ஓட்டுநர் சுந்தரேசன் கேட்க.. பத்து நிமிசத்தில திரும்ப வந்துடுவேன் கவலை படாதீங்க!! என சொல்லி விட்டு சென்றாள்.

ஹே எங்கே போற? என வேகமாக காரில் இருந்து இறங்கி ஓடினாள் மணிமேகலை.

நீ கார்லயே வெயிட் பண்ணு! நான் போயிட்டு வரேன். என பூங்கொடி செல்ல..

ஹே பூங்கொடி முட்டாள் தனமா எதையும் பண்ணி வைக்காத என மணி பின்னால் செல்ல..

நீ போடி என கோபமாக கத்தியவள். கரூர் - ஈரோடு பேருந்து நிற்கும் இடத்துக்கு சென்றாள்.

500 ரூபாய்க்கு அன்புக்காக நான் எங்க கடையில் டிபார்ட் மென்டல் ஸ்டோர்ல இருந்து சில்லறை எடுத்திட்டு வந்திருக்கேன்! அன்பு விருப்ப பட்டால் வாங்கிக்கலாம் என அஞ்சனா அவன் முன் போய் நின்றாள்.

அன்பு நெற்றியை தேய்த்தபடி அஞ்சனாவை பார்த்தான்.

உங்களுக்கு வேணாமா? என அஞ்சனா கேட்க..

வேணும் என அன்பு அவளின் முன் சென்று பணத்தை எண்ணி நீட்டினான்.

எதுக்கும் எண்ணி செக் பண்ணிக்கோங்க அன்பு நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். இதுல 5 ரூபாய், இதுல 2 ரூபாய், இதுல 1 ரூபாய் எல்லாம் தனி தனியா கொண்டு வந்திருக்கேன் என அவனிடம் ஒட்டி கொள்வதற்காக நின்றாள் அஞ்சனா.

பிளீஸ் பணத்தை மட்டும் கொடுங்க என எட்ட நின்றான்.

ஏன் டா என்னை சோதிக்கிற?

அன்பு அவளை முறைத்து பார்க்க, ஆண்டவா ஏன் என்னை சோதிக்கிற? என பேச்சை மாற்றினாள் அஞ்சனா.

அன்பு கண்டு கொள்ளாமல் காசுகளை எண்ணுவதில் குறியாக இருந்தான். அஞ்சனா இதை பயன்படுத்தி கொண்டு மெல்ல நெருங்கினாள்.

"அன்பு செல்வன்!!" என அதிகார குரல் கேட்டது.

யாரது என அஞ்சனா மற்றும் அன்பு செல்வன் இருவரும் திரும்பினார்கள்.

முகத்தை துப்பட்டாவால் மூடியபடி நின்றிருந்தாள் அவள்.

யாருங்க நீங்க? என அன்பு புரியாமல் பார்த்தான்.

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். வர முடியுமா? என அவள் கேட்க..

யாரு மா நீ! உன்கிட்ட பேச அவருக்கு என்ன இருக்கு? என அஞ்சனா கேட்க..

கொஞ்சம் அமைதியா இருங்க மேடம். என அஞ்சனாவிடம் கூறியவன். என்னை எப்டி உங்களுக்கு தெரியும்? நீங்க யாரு? என அன்பு கேட்டான்.

நான் பூங்கொடி!! என மெல்ல அவளின் துப்பட்டாவை விலக்கி விட்டாள்.

அன்பு ஒரு நிமிடம் திடுகிட்டவன் பாப்பா இங்கேயா? என நினைத்தவன். வேகமாக.. பாப்பா! இங்கே எங்கே நீ? என கேட்க..

அழகான பூங்கொடியை பார்த்த அஞ்சனா உன்னோட தங்கச்சியா அன்பு இவங்க? என அஞ்சனா கேட்க..

இடத்தை காலி பண்ணு தங்கச்சி என அஞ்சனாவிடம் கூறியவன். பாப்பா!! என பூங்கொடியை அழைத்தான்.

எக்ஸ்கியூஸ் மி என அஞ்சனா பக்கம் திரும்பியவள் கிவ் மி டென் மினிட்ஸ் நான் பேசிட்டு போயிடுறேன் என அன்புவை பார்த்தாள்.

பாப்பா வா!! என்ன விசயம்? என அன்பு புன்னகையுடன் அவளின் பின்னால் நடந்து சென்றான். அஞ்சனாவை கண்டு கொள்ளவில்லை..

பாப்பாவா!! பிளீஸ் அந்த வார்த்தைய சொல்லி கூப்பிடாத எனக்கு எரிச்சலா இருக்கு! என கூறினாள் பூங்கொடி.

அன்பு அவளை பார்க்க.. கண்கள் சிவக்க அன்புவை பார்த்தவள். உன்னோட ஸ்டேடஸ் என்ன? என்னோட ஸ்டேடஸ் என்ன? உனக்கு நான் கேட்குதா? நீ யாரு என்னன்னு எல்லாம் எனக்கு தெரியும். உன்னோட சீப்பான கேரக்டர் பத்தி எனக்கு தெரியாம இல்ல. ஒழுங்கா நீ போயி எங்க டாடி கிட்ட என்னை பிடிக்களன்னு சொல்ற? நான் என்ஜினியரிங் ஹோல்டர். நீ 12 த் பெயிலா பாஸ்சா? கண்டெக்டர் நீ எனக்கு ஜோடியா? என சரமாரியாக கேள்வி கேட்டாள் பூங்கொடி.

அன்பு செல்வன்..?

தொடரும்..
 

Magi

Active member
Joined
Oct 6, 2024
Messages
136
Ithu amuli paapa ila ambuli😤evlo kovam varuthu avaluku mrg venamna nera avanga dady kitta solla vendiyathu thaana , Inga vanthu kathuttu irukku lusu, kadavuley intha papa vukku konjam arivu kodu🥵. Apdiye writer ku konjam energy kodu daily ud podara maari🙏🏼♥️
 

Nivetha

New member
Joined
Jan 8, 2025
Messages
2
Ithu amuli paapa ila ambuli😤evlo kovam varuthu avaluku mrg venamna nera avanga dady kitta solla vendiyathu thaana , Inga vanthu kathuttu irukku lusu, kadavuley intha papa vukku konjam arivu kodu🥵. Apdiye writer ku konjam energy kodu daily ud podara maari🙏🏼♥️
Yes
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
77
Ellarum poo ah ennavo chinna paapa maadhiri treat pannuranga... Idhula amuli thangam, pappa nu konjal vera... Ipdi ellam panna Ava innum aaduva
 
Top