Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
ஒரு வார காலமும் வேலை விசயமாக வெற்றி அலைந்து கொண்டிருந்தான். இளமாறன் நிறைய முறை மலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தான். வீட்டில் கேட்டால் ஸ்ருதி இருக்கிறாள். தன்னை விட்டு ஒரு இஞ்ச் கூட பிரிவதில்லை. அதை விட அங்கு இளமாறன் என ஒருவன் இருக்கிறான் என்பதை மலர் கண்டு கொள்வதே இல்லை.

அதே போல ரிசப்ஷன் வேலை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பல்லவியுடன் இளமாறன் மிகவும் பரபரப்பாக இருந்தான். எப்படியும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

இன்னொரு பக்கம் வெற்றி மிகுந்த வேலையுடன் சுற்றி கொண்டிருந்தான். இரவு தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்தான்.

மாமா என அவனுக்காக காத்திருந்து அவனுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டாள் மலர்.

எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ற? தூங்கலாம் தானே!

"இல்ல மாமா நீங்க இல்லாம தூக்கம் வரல! உங்க மேல கால் போடணும் அப்போ தான் தூக்கம் வரும்" என கூறிக் கொண்டே வாயை துடைத்து விட்டாள்.

போலாமா தூங்க என வெற்றி கேட்க, ம்ம் கொட்டினாள். அவளை கையுடன் அள்ளி கொண்டான். அவனது நெஞ்சில் சாயிந்து கொண்டாள்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.

ஸ்ருதிக்கு தங்க நகைகள், வைர நகைகள், பட்டு புடவை என அனைத்தையும் வரிசையாக அடுக்கி இருந்தார் பாபு.

இளமாறனுக்கு உள்ளுக்குள் கர்வமாக இருந்தது. தன் பொண்டாட்டி தன்னுடன் வரும் போது மதிப்பாக இருக்கும் அவளின் நகைகள் என மிகவும் திருப்தி என முகமே சொன்னது.

பாபு வந்ததும் வந்தார். மாலையிலா வர வேண்டும்? சரியாக மலர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் நேரம் வீடே ஜொலித்தது. அந்த நகையின் வெளிச்சத்தில்..

மலர் எதையும் கண்டு கொள்ளாமல் அவளின் அறைக்கு சென்று விட்டாள். பல்லவி க்கு மனம் ஒப்ப வில்லை. என்ன தான் இருந்தாலும் மலர் விழி அவரது தேர்வு. அதனால் அவளின் மேல் அக்கறை பாசம் அதிகமாகவே இருந்தது.

என்ன மா இந்த நேரத்தில் கால் பண்றீங்க? மலர் வீட்டுக்கு வந்துட்டாளா? என வெற்றி அவளின் நியாபகத்தில் கேட்டான்.

சும்மா தான் போன் பண்ணேன்! உன் கிட்ட பேசணும் போல இருந்தது என்றார் பல்லவி.

வெற்றி ஒரு சில நொடிகள் அமைதியாகி விட்டு என்ன விசயம்? என்னன்னு சொல்லுங்க மா! என கண்டிப்புடன் கேட்டான்.

அது வந்து வெற்றி! சும்மா தான் டா! ஏன் நான் உனக்கு போன் பண்ண கூடாதா?

"விசயம் இல்லாம எங்க அம்மா போன் பண்ணாது! சோ என்ன விசயம்?"

நம்ம மலருக்கு நகை வாங்கி போடலாம் டா! எனக்கு ஆசையா இருக்கு. அது தான் சொன்னேன். எப்படியும் சேவிங் உன் கிட்ட இருக்கும் அவளை அழைச்சிட்டு போய் நகை வாங்கி கொடு காசுமாலையில் நெக்லஸ், அதே காசு மாலையில் ஒரு ஆரம் தோடு வளையல் எல்லாமே மலர் போட்டு என் முன்னாடி வரணும். அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும். நீ வீட்டுக்கு வந்ததும் அவளை கூட்டிட்டு போ! பணம் பத்தலன்னா கூட கடன் வாங்கி கூட நகை மலருக்கு போடனும். என்ற வார்த்தையில் விடாப்பிடியாக இருந்தார் பல்லவி.

சரி என யோசனையுடன் போனை வைத்தவன். அவனது வேலைகளில் மூழ்கி போனான்.

மலர்விழி வெளியே வந்ததும் நேராக சமையலறை சென்று விட்டாள். அத்தை நைட்டு எதுவும் சமையலுக்கு உதவி வேணுமா சொல்லுங்க என பேசிக் கொண்டே அவருடன் கலந்து கொண்டார்.

பல்லவி அவளிடம் இணக்கமாக சிரித்து பேசிக் கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.

வெற்றி வேலையை முடித்து வீட்டுக்கு நேரமே வந்திருந்தான்.

வந்துட்டீங்களா? என ஆசையுடன் மலர் தண்ணீர் கொடுக்க செல்ல, நீ பாலை பாரு மலரு என தண்ணீரை எடுத்துக் கொண்டு வெற்றியின் பக்கம் சென்றார்.

மலரே இன்னிக்கி என்ன நடந்தது? என முகத்தை துடைத்த படி நிமிர்ந்தான் வெற்றி. ஆனால் எதிரில் இருந்தது அன்னை.

ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தவர். நான் சொன்னது என்னாச்சு? எப்போ கூட்டிட்டு போக போற? என நின்றார் பல்லவி.

நடந்த விசயத்தை முழுசா சொல்லுங்க அப்புறம் கூட்டிட்டு போறேன் என கூறி விட்டான் வெற்றி.

வெற்றி அடி வாங்க போற! எதுவும் நடக்கல! எனக்கு ஆசையா இருக்கு. மலர் கழுத்தில் நகை இருக்கணும். அவளை யாரும் எதுவும் சொல்ல கூடாது என பல்லவி ஆதங்கத்துடன் கூறினார்.

வெற்றி எதையும் கண்டு கொள்ளாமல் வெளியே செல்ல போக, டேய் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு மதிக்காம போற? என்ன இது சரி இல்ல டா! என காட்டத்துடன் பேசினார்.

தன் அன்னையை வெற்று பார்வை பார்த்தான். பல்லவி ஒரு பெரிய மூச்சை விட்ட படி நடந்த அத்தனையையும் கூறினார்.

இதுக்கு தான் இவ்வளவு மழுப்பலா என அவன் வெளியே செல்ல. .. வெற்றி நீ அவளை கூட்டிட்டு போறியா இல்லையா அதுக்கு பதில் சொல்லவே இல்ல என்று பல்லவி கேட்க, இதுல சொல்றதுக்கு என்னமா இருக்கு நம்ம ரெண்டு பேர விட இதுல முடிவெடுக்க கூடாது. மலர்தான்!! சோ அவ கிட்டயே கேட்கலாம். அவ வேணும்னு சொன்னா இப்பவே போய் நான் வாங்கி கொடுக்க தயாரா தான் இருக்கேன் என்று சொல்லிவிட்டு வெளியே செல்லப் போனவனின் கைகளைப் பிடித்து இழுத்த பல்லவி, "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? உனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை டா மரமண்டை! அவகிட்ட போயி வேணுமானு கேட்பியா? இதெல்லாம் தானா வாங்கி கொடுக்கணும். என்று கூறினார்.

என்னமா சொல்றீங்க? அவதான போட்டுக்க போறா!! அப்ப அவகிட்ட தானே கேட்கணும். என்று வெற்றி கடுப்புடன் தன் அன்னையைப் பார்த்தான்.

அப்படி இல்ல வெற்றி... நீ அவளை கடைக்கு கூட்டிட்டு போ! அவளுக்கு பிடிச்சத வாங்கி கொடு! ஆனால் கேட்டு கூட்டிட்டு போறது வந்து நல்லா இருக்காது. அந்த பொண்ணு... அதான் மாறனோட பொண்டாட்டி அவ கழுத்துல நகையா இருக்கும்போது, மலரோட கழுத்தலயும் நகை இருக்கணும். அதுதான் என்னோட ஆசை. நீ அவளை கூட்டிட்டு போ. அவ்வளவுதான் சொல்லிட்டேன்! என அன்னை மகன் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க..

என்னாச்சு என்று அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் மலர்விழி.

உன்னோட மாமியார் உனக்கு நகை வாங்கி கொடுக்க சொல்றாங்க! வரையா போயிட்டு வரலாம் என்று வெற்றி கேட்க, பல்லவிக்கு சோர்வாக இருந்தது இவனை என்ன செய்தால் தகும் என்று தலையில் அடித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

மலர்விழி அவனை முறைத்து பார்க்க... இப்போ எதுக்குடி முறைக்கிற? நான் என்ன கேட்டுட்டே ன் என்று வெற்றி அவளை அணைக்க பாய்ந்தான்.

"கதவை திறந்து இருக்கு"

அவ்ளோ தான என காலால் உதைத்து சாத்தினான்.

அதைவிட உங்க அம்மா சொல்றதுனால தான் வாங்கி கொடுக்குறீங்க உங்களுக்கே தோணலையா?.என்று மலர் கேட்க...

என்ன இப்படி சொல்லிபுட்ட தோணாமலா! என்னென்னமோ தோணுது! தோணாம தான் அன்னைக்கு புடவை வாங்கி கொடுத்தேனா? என்று அருகில் வந்தவன். இன்னைககு கூட உனக்கு புடவை வாங்கி வச்சிருக்கேன் என்று கண்ணடித்துக் கொண்டே அவனது கப்போர்ட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான்

மலர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அதை வாங்கி பார்க்க அழகான பூனம் புடவை உடலுடன் அந்த புடவையை கட்டினால் மலரின் உடலில் அது ஒட்டி இருக்கும்.. அவரது அங்க வளைவுகளை அழகாக எடுத்துக்காட்டும்..அவளது நிறத்திற்கும் அந்த கனகாம்பர கலருக்கும் அவ்வளவு எடுப்பு, தாலிக்கொடி மஞ்சள் கயிறு என இப்பொழுது எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.

ஹலோ என அவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள்.

என்னடி பண்ற?

என்ன கனவுல இருக்கீங்களா?

ஆமாம் சூப்பரா இருக்கு கனவு என்று வெற்றி கண்ணடிக்க... அப்போ இந்த புடவையை நாம் உங்கள் தம்பியோட ரிசப்ஷனுக்கு கட்டிக்கிட்டுமா என்று மலர் கேட்க... அதுக்கு போகணுமா? என்று வெற்றி கேட்டான்.

இது என்ன கேள்வி? கண்டிப்பா நம்ம போகணும். நம்ம போகாம இருந்தா அது தப்பாயிடும். அந்த பொண்ணு மாசமா இருக்கு. அவங்க எல்லாம் நம்ம குடும்பம் என்று இளமாறனை சேர்க்காமல் ஸ்ருதியை வைத்து பேசினாள் மலர்விழி.

வெற்றி அமைதியாக இருக்க..மாமா என்ன ஆச்சு இன்னிக்கி அத்தைக்கும் உங்களுக்கும் என்ன சண்டை? ரெண்டு பேரும் தீவிரமா பேசிட்டு இருந்தீங்க? இப்போ அந்த பங்க்ஷன்க்கு வர மாட்டேங்குத சொல்றீங்க? அந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் டெரர் மாதிரி தெரியுறாரு! நம்ம யாரையும் பகைச்சுக்க வேணாம். நீங்க ரெண்டு மூணு தடவை உதாசீனப்படுத்துற மாதிரி பேசிட்டீங்க! என பொறுமையாக கூறினாள் மலர்விழி.

உதாசீனம் கிடையாது. எனக்கு மரியாதை இல்லாத இடத்துல இருக்க பிடிக்காது. பொய் சொன்னாலும் பிடிக்காது.. இதுவரைக்கும் அவன் என்கிட்ட எந்த எஸ்பிளனேஷனும் கொடுக்கல. இந்த மாதிரி அதிகாரம் எல்லாம் என்கிட்ட செல்லாது. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும். அதுதான் என்னோட பாலிசி! நானா போய் யார்கிட்டயும் மரியாதைக்கு நிக்க மாட்டேன். எனக்குன்னு சில டிக்னிட்டிஸ் இருக்கு. அதை எப்போவும் மாத்திக்க மாட்டேன் என்று காட்டமாக கூறினான் வெற்றி

அப்படியா சரி என்று மலர்வழி நகர... எங்கடி போற என்று அவளை படுக்கையில் தள்ளியவன் அவளை பேச விடாமல் இந்த புடவையை இன்னைக்கு நைட்டு கட்டி காட்டுறியா? என உதட்டில் முத்தமிட்டான்..

ம்ப்.... விடுங்க இன்னிக்கு நைட் யாராவது கட்டுவாங்களா? தூங்கும் போது? என முக்கி கொண்டே கூறினான்.

கட்டலாம் எனக்காக கட்டலாம்.

எதுக்கு?

கட்டிக்காட்டு அப்பதான் அதை ரிமூவ் பண்ண முடியும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உதட்டுடன் மெதுவாக ஒற்றியவன் வேகமாக முத்தமிட ஆரம்பித்தான் வெற்றி

வருவான்..
 
Top