Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
அன்பு ஒன்றும் புரியாமல் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தான்.

என்ன மாப்பிள்ளை அங்கே மாமாவை பார்க்கிரிங்க? உங்க விருப்பத்தை சொல்லுங்க! பூங்கொடி வெளி ஆள் இல்லையே! உன்னோட சொந்த அக்கா பொண்ணு என்றார் சிவராமன்.

தனக்கொடி கைகளை பிசைந்தபடி வேண்டா வெறுப்பாக நின்றவள். தனக்கு எதிரில் இருக்கும் தன் தம்பியை பார்த்தாள். தம்பியாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா! தன் மகளுக்கு பொருத்தம் தான் என மனம் சொன்னாலும் மூளை என்னவோ ஏற்க மறுக்கிறது.

அன்பு அமைதியாக நிற்க.. எதுக்கு மாப்பிள்ளை தயக்கம்? என சிவராமன் கேட்க..

சக்கரவர்த்தி தன் மகனிடம் அன்பு இது முழுக்க முழுக்க உன்னோட விருப்பம் பா! நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல என்றார்.

அன்பு தன் அன்னையை பார்க்க..

ஓ என் பொண்ணு இந்த குடும்பத்தில் வாக்கப்பட கொடுத்து வச்சிறுக்கனும் இதுல அனுமதி வேற கேட்கணுமா? நீங்க இருக்க தகுதி தராதரத்துக்கு அனுமதி கேட்கிறீரோ! அதுக்கு தகுதி இருக்கா? என எகத்தாளமாக கேட்டாள் தனம்.

நீ கொஞ்சம் கம்முன்னு இருக்கியா தனம். என அதட்டிய சிவராமன். அன்பை பார்த்து பதில் சொல்லுங்க மாப்பிள்ளை? என கேட்டார்.

கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க பாப்பாவுக்கும் உங்களோட அக்கா பையன் சதீசுக்கும் தானே கல்யாணம்ன்னு பேனர் எல்லாம் ஒட்டியிருக்கு. என்னாச்சு? என தயக்கத்துடன் கேட்டான் அன்பு.

ஏன் சாருக்கு விளக்கம் சொன்னால் தான் என் பொண்ணை கட்டிக்க வருவாரா? இந்த வீட்டுக்கு எவன் பொண்ணு கொடுக்க வருவான் என தனம் வார்த்தைகளால் குத்தினார்.

அன்ன லட்சுமியின் முகம் ஒரு நொடியில் இருண்டு போனது. அவர் கண்களில் நீர் கோர்த்து கொள்ள எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

மாப்பிள்ளை உங்க மனைவி அவ்ளோ கஷ்டபட்டு இந்த வீட்ல மாப்பிள்ளை எடுக்க வேண்டாமே என சக்கரவர்த்தி தன் மகளை முறைத்தபடி கூறினார்.

தனம் வாய மூடு! இல்லன்னா வெளியே போய் நில்லு நான் வர வரைக்கும் என கோபமாக கூறினார் சிவராமன்.

தனம் வேறுபக்கம் திரும்பி கொண்டு நிற்க.. அன்புவின் பக்கம் திரும்பியவர். எனக்கு பூங்கொடிய சதீசுக்கு கட்டி கொடுக்க விருப்பம் இல்ல. என் பொண்ணு களங்கம் இல்லாதவ! கள்ளம் கபடம் தெரியாது. அக்கா பையன் தப்புன்னு தெரிஞ்சது. மாப்பிள்ளை உங்களை தவிர வேறு யாரும் என் பொண்ணுக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு எனக்கு தோணல அதான் வந்தேன். நீங்க தான் என் மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டு வந்திருக்கேன். என்னை கை விடாதீங்க மாப்பிள்ளை என எழுந்தார்.

அய்யோ மாப்பிள்ளை நீங்க போய் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அன்பு கட்டிப்பான். நீங்க கவலை பட வேணாம். என் பேத்தி இந்த வீட்டுக்கு மருமகளா வரதுக்கு தனம் சொன்னது போல கொடுத்து வச்சிருக்கனும் என்றார் அன்னம்.

நீங்க சொல்றது சரி தாங்க அத்தை! ஆனால் அதை இன்னும் மாப்பிள்ளை சொல்லலையே? என்றார் சிவராமன்.

அன்பு தன் தந்தையை பார்க்க, நீ உன்னோட விருப்பத்தை சொல்லு பா! உங்க அம்மா நானு எல்லாமே ரெண்டாம் பட்சம் தான். உன்னோட மாமா சொன்னதுக்காக கட்டிக்க வேணாம். இது வாழ்க்கை பிரச்னை. காலம் முழுக்க நீ சின்ன பேத்தி கைய புடுச்ச்ட்டு வாழணும். அதனாலே முடிவு உன்கிட்ட விட்டுட்டேன் என்றார் சக்கரவர்த்தி.

தனம் தனது தந்தையை முறைத்தார். என்ன மாமா இப்படி வார்த்தை சொல்லிபோட்டீங்க?

ஆமா மாப்பிள்ளை உங்களுக்கு நாங்க நியாபக படுத்த தேவையில்லை. பாப்பா பெரிய பொண்ணு சீர் செய்யும் போது கூட என் மகன் அன்பு நிக்க வேண்டிய இடத்தில உங்க அக்கா பையன் தானே எல்லா சடங்கையும் செஞ்சாப்ல! இத்தனை வருடத்தில் இப்போ தான் வீடு படி ஏறி வந்திருக்கீங்க! உங்க கிட்ட வேலை செய்யர பையன் தான பாப்பாவோட கல்யாண பத்திரிக்கையை கொடுத்திட்டு போனாரு அதான் என்றார் சக்கரவர்த்தி.

சிவராமனது முகம் மாறி போனது. தனம் வேகமாக பதிலடி கொடுக்க வர..

ஏனுங்க தேவையில்லாத பேச்சு எதுக்கு கம்முன்னு இருங்க! என்ன தான் இருந்தாலும் மாப்பிள்ளைக்கு கஷ்டம்ன்னு வந்ததும் அவருக்கு நம்ம நினைப்பு வந்ததே சந்தோஷம். அவருக்கு நம்ம மேலே இருக்க நம்பிக்கைய காட்டுது என்ற அன்னம் நேராக தன் மகன் பக்கத்தில் சென்று கைகளை பிடித்து கொண்டார்.

அன்பு தன் அன்னையை பார்க்க, தனம் நிலை கொள்ளாமல் வேகமாக என்னங்க இங்கே மரியாதை இல்ல நீங்க வாங்க! பூங்கொடி கல்யாணம் நின்னு போனால் என்ன? இவங்களுக்கு கொண்டாட்டமா இருக்கும் கெட்ட எண்ணம் பிடிச்சு ஆட்டுது இந்த குடும்பத்தை என தனம் பொங்கி எழுந்தார்.

என்ன அன்பு பார்த்திட்டு இருக்க? அதான் மாமாவும் உன்னோட அக்காவும் இத்தனை தூரம் சொல்றாங்களே! நம்ம வீட்டு பொண்ணு டா பூங்கொடி! ஏன் கண்ணு நீ அமைதியா இருக்க? சொல்லு சீக்கிரம்? என அவசர படுத்தினார்.

சிவராமன் சேரை விட்டு எழுந்து கொள்ள.. அன்பு அவரை பார்த்து மாமா பாப்பாவுக்கு என்னை கட்டிக்க சம்மதமா? என கேட்டான்.

"முதல்ல உங்க விருப்பத்தை சொல்லுங்க மாப்பிள்ளை?" என சிவராமன் பார்த்தார்.

"எனக்கு சம்மதம் மாமா!" என்றான் அன்பு செல்வன் தன் அன்னையின் கைகளை பற்றி கொண்டு..

சிவராமன் முகத்தில் இப்பொழுது தான் நிம்மதி பரவி புன்னகை உதயமாக..

அன்ன லட்சுமிக்கு சந்தோசம் இன்னும் பெருகியது.

கடவுள் புண்ணியத்தில் இந்த கல்யாணம் தான் எல்லாரையும் சேர்த்து வைக்கணும். என்னோட மூணு பொண்ணுங்களும் இந்த வீட்டுக்கு வரணும் என வேண்டி கொண்டார். முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சிவராமன் சிரித்த முகத்துடன் தனத்தை பார்க்க.. அன்பு தன் அப்பாவை பார்த்தான்.

அவர் எப்பொழுதும் போல இயல்பான முகத்துடன் நிற்க... .

அத்தை வெத்தலை பாக்கு இருக்குங்களா? இப்போவே மாத்திக்கலாம் உறுதி பண்ணிட்டு போறேன் என்றார் சிவராமன்.

இதோ மாப்பிள்ளை என அரக்க பறக்க வேகமாக கொள்ளை பக்கம் சென்றார் அன்னலட்சுமி.

தனம் வேகமாக கணவரின் அருகில் வந்து என்னங்க என் மேல இருக்க கோபத்தில் இந்த வீட்டுக்காரம்மா என் பொண்ணு கிட்ட வரதட்சணை கொடுமை பண்ண கூடாது. இப்போவே என்ன வேணும்னு கேட்டுடுங்க! அப்புறம் அரசன நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிட போகுது. யாரையும் நம்ப முடியாது படுத்த படுக்கையில் இருக்கும் போது பால் ஊத்தறதுக்கு பதில் பாய் போட்டு புள்ளை பெத்த வாரிசு எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சு பாருங்க..

தனக்கொடி என கோபமாக கத்தினார் சக்கரவர்த்தி.

சிவராமன் கோபத்துடன் வாயை அடக்கு தனம் அவங்க உனக்கு அப்பா இல்ல. நம்ம பொண்ணை கட்டிக்க போற மாப்பிள்ளையின் அப்பா! நீ இஷ்டத்துக்கு வார்த்தைய விடாதே! பூங்கொடி விசயத்தில் நான் எப்டின்னு உனக்கே தெரியும் கல்யாணம் முடிகிற வரை உன் வாயை திறக்காத என கத்தினார்.

அன்பு செல்வன் சிவராமனை பார்த்து எங்க வீட்டுக்கு வந்தவகளுக்கு இது வரை பொருள் கொடுத்து தான் பழக்கம் மாமா! நான் யாரு கிட்டயும் இது வரைக்கும் கை ஏந்தினது இல்ல. நீங்க நகையோ பணமோ எதுவும் பூங்கொடிகு கொடுக்க கூடாது.

ஏன் என் பொண்ணை வேலைக்கு அனுப்ப போறியா!

அன்பு செல்வன் சிரித்தபடி இப்போ அக்காவா பேசுறீங்களா மாமியாரா பேசுறீங்களா? அதை சொண்ணீங்கனா அதுக்கு ஏற்ப நான் பதில் சொல்லுவேன்.

யாரு உனக்கு அக்கா! என தனக்கொடி பற்களை கடித்தாள்.

அன்பு செல்வன் சிரித்தபடி நான் உழைச்சு சம்பாதிச்சு ஒரு பத்து லட்சம் பேங்கில் வச்சிருக்கேன். பாப்பாவுக்கு கொடி போட்டு கட்டிட்டு போறேன். அவளுக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் வாங்கி கொடுக்கவும் செய்யவும் என்னால முடியும். அதனாலே உங்க கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கல என்றான்.

கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு மாப்பிள்ளை நான் வேலைய பார்க்கிறேன் என சிவராமன் சொல்லி கொண்டிருக்க..

இதோ அன்னலட்சுமி உள்ளே இருந்து வந்தார்.

வெத்தலை பாக்கு இரண்டையும் மாற்றி கொண்டார்கள்.

சக்கரவர்த்தி பெருமையுடன் எவன் வேணாம்னு என்னோட உறவை வெட்டி விட்டு போனயோ அவன் தான் இன்னிக்கு உன் மானத்தை காப்பாத்தி இருக்கான். யாரையும். கேவலமா நினைக்காத தனம் என்றார்.

சிவராமன் கப் சிப்பென நின்றிருக்க.. ப்பா வேணாம் தேவையில்லாத விசயத்தை எதுக்கு பேசிகிட்டு என்ற அன்பு நேராக அன்னலட்சுமியிடம் அன்னம் அந்த காயின் பாக்ஸ் எடுத்திட்டு வா என்றான்.

என்னத்தை கொடுக்க போறான்? என தனம் இளக்காரமாக நின்றாள்.

இந்தா கண்ணு என நீட்டினார் அன்னலட்சுமி.

"மா நீயே அக்கா கிட்ட கொடு!"

என்ன அது?

9 பவுன் தங்க காசு அதுல இருக்கு என்றான் அன்பு.

சிவராமன் - தனக்கொடி இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டார்கள்.

நீயே கொடு கண்ணு! என அன்னலட்சுமி தயங்க..

அன்னம் கொடு பையன் தான் சொல்றானே! என சக்கரவர்த்தி முதுமையிலும் கூட கம்பீரமாக கூறினார்.

தனக்கொடி வெறுப்புடன் பார்க்க, என்கிட்ட கொடுங்க அத்தை என சிவராமன் வாங்கி கொண்டார்.

ஹே பூங்கொடி உங்க அம்மாவும் அப்பாவும் உங்க மாமா வீட்டுக்கு போய் வெத்தலை பாக்கு மாத்திட்டு வந்துட்டாங்க! என்றாள் மணிமேகலை

பூங்கொடி. ..?

தொடரும்..
 

Magi

Active member
Joined
Oct 6, 2024
Messages
136
😂ethu papa va🤭mm pappom pappom papa vanthu enna panranga nu😂😂😂 anbu Selvan great uhh😉❤️, Enakku ennamo dhanam annalatchumi kitta pesaratha paaththaa ithula yaaru periyavanga nu therla😪👍🏼 sivaraman konjam kooda koocham illa😏, I like sakravarthi handle the situations
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
Anbu Superb reply to Dhanam and sema Mass character lovely Sis💞🔥🔥🔥👌👌👌👍😍.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
61
Superrrrrrrrrr ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top