சரிங்க மாமா நாங்க வரோம்! குறிச்ச நாளில் என் மாப்பிள்ளை அன்பு செல்வனுக்கும் என் பொண்ணு பூங்கொடிக்கும் கல்யாணம் நடக்கும். என கையெடுத்து கும்பிட்டு விடை பெற்றார் சிவராமன்.
அவர்கள் சென்றதும் அன்னம் முகத்தில் புன்னகை ததும்ப தன் மகனை கட்டி கொண்டார்.
அன்னம் நான் குளிக்கணும் தண்ணி வச்சியா? நீ!! என அவன் பொய் கோபத்துடன் கேட்க..
"இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? நம்ம சின்ன பாப்பா இங்கே நம்ம வீட்டுக்கு வர போகுது. இனி வீடே கலகலன்னு இருக்கும்"
கொஞ்சம் ப்ரேக் போடு அன்னம்! ரொம்ப சந்தோஷப்பட வேணாம் என்றார் சக்கரவர்த்தி.
"நீங்க கம்முன்னு இருங்க!" என அன்னம் சொல்லியபடி தன் மகனை ஆசையுடன் பார்த்தார்.
போ போய் தண்ணி வை! என அனுப்பினார்.
இதோ போறேன். தம்பி இன்னிக்கு நைட்டு உனக்கு என்ன வேணும்? கறி சமைக்க வேணாம். நம்ம வீட்ல கல்யாணம் நடக்க போகுதுல்ல அதனால கத்தரிக்காய் பஜ்ஜி செய்யவா! வேற என்ன வேணும்? ஏனுங்க உங்களுக்கு என்ன வேணும்? பச்ச பயிறு கடையவா? என கேட்டார்.
எது வேணாலும் பண்ணு! என்றார் சக்கரவர்த்தி.
அன்னம் தன் கணவரை முறைத்தபடி உள்ளே சென்று விட்டார்.
ஏனுங்கபா அம்மாவை அதட்டி பேசுறீங்க? என அன்பு செல்வன் தன் தந்தையின் அருகில் அமர்ந்தான்.
என்னத்தை சொல்ல சொல்ற? அந்த தனக்கொடி தேள் கொடுக்கு மாதிரி பேசிட்டு போறா! உங்கம்மாளை வாய திறக்க சொல்லு பார்ப்போம். அவள் ஒரு கூறு கெட்டவ! அவளுங்க மூணு பேரும் எவ்ளோ பேசினாலும் வாய திறக்காம இருப்பா! அதான் எனக்கு கோபமே! என்றார்.
அன்பு செல்வன் குழப்பமாக அமர்ந்திருக்க.. "தம்பி உனக்கு நிசமாலும் பூங்கொடிய கட்டிக்க விருப்பமா கண்ணு? உங்க அம்மாவுக்காக அப்புறம் உங்க அக்கா புருஷன் சொன்னதுக்காக நீ ஒத்துக்க வேணாம் தம்பி. அவளுங்க ஆட்டம் ஆடிடுவாளுங்க" என்று விட்டு தன் மகனின் முகத்தை பார்த்தார்.
அன்பு ஒரு பெரு மூச்சுடன் தன் அப்பாவை பார்க்க.. "சொல்லு தம்பி எனக்கு உன்னோட விருப்பம் முக்கியம். சொல்றேன்னு தப்பா நினைக்காத! பூங்கொடி அப்படியே தனக்கொடி குணம் கொண்டவள். பாசம் காட்டினால் மொத்தமா காட்டுவா! வெறுப்பு காட்டினால் அந்த வெறுப்பு மோசமா இருக்கும். பாரு தனம் எப்படி சுருக்கு சுருக்குன்னு பேசுறத!! அந்த வீட்ல என்னோட பேரன் மட்டும் தான் நல்ல குணம் இருக்கு. பொறுமை அப்படின்ற ஒரு விசயம் பூங்கொடிக்கு சுத்தமா இல்ல" என்றார் சக்கரவர்த்தி.
"என்னப்பா! இப்படி சொல்றீங்க?"
"அய்யோ தம்பி! அப்படி இல்ல தங்கம் என் பேத்தி மேலே எனக்கு அவ்ளோ பாசம் இருக்கு. உன் அக்கா புருஷன் சிவராமன் கிட்ட உங்க அக்கா அத்தை ஆட்டம் ஆடினா! அவர் பொருமையாகிட்டார். எதோ ஒரு கட்டத்தில் தான் கோபம் வந்து பேசினார்ன்னா அவள் அடங்குவா! அதனாலே நான் என்ன சொல்ல வர்ரேன்னா நீ ரொம்ப ரொம்ப பொறுமையா இருக்கணும். பூங்கொடிய கட்டிக்கிட்டதும் அவள் இங்கே வந்து கோவிச்சு பிரச்னை பண்ணா தனக்கொடி வந்து இங்கே ஆடுவா அதுக்கு தான் சொல்றேன்"
அன்பு தன் தந்தையின் கைகளை பிடித்து "ப்பா எல்லாமே எனக்கு புரியுது? ஆனால் எத்தனை பகை இருந்தாலும் அக்காவும் மாமாவும் இங்கே நம்மள தேடி தானே வந்தாங்க! அப்போ மாமா நம்மல காசுக்காக தேடி வரல! பூங்கொடி வாழ்க்கைக்காக வந்திருக்காங்க! இதுக்கு அர்த்தம் நம்ம மேலே நம்பிக்கை இருக்கு அவங்களுக்கு.. அதை விட வீடு தேடி சக்கரவர்த்தி ஐயா வீட்டுக்கு வந்தவங்களை அப்படியே மன சங்கடத்தோட வேதனையோட அனுப்பிட முடியுமா? சொல்லுங்க ப்பா" என கேட்டான்.
சக்கரவர்த்தி அவரின் கைகளை பிடித்து அதுக்கில்ல கண்ணு! என அவர் பேச..
ப்பா உண்மைய சொல்லுங்க உங்களுக்கு பூங்கொடி இங்கே நம்ம வீட்டுக்கு வர இஷ்டம் இல்லையா? என கேட்டான் அன்பு.
உடனே சக்கரவர்த்தி யின் முகம் மாறி என்ன சொல்ற! யார் அப்படி சொன்னது? எனக்கு இஷ்டம் தான்! என்ன தான் இருந்தாலும் இந்த வீட்டு மூத்த பேத்தி அவள் தான். அப்படியே விஜி ஜாடை அவள் கிட்ட அதிகம். ஆயிரம் கோப தாபம் இருந்தாலும் என் தனக்கொடி பொண்ணு. எனக்கு இஷ்டம் தான் இருந்தாலும் என தயங்கினார்.
என்ன ப்பா இதுல என்ன தயக்கம்? என அன்பு கேட்டான்.
சக்கரவர்த்தி ஒரு பெரு மூச்சை விட்டபடி "நீ பிறந்ததில் இருந்து எல்லாரலயும் ஒதுக்கப்பட்டு உன்னை எல்லாரும் ரெண்டாம் தாரத்து மகன் அப்பனுக்கு பையன் மகளுக்கும் மருமகனுக்கு ஒரே நேரத்தில் பிரசவம் அப்படி இப்படின்னு இது வரைக்கும் ஏச்சு பேச்சு மட்டும் தான் மிச்சம். அதை விட நான் பெத்த நாலு பேர்ல மூணு பொண்ணுங்களுக்கு எல்லா சொத்தையும் கொடுத்துட்டேன். ஆனால் உனக்கு? உணக்குன்னு நான் விட்டு வச்சது இந்த வீடு தான். அதை விட அன்னம்! அவள் என்னை கட்டிக்கிட்டு படாத அவஸ்தி பட்டிருக்கா! எனக்கு கவலை என்னன்னா? கல்யாணம் முடிஞ்சு பூங்கொடி வீட்டுக்கு வந்து உன்னையும் அன்னத்தையும் தனக்கொடி பேச்சை கேட்டுட்டு வேதனை படுத்திற மாதிரி பேசினால் என்னால தாங்கிக்க முடியாது." என்றார்.
அன்பு மென்மையாக தன் அப்பாவின் கையை பற்றி கொண்டவன். "எனக்கு இருக்கிற பெரிய சொத்து நீங்களும் அம்மாவும் தான். ஊரு ஆயிரம் பேசட்டும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை. எனக்கு தெரியும் என்னோட அப்பாவை பத்தி. நீங்க எதுக்காக அம்மாவை கல்யாணம் பண்ணீங்க இது வரைக்கும் நான் கேட்டதில்லை கேட்கவும் மாட்டேன். எதாவது காரணம் இருக்கும். யாரு என்ன பேசினால் என்ன? என்னோட அம்மாவை பத்தி எனக்கு தெரியும்." என்றான்.
இப்போ என்ன பண்ண போற? என சக்கரவர்த்தி கேட்க..
"என்ன பண்ணட்டும் நீங்க சொல்லுங்க பா!" என அன்பு பார்த்தான்.
என்ன அப்பாவும் மகனும் ரகசியம் பேசுறீங்க! இந்தாருங்க அவன் மனசை களைக்க வேணாம். அன்பை விட எனக்கு தணக்கொடி தான் முக்கியம் சொல்லிட்டேன். டேய் உங்க அக்கா வந்து கேட்டிருக்குது இடக்கு மடக்கா திரும்பின அவ்ளோ தான் என மிரட்டினார்.
உன் பையனுக்கு நான் எதுவும் சொல்லி கொடுக்கல ஆத்தா! நீ நினைக்கிறத தான் உன் பையன் செய்வான். நான் எதுலயும் தலையிடல என மெல்ல எழுந்து வேஷ்டியை கட்டினார்.
தம்பி போய் குளி! விரசா ஓடு! என்றார்.
ம்ம் அன்னலட்சுமி காலில் சக்கரம் முளைச்சிடுச்சு போலயே என துண்டை தோல் மேல் போட்டான் அன்பு.
அடேய் பிச்சு போடுவேன் ராஸ்கல் என மிரட்டினார் செல்லமாக..
நான் மாட்ட மாட்டேனே என ஓடி விட்டான் அன்பு.
***
என்ன சகலை என்னாச்சு? என முருகேசன், முத்து சாமி இருவரும் கேட்டு கொண்டிருக்க..
ஒன்பது பவுன் கொடிக்கு காசு கொடுத்திருக்கார் மாப்பிள்ளை! என்றார் சிவராமன்.
அப்படியா வேற எந்த பிரச்னையும் இல்லையா? அண்ணி அமைதியா விட்டுட்டாங்களா? நம்ப முடியலையே? என முருகேசன் கேட்க..
அண்ணி ஆடுனா தான். ஆனால் அவள் கேட்டது எல்லாம் சரி தான். எங்க அக்காவை விட இந்த வீடு தான் என் பொண்ணுக்கு பொருத்தம் என்னை அடக்குற இடத்தில் நானும் இருக்க கூடாது. என் பொன்னும் இருக்க மாட்டாள். என்னோட சொத்தை நான் யாருக்கும் தாரை வார்க்க மாட்டேன். அன்பு வீட்டோட இருப்பான் யாரையும் எதிர்த்து பேச மாட்டான். ஒழுக்கமான பையன் அன்பு செல்வன்னு ஈரோடு, கரூர் பஸ் டிப்போ பஸ்ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் தெரியும் என்றார் சிவராமன்.
அக்கா என்னாச்சு? அந்த சொக்கு பொடி என்ன ஆக்ட் பண்ணா? என ஜெயக்கொடி சந்தன கொடி இருவரும் கேட்டார்கள்.
அவளுக்கு ஒரு சீக்கு வரல! கூடிய சீக்கிரம் வரும். நம்ம அம்மா ஆயிசையும், அம்மாவோட வாழ்க்கையையும் எடுத்துகிட்டா! எல்லாத்துக்கும் சீக்கிரம் முடிவு வரும் என பற்களை நரணரத்தார் தனம்.
சரி அவளை பத்தி என்ன கா? அவன் எப்படி இருக்கான். பொறந்தவன்? என கேட்டாள் சந்தன கொடி.
அவனா? அவனுக்கென்ன அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கான்.
அப்படியா கண்ணக்குளியுமா இருக்கு? என ஜெயக்கொடி ஆர்வமாக கேட்க..
ம்ம் இருக்கு என தனக்கொடி அமைதியாகி விட்டாள்.
என்னாச்சு தனம்? என ஜெயா மற்றும் சந்தன கொடி இருவரும் பார்த்தார்கள்.
அவன் நம்ம தம்பியா இருந்திருக்கலாம். நம்ம கூட பிறந்திருக்கலாம். அப்படி மட்டும் இருந்திருந்தால் நான் ஜே ஜேன்னு என் தம்பிக்கு பண்ணி வச்சிருப்பேன். ஆனால்!! என தனத்தின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
மூன்று பெண்களின் கண்களிலும் நீர் கோர்த்து கொண்டது. சந்தன கொடி கண்களை துடைத்தபடி இது இப்படி தான் நடக்கும்னு இறுந்ததுன்னா அதை யாரால மாத்த முடியும். விடு தனம். அந்த அன்னத்தை பத்தி நினைக்க வேணாம். நம்ம பாப்பாவை பத்தி நீ யோசி. என்றாள்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த மணிமேகலை வேகமாக பின் பக்கம் சென்றாள். பூங்கொடி பூங்கொடி! என கத்தியபடி வந்தவள் அதிர்ச்சியுடன் இரண்டு எட்டில் நின்று விட்டாள்.
என்ன? எதுக்கு கூப்பிட்ட?
ஹே என்ன டி பண்ணிட்டு இருக்க? என மணிமேகலை அதிர்ச்சியுடன் கேட்க..
பார்த்தால் தெரியல பத்திரிக்கைய எரிச்சிட்டு இருக்கேன். என ஃபீஸ் பீசாக கிழித்து கோபத்துடன் எரித்து கொண்டிருந்தாள் பூங்கொடி.
ஏன் டி இப்படி பண்ற?
இது பத்திரிக்கை இல்ல அந்த சதீஸ், மனோரஞ்சிதம் மொத்த குடும்பத்தோட பேரும் இதுல இருக்கு. எங்க அப்பாவை அவமான படுத்த நினைச்சவங்க யாரும் எனக்கு தேவையில்லை. அவன் என்னை என்ன வேணாம்ன்னு சொல்றது? எனக்கு அவன் வேணாம். இந்த கல்யாணம் நிக்கட்டும் என்றாள் பூங்கொடி.
கல்யாணம் நிக்காது டி! அதை சொல்ல தான் வந்தேன்! என்றாள் மணிமேகலை.
அந்த சதீஸ் என் காலில் விழுந்தாலும் அவனை நான் ஏத்துக்க மாட்டேன் என பூங்கொடி சொல்ல..
ஹே உன்னோட அத்தை பையன் சதீஸ் உனக்கு மாப்பிள்ளை இல்ல. உன்னோட தாய் மாமன் அன்பு செல்வனை தான் நீ கட்டிக்க போறியாம். இப்போ தான் உங்க அம்மா பேசிக்கிட்டு இருந்தாங்க என்றாள் மணிமேகலை.
பூங்கொடி...?
தொடரும்..