Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
மூன்று நாட்கள் தன் குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக இருந்தாள் சீதா லட்சுமி. ரகுவரன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அவளது சந்தோஷம் ரகுவுக்கு பெரிது. இதோ கிளம்பியாகி விட்டது.

சுந்தர மூர்த்திக்கு வருத்தம் இருந்தாலும் அவள் ரகுவுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைத்தார். "சரி தங்கம் நீ மாப்பிள்ளை கூட பத்திரமா போயிட்டு வா!"

ப்பா என சீதா அணைத்து கொள்ள.. தங்கம் உனக்கு என்ன கவலை? மாப்பிள்ளை இருக்கார்! அவரு உன்னை பத்திரமா பார்த்துப்பார்! அப்பா நியாபகம் வந்தால் போன் பண்ணு. நான் வந்து பார்க்கிறேன். நடுவுல கூட அப்பா வரேன் பொண்ணு என கொஞ்சினார்.

விஜயா அவளுக்கு பிடித்த உணவு வகைகள் செய்து பேக் செய்தவர். சீதா இதை எடுத்திட்டு போ! ஒரு வாரம் தாங்கும். என்றார்.

சீதா எதுவும் பேசாமல் வாங்கி கொண்டாள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. கெளதம் தன் அக்காவை கட்டி கொண்டவன். சீதா ஒரு நாள் உன்னோட வீட்டுக்கு வரணும்! என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணனும் டி!! என்று சொல்லிய கவுதமின் காதை பிடித்து திருகினாள் விஜயா.

மாஆஆ!! என கவுதம் கத்த..

உன்னை விட பெரியவ டா அவளை அக்கான்னு கூப்பிடு! வாடி போடின்னு சொல்ற!! உங்க மாமாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பார்! இல்ல நானே சொல்லி உன்னை ஒரு இழுப்பு இழுக்க சொல்லவா? என மிரட்டினார் விஜயா.

மா நீ கொஞ்சம் கம்முன்னு இருக்கியா? என்ற சீதா தன் தம்பியின் பக்கம் திரும்பி. உன்னோட விருப்பம் கவுது நீ எப்படி வேணாலும் கூப்பிடு டா தங்கம் என தன் தம்பியை அணைத்து கொண்டாள்.

பார்த்தியா எங்க அக்காவே சொல்லிட்டா! போ மா நீ என கவுதம் சீதாவின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டான்.

தன் குடும்பத்துக்கு விடை கொடுத்தபடி ஊருக்கு புறப்பட்டாள் சீதா. ரகுவரன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்த..

சீதா அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். எபொழுதும் போல இறுகிய முகத்துடன் கலைந்த தலையை கோதிய படி ஓட்டி கொண்டிருந்தான் ரகு.

ஒரு பெரு மூச்சை விட்டவள். ரொம்ப தேங்க்ஸ் என்றாள்.

கண்ணாடி வழி அவளின் முகத்தை பார்த்தவன். எதுக்கு நன்றி? என கேட்டான் ரகு.

ஜன்னலின் பக்கம் முகத்தை திருப்பி கொண்டவள். எங்க அப்பாவை காப்பாத்தி இருக்கீங்க! என் தம்பிய ஸ்கூலில் சேர்த்து விட்டு எங்க குடும்பத்துக்கு தங்க வசதி செஞ்சு கொடுத்திருக்கீங்க. அதுக்கு தான் நன்றி என்றாள் சீதா.

ரகு எந்த பதிலும் சொல்லாமல் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

"உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்."

"ம்ம் சொல்லு!"

"எனக்கு நீங்க நிறைய ஹெல்ப் பண்ணிறுக்கீங்க! இப்போன்னு இல்ல முன்னாடியும் கூட அந்த லவ் மேட்டர்ல எனக்கு ஹெல்ப் பண்ணீங்க!! உங்க மேல நல்ல அபிப்ராயம் தான் வச்சிருந்தேன். இபோவும் வச்சிருக்கேன். ஆனால் இந்த கல்யாணம்?. அதுல இருந்து நீங்க.. உங்க மேல இருந்த எண்ணம் மாறி போச்சு!! நீங்க ஏன்?" என அவள் பேச...

அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 'எதாவது பதில் சொள்கிறானா என்ன? அப்படியே இருக்கிறான்? இவனிடம் பேசி என்னுடைய சக்தி தான் வீணா போச்சு ' பேசி பேசி ஓய்ந்து போனவள். அப்படியே உறங்கி போனாள்.

நான்கு மணி நேர பயணம் சீராக சென்றது. நேராக அவர்கள் ஹோட்டலுக்கு சென்றார்கள். பயங்கர பசி சீதாவுக்கு. விருப்பப்பட்ட உணவுகளை வேகமாக சாப்பிட்டாள். அவனிடம் தயக்கம் இல்லை. எது வேண்டுமோ அது அத்தனையும் உண்டாள்.

அவர்கள் இருவரும் வீட்டுக்கு செல்ல இரவு 9 மணி ஆனது. ரகு!! என சுமதி தன் மகனின் அருகில் சென்றார். "மூணு நாள்ல ஒரு போன் கூட பண்ணல நீ!! அம்மா நினைப்பு உனக்கு வரலையா?"

"உன்னோட நினைப்பு எதுக்கு வரணும்? என் பேரன் அவன் மனைவியோட நேரம் செலவழிக்கும் போது உன்னோட நினைப்பு வந்தா அது அசிங்கமா இருக்காதா சுமதி!! உனக்கு இங்கிதம் இருக்கா? இல்லையா? என்ன சதா இவளுக்கு கொஞ்சம் கூட கூறு இல்ல." என பாக்கியம் திட்டினார்.

பாட்டி விடுங்க என தன் அம்மாவின் பின்னால் சென்றான் ரகு.

விட்டால் போதும் என வேகமாக அவளது அறைக்கு சீதா ஓட முயல.. சீதா!! என அழைத்தார் பாட்டி!!

சொல்லுங்க பாட்டி என தயக்கத்துடன் சீதா திரும்பி பார்க்க..

வந்து சாப்பிட்டு போ மா! மணி ஆகி போச்சு!! என அழைத்தார் பாக்கியம்.

அது ரொம்ப பசிச்சதா பாட்டி! அதனாலே வெளியே சாப்பிட்டு வந்துட்டோம். இப் இப்போ பசி இல்ல! சாரி பாட்டி என்றாள் சீதா.

பாக்கியம் சிரித்தபடி "சரி மா தங்கம் அதுக்கு எதுக்கு சாரி கேட்கணும்? நீயும் எனக்கு சுபா மாதிரி தான் இந்த வீட்டு பேத்தி அதனாலே எதுக்கும் தயங்க வேணாம். நீ சுதந்திரமா இருக்கலாம். இது உன் வீடு பொண்ணு! அதுவும் நீ எனக்கு பெரிய பேரன் விருப்பப்பட்ட பொண்ணு வேற சும்மாவா? இந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்குது தங்கம்" என்றார்.

சரிங்க பாட்டி என சிரித்தபடி பார்த்தாள் சீதா.

சரி கண்ணு நீ போயி ரெஸ்ட் எடு! என பாக்கியம் சொல்ல..

ஓகே பாட்டி என தலை ஆட்டியவள் வேகமாக அறைக்கு சென்று பூட்டி கொண்டாள். பயண களைப்பு உடலை வாட்ட ஹீட்டர் போட்டு விட்டு வீட்டுக்கு அழைத்தாள்.

மா வீட்டுக்கு போய்ட்டேன். அப்பா என்ன பண்றார்? கெளதம் கிட்ட கொடுங்க என அனைவரிடமும் பேசியவள். போனை வைத்து விட்டு நேராக குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து அவள் கதவை திறக்க முற்பட வெளியே யாரோ நடக்கும் அறவம் கேட்டது. சத்தமே இல்லாமல் கொஞ்ச நேரம் நின்றிருந்தவள் சிறிது நேரம் கழித்து கதவை திறந்தாள். அறையில் ரகுவரன் மேல் சட்டையில்லாமல் பேன்ட்டுடன் எதையோ தேடி கொண்டிருந்தான்.

அய்யோ இவன் வேற இருக்கானே! இப்போ வெளியே போனால் நம்மளை சும்மா விட மாட்டான். என்ன பண்றது? அவன் போற வரைக்கும் வெயிட் பண்ணுவோம் என மீண்டும் சத்தம் போடாமல் குளியலறையில் இருந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் எந்த சத்தமும் வராமல் வெளியே வந்தவள் வேகமாக அறை கதவை சாத்தினாள். பெரு மூச்சுடன் ஃபேனை போட்டவள். அப்படியே இலகுவான நைட்டிக்கு மாறினாள். தூக்கம் கண்களை கட்டி கொண்டு வர அந்த மிகப்பெரிய படுக்கையில் நன்றாக கால்களை பரப்பி கொண்டு உறங்கினாள்.

நள்ளிரவு 12 மணிக்கு அவளின் உதடுகளை எலிகள் கடித்து தின்பது போல சத்தமும் உதட்டில் உணர்ச்சியும் வெகுவாக கேட்டது.

அய்யோ போச்சு என்னோட லிப்ஸ எலி கடிக்கிதா? என வேகமாக எழுந்தாள் இதயத்தை பிடித்து கொண்டு..

என்னாச்சு? என ரகுவின் குரல்..

நீங்.. நீங்களா? வாட் ஆர் யூ டுயிங்? என் மேலே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என சீதாவின் சின்ன மூக்கு சிவந்தது.

மூணு நாள் உன் பக்கம் என்னோட வாசம் இல்ல உன்னோட வாடையும் எனக்கில்லை சரி தானே!;

எட்சிலை கூட்டி விழுங்கினாள் சீதா.

முத்தங்கள் இப்பொழுது இன்னும் ஆக்ரோஷமாக தொடரபட்டது. எலி உதட்டை கடிக்கில.. புலி கிட்ட கிளி மாட்டிக்கிச்சு. இனி கோல்டன் ஸ்பேரோவை மொத்தமாக ஆக்கிரமித்து ஆட்சி செய்ய வேண்டும் புலி.

மூன்று நாட்களில் நெருங்காமல் விலகி இருந்ததன் பிரிவு மொத்தமும் இப்பொழுது அவளிடம் காட்டி கொண்டிருந்தான் ரகுவரன்.

சீதா மொத்தமாக அவன் கட்டு பாட்டில்.. இதுக்கு தான் விலகி இருந்தானா? ஏன் இப்படி இருக்கிறான்? என்னை விடவே மாட்டானா? என உள்ளுக்குள் வேதனை பரவியது.

பிறந்த கன்று குட்டி தாய் பசுவை விட்டு விலகாமல் கிடக்குமே அது போல அவன் சீதாவை விடவில்லை.

அரை மணி நேரத்தில் கண்கள் சொருக சீதா துவண்டு விழுந்தாள். அள்ளி அணைத்து கொண்டான் இதயத்தில்..

உறங்கி இருந்தவளின் கை வேலை செய்து கொண்டிருந்தது. வேலை செய்ய வைத்தான். மெல்ல கண் திறந்து பார்த்தவள் துக்கமும் விரக்தியும் சேர்ந்து கொள்ள வேறு புறம் திரும்பி கொண்டாள். மூன்று நாட்களில் தன் குடும்பத்துடன் இருந்ததால் மறந்து போயிருந்த கோபங்களும் மலையேறி கொண்டது.

வெட்கம் அவளை சிவக்க வைத்தது. ஆனால் ஆசையில் இல்லை வேதனையிலும் கோபத்திலும் இயலாமையிலும் அவள் கொதித்து போயிருந்தாள்.

அதிகாலை நான்கு மணிக்கு அவளை புரட்டி போட்டு படுத்து கொண்டான். காலேஜ் இருக்கு என்னை விடுங்களேன் நான் கொஞ்சம் தூங்கனும் என்றாள் மெல்லிய குரலில்.. ஆனால் குரல் தலுதலுத்து இருந்தது.

நாளைக்கு சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிறு காலேஜே உனக்கு லீவ் விட்டுடுச்சு என நெஞ்சில் முகம் புதைத்தான் ரகுவரன்.

சீதா...?

தொடரும்..
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
77
Avan lips bite pannuradha kooda eli kadikkudhu nu innocent ah thoongura pillaiya ennada pannura? I like her innocence and his swag
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
61
Superrrrrrrrrr 👌 daily ud podunga sis👍
 
Top