Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
அப்போ இது மசக்கை சோர்வு தான் மலரு! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அந்த மொரட்டு மொத்தமா அடக்கிட்டயே! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என கையை பிடித்து கண்ணீர் வடித்தார்.

மலரின் முகத்தில் வெட்கம் பூக்க முகத்தை மூடிக் கொண்டாள். பல்லவி அவளின் கையை பிடித்து சரி டா மா! நீங்க போய் செக் பண்ணிட்டு வாங்க! இப்போதைக்கு யார் கிட்டயும் சொல்ல வேணாம். வீட்ல ரெண்டு மருமக மாசமா இருக்காங்கன்னு தெரிஞ்சா கண்ணு படும் என்றார்.

சரிங்க அத்தை நாங்க கன்பார்ம் பண்ணிட்டு போன் பண்றோம். என மலர் சொல்லி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து, மலர் போலாமா? என வெற்றி வண்டி சாவியை எடுத்துக் கொண்டே வெளியே வந்தான்.

மாறன் சார் இருக்காங்களா? என வெளியே சத்தம் கேட்டது. சார் மாறன் சார்? என மீண்டும் அந்த புதியவன் கேட்க... வெற்றி தன் அன்னையை முறைத்து பார்த்தவன். மலர் வா போலாம் என அவளை அழைத்தான்.

பல்லவி மனதில் இரு டா உன்னை என்னன்னு கேட்க ஆள் வந்திடுச்சு! அந்த புது மனுஷனை எப்படி சமாளிக்கரன்னு நான் பார்க்கிறேன் டா! என குதுகலத்துடன் இளமாறா! என கத்தினார்.

மா என சொல்லி கொண்டே வெளியே வந்தான் இளமாறன். அவன் பின்னால் ஸ்ருதியும் வந்தாள். உன்னை பார்க்க வந்திருக்காங்க என்னன்னு கேளு என்றவர் மலர் மற்றும் வெற்றி இருவரையும் வழி அனுப்ப சென்றார்.

என்ன சொல்லுங்க? என இளமாறன் கேட்க..

சார் இது போட்டோ ஆல்பம் அண்ட் இதுல வீடியோஸ் இருக்கு.. கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன் என்றான் அந்த புதியவன்.

இளமாறன் புன்னகையுடன் ஸ்ருதியை பார்த்து ஆல்பம் வந்திடுச்சு பேபி! என்றான் புன்னகையுடன்... ஸ்ருதிக்கு அந்த நாளை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது. ம்ம் பார்க்கலாம் என வஞ்சனையுடன் ஒரு புன்னகை செய்தாள்.

இங்கே வெளியே பல்லவி வெற்றியிடம் டேய் வண்டிய மெதுவா ஓட்டிட்டு போ! குண்டு குழியில் விட்டுடாத! அதர்ச்சி ஆகுற மாதிரி ப்ரேக் போடாத டா! பொறுமையா போ! அங்கே போயிட்டு எனக்கு போன் பண்ணு! உன்னோட போனுக்காக காத்திருப்பேன் என இன்னும் எக்க சக்க அறிவுரைகள் கூறினார்.

வெற்றியின் முகம் தீவிரமாக தன் அன்னையை துளையிட்டது. என்ன டா பார்க்கிற? என பல்லவி முறைக்க...

உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிய படி மகனையும் மாமியாரையும் பார்த்தாள் மலர்விழி.

அவர்கள் இருவரின் சம்பாசணைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சிறு வயதில் கையை பிடித்து பாதுகாத்த அன்னையை இப்பொழுது அவன் கையை பிடித்து அழைத்து செல்வது போல அதட்டல் இருக்கும். அந்த அளவுக்கு அவர்களின் பிணைப்பு.

வெற்றி உடனே அடுத்து பேச ஆரம்பிக்க வர.. அத்தை நீங்க ஒன்னும் கவலை படாதீங்க! நான் இருக்கேன். அவரே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் நாப்பதுக்கு மேலே வேகமே இருக்காது. நீங்க வேற அவரை இன்னும் மெதுவா போக சொன்னீங்கனா அவரு என்னை வச்சு தள்ளிட்டு தான் போகனும் என்றாள் மலர் விழி.

சரி மா பத்திரம். ஹான் தண்ணி பாட்டல் எடுத்துக்கிட்டயா? என பல்லவி கேட்க... நான் எடுத்துக்கிட்டேன் என்றான் வெற்றி.

சரி அப்போ பத்திரமா போயிட்டு வாங்க என அனுப்பி வைத்தார். மலர்விழி அவனை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டாள்.

"என்ன டி பண்ற?"

"ஏன் நான் கட்டிக்க கூடாதா?" என மலர் கோபமாக கேட்க.. " உன் மேலே பாய கூடாதுன்னு இருக்கேன் டி! ஆனால் நீ என்னை தூண்டி விடுற!"

நான் சந்தோஷமா இருக்கேன் மாமா! ரொம்ப ரொம்ப.. அதுக்கு காரணம் நீங்க தான்! என அவனது கழுத்தில் முத்தமிட்டாள்.

"ம்ம் நீயும் வர வர பாலிஷ் ஆகிட்டே வர.. இப்போ எல்லாம் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது மலரே"

மாமா போதும் போதும் நேரத்தில் வீட்டுக்கு போகனும் ரோட்டை பார்த்து ஓட்டுங்க என்றவள். மெதுவாக இன்று பள்ளியில் நடந்த அத்தனை விசயத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.

ம்ம் கொட்டினான் வெற்றி.

உங்களுக்கு போர் அடிக்கலயா மாமா! என மலர் கேட்க..

எதுக்கு?

அதான் நான் உங்க கிட்ட இப்படி தொன தொனன்னு பேசிட்டு இருக்கேனே? உங்களுக்கு அதிகமா பேசுறது பிடிக்காதே! அதுக்கு தான் கேட்டேன்.

வெற்றி மெல்ல சிரித்தவன். யார் சொன்னா பிடிக்காதுன்னு. என்னோட வாழ்க்கை டைம் டேபிள் மாதிரி. ஆனால் நீ குழந்தைகளுக்கு நடுவில் இருக்க நிறைய பார்க்கிற உனக்கு நிறைய அனுபவம் இருக்கும். அதை நீ என் கிட்ட சொல்லும் போது எனக்கு அது சொல்ல தெரிள ஆனால் பிடிக்கும் என்றான்.

ஆமா மாமா! நான் இப்போ மட்டும் இல்ல. ஹாஸ்டலில் இருக்கும் போது கூட போன் பண்ணி எல்லாத்தையும் அக்கா கிட்ட சொல்லிடுவேன். மனசுல எதையும் வச்சுக்க தெரியாது என்றாள் மலர்விழி.

ம்ம் என்றான்.

"உங்க கிட்ட ரெண்டு விசயம் மட்டும் இப்போ மறைச்சிருக்கேன்"

என்ன?

ஒன்னு இப்போ ஹாஸ்பிடல் போனதும் தெரியும் இன்னொன்னு என கீழ் உதட்டை கடித்தாள்.

என்ன விசயம் அது இன்னொன்னு?

அது இன்னிக்கு நைட்டு சொல்றேன். என அவனது இடையை அணைத்தாள்.

ஹாஸ்பிடல் வந்தார்கள். சரியான நேரத்துக்கு உள்ளே மணிமேகலை அடுத்த பேசண்டை அழைக்க.. மலர்விழி தான் அது. இருவரும் சென்றார்கள். உள்ளே செல்வதற்கு முன் மாமா நீங்க அப்பா ஆக போறீங்க! நம்ம பாப்பா இங்கே என வெட்கத்தில் முகத்தை திருப்பி கொண்டாள் மலர்விழி.

வெற்றி அவளின் கையை பிடித்து ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்களை ஆராய்ச்சி கண்ணாடியாக மாற்றி மேய விட்டான்.

ஆமா மாமா! என்றவள். எனக்கு இன்னிக்கி தான் தெரியும். சரி வாங்க உள்ளே போலாம் என சென்றார்கள்.

தான் அப்பாவாக போகும் சந்தோசத்தில் அந்த மொன்ன நாய் மோகன் வந்து போனதை முழுவதுமாக மறந்து விட்டான் வெற்றி.

அண்ணா என மணிமேகலை புன்னகையுடன் அழைக்க.. ம்ம் மா என இருவரும் எதிரில் அமர்ந்திருந்தார்கள்.

ஹாய் மலர் நான் மணிமேகலை என புன்னகைத்தாள். தெரியும் டாக்டர் சரவணன் அண்ணாவோட மனைவி என மலர் பதில் கொடுக்க.. ஓ அவர் உனக்கு அண்ணா! ஆனால் நான் வந்து டாக்டரா என சிரித்தார்.

மலர் அசடு வழிந்த படி வெற்றியை பார்க்க, இருவரும் கை கோர்த்து அமர்ந்திருந்தார்கள். சரி சொல்லுங்க என்னாச்சு மா?

அது ஒன் மந்த் தள்ளி போச்சு! ரொம்ப டயர்டா இருக்கு. சம்டைம் வாமிட் வருது என மலர் சொல்ல..

இதெல்லாம் அண்ணா பார்த்த வேலையா? என மணிமேகலை கிண்டலடிக்க.. வெற்றி ஒரு வித பதட்டத்தில் அமர்ந்திருந்தான்.

சரி கிட் வாங்கி செக் பண்ணீங்களா?

இல்ல டாக்டர் என மலர் கூற.. சரி வாங்க ஸ்கேன் பண்ணிடுவோம் உள்ளே போயி படுங்க என என மணிமேகலை சென்று அவளின் மணி வயிற்றில் ஜெல் தடவி செக் செய்தார். முகத்தில் புன்னகை பரவியது. மலர் அங்கே பாருங்க இதயம் துடிக்கிறது. உங்க பாப்பா! 55 நாள் கரு ஆகுது மா! ரொம்ப ஹாப்பி! என்றவர் அண்ணா வாங்களேன். இங்கே என அழைக்க.. தயக்கத்துடன் வந்தான் வெற்றி.

அண்ணா நீங்க அப்பா ஆகிட்டீங்க. இதோ உங்க பேபி ஹெல்தி என படபடவென துடித்து கொண்டிருக்கும் ஒரு குட்டி புள்ளியை காட்டினாள்.

வெற்றியின் பார்வை அந்த புள்ளியின் மீதும் மலரின் மீதும் மாறி மாறி தழுவியது. மலர் வெட்கத்துடன் திரும்பி கொண்டாள். வெற்றி அவளின் கையை பிடித்துக் கொண்டான். மணி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் இடம் பொருள் பார்க்காமல் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே உதட்டில் இன்னொன்றும்.

மணி மேகலை இருவரையும் அழைத்து, நல்லா சாப்பிடணும் அண்ணா! மலர் வெயிட் கம்மியா இருக்கா! இப்போ பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாமே கொடுத்திட்டு போங்க. அண்ட் கொஞ்சம் மாத்திரை அப்புறம் டானிக் எழுதி தரேன் என எழுதி கொடுத்தார். அனைத்து டெஸ்ட்டும் எடுத்து விட்டு மாத்திரைகளை வாங்கி கொண்டு நடந்தார்கள்.

வெற்றி அவளின் கையை மிகவும் கெட்டியாக பிடித்திருந்தான் விடவே இல்லை.

மாமா!!

ரொம்ப சந்தோசமா இருக்கேன் டி ஆனால் எனக்கு இதை எப்டி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல.. எனக்கான அங்கீகாரம் நீயும் நம்ம குழந்தையும் தான். என்னோட வாழ்க்கை நீ தான் டி மலரு என கூறினான். அவனது கண்கள் சிவந்து இருந்தது.

வெற்றிக்கு இவ்வளவு தான் வெளிபடுத்த தெரியும் போல.. போதும் மாமா! மிச்சத்தை வீட்டுக்கு போய் சொல்லுங்க என அவனது கையை கோர்த்து கொண்டாள்.

சரி இன்னொரு விசயம் இருக்குன்னு சொன்ன? அது என்ன? என வெற்றி அவளை பார்க்க..

அது என மலர் முகத்தில் வெட்கமும் தவிப்பும் தாண்டவம் ஆடியது. தூங்கும் போது சொல்றேன். என முகத்தை திருப்பினாள்.

இருவரும் சந்தோச மனநிலையுடன் வீட்டை நோக்கினார்கள்.

வெற்றி மாறன் மற்றும் மலரின் சந்தோஷம்...?

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-32
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
25
Antha innoru vishaiyam enna? Athu solrathukulla prachanai vanthudumonu enaku bayama irukku 😅 TDY ud superb ♥️ vetri reactions belike onnum theriyatha paapa😹
 

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
அச்சோ இந்த சுருதி என்ன பண்ண போறாளோ
 

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
19
நீ நைட் இன்னொரு விஷயம் சொல்றதுக்குள்ள, அங்க என்ன பிரச்சனைய கிளப்பி விட்ருக்காளுகளோ தெரியல மலரு. வெற்றி 👍👍👍👍👍🔥
 
Top