வெற்றி மற்றும் மலர் இருவரும் உற்சாகமாக வீடு வந்து சேர்ந்தார்கள். இப்போவே சொல்லேன் டி! அப்படி என்ன விசயம்? என வண்டியில் வரும் போது ஆயிரம் முறை கேட்டிருப்பான்.
மாமா இப்போ சொன்னால் உங்க நிலைமை தான் கஷ்டம் ஆகிடும் பரவாயில்லையா? என மலர் அவனது வயிற்றில் கிள்ளினாள் மோகமாக..
"ஓ மேடம் அப்படி வரீங்களா?"
ஆமா அப்படி தான் என பின் கழுத்தில் முத்தமிட்டாள்.
ம்ம் வீடு வந்திடுச்சு மகாராணி மலர்விழி என வெற்றி கூற.. புன்னகையுடன் இருவரும் இறங்கினார்கள்.
சோபாவில் ஒரு பக்கம் இளமாறன் மற்றும் ஸ்ருதி இருவரும் ஆல்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பல்லவி எதிர்பார்ப்புடன் இருந்தவர் அவர்கள் இருவரும் வந்ததும் நேராக வெற்றியின் அறைக்கு சென்றார்.
என்ன சொன்னாங்க டாக்டர்? என பல்லவி பதட்டத்துடன் பார்த்தார். அவரிடம் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. மலர்விழி வெட்கத்துடன் ஆமா அத்தை பாப்பா கன்பார்ம் ஆகிடுச்சு என கூற... பல்லவி வேகமாக மலரை அணைத்த படி அழுதார்.
எனக்கு சந்தோசம் மா! இன்னிக்கி உன் மாமனார் இருந்திருந்தால் எப்டி இருந்திருக்கும் தெரியுமா? என அவர் கண்ணில் கண்ணீர் கோர்த்து கொண்டது.
அத்தை என மலர் கண்களிலும் நீர் கோர்க்க பார்த்தாள்.
பல்லவி சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு, இனி வேலைக்கு போக வேணாம் கண்ணு! வீட்ல இரு! என்னைக்கு நீ வீட்டில் இருக்க? சின்ன வயசில உங்க அம்மா அப்பா வை இழந்து இது வரைக்கும் வெளியிலும் ஹாஸ்டலிலும் தானே தங்கி இருக்க. போதும் மா! கொஞ்ச நாள் உனக்காக வாழனும். கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போயிக்களாம் என கூறினார்.
மலருக்கு அவர் சொல்ல சொல்ல ஆசையாக இருந்தது. சரிங்க அத்தை அவர் கிட்ட சொல்றேன் என சொல்ல, பல்லவி அவளிடம் சரி சாப்பாடு தயார் நீ நேரத்திலேயே சாப்பிடணும். அப்போ தான் வாந்தி வராது என கூறி விட்டு சமையலறை சென்றார்.
அனைவரும் உணவு மேஜையில் இருக்க ஸ்ருதியின் பார்வை முழுவதும் பல்லவி மற்றும் மலரின் மீது இருந்தது. அதற்கு காரணம் மகாராணி போல அவளை உபசரிப்பது தான் ஸ்ருதிக்கு கடுப்பாக இருந்தது.
"மாறன்!"
என்ன ஸ்ருதி?
வீடியோ பிளே பண்ணுங்க சாப்பிட்டுட்டு அப்படியே பார்ப்போம் என கூறினாள்.
ம்ம் அதுவும் சரி தான் என இளமாறன் எழுந்து வீடியோ போட செட்டிங் செய்து கொண்டிருந்தான்.
டேய் என்ன டா பண்ற? என பல்லவி இளமாறனை பற்றி கேட்க.. வீடியோ போடலாம்னு வந்தேன் மா சாப்பிட்டுட்டு பார்க்கலாம் தானே! என்றவன் பிளே செய்து விட்டு வந்து அமர்ந்தான்.
பல்லவியும் அவர்களுடன் சேர்ந்து வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் நன்றாகவே சென்றது. ஸ்ருதியை பல்லக்கில் தூக்கி வருவது, இளமாறன் குதிரை வண்டியில் வருவது என அனைத்தும் ஒவ்வொரு காட்சியாக வர... மலர் படத்தை பார்ப்பது போல வாயை திறந்து பார்த்தாள்.
வெற்றி அவளின் கையை பிடித்து கொண்டவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மலர்... ஹே மலரே!!
"மாமா டிஸ்டர்ப் பண்ணாதீங்க!"
நம்மளும் இதே போல பண்ணுவோமா என கேட்டான்.
அடுத்த நொடி அவள் திடுக்கிட்டு தன் கணவரை பார்த்தாள்.
என்ன டி அப்படி பார்க்கிற? என வெற்றி கேட்க.. மலரின் பார்வை விரிந்து இதுக்கு எல்லாம் செலவு பண்ணி திரும்ப கல்யாணமா? என மலர் பார்த்தாள்.
இல்ல உன்னோட பேபி சவர் பத்தி பேசிட்டு இருக்கேன்.
இந்த விடயத்துக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா? என மலர் கேட்டுக் கொண்டிருக்க..
ஸ்ருதி என இளமாறன் பதட்டத்துடன் அழைத்தான்.
ஸ்ருதி எழுந்து ஆவேசமாக உணவு தட்டை தள்ளி விட்டவள். என்னை ஏமாத்திடீங்கல்ல இப்போவே என் டாடிய வர சொல்றேன் என எழுந்து சென்றாள்.
என்னாச்சு என வெற்றி மற்றும் மலர்விழி சுற்றிலும் பார்க்க..பல்லவி மலரை பார்த்தார்.
என்னாச்சு அத்தை என மலர் கேட்க... பல்லவி கோபமாக என்னடா நடக்குது? உன் பொண்டாட்டி என்ன சொல்லிட்டு போறா? என்ன டா இதெல்லாம்! என வேகமாக இளமாறன் பக்கம் வந்தவர் கண்ணம் கன்னமாக அரையா ஆரம்பித்தார்.
என்னாச்சு என வெற்றி கேட்க... இளமாறன் தன் அன்னையிடம் மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல என கூற.. அறையின் கதவுகள் திறந்தது. ஸ்ருதி வேகமாக மலரின் முன் வந்தவள். ச்சீ வெட்கமா இல்ல நீ எல்லாம் ஒரு பொம்பளயா? என திட்டினாள்.
என்ன நடக்குது இங்கே என வெற்றி கொஞ்சம் கர்ஜனையான குரலில் கேட்க..
நீங்களே பாருங்க மிஸ்டர் வெற்றி மாறன். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என தலையில் அடித்த படி சோபாவில் அமர்ந்தாள் ஸ்ருதி. அதுல என்ன இருக்கு? என மலர் மற்றும் வெற்றி இருவரும் பார்த்தார்கள். அன்று ரிசப்சனில் மலர் ரெஸ்ட் ரூம் போகிறேன் என சொல்லி விட்டு நேராக ரூம் சென்றாள். ஒரு சில நொடியில் இளமாறன் தன் நண்பர்களுடன் வந்தவன் அவர்களுக்கான அறையை காட்டி விட்டு மலர் இருக்கும் அறைக்குள் நுழைகிறான். இது மட்டுமே அந்த வீடியோவில் இருந்தது.
இளமாறன் ஒரு பக்கம் ஸ்ருதியிடம் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல ஸ்ருதி என்னை நம்பு என கூற இன்னொரு பக்கம் மலர் வெற்றியின் முகத்தில் என்ன உணர்வுகள் பிரதிபலிக்கிறது என பார்த்தாள்.
வெற்றி சாதாரணமாக தன் அன்னையின் பக்கம் திரும்பியவன் அதுல என்ன மா இருக்கு? மலர் ரெஸ்ட் ரூம் போறேன்னு என் கிட்ட சொல்லிட்டு போனாள். இளமாறன் எதையாது எடுக்க உள்ளே போயிருக்கலாம் என்றார்.
பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க என்ன குடும்பம் இது? என ஸ்ருதி மிகவும் கேவலமாக பேசினாள்.
மலருக்கு வெற்றியை நினைத்து உள்ளுக்குள் அலாதி காதல் தோன்றியது. தன் மாமியாரின் பக்கம் சென்றாள். அத்தை நல்லா யோசிச்சு பாருங்க நீங்க என் கிட்ட மோதிரம் எடுத்திட்டு வர சொன்னீங்க. நானும் போனேன் தேடி பார்த்தேன் அந்த நேரம் உங்களுக்கு கால் பண்ணேனே நியாபகம் இருக்கா! என கேட்டாள்.
ஆமா நான் தான் உன்னை போக சொன்னேன் என பல்லவி கூற.. மேலும் மலர், நான் அந்த ரூமுக்கு போய் தேடிட்டு இருக்கும் போது தான் இளமாறன் வந்தார். அப்போ ஸ்ருதிக்கு அவர் போட வேண்டிய ரிங் அவர் கிட்ட கொடுத்திட்டு நான் ஒன்னை மட்டும் எடுத்திட்டு வந்தேன் இது தான் நடந்தது என்றாள்.
அப்படியா சரி இருக்கட்டும் இத்தனை நாள் இல்லாம இப்போ அடிக்கடி பேசுக்கிறீங்க என்ன விசயம்? என் புருஷனை மயக்க பார்க்கிற அப்படி தானே! அங்கே உள்ளே என்ன நடந்தது? என ஸ்ருதி கேவலமாக பார்த்தாள்.
பல்லவி திடுக்கிட்டு இருவரையும் பார்த்தார். ஆமா அத்தை இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறாக ரொம்ப இயல்பா! அப்டின்னா அந்த இயல்பு எப்போ வந்தது? இத்தனை நாள் கழிச்சு எங்கே இருந்து வந்தது? என கேட்டாள்.
இளமாறன் தன் அன்னையின் பக்கம் சென்றவன். சத்தியமா மலர் எனக்கு அண்ணன் பொண்டாட்டியா மட்டும் தான் மா தெரியுறாங்க. எங்களுக்கு நடுவில் எதுவும் இல்ல. நான் சாரி கேட்க போனேன்.
இதை நாங்க நம்பனுமா? இன்னும் உனக்கு என்ன வேணும்? அலைஞ்சிட்டு இருக்க போல.. என் புருஷனை மயக்கி என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற டி! என்ன மாதிரி பொண்ணு டி நீ! ச்சீ! என கேவலமாக பேசினாள்.
பிளீஸ் இப்படி பேசாதீங்க ஸ்ருதி என மலர் ஒரு பக்கம் அழுதாள்.
எல்லாம் என்னை சொல்லணும். உனக்கு அவளை தான் பிடிச்சிருக்குன்னா என்னை ஏன் டா கல்யாணம் பண்ண? உள்ளே போய் என்ன பண்ணீங்க ரெண்டு பேரும் என பச்சையாக கேட்டே விட்டாள் ஸ்ருதி.
ஸ்ருதி என வெற்றி மாறன் கத்த . இளமாறன் பலார் என அவளின் கன்னத்தில் அடித்தான்.
யாரும் இதை எதிர்பார்க்க வில்லை. வெற்றி மலரின் கைகளை பிடித்து கொண்டவன். என் பொண்டாட்டி மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. தப்பான கண்களுக்கு எல்லாமே தப்பா தான் தெரியும். மலர் சாப்பிட்டு முடிச்சிட்டயா? என கேட்டான் வெற்றி..
அவள் தலை அசைக்க வா தூங்க போலாம் என கைகளை பிடித்த படி அவர்களின் அறைக்குள் நுழைந்தார்கள்.
மலர் சொன்னதை போல பல்லவி தான் அனுப்பி வைத்தார். அப்படி என்றால் மலரின் மேல் தவறு இல்ல என தெரிந்தது. வேறு எதையும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.
ஸ்ருதி மற்றும் இளமாறன் இருவரும் அதே இடத்தில் இருந்தார்கள்.
அறைக்குள் வந்ததும் மலர் தன் கணவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள். எனக்கு தெரியும் மாமா! உங்களுக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு என அவள் பாட்டுக்கு சொல்லி கொண்டிருக்க.. வெற்றி அவளின் கையை பிடித்து விலக்கி நிறுத்தினான்.
மலர்விழி...?
வருவான்..

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-33
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.