Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
ரகுவிடம் வேறு வழியில்லாமல் திருமணத்துக்கு சம்மந்தம் சொன்னாள் சீதா. உற்சாகமாக அவளின் கையை கோர்த்து கொண்டு முன்னால் நடந்தான்.

"ஒரு நிமிசம்"

என்ன? என் கம்பீரமான குரல்.. எப்படி கல்யாணம் பண்ணிக்க போறோம்? என்றாள் அவனை பார்த்து.

உனக்கு எப்படி பண்ணனும்னு சொல்லு! என ரகு கேட்க..

எங்க அப்பா என்கூட இருக்கணும். என்னோட கல்யாணம் எங்க அப்பா ஆசைப்பட்ட படி கிராண்ட்டா நடக்கணும். எங்க அப்பாவை பத்தி யாரும் எந்த வார்த்தையும் தப்பா பேச கூடாது. பிரம்மாண்டமாக நடக்கணும் எல்லாரும் அசந்து போகனும் என்றாள்.

இதெல்லாம் ஓகே ஆனால் இப்போ உடனே எப்படி? இப்போதைக்கு தாலி கட்டிடவா! அப்புறம் நீ சொன்ன மாதிரி பிரம்மாண்டமாக ரிசப்ஷன் வைக்கலாம் உனக்கு ஓகே தான!

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தவள். ஒரு நிமிசம் என்னை எக்காரணத்தைக் கொண்டும் படிப்ப நிறுத்த சொல்ல கூடாது.

"ம்ம்"

ஒரு நிமிசம் என் தம்பி எங்க அம்மா ரெண்டு பேரையும் எங்க அப்பா வர வரைக்கும் பத்திரமா பார்த்துக்கணும்.

தாராளமா பண்ணிடலாம். என்றான் சன்னமான புன்னகையுடன்..

"ஒரு நிமிசம்"

"ம்ம்" என ரகு அவளின் பிஞ்சு விரலை மெல்ல வருடினான்.

இப்போதைக்கு நமக்குள்ள!... என அவள் இழுக்க..

இந்த ஒரு நிமிசம் நீ சொன்னதை என்னால ஏத்துக்க முடியாது. என கூறி விட்டான் விடாபடியாக..

சீதா நொந்தபடி நிற்க.. உன்னை சம்மந்தப்பட்ட, என்னை சம்மந்தப்பட்ட எல்லாத்துலயும் உன்னோட விருப்பம். ஆனால் இந்த ஒரு விசயத்துல நான் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். என்றவன் அவளுடன் வந்தான்.

சீட்டு போட்ட அனைவரும் தங்களது பணத்தின் நிலை என்ன என புரியாமல் இருக்க..

ரகுவரன் சீதாவின் தோல் மேல் கை போட்டு கொண்டு நேராக தன் தந்தையின் முன்னால் சென்றவன். ப்பா எனக்கு சீதாவை பிடிச்சிருக்கு. நான் இவளை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன். நீங்க என்ன பா சொல்றீங்க? என கம்பீர தொனியில் கேட்டான்.

சதாசிவம் ஒன்றும் புரியாமல் பார்க்க..

அப்பா நான் சொல்றது புரியலயா உங்களுக்கு?

இல்ல ரகு! நீ அவங்க அப்பா கடனை அடைக்க கல்யாணம் பண்ணிக்கல தானே! உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவள் எப்படி?

அப்பா நீங்க சொல்லுங்க! எனக்கு இவள் மேலே விருப்பம். இது தான் சத்தியம். என்றான் உறுதியுடன்.

உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பமும் என சதாசிவம் சொல்லி வாயை மூடவில்லை. அப்போ நல்லது என்றவன். அங்கிருக்கும் அனைவரின் முன்னிலையில் கண் மூடி திறப்பதற்குள் தாலி கட்டியிருந்தான் சீதாவின் கழுத்தில்..

சீதா அதிர்ச்சியுடன் நிற்க.. சதா சிவம் கூட இதை எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியுடன் நின்றார்.

ரகுவரன் அவளின் கைகளை பிடித்து நேராக சதாசிவத்தின் காலில் விழுந்தான் ஆசிர்வாதம் வாங்க.. கீ கொடுத்த பொம்மை போல அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள் சீதா.

விஜயா பக்கம் சென்று தன் அம்மாவை கட்டி கொண்டாள் சீதா.

நீங்க கவலை படாதீங்க! உங்களை விட நூறு மடங்கு அவளை நல்லா பார்த்துப்பேன் என்றவன் அதே இடத்தில் சுந்தர மூர்த்தியிடம் சீட்டு போட்டு ஏமார்ந்த அனைவருக்கும் பணத்தை கொடுத்து செட்டில் செய்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டான். பணம் வாங்கி கொண்ட அனைவரும் கையெழுத்து போட்டு விட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தார்கள்.

சதாசிவம் தன் மகனை பார்க்க, கவலை படாதீங்க பா! இது நீங்க சம்பாதித்த பணம் இல்ல. இது என்னோட உழைப்பில் நான் சம்பாதிச்சது. என கூறினான் ரகுவரன்.

இல்ல ரகு நான் அப்படி நினைக்கல என சதாசிவம் கூற..

சொல்ல வேண்டியது என்னோட கடமை! என் பொண்டாட்டிக்கு இருக்க பிரச்சனையை என்னோட பணத்தை கொண்டு தான் அடைச்சென். அதை சொல்லி தெளிவு படுத்தனும்ல நாளைக்கே பரத், சந்துரு ரெண்டு பேரும் என்னை தப்பா நினைக்க கூடாது என்றான் ரகு.

இல்ல ரகு யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க நீ வா நம்ம போலாம் என சதாசிவம் அழைக்க.. கிரியை அழைத்த ரகு விஜயாவுக்கும் சீதாவின் தம்பி கவுதமுக்கும் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து பார்த்து கொள்ள சொல்லி விட்டு சென்று விட்டிருந்தான்.

ம்ம் வீடு வந்திடுச்சு இறங்கு என சீதாவின் முதுகை வருடி விட்டான் ரகுவரன். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் தெரியுமே!

(நிகழ் காலத்தில்)

வண்டியை விட்டு இறங்கு என்றான் ரகு.

வேதனையும் விரக்தியும் முகத்தில் மறைத்து மெல்ல வெளியே வந்தாள் சீதா.

உள்ளே போ! நான் லக்கேஜ் எடுத்திட்டு வரேன் என ரகு கூறியபடி அவனது வேலையை பார்த்தான்.

சீதா கைகளை தேய்த்தபடி நேராக அந்த ரிசார்ட் அறைக்குள் நுழைந்தாள்.

தங்கபொண்ணு சீதா என குரல் கேட்க..வெடுக்கென திரும்பினாள் சீதா.

அப்பா! என கண்களில் நீர் வழிய வேகமாக சென்று தன் தந்தையை அணைத்து கொண்டாள்.

ப்பா எல்லாரும் உங்களை பத்தி என்னன்னவோ சொல்றாங்களே பா! நீங்க நிஜமாவே பணத்தை ஏமாத்திட்டு தலை மறைவா இருக்கீங்களா? என அழுதபடி தன் தந்தையிடம் கேட்டாள் சீதா.

சுந்தர மூர்த்தி தலையை குனிந்தவர் ஒரு பெரு மூச்சை விட்டபடி "சீட்டு பணத்தை மொத்தமா அந்த சங்கரு டிரேடிங்ல போட்டு பணம் மொத்தமும் திவால் ஆகி போச்சு மா! நான் யாரோட பணத்தையும் ஏமாத்தல பணம் எல்லாமே மொத்தமா அவன் டிரேடிங் பண்ணி இப்படி ஆகிடுச்சு"

எதுக்கு பா தேவையில்லாத வேலை பண்ணீங்க! ஒரு காசா ரெண்டு காசா கிட்ட தட்ட 50 லட்சத்துக்கு மேல போட்டு இப்படி ஏமார்ந்து போயிட்டீங்களே பா! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே பா! நான் முன்னாடியே எச்சரிக்கை செஞ்சிருப்பேனே! என கண்ணீர் விட்டு அழுதாள் சீதா.

என்னை மன்னிச்சிடு சீதா எல்லாமே என்னோட தப்பு தான் மா! என சுந்தர மூர்த்தி கண்ணீர் விட்டார்.

அதுக்காக நீங்க எதுக்கு பா இங்கே வந்து தலைமறைவா இருக்கீங்க? நம்ம அந்த சங்கர் மேலே கம்ப்லைன்ட் கொடுக்கலாம் அது எந்த டிரேட் ஆப் அதை சொல்லுங்க என சீதா கேட்க..

சுந்தர மூர்த்தி அதன் விவரங்களை போனில் காட்டினார். சாப்பாடு ரெடி என விஜயாவின் குரல் கேட்க..

அம்மா! என தன் அன்னையை பார்த்தாள் சீதா.

மாப்பிள்ளை வாங்க வாங்க சீதா உள்ளே வா! என்னங்க வாங்க! என அனைவரையும் அழைத்தார்.

மா நீ எப்டி இங்கே வந்த? ஏன் மா எனக்கு ஒரு போன் கூட பண்ணல! நான் எத்தனை தடவை உனக்கு முயற்சி செஞ்சேன் என கேட்டாள் சீதா.

நான் தான் வேணாம்னு சொன்னேன் என சுந்தர மூர்த்தி கூறினார்.

என்ன பா சொல்றீங்க? என சீதா கேட்க..

இனி நான் அங்கே வரல சீதா! நானும் அம்மாவும் இங்கேயே இருந்துக்கிறோம் கவுதம இங்கேயே ஸ்கூல் சேர்த்திட்டேன் என்றார் சுந்தர மூர்த்தி.

சீதா அடுத்து பேச வர, மாப்பிள்ளை நீங்க மட்டும் இல்லன்னா! நான் என கண்ணீர் மல்க பார்த்தவர். இந்த உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் ரொம்ப நன்றிங்க மாப்பிள்ளை என கையெடுத்தார்.

என்ன பண்றீங்க மாமா! பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க! அப்படி எல்லாம் ஒன்னுமில்லை என பெருந்தன்மையாக கூறினான்.

சீதா எதுவும் பேசாமல் மவுனமாக அவர்களை பார்த்தாள். வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம் என சுந்தர மூர்த்தி அழைக்க.. வரேன் மாமா! முதலில் சீதாவை கவனிங்க என ரகுவரன் கூறி விட்டு குளிக்க சென்றான்.

சீதா தன் தந்தை ஊட்டி விட வயிறு நிறைய சாப்பிட்டாள் கூடவே மன திருப்தியும் சேர்ந்து. சுந்தர மூர்த்தி ஒரு மாதம் தலைமறைவாக இருந்தார். சீதா அவரின் மடியில் படுத்து கொண்டாள்.

எப்போ மா இங்கே வந்த? நீங்க எப்டி பா இங்கே? நிலத்தை விக்கிறேன்னு தானே வந்தீங்க என்னாச்சு பா? என சீதா கேட்க..

உன்னோட பெரிப்பா சித்தப்பா அத்தை எல்லாரும் பங்கு கேட்க வந்துட்டாங்க சீதா. இல்லன்னா பணத்தை செட்டில் பண்ணிட்டு வித்துக்க அப்டின்னு பெரிய பிரச்னை! என்னால எதுவும் முடியல! அதான் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண போராடிட்டு இருந்தேன் என்றார் சுந்தர மூர்த்தி.

அம்மா நீ எப்படி? என கேட்க.. உன் புருசன் தான் என்னையும் கவுதமையும் இங்கே அப்பா கூட சேர்க்க ஏற்ப்பாடு பண்ணாரு. நல்ல மனுஷன் என்றார் புன்னகையுடன்..

ப்பா நம்ம திருச்சிக்கு போலாம் பா! என சீதா அழைக்க..

வேணாம் சீதாமா அங்கே அவமான பட்டுட்டேன் இனி அங்கே என்னால வர முடியாது. இந்த சீட்டு சேர்த்துற வேலையை வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்போ என்ன தான் பண்ண போறீங்க? கவுதம எப்டி படிக்க வைக்க போறீங்க? வேலை செய்யணும். எந்த மாதிரி வேலை பண்ண போறீங்க? என தொடர்ந்து கேட்டாள்.

இங்கே ரிசார்ட்ல மேனேஜர் வேலை இருக்கு எனக்கு மாப்பிள்ளை வாங்கி கொடுத்தார். அதை செஞ்சுக்கிட்டு இங்கேயே இனி இருந்துக்க பார்க்கிறேன்.

சீதா எதுவும் பேசாமல் மவுனமாக தன் தந்தையை பார்க்க, அங்கே வந்தால் தேவையில்லாம பிரச்னை வரும் மா! எவ்வளவோ உதவி மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு செஞ்சிருக்கார். இதுக்கு மேலே அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பல நான். அதான் சொல்றேன் நீ மாப்பிள்ளை கூட சந்தோசமா இரு எங்களுக்கு அது போதும். என்றார் சுந்தர மூர்த்தி.



சீதா ...?

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
Raghu namma Seetha voda manasula 💞 overall hero aagitaru pola Sis 🤩. Ini namma Seetha will be in a full form 💕 💕💕💕💕. Story Superb and very interesting Sister 👌👌👌🔥🔥🔥👍😍.
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
77
Enna dhaan hero nalladhe pannalum kuththam kandupidikkuradhu dhaane heroine velai... Avn enna pannalum avala kaasu koduthu vaangittu vandhadha dhaan seetha ku thonum
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
61
Superrrrrrrrrr ❤️❤️❤️❤️❤️
 
Top