Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
மலர்விழி புடவையை கட்டிக் கொண்டிருக்க, திருட்டு பூனை காலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. மாமா என்ன பண்றீங்க? கொஞ்சம் நகருங்க!! என நழுவிய புடவையை மீண்டும் அள்ளிக் கொண்டு கட்ட ஆரம்பித்தாள்.

இன்னிக்கு லீவ் தானே! என் கூட ஆபிஸ் வாயேன்! என அவளின் தாலி தொங்கி கொண்டிருக்கும் இடத்தை சரி செய்தான் வெற்றி.

எதுக்கு? அங்கே எனக்கு என்ன வேலை? என மீண்டும் கொசுவத்தை சேர்த்தாள் மலர்விழி.

"எதுக்குன்னா? எல்லாம் அதுக்கு தான்!" என வெற்றி அவளின் நெற்றியில் முத்தமிட..

ச்சீ! போதும் ஆபிஸ் போயிட்டு வாங்க மத்ததை எல்லாம் நைட்டு பேசிக்குவோம் என்றாள் மலர்விழி அவனிடம் இருந்து நகர்ந்த படி..

இன்னிக்கு நான் லீவு டி! ஆபிஸ் போகல என அவளை கட்டிலுக்கு இழுத்தான் வெற்றி.

என்ன பண்றீங்க? எதுவா இருந்தாலும் நைட்டு தான்! என அவள் அவனை தள்ளி விட... ஹே அப்புறம் எப்படி கணக்கை சரி பண்றது கணக்கு டீச்சர்?

என்ன கணக்கு சரி பண்ணனும்? என டிரெஸ்ஸிங் டேபிள் வந்து ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள் மலர்விழி.

"36 வருஷம் பண்ணாத விசயத்தை 365 நாளில் பண்ணி முடிகிறதா ஒரு பிளான் போட்டிருக்கேன். அதுக்கு உன்னோட கோஆபரேசன் வேணும் டி!" என்றான் வெற்றி அசால்ட்டாக..

அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, என்ன அப்படி பார்க்கிற? ஓ நீ அப்படி வரியா? நீ யோசிக்கிற விசயமும் சரி தான்! உனக்கு இப்போ 26 அப்போ கணக்கு படி நீ 265 நாள் என கண் அடித்தான் வெற்றி.

"அடி விழும்!"... தேய்ச்சு விடவும் தடவி விடவும் நீ இருக்கியே என இரு புருவம் தூக்கினான் வெற்றி.

அய்யோ என காதை அடைத்தாள் மலர்விழி. என் எனக்கு மட்டும் ஏன் இப்படி கேட்குது? எல்லாமே வேற மாதிரி வேற மாதிரி கேட்குதே? என அவள் வாய் மொழியாக உளறி கொண்டிருக்க, ஓ அப்போ நான் கெட்ட பையன்னு சொல்ற? அது தான! என வெற்றி அவளை பார்க்க... பின்னர் நீங்க நல்லவனா? என இடையில் கை வைத்து மிரட்டும் தொனியில் பார்த்தாள் மலர்விழி.

அப்படியா வாடி! இங்கே வாடி! என மெத்தையின் மேல் சம்மணமிட்டு அமர்ந்தான்.

எதுவா இருந்தாலும் அங்கே இருந்தே சொல்லுங்க! நான் இங்கே இருந்தே கேட்டுக்கிறேன் என மலர்விழி கூற...

ஹே வாடிஇஇ! என்னோட தன்மானத்தை ரொம்ப சீண்டி விட்ட! இனி நீயா பக்கத்தில் வர வரைக்கும் நான் உன்னை ம்ம் ஹிம் என்றான் வெற்றி.

ஓ அப்படியா! டிக்னிட்டி ஆபிசரை நம்பலாமா? என மலர் அவனை ஆராயும் விழிகளில் பார்த்தாள்.

"வா முதல்ல!" என புருவத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அழைத்தான். அப்படி என்னவா இருக்கும்? என யோசித்த படி சென்றாள் மலர்விழி.

"உன்னோட போன் எடு!"

எதுக்கு?

எட்ரீ! என இழுத்தான் வெற்றி.

ம்ம் எடுதாச்சு... யார் கிட்ட பேச போறீங்க? என மலர் கேட்க... அதுல யூ ட்யூப் போ!

பாருடா யூ ட்யூப் பார்ப்பீங்களா? என்ன? என கேட்ட படி சென்றாள்.

"அதுல உன்னோட பாட்டு போடு!"

என்ன என்னோட பாட்டு? என மலர் கண்களை அகலமாக விரித்து பார்த்தாள்.

"அது தான் அன்னிக்கு லோ ஹிப் தெரிய கையை தூக்கிட்டு ஹாலில் ஆடுனியே!" என வெற்றி அசால்ட்டாக கூறினான்.

டிக்னிட்டி ஆபிசர் அங்கெல்லாம் பார்க்கலாமா? அப்போ அப்போ அன்னிக்கு! அன்னிக்கு நீங்க அதை பார்த்தீங்களா? என டோராவை போல கேட்டாள் மலர்விழி.

இதுக்கே இவள் இப்படி சாக் ஆகிறாளே! நான் டெய்லி வேக் அப் கிஸ் கொடுத்து எடுத்துக்கிறேனே! அது தெரிஞ்சா என்ன பண்ணுவா? என யோசித்த வெற்றியின் உதட்டில் மெல்லிய புன்னகை குறும்புடன் மின்னியது.

"ஹலோ சார்! எதுக்கு போனை எடுக்க சொன்னீங்க?" என மலர் வெற்றியை பிடித்து உலுக்கினாள்.

அட ஆமாம்ல இப்போ மேட்டருக்கு வரேன். என்றவன்.

"சரி அந்த பாட்டை போட்ரி!"

எதுக்கு போட சொல்றீங்க? என மலர் கேட்க... போடுறதுக்கு முன்னாடி அப்படியே மேலே ஏறி என்னை போல உட்காரு. என்றான் வெற்றி.

எதுக்கு?

ஹே டீச்சர் தானே டி! நீ! ம்ம் சத்தம் ஏறி உட்காரு என அதட்டினான்.

அய்யோ என்ன பண்ண போறார்? என ஏறி அமர்ந்தாள்.

ம்ம் இப்போ பாட்டை போட்டு என் கிட்ட கொடு என அவளிடம் இருந்து போனை வாங்கி கொண்டான்.

பாட்டு ஆரம்பித்தது. மலர் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க, என்னை கெட்ட பையான்னு சொன்னல்ல டி! இந்த பாட்டில் இருக்கும் வரிகளுக்கு அர்த்தம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா மேடம்! உங்களுக்கு இது தான் ரொம்ப பிடிச்ச பாட்டாச்சே! கேளு டி! என்றவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் வெற்றி.

பாடல் வரிகள் ஆரம்பித்தது.

விரலு பட்டுபுட்டா

விறகில்லாம தீ புடிக்கும்

வெட்கம் கெட்டு போகாதா என வரிகள் ஓடிக் கொண்டிருக்க.. மலர் விழி மலங்க மலங்க விழித்தாள். வெட்கம் ஒரு பக்கம் அவளை கொல்லாமல் கொல்ல ஒவ்வொரு நிமிடமும் வெற்றியின் பார்வை அவளை துகில் உரித்து கொண்டிருந்தது.

தலையையும் குனிய முடிய வில்லை. வெற்றி அவளை கூர் பார்வையுடன் மொத்தமாக ஆடவும் அசையவும் முடியாமல் அவனது பார்வை அவளை கட்டி போட்டிருந்தது.

நீ தொடுவதா தொட்டுக்கோ

சொந்தத்துல வரைமுறை இருக்கா e

ஆண் : நீ பொம்பள தானே

உனக்கு அது நியாபகம்

இருக்கா.. என வரிகளில் வெற்றி அவளை பார்த்து புருவத்தை தூக்கினான்.

பெண் : உன் நெனப்பு தான்

நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆ... என்ன மா மலரு பச்சை குத்துதா! என அவளை பார்த்து குறும்புடன் கேட்டான் வெற்றி.

இப் இப்போ எதுக்கு இந்த பாட்டு போட்டு என் என்னை இப்படி உட்கார வச்சிருக்கீங்க? என தலையை நட்டுக் கொண்டு கேட்டாள்.

வெற்றி உதட்டை மடித்துக் கொண்டு சிரித்தவன். இந்த மாதிரி பாட்டுக்கு அப்படியே உடம்பை வளைச்சு ஆட்டம் போட்டுட்டு என்னை கெட்ட பையன்னு சொல்றீங்களே மேடம் இது ஒரு டீச்சர் பண்ற வேலையா? இப்போ யாரு கெட்ட பொண்ணு? என அவளை குனிந்து பார்த்தான்.

அத்!! அத்!! அது வந்து ந... நா... நான் எனக்கு எப்படி தெரியும்? இந்த பாட்டுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்? நா நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு! இப்படி என்னை கெட்ட பொண்ணு சொல்லாதீங்க! என்றாள் மலர்விழி வெட்கம் மின்ன...

வெற்றி உதடு பிரித்து அழகாக சிரித்தான்.

மாமா சிரிக்கிற வேலை வச்சுக்காதீங்க! எனக்கு பயங்கரமா கோபம் வரும். என சினிங்கினாள் மலர்.

ஹே பிளீஸ் டி! I can't control.. உன்னை இந்த மாதிரி நான் பார்த்ததே இல்ல டி! என வெற்றி அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.

முகத்தை மூடி கொண்டாள் அவள்.. "மலரே ஒத்துக்க டி! நீ கெட்ட பொண்ணு தான!"

நான் ஒன்னும் கெட்ட பொண்ணு இல்ல. நீங்க தான் கெட்ட பையன்? என்றவள் அவனை முறைத்து பார்த்து இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும். நீங்க டிக்னிட்டி ஆபீசர் தானே! உங்களுக்கு எப்டி தெரியும்? என மலர் கேட்க.. வெற்றி அவளை பார்த்து ஒற்றை கண் சிமட்டியவன் உன்னை... உன்னை பார்த்ததும் தேடி தேடி கத்துக்கிட்டேன் என்றான் வாய் கூசாமல்.

மலர் அவனை முறைத்து பார்க்க, ஆமா ஆமா நாளைக்கு என்னை லீட் கூட பண்ணுவ! யாருக்கு தெரியும் என்றான் இரட்டை தொனியில்.. அவனது வாயில் இருந்து வரும் அனைத்து விஷயங்களும் சென்சார் தான் போட வேண்டும் போல... அவளால் சுத்தமாக நம்ப முடிய வில்லை. அவள் சிந்தையில் இருக்க அவனது சிந்தை முழுவதும் மலர் மேல்.. முத்தமிட நெருங்கினான்.

என்ன பண்றீங்க? பக்கத்தில் வர மாட்டேன்னு சொன்னீங்க? என மலர் கண்கள் விரிய பார்த்தாள்.

நீயா வந்து தானே இங்கே உட்கார்ந்த?

நீங்க கூபீட்ரீங்க அதான் வந்தேன்!

சோ அவ்ளோ தான் மேடம் வந்தால் வந்தது தான். என அவளை இழுத்து வைத்து முத்தமிட்டான். செர்ரி நிற உதடுகள் இன்னும் சிவந்து போனது.

வெற்றி சாப்பிட வா! என பல்லவி கதவை தட்டி விட்டு செல்ல வேகமாக அவனிடம் இருந்து பிரிந்தாள் மலர்.

"ஹே பினிஷ் பண்ணுடி"

மாட்டேன் என உதட்டை துடைத்துக் கொண்டு புன்னகையுடன் வெளியே வந்தவள் கண்களில் இளமாறன்.

மலரின் பின்னால் வந்த வெற்றியும் பார்த்தான் இளமாறனை.

வருவான்.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
61
Superrrrrrrrrr 👌👌👌👌👌👌👌 daily episode podunga sis 👍
 
Top