வெற்றி சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன். யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு மெதுவாக அவனது போனை எடுத்து அந்த பாடலை தேடினான். உன் உதட்டோர சிவப்பு என லட்சுமி அம்மா கேட்டு கொண்டிருந்தது இப்பொழுது கூட ஆழமாக பதிந்தது. இதோ பிடித்து விட்டது கடுவன் பூனை.
கண்களில் கூர்மையுடன் பாடலை பிடித்தவன். காதில் ஹெட் செட்டை 50 டெசிபலில் வைத்தான். அதிக சத்தம் காதுக்கு நல்லதில்லை ENT டாக்டர் பரிந்துரைக்கும் சத்தத்தை அளவாக வைத்து கேட்க ஆரம்பித்தான். "அப்படி என்ன தான் இந்த பாட்டில் இருக்கு? வீட்ல நேத்து அவ்ளோ சவுண்ட் வச்சு மலர் விழி கேட்டாள். இன்னிக்கு ஆபிஸில் லட்சுமி அம்மா வேற அதே பாட்டை பாத்திட்டு இருக்காங்க? நம்மோட போன்ல இந்த மாதிரி ஒரு நாள் கூட சஜசன் காட்ட மாட்டிக்குதே?" என தனக்கு தானே புலம்பியவன். இன்னிக்கி கேட்டுட வேண்டியது தான். என காதுகளில் இனிமையான இசையும் அவனது விழி திரையில் நேற்று மலர்விழி ஆடிய காட்சிகளே தோன்றியது..
உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேட்கும்
கடனா கேட்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்
உளவு பார்க்கும்
என் செவ் வாழைதண்டே ஏ.....
என் செவ்வாழை தண்டே
சிறு காட்டுவண்டே
உன்ன நெனச்சு தான் எச பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா
இத கேட்டு... என அவளது செர்ரி பழ உதடுகள் கண் முன் தோன்ற அப்படியே நாவில் தித்தத்தது. கூடவே எட்சிழை கூட்டி விழுங்கினான் வெற்றி.
சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டு அப்படியே தலையை கோதினான் வெற்றி. என்ன மிஸ்டர் வெற்றி மாறன் உள்ளே வரலாமா? என கேட்டுக் கொண்டே கதவை தட்டினார் அட்வகெட் சரவணன்.
ஆனால் வெற்றியின் நினைவுகள் மொத்தமும் பாட்டிலும் மலர்விழியிலும் நிலைத்திருக்க, அதை சரவணன் அறிய வில்லை. என்ன இவன் சிரிக்கிறான்? இத்தனை வருட காலமும் இவன் சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே? என மீண்டும் மீண்டும் அழைத்தார் டேய் வெற்றி! வெற்றி மாறா! உன்னை தான் டா! என என அவர் கத்தினார்.
லட்சுமி அம்மா, வினோத், ராதா, என அனைவர் பார்வையும் வெற்றியின் அறை பக்கம் திரும்பினார்கள். இவன் என்ன பண்ணா? நமக்கு என்ன? ஏற்கனவே அந்த வெற்றி பையன் நிறைய வேலையை கொடுத்திட்டான் அப்புறம் இன்னும் கொஞ்சம் வேலையை கொடுத்துட்டா என்ன பண்றது? என அவர்களின் வேலையை கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.
சரவணன் உடனே வெற்றியின் எண்ணுக்கு அழைத்தார். திடீரென போனில் ரிங் வர, சட்டென போனில் கவனம் செலுத்தினான். சொல்லு சரவணா!
உள்ளே வரலாமா? என எட்டி பார்த்தார் சரவணன்.
வா என அதே கூர் பார்வையுடன் கூறினான் வெற்றி. சரவணன் அவனிடம் ஆர்வமாக பேச வர, உடனே வேலையை பற்றி மூச்சு விடாமல் ஆயிரம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறிய சரவணன் அவனை பார்த்து "நீ கேட்ட எல்லா விடயத்தையும் தெளிவா விவரித்து சொல்லிட்டேன்."
ஆல் செட்! அண்ட் லட்சுமி அம்மா கிட்ட இன்னொரு முறை அந்த பட்டா டாக்குமெண்ட் பத்தி சந்தேகங்களை க்ளியர் பண்ணிட்டு கிளம்பு என்றான் வெற்றி.
"டேய் என்ன ஒரு மாதிரி இருக்க?" என சரவணன் அவனை சந்தேகமாக பார்க்க, என்ன மாதிரி இருக்காங்க? நான் எப்போவும் போல தான் இருக்கேன். நீ தான் வர வேண்டிய நேரத்துக்கும் வராமல் பத்து நிமிசம் லேட்டு. அது கூடவே சாரதா, கோபால், முத்து ராஜ் மூணு பேருக்கும் லீவ் கொடுத்திருக்க? இத்தனை வேலை பெண்டிங் இருக்கு இதெல்லாம் யாரு முடிக்கிறது? என அடுக்கினான் வெற்றி.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்புறம் கல்யாண வாழ்க்கை எப்படி போகுது? என கேட்டான் சரவணன்.
பெகூலியரா அதை பத்தி சொல்ல என்ன இருக்கு? ஒரு பக்கம் அது பாட்டுக்கு போயிட்டு இருக்கு. என்றான் வெற்றி.
சரவணன் தனது நண்பனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன். அப்படியா சரி பாரு என எழுந்து விட்டான்.
என்ன திடீர்னு இதை பத்தி கேட்கிற? என்ன விசயம்? என வெற்றி கேட்க, உனக்கு தான் என் கிட்ட இதை பத்தி பேசவே விருப்பம் இல்லையே அப்புறம் நான் என்னத்த சொல்லட்டும் என வக்கில் பாயின்டாக எடுத்து விட்டான் சரவணன்.
எதுவுமே தெரியாத மாதிரி பேசாத சரவணா! என்னோட வாழ்க்கையில் ட்ராஸ்டிக் சேஞ் நடந்திருக்கு. என எந்த உணர்வையும் பிரதிபலிக்காத முகத்தில் கூறினான்.
சரவணன் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு நீ பழய விசயத்தை நினைச்சு போட்டு மனசை குழப்பிக்காத என எதிரில் அமர்ந்தான்.
"அப்போவும் என்னை பொண்ணுக்கு பிடிக்கல"
டேய் அந்த பொண்ணு வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருந்திருக்கா அதை இது கூட ஒப்பிட்டு பார்க்காத என சரவணன் எடுத்து கூற, இப்போ பெருசா ஒரு மாற்றமும் இல்ல நான் சப்ஸ்ட்டியூட் என்றான் வெற்று புன்னகையை சிந்திக் கொண்டே.
"இல்லவே இல்லை அப்படி இருந்தால் மலர்விழி கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்க" என்றான் சரவணன்.
வெற்றி திடுக்கிட்டு சரவணனை பார்த்தவன். "என் அம்மா உன் கிட்ட பேசினார்களா? என கேட்க, டேய் இளமாறன் கல்யாண பத்திரிக்கையில் பார்த்தேன்."
வெற்றி எதுவும் பேசாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். டேய் நீ தேவையில்லாம காம்ப்லிகேட் பண்ணிக்கிற. மலர்விழி உனக்காக படைக்கப்பட்ட பொண்ணு டா! அது தான் கடவுள் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்காரு.
"எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்ல" நீ ஒரு வக்கிலா இருந்துட்டு இப்படி சொல்றது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அதை விட எனக்கும் அவளுக்கும் பத்து வருஷ வித்தியாசம் இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியல என்றான் வெற்றி.
இந்த படத்தில் எல்லாம் ஹீரோவுக்காக பொறந்த பொண்ணு எங்கே இருக்காளோ அப்டின்னு ஒரு வசனம் வருமே அது போல நீ பிறந்து பத்து வருஷம் கழிச்சு உனக்காக ஒரு பொண்ணு பிறந்து வந்திருக்கா! அப்படி நினை மச்சி! உனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. முதல்ல அப்படி தான் இருக்கும் ஆனால் போக போக சரி ஆகிடும். கூடிய சீக்கிரம் நீ மாறுவன்னு நம்பிக்கை இருக்கு. அப்போ உன்னை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பேன். நீயும் மலர்விழியும் சேர்ந்து வாங்க என்று விட்டு சரவணன் கிளம்பி விட்டான். இருவரும் ஒரே இடத்தில் எல்லையில் வேலை செய்தவர்கள். அதன் பின் இங்கு வந்து 24 ஹவர்ஸ் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் பத்திர ஆபிஸ் வைத்திருக்கிறான். இந்த பத்திர ஆபிஸில் சரவணன் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து நடத்துகிறார்கள்..
வெற்றி அனைத்து விசயங்களையும் யோசித்து பார்த்தான். ஒரு பக்கக் மலர்விழிக்கு முத்தமிட்ட நிகழ்வு தான் திரும்ப திரும்ப தோன்ற... அய்யோ என சலித்துக் கொண்டான்.
இங்கே தடபுடலாக பிரியாணி தயாரானது. அத்தை ரொம்ப நல்லாருக்கு வாசனை ஆளை இளுக்கிது என மலர் சொல்ல, நீ போயி ட்ரெஸ் மாத்திட்டு வா விரசா ஓடு என கூறினார். எதுக்கு த்த என மலர் கேட்க, கேரியர்ல கட்டிட்டேன் மலரு இப்போ பிரகாசு வருவாப்ல பொற்கொடியை விட நீ என்ன பன்றன்னா அப்படியே அண்ணன் கூட போய் வெற்றி ஆபிஸ்ல போயி இறங்கிக்கோ கண்ணு. ரெண்டும் பேரும் சேர்ந்து சாப்பிடுங்க. என்றார்.
மலருக்கு உள்ளுக்குள் ஒரு வித பதட்டம் நிலவியது. அய்யோ என அவள் விதிர்விதிர்த்து நிற்க. என்ன கண்ணு நிக்கிற வா வா என தலைவாழை இலையுடன் நின்றிருந்தார். பிரகாஷ் வர போ கண்ணு என அனுப்பியே விட்டார் என்ன செய்வது என தெரியாமல் அவளும் பிரகாசுடன் கிளம்பி விட்டாள்.
மலர் இது தான் மா ஆபிஸ். என இறக்கி விட்டான். அவள் எதுவும் பேசாமல் இறங்கினாள். பிரகாஷ் அவளின் முகத்தை பார்த்து விட்டு என்னாச்சு மா! உன்னோட முகம் வாட்டமா இருக்கே! எதுவும் பிரச்சனையா? என கேட்டான்.
அது அது வந்து கொஞ்சம் எல்லாமே புதுசா இருக்கு அண்ணா என அமைதியாக கூறினாள். பிரகாஷ் ஒரு பெரு மூச்சை விட்டு, உனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது மா! ஆனாலும் ஒரு விசயம் சொல்றேன் இளமாறன விட வெற்றி மச்சான் ரொம்ப தங்கம். வயது வெறும் எண்கள் மட்டும் தான் என்னோட பார்வையில்.. உன்னோட வேவ் லென்த்துக்கு அவரால யோசிக்க முடியாது தான். என பிரகாஷ் சொல்ல வர...
இல்ல இல்லன்னா அப்படி இல்ல. நான் அவரை தப்பா நினைச்சது இல்ல. திடீர்னு எல்லாமே!! அதை விட இதே இடத்தில் நான் அவரோட தம்பி பொண்டாட்டியா வந்திருக்க வேண்டியவ. இப்போ அவரோட பொண்டாட்டியா மாறி.... சொல்ல போனால், எனக்கு அவர் வாழ்க்கை கொடுத்திருக்கார். எனக்கு அந்த குற்ற உணர்ச்சி தான் என கூறினாள் மலர்.
பிரகாஷ் நிம்மதியுடன் உனக்கு அந்த தயக்கம் எல்லாம் வேணாம். அப்படி எல்லாம் நினைச்சுக்காத! அவரோட தயக்கத்தை போக்க கொஞ்சம் இயல்பா பேசி பழகு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா செட் ஆகிடும் என கூறி விட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் பெரு மூச்சை விட்ட மலர் வெற்றியின் ஆபிஸின் உள்ளே நுழைந்தாள். பிரகாஷ் சொன்ன அனைத்தும் உண்மை தான். ஆனாலும் தன்னை தவறாக வெற்றி நினைத்து விட்டால் என ஒரு தயக்கம் தான். கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மலர்.
நாளை செக்யூரிட்டி அலோகெட் விசயமாக வெற்றி நேராக மலர் பணிபுரியும் பள்ளிக்கு சென்றிருந்தான். அங்கே தான் மலர் அவனை முதன் முதலாக ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தாள்.
வருவான்.