Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
மலர்விழி தயக்கத்துடன் வெளியே நின்று கொண்டிருந்தாள். அதன் பின் ஒரு பெரு மூச்சை விட்டு உள்ளே நுழைந்தாள்.

யாரது? என லட்சுமி அம்மா, ராதா, வினோத் மூவரும் பார்த்தார்கள். அவள் வினோத்தை பார்த்து விட்டு இங்கே வெற்றி சார் ஆபிஸ் தானே இது? என மலர் கேட்க, ஆமா நீங்க? என வினோத் கேட்க, அங்கே என்ன சத்தம் என கேட்டுக்கொண்டே வெளியே வந்தான் வெற்றி.

என்னங்க? என மலர் அவனை பார்த்ததும் கை அசைத்தாள்.

நீ என்ன பண்ற? என வெற்றியின் பார்வை லட்சுமி, ராதா மற்றும் வினோத் என மூவரையும் பார்த்தது.

உங்களுக்கு லஞ்ச் கொண்டு வந்தேன் என நின்றாள் மலர். லஞ்ச்சா? என ராதா மற்றும் லட்சுமியின் கண்கள் விரிந்தது. மணி என்ன என நேரத்தை பார்த்தான். மதியம் 12.30 என காட்ட, ஹே வெற்றி பையன் பொண்டாட்டி டி இது! பார்க்க மூக்கு முழியுமா அழகா இருக்கா! ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கு இப்படி ஒரு கிளி மாதிரி ஒரு பொண்ணு என சலித்து கொண்டார்கள் இருவரும்.

என லட்சுமி ராதாவுக்கு சிக்னல் கொடுக்க இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

வினோத் என வெற்றியின் பார்வை அவன் மீது பட்டு நீங்க மூணு பேரும் லஞ்ச் கிளம்புங்க என கூறினான்.

இன்னிக்கி சனி கிழமை அதனால் ஆபிஸ் ஆஃப் டே தான் என்றார் லட்சுமி.

மலர்விழி அங்கு பணிபுரிபவர்களையும், வெற்றியையும் மாறி மாறி பார்த்தாள்.

லட்சுமியின் மனதில் கல் நெஞ்சக்காரன் கரையுறானா பாரு என நினைத்தார். ராதாவின் மனதில் வாய்ப்பே இல்ல, 2 மணிக்கு தான் எப்போவும் அனுப்புவான் இந்த சிடுமூஞ்சி என நினைத்தார்கள்.

ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு இருக்க கடைசியாக வெற்றி வாயை திறந்தான். நீ உள்ளே போ என்றான். அவள் தலையசைத்து விட்டு வேலை செய்பவர்களை பார்த்துக்கொண்டே சென்றாள். நீங்க மூணு பேரும் கிளம்புங்க என்றான் வெற்றி.

ராதா மற்றும் லட்சுமி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, போயிட்டு வாங்க திங்கட்கிழமை ஷார்ப்பா எல்லாரும் ஆபிஸில் இருக்கணும் வாட்ஸ் அப்ல அப்டேட் பண்றேன். என்று விட்டு கை கட்டிக் கொண்டே நின்றான்.

அய்யோ இன்னிக்கு இடியும் மழையும் வெளுத்து வாங்கும் போலயே இது வெற்றி தானா! வெற்றியே தான் என உள்ளுக்குள் தோன்ற, சிரிப்பும் உற்சாகமும் ததும்ப வேகவேகமாக கிளம்பினார்கள் மூவரும்.

நீங்க சாப்பிடுங்க சார் நாங்க போயிக்குவோம் என வினோத் கூற, வெற்றி தாடையை தேய்த்துக் கொண்டே செக்யூரிட்டி ஆபிஸில் மூணு சிஸ்டம் இருக்கு பேசாமல் அங்கே உங்களை வர வைக்கலாமா என யோசிக்கிறேன் என்றான்.

அய்யோ கடங்காரா வினோத் கோனை வாயை மூடிட்டு இருக்க மாட்டான் போல இவனே மலை இறங்கி வந்திருக்கான் என ராதா புலம்பி கொண்டே பையை மாட்டியவர். சார் எங்க பாப்பாவுக்கு ஸ்கூல்ல புராஜக்ட் இருக்கு அதுக்கு கடைக்கு போயி திங்க்ஸ் வாங்கணும். இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும். நானே கேட்கணும்ன்னு இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க என கூறினாள்.

ம்ம் போங்க என அவன் ஒரு வார்த்தையில் முடித்து விட ஓடு டி என லட்சுமி உற்சாகமாக கிளம்பினாள். இனி திங்கள் வந்தால் போதும். என பெண்கள் இருவரும் ஓடி விட வினோத் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டான்.

என் முகத்தில் என்ன எழுதி இருக்கு? சொல்லுங்க வினோத் என வெற்றி அதட்ட.. ஒன்னும் இல்ல சார் என அவனது குரல் சன்னமாக ஒலித்தது.

"சீக்கிரம் கிளம்பு" என்றான் வெற்றி. இதோ சார் என வேகமாக அங்கிருந்து ஓடி விட்டான் வினோத்.

அடுத்த நொடி அவர்களின் பத்திர பணியாளர் தனிப்பட்ட குழு வாட்ஸ் அப்பில் பரபரப்பானது. அனைவரது பேச்சுகளும் வெற்றியை சுற்றியே இருந்தது.

"உன்னை யாரு இதெல்லாம் எடுத்திட்டு வர சொன்னா? எதுக்கு உனக்கு சிரமம்? நான் உன் கிட்ட இதெல்லாம் செய் கொண்டு வான்னு கேட்கவே இல்லையே? எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா தானே? " என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் வெற்றி.

"அவங்களை எதுக்கு திட்டுறீங்க? வீட்ல பிரியாணி, மட்டன் குழம்புன்னு தடபுடலாக பண்ணாங்க. உங்களுக்காக கொடுத்து அனுப்பினாங்க ஆசையா! எதுக்கு இப்படி பேசுறீங்க? எப்போ பாரு அவங்களை திட்டி கிட்டு தான் இருக்கீங்க" என்றாள் மலர்

"அடேங்கப்பா அக்கறை பயங்கரமா இருக்கு எனக்கு நீ சொல்லி தரயா? ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத" என அவளின் உதட்டை பார்த்தே கூறினான் வெற்றி.

மலர் அவனை முறைத்து பார்த்தவள் பரிமாற வர, வேண்டாம் என்பதை போல கையை நீட்டினான் வெற்றி. அவளும் சிலுப்பி கொண்டே எதிரில் அமர்ந்து உணவை போட்டுக் கொண்டவள். மெதுவாக பிசைந்து வாயில் வைத்தவள் கண்கள் கலங்கியது. வெற்றி அவளின் உதடுகளை பார்க்க எண்ணி மெல்ல நிமிர்ந்து பார்க்க அவள் அழுவது தெரிந்தது.

என்னாச்சு இவளுக்கு? என மனம் பரிதவிக்க, என்னாச்சு உனக்கு காரம் அதிகமா இருக்கா? என கேட்டான் வெற்றி ஆளுமை குறையாமல்..

அவன் பார்க்கிறான் என தெரிந்ததும் வேகமாக கண்ணை துடைத்துக் கொண்டே மலர் விழி பிரியாணி ஒரு குறையும் இல்ல.. இது என்னோட எமோஷனல் பார்ட் என்றவள். மெதுவாக ஒருத்தங்க இருக்கும் போது அவங்க முக்கியத்துவம் உங்களுக்கு தெரியாது. அவங்க இல்லாத போது தான் அதோட வலியும் தனிமையும் புரியும் அது ரொம்ப கொடுமையானது. உங்க அம்மா இருக்கிறதால தான் உங்களுக்கு இப்படி தோணுது அவங்கள திட்டுறீங்க என சொல்லி விட்டு உணவில் கவனம் செலுத்தினாள்.

அவள் அழுவதை பார்த்து உள்ளுக்குள் ஒரு வித ஆற்றான்மை தோன்றத்தான் செய்தது வெற்றிக்கு ஆனால் எதுவும் சொல்லாமல் உணவில் கவனம் செலுத்தினான். இன்று கூட பல்லவி பிரியாணியில் பல வித்தையை செய்திருந்தார். பட்டை, ஜாவித்ரி, அண்ணாச்சி மொக்கு, இஞ்சி, பூண்டு, ஜாதிக்காய் என மூலிகை பிரியாணி என்று சொல்லலாம் அந்த விடயத்துக்கு. அவனுக்கு எந்த பாக்ஸ் கொடுக்க வேண்டும் என சொல்லி அனுப்பி இருந்தார் பல்லவி. அவரின் பாசத்தை நினைத்து மலர் நெகிழ்ந்து பேசிக் கொண்டிருக்க, உண்மையாகவே அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முனைப்பில் பல்லவி இருப்பதை பாவம் இந்த குட்டி பெண் அறிய வில்லை.

பிரியாணி, மட்டன், பூண்டு ரசம் பிரத்யேகமாக வெற்றிக்கு மொத்தத்தில் உணவு விருந்து உள்ளத்தில் தனி இடத்தை பிடித்தது. அதற்கு காரணம் மலர்விழியாள் என கூட சொல்லலாம். இருங்க நான் எடுத்து வைக்கிறேன் என மலர் சொல்ல, நீ இரு நான் பார்த்துக்கிறேன் என அனைத்தையும் அவனே எடுத்து வைத்து சுத்தம் செய்தான்.

மலர் அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டே ஒரு டைப் மிஷினில் தட்டியவழுக்கு ஆசை வந்தது. டைப் செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? என தோன்ற மெதுவாக அந்த இடத்தில் அமர்ந்தாள். வெற்றி என்ன செய்கிறான் என எட்டி பார்த்தாள். அவன் உள்ளே போன் பேசிக் கொண்டிருந்தான்.

மெதுவாக அந்த ஸ்டூலில் அமர்ந்தவள். அவளது பெயரை முதலில் அடித்தாள். தக் தக் டப் டப் என ஒவ்வொரு எழுத்தின் சத்தமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ABCD அடித்து பார்க்கலாம் என நினைத்து அவள் தேடி தேடி அடித்துக் கொண்டிருக்க, உனக்கு டைப் ரைட்டிங் தெரியுமா? சார்ட்டன் முடிச்சிருக்கியா என கேட்டுக் கொண்டே வந்தான் வெற்றி.

அவனை பார்த்ததும் வேகமாக எழுந்து கொண்டு அசடு வழிந்தவள். அது வந்து சும்மா என அசைவ உணவை சாப்பிட்ட உணவில் எண்ணெய் வித்துக்கள் மொத்தமும் அவளின் செர்ரி உதட்டில் இறங்கி இருக்க அது அழகாக மின்னிக் கொண்டிருந்தது.

இரு உனக்கு ஷீட் வச்சு தரேன். ட்ரை பண்ணு என மிஷனில் A4 ஷீட்டை வைத்து லாக் செய்தவன். மை அச்சு சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு இரண்டடி வேகமாக அழுத்தி விட்டு ரிசீவர் தள்ளி விட்டு அவளிடம் உட்காரு அடிச்சு பாரு என கூறினான்.

இல்ல வேணாம் என மலர் விழி அப்படியே தயக்கத்துடன் விழிக்க, வெற்றி அவளை பார்த்து இங்கே பாரு ஈஸி தான் முயற்சி பண்ணி பாரு என கூற இதற்கு மேல் சீன் போட வேண்டாம் என நினைத்தவள். உயரமாக ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.

ம்ம் டைப் பண்ணு என வெற்றி கூற, அவளுக்கு மிகவும் படபடப்பாக இருக்க ஒவ்வொரு விரகாக தயக்கத்துடன் அடித்தாள். வெற்றி அவளின் அருகில் நெருங்கியவன் இங்கே பாரு இப்படி இந்த சுண்டு விரல a மேலே வை அப்படியே மற்ற விரல்கள் asdf கோர்வையா வச்சு டைப் பண்ணு பார்ப்போம் என வெற்றி மலரை பின்னால் இருந்து அணைத்து கொண்டிருப்பது போல இருந்தான். அவனுக்கு அது பெரிதாக இல்லை அவனது கவனம் முழுவதும் எழுத்துக்களின் மீது இருக்க, மலரின் கன்னங்கள் கொஞ்சம் திரும்பினால் வெற்றியின் உதடுகள் அவளின் கன்னத்தில் படும் அவ்வளவு நெருக்கமாக முதல் முதலில் ஒரு ஆணின் வாசனை அவளை தடுமாற வைத்தது.

உள்ளங்கை வியர்க்க, உள்ளுக்குள் இதயம் பந்தய குதிரை போல ஓடியது. ம்ம் ஃபர்ஸ்ட் டைம் அப்படி தான் இருக்கும் என்றான் வெற்றி.

அவள் வெடுக்கென திரும்ப, என்ன கஷ்டமா இருக்கா? இங்கே பாரு நான் எப்டி பண்றேன்னு என திருப்பிய வெற்றியின் விரல்கள் அந்த மிஷினில் வேகமாக பறந்தது. மலர்விழி மலர்விழி என கோர்வையாக அவன் இடம் விட்டு அடிக்க.. இப்பொழுது தான் மலருக்கு மூச்சே வந்தது.

அப்போ அவர் டைப் பண்றத பத்தி பேசுறாரா? நான் கூட தப்பா நினைச்சுட்டேன்? எனக்கு இன்னிக்கு ஏன் இப்படி தோணுது என தலையை உலுக்கி கொண்டாள். அய்யோ அப்பா என மூச்சை விட்டாள் மலர்விழி.

வெற்றியின் பார்வை அவளை துளைக்க, என் என்னாச்சு? என கேட்டாள்.

உனக்கு எதுக்கு இப்படி வியர்க்குது? என வேகமாக பேன் ஸ்விட்ச் தட்டி விட்டான். அது வியர்க்குது என பதில் கொடுத்தாள்.

ஹான் என அவளை திரும்பி பார்த்தவன் என்ன பதில் இது என அங்கிருந்து நகர்ந்து விட்டான். அதன் பின் அவளை கொண்டு சென்று வீட்டில் விட்டு அவன் செக்யூரிட்டி ஆபிஸ் சென்று விட்டான்.

வழக்கம் போல இரவு தலையணை தடுப்பு சுவருடன் புது மல்லிகை தலையில் சூடி கைகளில் அதே மசாலா பால் என வந்தாள் மலர் விழி.

இந்த அம்மாவுக்கு என திட்ட வந்தவன். எதுவும் பேசாமல் அவளிடம் இருந்து வாங்கி குடித்து கிளாசை கழுவ எழுந்து கொள்ள, கொடுங்க நான் போறேன்.

இல்ல என்னோட வேலையை நான் தான் செய்வேன் என சொல்ல, கொடுங்க பரவாயில்லை என மலர் வாங்கி சென்று கழுவி வைத்தாள்.

அவள் அறைக்குள் வர வெற்றி மலருக்காக காத்திருந்தான். அவளது இடத்தில் படுத்துக் கொண்டவள் அவனுக்கு முதுகு காட்டினாள்.

வெற்றி நேராக படுத்திருந்தவன். அது உன் கிட்ட.. அது சாரி என்றான்.

மலர் ஆச்சரியமாக திரும்பி அவனை பார்த்தவாறு என்ன சொன்னீங்க? என கேட்க..

அது என பெரு மூச்சை விட்டவன். சாரி எங்க அம்மாவை நான் திட்றது இல்ல. எங்களுக்குள் இருக்கும் பாண்ட் அப்படி தான். அது கண்டிப்பான் பாசம். நீ நினைக்கிற மாதிரி இல்ல நான் கேர் பண்றது மற்றவங்க கண்ணுக்கு திட்டுவது போல தான் தெரியும் அதுக்கு நான் என்ன பண்ண? என சொல்லி விட்டு திரும்பி கொண்டான்.


அடுத்த நாள் மலர்விழி அவனது நெஞ்சில் இன்றும் அதே போல திருட்டு முத்தம்.

- வருவான்.
 

Usha

Member
Joined
Oct 8, 2024
Messages
56
🫰🫰🫰🫰🫰 innum 2 epi serthu podunga sis😜🥰😜🥰
 
Top