Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
வானதி இறங்கியதும் ஜீவா மற்றும் மனோஜ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஜீவா பாய்ந்து கொண்டு 'மச்சான் மச்சான் மச்சான் என்னை பார்த்தாடா! என்னை வச்ச கண்ணு வாங்காம பாத்தாடா மச்சான். எனக்கு ஹிப்னாட்டிஸம் பண்ண போல இருந்தது டா!" என சிறகில்லாமல் பறந்தான்.

இடியட் என மனோஜ் அவனது காலை மிதிக்க சுற்றி இருந்த ஆண்கள் கூட்டம் அதை விட அஜய் எட்டி பார்த்தான்.

சாரி சாரி மச்சி என ஜீவா வேகமாக தலையை கோதி கொண்டான்.

அஜய் நீ நினைக்கிற மாதிரி இல்ல இவன் கொஞ்சம் பைத்தியம் ஆகிட்டான். அதான் என மனோஜ் கூற.. ஜீவா மனோஜின் மீது கையை போட்டு மச்சான் எனக்கு தான் முதல்ல மச்சான் அப்புறம் தான் அஜய் உனக்கு. என கூறினான்.

பளார் என ஒரு அரை மனோஜ் தான் ஜீவாவின் கன்னத்தில் அரைந்திருந்தான்.

என்ன டாஆஆ! என ஜீவா பார்க்க.. அவனுக்கு கொடுத்தது உனக்கும் அதே போல கொடுக்கனுமே அது தான் என திரும்பி கொண்டான் மனோஜ்.

"இப்போ அஜய் ஹேப்பி அண்ணாச்சி!" என சொல்லி கொண்டே பல வித கலாட்டாவுடன் கல்லூரிக்கு சென்றார்கள்.

ஜீவா ஆர்வத்துடன் உற்சாகத்துடன் சுற்றி திரிந்தான். டேய் ஓவரா ஆடாத! ஆட்டம் அதிகமா இருக்கு என்றான் அஜய். அதற்கு காரணம் ஒற்றை தோட்டை கையில் வைத்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மனோஜ் எதையும் கண்டு கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினான்.

லவ் பண்ணு மச்சி லைஃப் நல்லாருக்கும் என ஜீவா புன்னகையுடன் கூற.. நானா மாட்டேன்னு சொல்றேன்? வேணாம் வேணாம்னு சொல்ற இவனை வற்புறுத்தி லவ் டார்ச்சர் பண்றா ஆஷா ஆனால் என்னை திரும்பி பார்க்க மாட்டிக்கிறா என கூறினான் அஜய்.

எனக்கு பிரச்னை இல்ல நீ அவளையே லவ் பண்ணிக்க என்றான் மனோஜ்.

அட ஏன் டா நீ வேற? காமெடி பண்ணி கிட்டு என சொல்லிக் கொண்டே அஜய் சென்றான். இப்படியே ஒரு வாரம் சென்றது.

அடுத்த வாரம் திங்கட் கிழமை வழக்கம் போல பேருந்து நிலையத்தில் காத்திருந்தான் ஜீவா. அவள் லவ் பன்றாலோ பண்ணலையோ ஆனால் அவள் பார்க்கிற பார்வை உள்ளுக்குள்ள எதோ பண்ணுது படிச்சு முடிக்கட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் என நின்றவன் பேருந்தில் ஏறி கொண்டான்.

அஜய், மனோஜ், சவுரவ், ஆனந்தன், தீப்தி, ஆஷா, மதுமிதா, என பட்டாளம் மொத்தமும் ஆண்டவர் தனியார் பேருந்தில் ஏறியது. மாலை ஜீவா அரசு பேருந்தில் தான் செல்வான். காலையில் அந்த அரசு பேருந்தில் வானதி வருகிறாள் அவளுக்கு தொந்தரவு செய்ய கூடாது என கொள்கை.

பெட்ரோல் பங்க் ரவுண்டானா ஸ்டாப்பிங் வந்தது. ஜீவா வேறு புறம் திரும்பி கொண்டான். மனோஜ் அவனது இருக்கையில் அமர்ந்து மெடிக்கல் டாக்குமெண்டரி படித்து கொண்டிருந்தான்.

மச்சான் என அஜய் புன்னகையுடன் அழைக்க... ஜீவா மெல்ல திரும்பினான். அவளே தான் வானதி! ஜீவா எங்கு நிற்கிறானோ அவனுக்கு அருகில் சென்று நின்றாள்.

அஜய் ஜீவாவை பார்த்து கண்ணடித்தான். ஜீவனின் கண்களில் ஒளி மின்னியது. இன்னிக்கி கவர்மென்ட் பஸ் ஸ்ட்ரைக்கா அஜய்?

வானதி கம்பியில் ஒட்டிக் கொண்டு நின்றாள் எதுவும் பேச வில்லை.

இல்லையே ஏன் கேட்கிற?

இல்ல நதி.. என ஜீவா இழுக்க..

வானதி உதட்டில் குட்டி புன்னகை ஆனால் வெளிகாட்டி கொள்ள வில்லை.

அடுத்து வந்த இரண்டு வாரங்களில் தனியார் பேருந்தில் வந்தாள் வானதி அதன் பின் அரசு பேருந்து. ஆம் ஜீவா அரசு பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்தான்.

"நதி!"

"ஹே நதி" என அஜய் வார்த்தை ஜாலத்தில் கிண்டல் செய்யும் போது ஒரே நேரத்தில் ஜீவா வானதி இருவரும் பூரித்து இருப்பார்கள். ஆனால் இருவரும் பேசி கொள்ள வில்லை.

வானதி மற்றும் ஜீவா இருவரும் பேசி கொள்ள வில்லை. ஆனால் அவர்களின் சம்பாசனைகள் அப்படி தான் இருந்தது. ஜீவாவுக்கு பிராக்டீஸ் வகுப்பு என்பதால் மிகவும் பிஸியாக இருந்தான். கிட்ட தட்ட வானதிக்கு அரையாண்டு பரிட்சை விடுமுறை வரை அவனை பார்க்கவே முடிய வில்லை தவிப்பு அதிகமானது.

எந்த புத்தகத்தை எடுத்தாலும் "ஜீவநதி" ஜீவநதி என உள்ளத்தில் காதல் பூக்க எழுதி இருந்தாள். ஜீவன் இல்லாமல் அவளுக்கு உயிர் இல்லை. பேசாத காதல், சொல்லாத காதல் என இரண்டும் சொல்ல பட்ட காதலை விட சக்தி அதிகம் உள்ளவை அதன் தாக்கமும் அப்படித்தான்.

நீண்ட நாள் கழித்து தனியார் பேருந்துக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் ஜீவா. தன் அக்காளுடன் கடைக்கு வந்த வானதி ஜீவாவை பார்த்ததும் உள்ளுக்குள் இரத்தம் வேகமாக பாய அவனை தேடியே சென்றாள். எதிரில் அவள் நிற்பதை பார்த்து திடுக்கிட்டான் ஜீவா.

கண்களில் நீருடன் அவனை உள் வாங்கி கொண்டு ஓடி விட்டாள். அந்த காட்சி மனக் கண்ணில் தோன்றாமல் இல்லை. அந்த ஒரு பார்வை உள்ளுக்குள் புயலையே உருவாக்கியது. நிலை கொள்ளாமல் தவித்தான் ஜீவா.

அடுத்த நாள் அவன் சென்றது அவளின் பள்ளி முன்பு தான் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள் என தெரியும். அந்த இடத்தில் அங்கும் இங்கும் நடந்தான். அவளே வெளியே வந்தாள் பள்ளி சீருடையில்.

எதுக்கு அழுத? என பஸ் ஸ்டாப்பில் நின்ற படி கேட்டான் ஜீவா. அவனது கண்கள் சிவந்திருந்தது.

"நான் அது ஒன்னும் இல்ல"

"இன்னும் எத்தனை நாளைக்கு என்னை அலகளிப்ப சொல்லு!"

"பார்க்காமல் ஒருத்தி செத்திட்டு இருக்கா? வேற என்ன சொல்லணும் என முனுமுனுத்துக் கொண்டே ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

என்ன இது லவ் லெட்டரா? என ஜீவா ஆர்வத்துடன் கேட்க.. அதெல்லாம் எனக்கு எழுத தெரியாது. நான் போனதும் பிரிச்சு பாருங்க. என்றவள் வெட்கத்துடன் ஓடி விட்டாள்.

பிரிச்சு தொலை டா! எதுக்கு என்னை சாவடிக்கிற? என அஜய் சோர்வுடன் பார்த்தான்.

பயமா இருக்கு மச்சி! என ஜீவா பதட்டத்துடன் கூற... மனோஜ் வேகமாக வந்தவன் அந்த லெட்டரை பிரித்து பார்த்து கொண்டே ஜீவாவை பார்த்தவன் புன்னகையுடன் அஜயின் கையில் மடித்து கொடுத்து விட்டு சென்றான்.

டேய் என்ன போட்டிருக்கு? என ஜீவா கேட்க..

அதில் எழுதி இருந்த விசயத்தை படித்த அஜய் பலே பலே நல்லா நதிகள் இணைப்பு திட்டத்தை ஆரம்பிங்க என்று விட்டு நகர..

டேய் பிராடு நாயே சொல்லி தொலை என ஜீவா கேட்க.. மகாநதி போல இங்கே ஜீவநதி என்றான் சிரித்த படி..

என்ன டா சொல்ற? என ஜீவா புரியாமல் கேட்க.. ஆனாலும் உன்னோட நதி வேற லெவல் சிம்பாலிக்கா காதல் சொல்லிருக்கா என்றவன் ஜீவாவின் கையில் காகிதத்தை திணித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

என்ன சொல்லிட்டு போறானுங்க? ஒன்னும் புரியலையே என பதட்டத்துடன் பிரித்து பார்த்தவனது முகம் உடனே புன்னகையில் விடிந்தது. உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்தது. நதிஇஇஇ! என அழுத்தி உச்சரித்தவன் உதடுகள் சந்தோசத்தில் நெஞ்சுகூடு ஏறி இறங்கியது. சுவாச குமிழிகள் மொத்தமும் நதி தான்! வானதி.

காதலை I love you என சொல்ல வில்லை அதற்கு மாறாக ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள். ஒரே பெயரில் "ஜீவநதி"

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரிய வில்லை. அந்த நேரம் சீதா அழைத்தார். ஜீவா போன் எடுக்க வில்லை என்றதும் மனோஜ் போனுக்கு அழைத்தார்.

"ஆன்ட்டி"

மனோஜ் எப்டி இருக்க? உன்னோட ப்ரெண்ட் என்ன பண்றான் போன் எடுக்கவே மாட்டுக்கிறான் என்னாச்சு ஒன்னும் பிரச்னை இல்லையே? என சீதா கேட்க..

இதோ ஆன்டி அவன் கிட்ட கொடுக்கிறேன். நீங்களே கேளுங்க என போனை ஜீவாவிடம் கொடுத்தான்.

யாரு டா?

ஜீவா மாம் என இருக்க.. மம்மி என குரல் குழந்தது. என்ன டா ஜீவா போன் எடுக்க இவ்வளவு நேரம்? என்ன பண்ணிட்டு இருக்க? இப்போ சரியா பேசிறதே இல்ல? என கேட்டார்

சாரி மி! எப்டி இருக்கீங்க? அப்பா! சஞ்சு எப்டி இருக்கான் என அனைவரை பற்றியும் விசாரித்தான்.

எல்லாம் ஓகே நான் உனக்கு கரி சமைச்சு அப்பா கிட்ட கொடுத்து அனுப்பி விடுறேன். நீயும் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் சாப்பிடுங்க அதுக்கு தான் கூப்பிட்டேன்.

லவ் யூ மை மி! வஞ்சரம் வேணும் மி என ஆர்டர் செய்தான் ஜீவா.

அவ்ளோ தான டா தங்கம் செஞ்சு கொடுக்கிறேன். வேற எதுவும் வேணுமா? மனோஜ் கிட்ட கேளு என சீதா சொல்ல.. டேய் உனக்கு என்ன வேணும்? என ஜீவா கேட்க.. தயிர் சாதம் போமோகிரானட் போட்டு வேணும் அண்ட் தால் சிம்பிளா வேணும்.

ஜீவா முகத்தை சுளித்தான்.

ஜீவா தங்கம் என்னாச்சு? என சீதா கேட்க.. மி அவனுக்கு என சொல்லி சிரித்தான்.

மனோஜ் பொண்டாட்டிக்கு வேலையே இல்ல. உன்னை கட்டிக்க போறவ தான் நிறைய சமைக்க வேணும் என சிரித்தவர். நல்லா படி ஆனால் உடம்பை கெடுத்துக்க வேணாம் செல்லம் என கூறி விட்டு வைத்தார்.

அடுத்த நாள் உணவுகள் வந்தது. சீக்ரெட்டாக எடுத்து வந்து ஒரு வெட்டு வெட்டினார்கள் ஜீவா மற்றும் அஜெயும். மனோஜ் குமாருக்கு தயிர் சாதம் அதனுடன் பருப்பு ரசம்..

அடுத்ததா என்ன டா பண்ண போற? ஜீவநதி காதல் ததும்ப எழுதி கொடுத்திருக்கு ஊதா கலரு ரிப்பன் என கேட்டான் அஜய்.

பார்க்கணும் போல இருக்கு. பஸ்ல மீட் பண்ணனும் டா என ஜீவா மெய் மறந்து அவளின் நினைவில் மூழ்கி இருந்தான்.

ஜீவநதி பெயர் இங்கே கார்த்திகிடம் மாட்டி கொண்டது. கார்த்திக்கின் எதிரில் சங்கவி ஒரு பக்கம் வானதி ஒரு பக்கம்.

அடுத்து என்ன நடக்கும்?

ஆசை தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: Episode-19
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Nanbargalodu nadakura Keli kindal laam superb ah irukku😂........vanathi oda kallam ilatha ariya vayasu kadhal super and antha book la name eluthura concept laam ennoda frnds laam neraiya pannirukanga😍 I like it.......jeeva nathi oda love kaga seiyarathu paakum pothu ippo present la irukka jeeva va ithunu thonuthu.....and antha food matter exact ah frnds oda mom namaku food senji kodukarathulaam varam, ennoda frnds mom laam enakum ithu pola cook panni koduthu viduvanga🥹.......in this story enaku romba pudicha part eyy rekka katti parakuthu manasu cast ah konttu vanthu panra maja thaan.......and scl time love athula oru innocence irukkum Inga vanathi kitta feel aaguthu, same time jeeva oda mature and deep love 😘.....but every episode mr.kumar adichi meratraru😂 frndaiye......and then Angaiyum Manoj plan panni arrange marriage panniduvan...inagiyum en thalaivan jeeva arrange marriage pannitaan, ithuthan frndship goal ahh😹 anyway superb story siss unga story laam lcu range ku poitu irukku🔥💯
 
Top