என்ன இது? என வானதியிடம் நீட்டினான் கார்த்திக் மிகவும் கோபமாக..
சங்கவி புரியாமல் வானதியை பார்த்தாள். வானதி கைகளை பிசைந்த படி நின்றிருந்தாள்.
உனக்கு தெரியுமா? யாரு இந்த ஜீவநதி? நம்ம கிளாசில் எனக்கு தெரியாம இவளுக்கு யார் ப்ரெண்ட் இருக்கா? நம்ம ஸ்கூலில் கூட எனக்கு தெரிஞ்சு இந்த பேரில் யாருமே இல்லையே! பிசிக்ஸ் புக்ல, கெமிஸ்ட்ரி புக்ல.. அட்டைக்கு பின்னாடி எழுதி எழுதி அடிச்சிருக்க? பென்சிலில எழுதி ரப்பர் கொண்டு அழுச்ச்சிருக்க? Flames போட்டு பார்த்திருக்கு! அப்போ கண்டிப்பா இது பொண்ணு இல்ல பையன் தான்! நதி - ஜீவா அப்டின்னு ஒரு தடவை flames கூடவே percentage வேற போட்டிருக்கு! யாரது? இது? சங்கவி இதுல நீயும் கூட்டா? என சரமாரியாக கேள்விகளை தொடுத்தான் கார்த்திக்.
அது வந்து! எனக்கு எதுவும் தெரியாது! நானே மார்னிங் ஸ்பெசல் கிளாஸ எப்டி டா கடக்குறதுன்னு இருக்கேன். டெய்லி டெஸ்ட் ஜஸ்ட் பாஸ் ஆகரது தான் என்னோட போராட்டம். எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்றாள் சங்கவி.
வானு! என்ன இது? என கார்த்திக்கின் பார்வை உக்கிரமானது.
அது வந்து கார்த்திக்.. நீ திட்ட கூடாது. சொன்னா?
சொல்லு முதலில்....
நான் என மூச்சு திணறியது அவளுக்கு. ஜீவாவை நினைக்க நினைக்க அவனை பற்றி பேசுவது என அனைத்தும் இன்ப அவஸ்தையாக இருந்தது.
கார்த்திக் மற்றும் சங்கவி என இருவரும் அவளையே பார்த்தார்கள்.
நான் ஒருத்தரை லவ் பண்றேன். என ஒரு வழியாக கூறி முடித்தாள் வானதி.
லவ்.. லவ் லவ்வா? என சங்கவிக்கு அதிர்ச்சி.. அவளது வாட்டர் பாட்டிலை எடுத்து வேகமாக குடித்தாள்.
இது நீ தானா வானதி? உனக்கு வயசு என்ன? 12 வது தான் படிக்கிற? அதை விடு நீ தான் எந்த ஒரு விசயமா இருந்தாலும் யோசிச்சு பண்ணுவியே? இது என்ன? நீ பண்றது சரியா? உன்னை படிக்க வைக்கிறது உங்க அண்ணன் ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவ? இப்படி ஒரு வேலை? இது நல்லாருக்கா? எவன் அவன்? என கொஞ்சம் அரும்பிய மீசை துடிக்க இப்பொழுது உடைந்த குரல் மெருகேர சீறி கொண்டு இலங்காளையாக நின்றான் கார்த்திக்.
வானதி கோபத்துடன் பிளீஸ் அவரை தேவையில்லாத வார்த்தை சொல்லி சொல்லாத! அவர் என் கிட்ட வந்து இது வரைக்கும் காதல் சொல்லவே இல்ல. ஒரு வருசமா எட்ட நின்னு தான் பார்த்திருக்கார். அண்ட் அவர் மாதிரி ஒரு நல்ல பையன் யாருமே இருக்க முடியாது. என முதன் முறையாக தன் சிறு வயது நண்பனை எதிர்த்தாள்.
இது அட்ராக்சன் வானதி! இந்த பசங்க இப்படி தான் பிளான் பண்ணி வலையில் சிக்க வைக்க வருவானூக இது நல்லதில்லை. உன்னோட டாக்டர் கனவு என்னாச்சு? அவன் என்ன வேலை பண்றான்? கலர் கலரா உன்னை மயக்கி கல்யாணம் பண்ற மாதிரி ஓடி வர சொல்லுவான். அப்புறம் ஏமாத்தி விட்டுட்டு போயிடுவான் என கார்த்திக் கூறினான்.
போதும் கார்த்திக் எனக்கு தெரியும் அவர் பத்தி தப்பா பேசாதே! அவர் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்.. என்றவள் சங்கவியின் பக்கம் திரும்பி அன்னிக்கு அந்த தாத்தா மயங்கி விழுந்த போது காப்பாத்தினாரே நீ பார்த்த தானே! என கேட்டாள்.
கார்த்திக் சங்கவியை முறைக்க.. ஆ.. ஆமா பார்த்தேன் ஓ அவனா! உன்னை பஸ்ஸில் வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பான். ஓ அவனா என ஆச்சரியமாக பேசியவள் கார்த்திக்கை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டாள்.
கேட்டுகிட்டயா! நீ நினைக்கிற மாதிரி அவர் இல்ல. நான் படிச்சு முடிக்கிற வரை வெயிட் பண்ணுவாரு. அப்புறம் தான் என்னோட விருப்பத்தையே சொல்ல போறேன்.
இது உன்னோட ஸ்டடீஸ அப்பெக்ட் பண்ண போகுது என ஜீவா கூற..
அவர் எனக்கு எனர்ஜி மாதிரி. கண்டிப்பா நான் நல்ல மார்க் வாங்கி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டு கவுன்சிலிங் அட்டென் பண்ணி அவர் படிச்சிட்டு இருக்கிற காலேஜில் டாக்டர் சீட் வாங்க தான் போறேன். அதையும் நீ பார்க்க தான் போற! என பட படவென பொரிந்து விட்டு சென்றாள் வானதி.
கார்த்திக் அவள் சொல்றதும் என சங்கவி பேச வர.. கடுப்பை கிளப்பாத போடி என சொல்லி விட்டு சென்றான்.
அவள் லவ் பண்றதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என்னை திட்டுட்டு போறான். போடா நாயே! குரங்கே! என திட்டியவள் f - block elements எடுத்து மோனோசைட் மணல் process படிக்க ஆரம்பித்தாள்.
கார்த்திக் அதன் பின் வானதியிடம் இந்த காதல் விவகாரத்தை பற்றி எதுவும் கேட்க வில்லை இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
மச்சான் உன்னோட அந்த கிரே சேர்ட் உன்னோடது வேணும் டா! என மனோஜின் பின்னால் சுற்றி கொண்டிருந்தான் ஜீவா.
பத்திரமா என் கிட்ட ரிட்டன் பண்ற! என்ற கட்டளையின் பெயரில் அவனிடம் கொடுத்தான் மனோஜ்.
ஜீவா முதன் முதலாக அவளின் விருப்பத்தின் பெயரில் சந்திக்க போகிறான். உள்ளுக்குள் குதூகலமாக இருந்தது. இந்த உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை. அந்த அளவுக்கு சந்தோசமாக இருந்தான்.
சனிக்கிழமை மாலை பேருந்தில் ஏறினான். வானதி யூனிஃபார்ம் மாற்றி கலர் டிரெஸ்ஸில் வந்திருந்தாள். உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது. பயம் ஒரு பக்கம் அப்படியே சென்று விடலாமா என்று தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் நேச அரும்புகள் அவனுக்காக துடித்தது. பார்க்க வேண்டும் என காத்திருந்தாள்.
கார்கால மழை ஆரம்பித்தது. தன் மனம் ஏற்கனவே மழைகாலத்தில் இதமாக இருக்க.. அதில் இன்னும் இதம் சேர்க்க வந்து விட்டான் ஜீவா. அவளுக்கு முன் பேருந்தில் இருந்தான்.
கிரே சேர்ட், பிளாக் பாட்டம் என அட்டகாசமாக இருந்தான். மழையில் கொஞ்சம் நனைந்திருந்தது ஆடை. இமை வெட்டாமல் பார்த்தாள் வானதி. அவனை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. ஒரு பக்கம் மூலையில் டோபமைன், செரடோனின், ஆக்சிடோசின் அளவில்லாமல் காதல் உணர்வுகளை தூண்டி கொண்டிருந்தது ஜீவனின் மீது.
அரசு பேருந்தில் அவன் பக்கம் சென்று நின்றாள். கண்கள் நான்கும் சந்தித்து கொண்டது. இணை உதடுகள் துடிக்க... சின்ன சின்ன சிமிட்டலில் இருவரும் பேசி கொண்டார்கள்.
ஜீவா புருவத்தை தூக்கி எதுக்கு வர சொன்ன? என கேள்வியாக கேட்டான்.
அவள் கம்பியை பிடித்து அவன் புறம் கொஞ்சம் ஒட்டி நின்றாள். ஜீவா அவளை காதலாக பார்த்தான். வானதி வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். டிக்கெட் டிக்கெட் என கேட்டு கொண்டே வந்தார் கண்டெக்டர். பெட்ரோல் பங்க் ரவுண்டானா என ஜீவா சொல்ல..
பஸ் ஸ்டாண்ட் என வானதி குறுக்கிட்டு அவளுக்கு எடுத்துக் கொண்டாள்.
அண்ணா ரெண்டா கொடுத்திடுங்க பஸ் ஸ்டாண்ட் போகனும்! என ஜீவா கூறி வாங்கி கொண்டான்.
பேருந்தில் இருந்து இறங்கியதும். ஜீவா அவளையே பார்க்க.. அருகில் நடக்க ஆரம்பித்தாள்.
"மேடம் எதுக்கு கூப்பிட்டீங்க?"
அது வந்து நான் படிச்சு முடிச்சிட்டு என்னோட டிசிசனை சொல்லவா?
"பிடிக்காதுன்னு சொல்ல அவ்ளோ நாள் வேணாம் நதி" என்றான் ஜீவா.
வானதி அவனை முறைத்து பார்த்தாள். அவளின் பார்வையில் உஃப் என பெரு மூச்சை விட்டான்.
"பிடிக்காதுன்னு சொல்ல தான கூப்பிட்டிங்க?" என ஜீவா வேண்டும் என்றே கேட்டான்.
முன்ன படிக்கிற வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொன்னீங்க? இப்போ உடனே சொல்லுன்னு சொல்றீங்க? எப்டி? என அவளின் கண்ணில் நீர் கோர்த்து கொண்டது.
உன்னை எந்த இடத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இது புரோமிஸ் அண்ட் எனக்கு டிரெய்னிங் பீரியட் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி உன்னை பார்க்க வர முடியாது. உன்னோட டிசிஷனை சொல்லிட்டா நான் நிம்மதியா கிலம்புவேன் அதுக்கு தான் அப்படி சொன்னேன். என்றான் ஜீவா.
வானதி அவன் சொல்வதை யோசித்து பார்த்தவள். மறுபடி எப்போ வர்வீங்க?
நியூ இயர் அப்போ வருவேன். அவ்ளோ தான். என்றான் ஜீவா.
எப்டி உங்க கிட்ட பேச?
மேடம் இன்னும் ஒகே சொல்லல..
கீழ் உதட்டை கடித்து வெட்கத்தை அடக்கினாள் வானதி. ஒல்லி குச்சி உடம்புக்காரி. குட்டி கைகள் குட்டி உதடுகள் அழகு பதுமை. பதின்ம வயது பேரழகி. வானதி பெரிய உலக அழகி இல்லை. ஆனால் ஜீவாவின் கண்ணுக்கு அழகி அவ்வளவே!
பப்ளிக் எக்சாம்க்கு முன்னாடி உங்களை பார்க்கணும். அண்ட் எக்சாம் முடிஞ்சு ரிசல்ட் டைம் நீங்க என் கூட இருக்கணும். முடியுமா?
"நான் ஏன் இருக்கணும்! முடிவை சொல்லவே இல்லையே மேடம்!"
"நதி ஜீவனுக்காக வெயிட்டிங்!" அவ்ளோ தான் வானதிக்கு உங்களை பிடிச்சிருக்கு ரொம்ப.. நீங்க காலத்துக்கும் வேணும். நான் 18 வயசு முடிஞ்சதும் உங்க கிட்ட சொல்ல வேண்டிய விசயத்தை காதில் சொல்வேன்."அதாவது காதலை சொல்வாளாம் கள்ளி.
ஓகே என்றான் ஜீவா. சந்தோசத்தில் என்ன செய்வது என தெரிய வில்லை.
"ஆனா நீங்க தான் மேஜர் ஆச்சே உங்க விருப்பத்தை சொல்லலாமே!"
சொல்லணுமா இப்போவே! என குறும்பாக கேட்டான் ஜீவா. இல்ல சும்.. சும்மா என சமாளித்து விட்டு வானதி நேரத்தை பார்த்தவள். சரி நான் போகட்டா!
ம்ம் என நடந்து கொண்டே பதில் கூறினான் ஜீவா.
பொக்கென இருந்தது அவளுக்கு நேராக பேருந்தில் ஏறினாள். மழை மெல்ல தூறியது. அவனும் ஏறினான் அவளுக்கு தெரிய வில்லை.
பெட்ரோல் பங்க் ரவுண்டானாவில் இறங்கி கொண்டாள். மணி ஆறு ஆனாலும் இருட்டி இருந்தது மழையின் காரணமாக.
"நதி!.... வானதி" என அழைத்தான்.
அவள் ஆச்சரியமாக திரும்பி பார்க்க.. லவ் யூ டி! உன்னை பார்த்ததும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்! இப்போ இதை எக்ஸ்பிரஸ் பண்றது தப்பு தான். ஆனால் இப்போ நீ வேற ஒரு பொண்ணு இல்ல எண்ணில் பாதி. என்னோட வானதி லவ் யூ.. அண்ட் ஸ்டடீஸ்ல கவனம் செலுத்து நான் நியூ இயர் வரது டவுட்டு தான். ஆனால் உன்னோட எக்சாம் அப்போ கண்டிப்பா வருவேன் பேபி! என்றான் தவிப்புடன்.
அவனது தவிப்பு வானத்தால் கூட தாங்கி கொள்ள முடிய வில்லை. இளையவள் காதலை வரவேற்று ஆடவன் கொடுத்த கார்கால காதல் proposal பரிசாக வான் மழை ஜீவநதியின் மீது பொழிந்தது.
சுற்றிலும் பார்த்தவள். உங்க கிட்ட பேசணும் போல தொனுச்சுன்னா? என்ன பண்ணட்டும்? என கேட்டாள்.
கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் டி! டெம்ட் பண்ணாத என ஒருமையில் அழைத்தான் ஜீவா.
போயிட்டு வாங்க என மெல்லிய குரலில் கூறினாள் தூரலுடன் நடந்து கொண்டே.
அப்போ நேரிலேயே வரேன்!
வானதி நின்று அவனை பார்க்க.. கனவில் வரேன் நதி
வானதி...?
நிகழ்காலத்தில் வெடுக்கென முழித்தான் ஜீவா.
நெருக்கம் தொடரும்

Author: Pradhanya
Article Title: Episode-20
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.