"என்ன சொல்றாரு? உன்னோட காதல் கண்ணாலன்?" என சங்கவி வானதியின் முன் வந்து நின்றாள்.
ஒரு பெரு மூச்சை விட்ட வானதி பெருசா "என்ன சொல்றதுக்கு இருக்கு? வழக்கம் போல தான் எந்த கேள்வியும் இல்ல. என்னை தொந்தரவு செய்யறதில்லை. அவர் உண்டு அவரோட வேலை உண்டு. ரொம்ப அமைதி"
சங்கவி அவளது முகத்தை உற்று பார்த்து விட்டு "உன்னோட முகத்தை பார்த்தால் அப்படி தெரியலையே?"
என்ன தெரியுது? என வானதி முறைத்துக் கொண்டு பார்க்க, ஹே டென்ஷன் ஆகாத! அவர் உன்னை தொந்தரவே பன்றதில்லைன்னு சொன்னியே! அங்கே தான் எனக்கு கொஞ்சம் டவுட்டு!
என்ன டவுட்டு? என இடையின் மேல் கை வைத்த படி கேட்டாள் வானதி.
இல்ல வானு! தூரத்தில் இருந்து பார்க்கும் போதே டாக்டர் உன்னை பன் பட்டர் ஜாம் போல மொத்தமா கடிச்சு தின்னுற மாதிரி பார்ப்பார். இப்போ வீட்ல அதுவும் பக்கத்துல என சங்கவி அவளின் முகத்தை உற்று பார்க்க, வானதியின் முகம் சிலிர்த்து போனது. பிரிந்து உறங்கினால் அது ஜீவா இல்லையே! அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய, சங்கவி சிரித்த படி, "அப்போ ஃபுல் டியூட்டி தான்! ஸ்பெஷல் ஷிப்ட் போல"
ச்சீ என்ன பேச்சு இது? என வானதி அவளை முறைத்தாள்.
சங்கவி புன்னகையுடன் ஜீவா உன் மேலே கோபத்தில் இருக்கார். அது சீக்கிரம் சரி ஆகிடும். கூடிய சீக்கிரத்தில் உன்னை புரிஞ்சுக்குவார் என்றாள்.
வானதி ஆச்சரியத்துடன் "எப்போவும் அந்த கார்த்தி பைய கூட சேர்ந்துக்கிட்டு அவரை திட்டுவ? இன்னிக்கி என்ன திடீர்னு அவருக்கு சப்போட் பண்ற?" கேட்டாள்.
தோள்களை குலுக்கிய சங்கவி, "உன் பிரென்ட் கூட சண்டை போட்டதில் இருந்து அறிவு கண்ணு திறந்திடுச்சு. அவருக்கு உண்மை தெரியாது. நீ அதை அப்போவே சொல்லிருந்தாலும் எந்த பிரச்னையும் வந்திருக்காது. நீ தப்பு பண்ணிட்ட வானதி. ஆனால் கவலை படாதே! கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடும்" என்றாள் ஆருதலுடன்.
வானதி கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தவள். "நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன் டி! ஜஸ்ட் என் பேச்சை கொஞ்சம் பொறுமையா கேட்டால் நல்லாருக்கும்."
இதை நீ அப்போவே செஞ்சிருக்கணும் டி! சரி வா ஒரு காபி குடிப்போம். என இருவரும் சேர்ந்து காபி குடித்து விட்டு நேராக அவரவர் டூட்டிக்கு கிளம்பினார்கள்.
டூட்டி முடிந்ததும் பிக் அப் செய்து கொண்டான் ஜீவா. வீட்டுக்கு வந்ததும் அவளுடன் கட்டில் அதிர கூடுவது அவளை அவன் வசத்துக்குள் வைத்து கொள்வது இது மட்டுமே அவனது பொழுது போக்கு. இது மட்டுமே அவனுக்கு தேவையான ஒன்று. வானதி தான்.
ஒரு பக்கம் வான்மதி, சஞ்சய் இருவரும் ஆபிஸ் கிளம்பி போக இன்னொரு பக்கம் வானதி, ஜீவா இருவரும் சென்றார்கள். சீதாவுக்கு இரண்டு மகன்களும் அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதை எண்ணி சந்தோஷம் கொண்டாலும் அடுத்த கட்டம் வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்க வேண்டும் வேண்டுதல் ஆரம்பித்தது.
"ஹே நைட் டைம் பிரியாணி வேணுமா?" என கேட்டான் சஞ்சய். தன் காதல் மனைவியை பார்த்த படி, வான்மதி முறைத்தாள்.
"என்ன டி வேணாமா? சரி போ! நான் என் அம்மிய கூட்டிட்டு போறேன்." என சஞ்சய் எழுந்து கொள்ள, "சஞ்சு பிராடு!" என உதட்டை பிதுக்கினாள்.
"நீ தான டி முறைச்சு பார்த்த?"
"இன்னும் இருக்கு முடியல டா!" என லேப் டாப்பை அவன் பக்கம் திருப்பினாள்.
"இரு பிரியாணிய நான் வாங்கிட்டு வரேன் நீ பினிஷ் பண்ணிட்டு மேலே வா!" என கண்ணடித்து விட்டு கிளம்பினான் சஞ்சய்.
"லவ் யூ!" என காற்றில் முத்தத்தை பறக்க விட்டாள் வான்மதி.
"நைட்டு உன்னை பறக்க விடுவேன் டி பொண்டாட்டி" என வேகமாக நைட்டு பிரியாணி வாங்கி கொண்டு அதனுடன் தந்தூரி என ஜில் வாட்டர் என மேலே காத்திருந்தான் சஞ்சய்.
மணி 12.00 காட்ட உள்ளுக்குள் பேய் பயம் தொற்றிக் கொண்டது. அய்யோ என்ன பண்றா! இவளை என போனை எடுத்து அழைக்கும் நேரம். சஞ்சு என சொல்லிக் கொண்டே வந்து சேர்ந்தாள் இருவரும் பிரியாணியை ஒன்றாக கட்டு கட்ட ஆரம்பித்தார்கள்.
சிரித்து கொண்டும் கதை பேசிய வான்மதியின் முகம் மாறி போனது. "என்ன டி ஆச்சு? பீஸ் வைக்கவா லெக் பீஸ்!" என சஞ்சய் கேட்க, உணவை பிசைந்து கொண்டிருந்த வான்மதியின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
"ஹே என்ன டி! என்னாச்சு?"
"இல்ல நான் தப்பு பண்ணிட்டேன் சஞ்சய். நான் சுயநலமாக இருந்துட்டேன்."
"என்ன சுயநலம்? என்ன டி உலரிட்டு இருக்க?"
வான்மதி சஞ்சயை பார்த்து, "நான் சந்தோசமா இருக்கேன். ஆனால் என்னோட சந்தோசத்துக்காக நான் வானதி வாழ்க்கையை, உங்க அண்ணன்! என் தங்கச்சி கிட்ட நடந்துக்கிர முறை என்ன ஏதுன்னு தெரியல. அவள் ரொம்ப பாவம்!" என தேம்பினாள்.
"ஹே லூசு நீ எதுக்கு நெகட்டிவ்வா இருக்க? நீ நினைக்கிற மாதிரி ஜீவா மோசமானவன் இல்ல. அண்ணிக்கு நீ அக்கா. அதனாலே உன் கிட்ட அவங்க நெருக்கமா இருக்கிறத காட்டிக்க மாட்டாங்க. அவங்க எப்டி இருக்காங்கன்னு பார்க்கிறத வச்சு நீ ஜட்ச் பண்ணாத டி!" என சமாதானம் செய்தான் சஞ்சய்.
இங்கே வழக்கம் போல வானதியை பிக் அப் செய்தான் ஜீவா. காரில் போகும் வழியில் அவளிடம் ஒரு application ஐ நீட்டினான்.
"என்ன இது?" என தூக்க கலக்கத்தில் கேட்டாள்.
"என்னோட ஹாஸ்பிடலில் வந்து ஜாயின் பண்ணு! ஹெட் நர்ஸ் எனக்கு ரொம்ப க்ளோஸ் உன்னோட டூட்டிய எனக்கு ஆப்ட்டா மாத்திக்களாம். ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வர ஈசியா இருக்கும். இப்போ நீ ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் எனக்கு பிடிக்கல" என ஜீவா சொல்லி முடிப்பதற்குள் வேணாம் என வெடுக்கென மறுத்தாள் வானதி.
பயணம் மிக மிக அமைதியாக சென்றது.
நீங்க தானே சொன்னீங்க? என்னோட வேலை எந்த இடத்திலும் உங்களை இன்ஸல்ட் பண்ற மாதிரி இருக்க கூடாதுன்னு. அதனால் தான் என வானதி மறுக்க சரியான காரணத்தை கூறினாள்.
ஜீவா வீடு வரும் வரை எதுவும் பேச வில்லை. அவன் கோபமாக இருக்கிறான் என நன்றாக புரிந்து கொண்டாள் வானதி. ஏற்கனவே கார்த்திக், ஜீவா இருவரும் பார்வையில் ஒரு குருதி சண்டையை போல போட்டு கொள்வதை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறாள். அவர்கள் இருவரும் ஒரே ஹாஸ்பிடலில் வேலை செய்கிறார்கள். அதே இடத்தில் தானும் இருந்தால் அதை விட ஒரு பெரிய பாரத போர்க்களம் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஜீவா பிளீஸ் என வானதி அவனது கைகளை பிடிக்க வர, "don't touch me!!.." என வேகமாக தட்டி விட்டான் கைகளை...
அவள் மீண்டும் மீண்டும் பேச ஆரம்பிக்க, வரலைன்னு சொல்லிட்டல்ல.. அதோட நிருத்திக்க என சாலையில் கவனம் செலுத்தினான்.
அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. என்றெல்லாம் இல்லை. மிக அமைதியாக இருந்தான். கண்ணாடி அவனை இன்னும் டெரர் பீஸாக காட்டியது. (எப்படி இருந்த என்னோட டார்லிங்! இப்படி ஆக்கிட்டியே டி!) வீடு வந்தது ம்ம் என அதட்டினான்.
அவனை தவிர வேறு எதையும் யோசிக்க முடிய வில்லை. ஏற்கனவே செய்த தவறுக்கு இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கிறான். அவளின் சிந்தையில் இப்போதைக்கு ஜீவா... (அய்யோ எப்போவுமே அவன் மட்டும் தான்) அவன் காரில் இருந்து இறங்கியதும் வேகமாக அவன் பக்கம் வந்தவள்.
"ஒரு நிமிசம் ஜீவா!" என கையை பிடித்துக் கொண்டாள்.
"விட்ரி!" என ஜீவா அவளை விட்டு விலக முயற்சி செய்ய, "எனக்கு சம்மதம் ஜீவா! நீங்க என்ன சொல்றீங்களோ! அதை செய்ய நான் தயார்."
"அவ்ளோ வற்புறுத்தி நீ வர வேணாம். உன் இஸ்டபடி இரு! நான் கேட்க மாட்டேன். ஜஸ்ட் படுக்கையில் மட்டும் ஒத்துழைப்பு கொடு. எனக்கு தேவை என் பொண்டாட்டி மூலமா ஒரு குழந்தை அவ்ளோ தான்!"
சங்கவி சொன்ன விசயங்கள் அனைத்தையும் மனதில் வந்து போக கொஞ்சம் தைரியத்தை வரவளைத்து கொண்டு ஜீவாஆஆஆ! என அவனை பின்னால் இருந்து இறுக்கி அணைத்து கொண்டவள். "என்னை டார்ச்சர் பண்ணாத நீ! நான் பாவம்!"
"மரியாதை கொடு! உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் இருக்கு! அண்ட் நீ பாவமா? என கண்ணாடியை மூக்குக்கு தள்ளினான்.
"நான் பாவம் தான்!" என இன்னும் முகத்தை அவனது பின் கழுத்தில் தேய்த்தாள்.
கைய எடு டி! என ஜீவா அவளை தள்ளி விட முயற்சி செய்தவன் அப்படியே வீட்டின் முன் இருக்கும் குட்டி லைட் பக்கம் நகர்ந்து நின்றான்.
அந்த குட்டி லைட் வெளிச்சத்தின் கீழ் வானதி அவனை இறுக்கி தழுவி முத்தமிடவும் அவன் விலக்கி விடவும் அதில் அவளின் கொண்டை அவிழ்ந்து சரியவும் என ரம்மியமாக காட்சி அளித்தார்கள். சண்டைகோழி காதலர்களாக..
ஜீவா! பிளீஸ் பிளீஸ் என முத்தமிட்டவள் அவனிடம் எதிர்வினை இல்லாமல் போக மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
இப்பொழுது வானதி அவன் கை வளைவில், முடியை ஒதுக்கி முத்தமிட ஆரம்பித்தான் ஆவேசமாக... சங்கவி சொன்னது சரி தான்! இப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஜீவா மனசுல இருக்க கோபத்தையும் வெறுப்பையும் போக்க வேணும் என குதுகலமானவள். கோ... கோபம் போயிடுச்சா! என முத்தத்தின் இடையில் கேட்டாள்.
கோவமா? என்றவன் கழுத்தில் அழுத்தி முத்தம் பதித்து, இது என் வீடு! நீ என் பொண்டாட்டி! எனக்கு குழந்தை வேணும்! உன் கிட்ட.. என் பொண்டாட்டி கிட்ட நெருங்கினால் தான் குழந்தை வரும் அதுக்காக தான்! என்றவன் அவளை முத்தமிட்டு கொண்டு உள்ளே தூக்கி சென்றான்.
பார்த்துக்கிட்டியா? உன் தங்கை எவ்ளோ ரொமான்டிக்ன்னு! என சஞ்சய் வான்மதியின் உதட்டில் ஒட்டி இருக்கும் உணவு பருக்கை எடுத்து மென்று கொண்டே கேட்டான்.
வான்மதி பேந்த பேந்த விழித்தாள். ஜீவா வானதியை வளைத்து முத்தமிட்ட காட்சி அப்பப்பா! என இருந்தது சினிமா காட்சி போல.. இப்போ சந்தோஷமா! என சஞ்சய் அவளின் தோல் மேல் கைகளை போட... வான்மதி வெட்கத்துடன் அவளின் அறைக்கு ஓடி விட்டாள்.
எப்படியோ இனி இவளுக்கு சந்தேகம் வராது. என கைகளை கழுவிய படி கீழே சென்றான் சஞ்சய். அதே நேரம் வானதியை வென்று வாகை சூடி கொண்டு ஈர துண்டுடன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஜீவா.
தண்ணீர் பாட்டிலை தன் அண்ணன் கையில் நீட்டினான் சஞ்சய்.
இப்போ ஒகேவா! என ஜீவா கேட்க, இனி அவள் எதுவும் கேட்க மாட்டா ஜீவா! என்றான் சஞ்சய்.
ம்ம் என திரும்பி நடந்தான் ஜீவா.
"அண்ணா!"
என்ன என்பதை போல திரும்பி பார்த்தான் ஜீவா. " அது வானதி.. அது அன்னிய ரொம்ப கஷ்ட படுத்தாத அவங்க மேலே தப்பில்லை உனக்கும் தெரியும் தானே!"
எனக்கு தெரியும் போடா! என ஜீவா அவனது அறைக்கு சென்றான்.
சஞ்ஜய் ஒரு பெரு மூச்சை விட்டபடி அவனது அறையை நோக்கி நடந்தான்.
என்ன இது
புது twist?
சஞ்ஜய் - ஜீவா ரெண்டு பேரும் இத்தனை இணக்கமா?
நெருக்கம் தொடரும்..

Author: Pradhanya
Article Title: Episode - 22
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.