Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
அறைக்கு வந்ததும் படுக்கையில் புரண்டு படுத்தாள். சிறிது நேரம் கழித்து நெளிந்தாள்.

"இப்போ உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி நெண்டி நெண்டி படுக்கையை களைக்கிற?" என கேட்டபடி வாட்டர் பாட்டிலுடன் உள்ளே வந்தான் சஞ்சய்.

வெடுக்கென எழுந்தமர்ந்த வான்மதி மீண்டும் படுக்கையில் புரண்டாள்."ஹே என்ன டி? சொல்லிட்டு நெண்டு. நானும் உனக்கு கம்பனி கொடுக்கிறேன்."

"சஞ்சு என்னால நம்பவே முடியல டா!"

"என்ன நம்ப முடியல?"

"என்னோட தங்கச்சி வானதிய பத்தி பேசிட்டு இருக்கேன்."என தலையணையில் முகம் புதைத்தாள்.

"ஆமா என் அண்ணன் கொடுத்து வச்சவன். அண்ணி செம்ம ரொமான்டிக் ஆனால் அவங்களோட அக்கா தான்!"என இழுத்தான் சஞ்சய்.

வான்மதி முறைத்து கொண்டு "அங்கேயே நில்லு பக்கத்தில் வந்துடாத!" என தலையணையை தூக்கி எறிந்தாள்.

"ஏன் நான் வரக்கூடாது! இது என்னோட ரூம்! அண்ட் இங்கே இருக்க எல்லாமே என்னோட புரோபர்டி" என்றவன் அவளின் அருகில் நெருங்க, வெடுக்கென எழுந்தாள்.

உதட்டை கவ்வி வேகம் காட்டினான். விட்ரா பண்ணி! என வான்மதி கத்த, விட மாட்டேன் என முத்தத்தில் தீவிரம் காட்டினான்.

வான்மதி சிணுங்கி கொண்டே "நான் ரொமான்டிக் இல்லன்னு சொன்னல்ல போடா! கிட்ட வராதே!" என விலக போராடினாள். பரவாயில்லை என் பொண்டாட்டி ரொமான்டிக்கா இல்லன்னா என்ன? நான் டூ ரொமான்டிக் என்றான் வாய் கொடுத்து வாங்கி கட்டி கொள்ள, அப்படியா! சரிங்க சார்! அரை மணி நேரம் பண்றீங்க என இழுத்தாள் சிரித்து கொண்டே.

"செத்திடுவென் டி!"

எனக்கு தெரியாது. என அவள் படுத்துக் கொள்ள, சஞ்சய் வீரன் போல இல்லாத மீசையை முறுக்கி விட்டு அருகில் நெருங்கியவன் அவளுடன் காதல் கூடலில் மொத்தமாக கரை ஒதுங்கினான்.

"சந்தோஷமா இருக்கேன் சஞ்சு!"

"சஞ்ஜய்ன்னா கொக்கா!"

"கொக்கும் இல்ல வாத்தும் இல்ல வானதிய உன் அண்ணா சந்தோசமா வச்சிருக்கார் அது போதும் எனக்கு" என்றவள் அவனை கட்டிக் கொண்டு மீண்டும் கண் விழித்து "இதெல்லாம் உன்னால" என மீண்டும் உதட்டில் பச்சக் என முத்தமிட்ட படி உறங்க ஆரம்பித்தாள் அவன் மார்பில்.

மாடியில் சஞ்சு மற்றும் வான்மதி இருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த தருணத்துக்கு வந்தது சஞ்சயின் நினைவுகள்.

என்னோட சுயநலத்துக்காக என் தங்கச்சி வாழ்க்கையை இப்படி என தேம்பினாள் வான்மதி.

அப்படி எல்லாம் இல்லடி என் அழகு மதி! எங்க அண்ணன் வெளியில் தான் இப்படி இருக்கான். அவங்க ரெண்டு பேருக்கும் தனிப்பட்ட பெர்சனல் இருக்கு என சமாதானம் செய்துகொண்டே பிரியாணி சாப்பிட்டவன். வான்மதி அசந்த நேரத்தில் தன் அண்ணன் ஜீவாவுக்கு சிம்பிளாக "வான்மதி உன்னை நோட் பண்றா! அண்ணி கூட நீ சேர்ந்து இல்லன்னு நினைக்கிறா! பிரச்னை ஆகிடுமோன்னு தோணுது என்ன பண்றது அண்ணா!" என அனுப்பினான்.

"பால்கனி வா! கார்பார்கிங் பக்கமா!"

நாங்க டெரஸ்ல இருக்கோம்.

குட் மெஸேஜ் பண்ணும் போது கிளம்பு! இனி அவள் சந்தேகபட மாட்டாள் என தட்டி விட்டு ஜீவா அவனது காதல் அரங்கேற்றத்தை நடத்த, ஜீவா நினைத்ததை போலவே பார்த்து விட்டாள் வான்மதி.

இப்பொழுது;

ஒரு பெரு மூச்சை விட்டபடி வான்மதியின் தலையை வருடி கொடுத்தவன் உச்சியில் முத்தமிட்டு என் அண்ணனால் தான் நீ எனக்கு கிடைச்ச, சொல்ல போனால் அண்ணியால என இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கினான்.

சஞ்சய் அனுப்பிய அனைத்து செய்திகளையும் டெலிட் செய்து விட்டு அருகில் படுத்திருப்பவளை முத்தமிட்டு கொண்டே நெருங்கினான் ஜீவா.

காதல் ததும்பும் பார்வையுடன் ஜீவாவை பார்க்க, முகத்தை திருப்பி உதட்டில் முத்தமிட்டபடி கழுத்தில் முகம் புதைத்தான்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ஜீவா அவளிடம் சண்டையிட வில்லை. ஆனால் சோர்வடைய வைத்தான். வானதியை பார்த்தாலே பல்லி போல ஒட்டி கொள்வான்.

ஹாஸ்பிடல் கூட அவளால் போக முடிய வில்லை. சீதா அவளின் முகத்தை பார்த்து விட்டு என்னாச்சு ஒரு மாதிரி இருக்க? என கேட்ட படி அருகில் வந்து நெற்றியில் கை வைத்தார்.

அச்சோ காய்ச்சல் நெருப்பா கொதிக்கிது என சீதா பதறி கொண்டு அவளை அப்படியே கை தாங்களாக சோபாவில் அமர வைத்தார்.

அது கொஞ்சம் டயர்ட் அத்தை ஒன்னும் இல்ல ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடும் என வானதி எழுந்து கொள்ள முயற்சி செய்ய, நான் சொன்னால் நீ கேட்க மாட்ட ஜீவா வரட்டும் என திட்டிய படி கஞ்சி வைக்க சென்றார்.

அத்தை நீங்க இருங்க நான் வரேன் என மெல்ல எழுந்தாள் வானதி.

அடி பின்னி போடுவேன் என்ன சாலாக்கு பண்ணிட்டு இருக்கியா? கம்முன்னு உட்கார் என மிரட்டி கொண்டு உள்ளே சென்றார்.

என்ன நடக்குது? என கேட்ட படி ஜீவா தன் அன்னையையும் வானதியையும் பார்த்தான்.

வாடா இவள் அடங்க மாட்டிக்கிறா காய்ச்சல் அனலா கொதிக்கிது. கொஞ்சம் கூட ஓய்வே இல்ல நீ கேட்க மாட்டியா? என வெளியே வந்தார்.

ஜீவா அருகில் வந்து அவளின் மணிக்கட்டை பிடித்து பார்த்தபடி நெற்றியில் கை வைத்தான்.

அது வந்து என வானதி தயங்க, ஜீவா அவளை கண்டு கொள்ளாமல் வெப்பநிலை செக் செய்தான்.

டேய் இவள் வேலைக்கு போக வேணாம் ரெஸ்ட் எடுக்கட்டும். இந்த நிலைமையில் இவங்க வீட்டுக்காரங்க பார்த்தால் நம்மள என்ன நினைப்பாங்க? என சீதா கவலையுடன் கூறி கொண்டிருக்க, பதில் சொல்லு என்பதை போல பார்த்தான் ஜீவா.

அத்தை ரெண்டு நாளில் காய்ச்சல் சரி ஆகிடும் என வானதி கூற, மா அவளோட விடயத்தில் யாரும் தலையிட வேணாம் போகட்டும்.

என்ன டா ஜீவா நீ இப்படி சொல்லிட்ட? என சீதா கோபத்துக்கு வந்தார்.

கஞ்சிய குடி என வாங்கி கொடுத்தவன். நான் ஹாஸ்பிடல்க்கு ஒரு ரெண்டு கிலோமீட்டர்ல அப்பார்ட்மெண்ட் பார்த்துட்டேன் அங்கே ஷிப்ட் ஆகிறேன் என்றான் ஜீவா.

தனி குடித்தனமா? என சீதா அதிர்ச்சியுடன் கேட்க, தன் அன்னையை முறைத்து பார்த்தவன். 3BHK வீடு தனியா இல்ல என கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு அப்படியே வானதியை சைட் லுக் அடித்து விட்டு அறைக்கு ஏறினான்.

சீதாவுக்கு அடுத்து என்ன பேசுவது என தெரிய வில்லை. சொந்த வீட்டை விட்டுட்டு எப்டி? என யோசித்து கொண்டிருக்க, வானதி அவரின் முன் அத்தை நான் அவர் கிட்ட பேசுறன் நீங்க கவலை படாதீங்க! என சொல்லி சமாதானம் செய்ய, நீ ரெஸ்ட் எடு மா! என அனுப்பி வைத்தார்.

"எதுக்கு வேற வீடு பார்க்கணும்? இங்கேயே இருக்கலாமே!"

காய்ச்சல் மாத்திரைகளை எடுத்து அவளிடம் நீட்டியவன். நீ என்னை தாக்கு பிடிக்கணும்ன்னா வீட்டோட இருக்கணும். அப்போ நான் ஷிப்ட் ஆகிறத பத்தி யோசிக்க மாட்டேன் என சூசகமாக பேசினான் ஜீவா.

"இல்ல வேலைக்கு போகனும்"

ஒரு புருஷனா எனக்கு உன்னோட ஹெல்த் மேலே அக்கறை அதிகம் அண்ட் என்னோட வருங்கால சந்ததி மேலே உன்னை விட அக்கறை அதிகம். சோ ஷிப்ட் ஆக போறோம்.

"வாடகை வீட்டுக்கு எதுக்கு போகனும்?"

வாடகை வீடா? என்னோட வீடு! சொந்த வீடு! என்றான் ஜீவா.

தினமும் கூடலில் அவளை கசக்கி பிளிந்தான் ஜீவா. அவனது வேகத்தை வானதியால் தாங்கி கொள்ள முடிய வில்லை.

முத்தங்களும் அவனது ஒவ்வொரு பிடிப்பும் வானதியின் மேல் இருக்கும் உரிமையை வெளிப்படுத்தியது.

சோர்வுடன் கண்களை மூட.. நாளைக்கு ஹாஸ்பிடல்ல இன்டர்வியூ சோ ப்ரிபேரா வந்திடு என்றவன் திருப்தியுடன் உறங்கினான்.

வானதியால் ஜீவாவை பற்றி எந்த முடிவும் எடுக்க முடிய வில்லை. ஜீவா கோபத்தில் இருக்கிறானா? தெரியாது.

தன்னை பற்றி அவன் நினைப்பது? தெரிய வில்லை.தன் மேல் காதல் இருக்கிறதா? அதுவும் கேள்வி குறியில் தான் இருக்கிறது.

சிரமமே இல்லாமல் நேர்காணலில் தேர்வானாள் வானதி. முதல் ஆறு மாதம் ட்ரெயினிங் பீரியட் ஒவ்வொரு ஹாஸ்பிடலிலும் சில விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள். வானதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்கு காரணம் ஜீவா முதல் கார்த்திக் வரை டாக்டர்ஸ் நர்ஸ் என அனைத்து முகங்களும் நன்கு பரிட்சையம் அவளின் செவிலி படிப்பில் கூட படித்த பெரும்பாலான ஆட்கள் இங்கு தான் பணிபுரிகிறார்கள். எப்படி சமாளிக்க போகிறோம் என நொந்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சோபாவில் கலக்கத்துடன் வான்மதி மற்றும் சஞ்சய் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

அக்கா என்னாச்சு? என வானதி அருகில் சென்றாள்.

"நியூ புராஜக்ட் கிடைச்சிருக்கு"

"நல்ல விசயம் தானே!"

இங்கே இல்ல மும்பைல என வான்மதி சஞ்சயை பார்த்தாள்.

"நீங்களும் தானே மாமா!" என வானதி கேட்க, நானும் தான் அண்ணி! ஆனால் என சஞ்சயின் பார்வை சீதா மற்றும் சிவராமன் மீது விழுந்தது.

என்னாச்சு அத்தை? என அவள் திரும்பி கேட்க, "என்னத்தை சொல்வேன்? உன்னோட புருசன் புது வீடு பார்த்துட்டான். இவங்க ரெண்டு பேரும் அவனுக்கு மேலே ஊரை விட்டே போறேன்னு சொல்றாங்க. ரொம்ப நல்லாருக்கு" என சேலையின் தலைப்பால் கண்களை துடைத்தார்.

இல்லங்க அத்தை இனி நான் வேலைக்கு போகல என சொல்லிய படி எழுந்த வான்மதி. நீங்க போங்க சஞ்சய் நான் வேலைய ரிசைன் பண்ணிடுறேன் என்றவள் மெதுவாக அவளறைக்கு சென்றாள்.

வானதி என்ன சொல்வதென்று முழிக்க, சஞ்சய் ஆவேசமாக எழுந்தவன். மா எதுக்கு மா அவளை தேவையில்லாம திட்டின? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா மா? அவள் வேலைய விட்டு இருந்திட்டா நான் போயி தானே ஆகணும். என் பொண்டாட்டிய இங்கே விட்டுட்டு போகணுமா? அது தான் உனக்கு வேணுமா? அவளை இங்கே உன் கிட்ட விட்டு போக தான் கல்யாணம் பண்ணேனா? என கோபத்தில் கத்தி விட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றான்.

டேய் நில்லு டா! என்னங்க என்ன சொல்லிட்டு போறான் பாருங்க? என சீதா தேம்பி அழுதார்.

அத்தை அழாதீங்க! மாமா எதோ கோபத்தில் பேசிட்டு போய்ட்டார் என வானதி சமாதானம் செய்ய, அவர் வேகமாக அழுது கொண்டே அறைக்கு சென்று விட்டார்.

தப்பா நினைச்சுக்காதீங்க மாமா! அக்கா வேணும்னு அப்படி சொல்லல. அத்தையை சமாதானம் பண்ணுங்க மாமா என கூற, நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல மா! சஞ்சய் அவளோட கைக்குள் வளந்தவன். அதனாலே எதோ உரிமையில் பேசிட்டா. ஜீவா வரட்டும் எல்லாரும் கலந்து பேசி முடிவெடுப்போம் என கூறிய சிவராமன்
தன் மனைவியை சமாதானம் செய்ய சென்றார்.

ஜீவா துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தான். உதட்டில் தந்திர புன்னகை

நெருக்கம் தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: Episode -23
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top