Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
161
"உனக்கு விருப்பம்ன்னா போ!" என ஒரே வார்த்தையில் முடித்தான் ஜீவா.

அப்போ கல்யாணத்துக்கு வர மாட்டீங்களா? என வானதி வருத்தத்துடன் கேட்க அதை அப்போ பார்க்கலாம். இப்போ என்ன அவசரம் என ஜீவா நகர்ந்தவன் ஹாஸ்பிடல் கிளம்பி கொண்டே "இன்னிக்கி ரெடியா இரு நம்ம வெளியே போலாம்."

"எங்கே போக போறோம்?"

"கேள்வி கேட்காத கிளம்பி இரு" என கூறி விட்டு நகர்ந்தான்.

'அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது. கொஞ்சம் பொறுமையா இருக்கணும். வளைகாப்பு அப்போ தான் உண்மைய சொல்லணும். ஆனால் ஜீவா நம்புவானா?' என யோசித்த படி இருந்தாள் வானதி.

மாலையும் ஆனது அவனுக்காக காத்திருந்தாள். ஜீவா குளித்து முடித்து அவளை அழைத்து சென்றது நகை கடைக்கு.. "இங்கே எதுக்கு வந்திருக்கோம்?"

"மாடு மேய்க்க!."

அதற்கு மேல் வானதி வாய் மூடிக் கொண்டாள். தங்க ஜிமிக்கி தோடு, புது கொலுசு ஃபேன்ஸி மாடலில் வாங்கினான். கைகளுக்கு வளையல் பார்த்து பார்த்து தேர்வு செய்தான். வானதி அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை பொம்மை போல அமர வைத்து அனைத்தையும் அவனே தேர்வு செய்தான். கழுத்தில் ஒட்டி கிடப்பது போல மரகத கற்கள் பதித்த செயின் என அனைத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து பில் போட்டான்.

கடைக்காரர் இருவருக்கும் சிறப்பான கவனம் செலுத்தினார். கிட்ட தட்ட ஜீவா 25 பவுன் எடுத்திருந்தான்.

சார் 5 பவுன் மேலே எடுத்ததால உங்களுக்கு வெள்ளி சங்கடை, கூடவே குங்கும சிமில், வெள்ளி லட்சுமி விளக்கு உங்களுக்கு கிஃப்ட் சார் என்றார் கடைக்காரர்.

"ரொம்ப தேங்க்ஸ்" என கூறி அனைத்தையும் வாங்கி கொண்டான்.

தங்க நகைகளை தான் அதிசயத்துடன் பார்ப்பார்கள் ஆனால் வானதி வெள்ளி பொருட்களை கண்கள் விரிய வாங்கி பார்த்தாள். வெள்ளி என்றால் அலாதி பிரியம் அவளுக்கு. தங்கம் தான் வாங்க முடிய வில்லை வெள்ளி வாங்கலாமே என்பது தான் அவளின் எண்ணம்.

ஜீவா எனக்கு ஒரு வெள்ளி தோடு வேணும். என பூனை கூட்டி போல அவனை பார்த்தாள்.

ம்ம் எடுத்துக்க என 5 பவுன் கோதுமை டிசைன் சங்கிலியை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.

பணிப்பெண் அழைத்து சென்று வானதி கேட்ட வெள்ளி தோடு அனைத்தும் காட்டினார்.

அவளுக்கு பிடித்த இரண்டு தோடுகளை எடுத்துக் கொண்டு பர்ஸ் திறந்தாள் பில் போட..

"மேடம் இதை ஃப்ரீயா வச்சுக்கோங்க"

ஏன் சார்? என வானதி கேட்க, முப்பது சவரன் எடுத்திருக்கீங்க அதனாலே இந்த தோட இனாமா வச்சுக்கோங்க என்றார்.

வானதிக்கு பிடிக்க வில்லை அவரின் பேச்சு அதே இடத்தில் வேணாம் தோடுகளை வைத்து விட்டு செல்ல, மேடம் மேடம் நில்லுங்க என்னாச்சு என பணிப்பெண் பின்னால் ஓடினார்.

சார் இதுக்கும் சேர்த்து பில் போடுங்க என ஜீவா கொஞ்சம் அதிகார தொனியில் கூற, சரிங்க சார் என மறுபேச்சு பேசாமல் பில் போட்டார்.

கடைக்கு செல்லும் முன் இருந்த உற்சாகம் இப்பொழுது சுத்தமாக வடிந்திருந்தது. முகத்தை சோகமாக வைத்திருந்தாள்.

நீ எடுத்த சில்வர் ஸ்ட்ரெட் என அவளின் மடியில் வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான் ஜீவா.

"எனக்கு வேணாம்"

"ஹே பே பண்ணி தான் வாங்கிட்டு வந்தேன். வச்சுக்க இல்லன்னா வெளியே தூக்கி போடு" என இளக்காரமாக பதில் கூறினான்.

வானதி எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள். அவளுக்கான உணவுகளை கொடுத்து சாப்பிட வைத்தவன். சத்து டானிக், இரவு போட வேண்டிய மாத்திரைகளை கொடுத்து அவளுடன் வாக்கிங் சென்றான்.

"இப்போ எதுக்கு இப்படி முகத்தை வச்சிட்டு இருக்க?"

ஒன்னும் இல்ல என கண்களில் நீர் கோர்த்து கொண்டது.

ஒன்னும் இல்ல கண்டத யோஸிச்சிட்டு இருந்தீனா அப்புறம் ஸ்ட்ரெஸ் அதிகமாகும் டெலிவரி டைம்ல ரிஸ்க் வந்திட கூடாது என்றான் ஜீவா.

அவள் அழுகையை அடக்கி கொண்டு சரி என்றாள் அந்த நேரம் பார்த்து சீதா அழைத்தார். மா!

நீ வானதி கிட்ட போனை கொடு என கூறினார். இப்பொழுதெல்லாம் அதிகமாக கவனத்தில் கொள்ளப்படும் இரண்டு ஆட்கள் வானதி மற்றும் வான்மதி தான்.

சஞ்சயை சீதா கண்டு கொள்வதில்லை. இங்கே ஜீவாவுக்கு தினமும் அர்ச்சனை தான். வானதியை அப்படி பார்த்துக் கொள் இப்படி பார்த்துக் கொள் அதை செய் இதை செய், இதை செய்யாதே என அறிவுரை தான்.

இந்தா பேசு என போனை நீட்டினான். அத்தை என வானதியின் கவனம் கொஞ்சம் மாறியது.

வானதி முன்பு போல இல்லாமல் எதையோ பறிகொடுத்தது போல சுற்றி திரிந்தாள்.

இதோ கார்த்திக் சங்கவி இருவரின் திருமண நாளும் வந்தது.

உன் புருசன் வராலன்னாலும் நீ வர என மிரட்டி வைத்திருந்தான் கார்த்திக்.

வானதி தலையை உலர்த்திய படி உள்ளே நுழைய, இந்த சாரி கட்டிக்க என எடுத்து வைத்தான் ஜீவா.

அடுத்து புது நகைகள் அனைத்தையும் எடுத்து வைத்தான்.

இதெல்லாம்? என வானதி கேட்க.

வேணாம்ன்னா தூக்கி வெளியே போடு என முறைத்த படி கூறினான்.

அவள் எதுவும் பேசாமல் அழுதாள். இப்போ எதுக்கு டி?

"பேசாத நீ! உனக்கு என் மேலே லவ்வே இல்ல! என்னோட ஜீவா நீ இல்ல! நீ கெட்டவன். எனக்கு என் ஜீவா வேணும். என்னோட ஜீவா வேணும்." என தேம்பி அழுதாள்.

"காதலா? ம்ம்... எல்லாமே உன்னோட பார்வை தவறா இருக்கு வானதி." என கூறினான் ஜீவா.

இதற்கு மேல் பொறுக்க முடியாத வானதி. இப்போ உனக்கு என்ன தெரியணும்? ஏன் அந்த கார்த்திக் என்னை லவ் பண்றேன்னு சொன்னான்? அது தான சொல்றேன் கேட்டுக்க.. என்றவள் ஆரம்பிக்க..

"வேணாம் விடு கிளம்பு" என ஜீவா நகர, இல்ல நீ கேளு என தடுத்தவள். அன்னிக்கு முதன் முதல்ல பஸ்ல உன் கிட்ட பேக் வச்சிருக்க சொல்லி கொடுத்தேனே! அன்னிக்கு நீ என்னை பார்த்தியா தெரியல ஆனால் நான் உன்னை பார்த்தேன். ரெண்டு நிமிஷம் இருக்கும். அப்புறம் ப்ரேக் போட்டு உன் மேலே விழுந்த போது முதன் முதலில் ஒரு பையன் ஸ்பரிசம் பட்டச்சு. அது நீ தான். உன்னோட ஸ்பரிசம் இங்கே என்னோட இடுப்பில் பட்டுச்சு அது கோ இன்சிடன்ட்ஸ் தான் ஆனால் என்னமோ பன்னுச்சு. நான் வயசு கோளாறுன்னு விட்டுட்டேன். அப்புறம் பார்த்தால் நீங்க என்னோட ஸ்கூல்ல கேம்ப் போட்டிருந்தீங்க. அப்போ தான் தெரியும் நீங்க டாக்டர்க்கு படிச்சிட்டு இருக்கிங்கன்னு. அந்த ட்ரெயினிங் பீரியட் மொத்தமும் மறைஞ்சு மறைஞ்சு பார்ப்பேன். என்றாள் வானதி.

ஜீவா அவளின் அருகில் நெருங்க பின்னால் சென்றவள். உங்க பேர் ஜீவா ன்னு எனக்கு அப்போவே தெரியும். நீங்க தூரத்தில் இருந்து என்னை பார்க்கிறதும் எனக்கு தெரியும்.

ஜீவா அதிர்ச்சியுடன் பார்க்க, "எல்லா பொண்ணுக்கும் இயல்பா ஒரு பையன் நம்மள பார்க்கிறது தெரியும். அதை கூட கண்டு பிடிக்கலன்னா நான் என்ன பொண்ணு. ஆனால் வெளியில் காட்டிக்க மாட்டேன். என்னை நானே அழகு படுத்திக்குவேன் ஏன்னா நீங்க என்னை பார்க்கரீங்கல்ல. சொல்லாம பார்க்காம இந்த உணர்வுகளை எல்லாம் ஒரு எனர்ஜியா ரசிச்சுக்கிட்டே 12 th வந்தேன். அப்போ தான் உங்களை சங்கவி நோட் பண்ண ஆரம்பிச்சா! நானும் தெரியாத மாதிரி மெயின்டெய்ன் பண்ணேன். மதியம் ச்சில் வாட்டர் பாக்கெட் வாங்க வரதே உங்களை பார்க்க தான். நீங்க இருக்கீங்களான்னு தேடுவேன். அதே போல நானும் சங்கவியும் வாட்டர் பாக்கெட் வாங்கிட்டு திரும்பும் போது தான் நீங்க அந்த வயசான தாத்தாவுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பன்னதும் பார்க்க வந்தேன். உங்களை பார்த்தே நானும் டாக்டர் ஆகணும் உங்க கிட்ட லவ் சொல்லி இந்த moment's எல்லாம் சொல்ல கனவு காண ஆரம்பிச்சேன். அதுல தான் உங்களை திரும்பி பார்த்திட்டு போனேன். அப்புறம் உங்க கிட்ட வேணும்ன்னு தான் பிடிக்கலன்னு சொன்னேன். நீங்க மறுபடியும் வருவீங்கன்னு பார்த்தேன் நீங்க என் பின்னாடி வரல" என மூச்சு வாங்கினாள்.

போதும் வானதி என ஜீவா தண்ணீரை கொடுக்கக் வாங்கி குடித்தவள். அவனிடம் இருந்து விலகினாள்.

"என்ன டி பண்ற?"

வானதி மெல்ல அவனை பார்த்து "ஜீவநதி ஜீவநதி அப்டின்னு எந்த புக்கில் படிக்கிறனோ அதுல எழுதி வச்சுடுவேன். இதை கார்த்திக் கண்டு பிடிச்சு திட்டினான். வயசு கோளாறுன்னு சொன்னான். அவன் கிட்ட உங்களை என அழுத்தவள். என் ஜீவாவை தான் கட்டிப்பேன்னு சொன்னேன். அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியுமே! ஜீவான்னு ஒரு போஸ்டரில் நேம் இருந்தால் கூட பார்த்து ரசிப்பேன் பைத்தியகாரி மாதிரி பைத்தியம் தான் ஜீவா எனக்கு உன் மேலே பைத்தியம்" என கண்களில் அழுகையும் உதட்டில் புன்னகையுமாக அமர்ந்திருந்தாள்.

"வானதி பிளீஸ் வேணாம் விடு!"

இல்ல ஜீவா என்னோட காதலை உன் கிட்ட நான் சொல்லவே இல்ல. அதுக்கு பதிலா உன் மனசை தான் சுக்கு நூறாக உடைச்சி போட்டேன்.

"சொல்றத கேளு எனக்கு பெரிய சந்தோஷமே எனக்கு உன் மேலே லவ் வந்த அதே நேரம் உனக்கு என் மேலே ஃபீலிங் வந்திடுச்சு அது போதும் டி!" என்றான் ஜீவா.

நீ என்னை விட்டு மெடிக்கல் கேம்ப் போன நானும் உன்னை தான் நினைச்சிட்டு இருந்தேன். அஜய் சார், மனோஜ் டாக்டர் ரெண்டு பேரையும் பார்த்தால் கூடவே உன்னை தேடுவேன். இப்படியே இருந்தேன் ஜீவா. நீ வரன்னு அஜய் சார் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சத்தமா சொன்னார். அப்போ நீ வர நாளுக்காக காத்திருந்தேன் ஜீவா. அப்போ எக்சாம் போயிட்டு இருந்தது.

மேக்ஸ், பயோலோஜி ரெண்டும் முடிஞ்சிருந்தது, ரெண்டுமே நல்லா பண்ணிட்டேன். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எக்சாம்க்கு ஆறு நாள் லீவ். அப்போ தான் அந்த சம்பவம் நடந்தது. வான்மதி ஹாஸ்டலில் இருந்தாள். நான் வீட்ல படிச்சிட்டு இருந்தேன். மதியம் 12 மணி இருக்கும். எங்க அண்ணன் சாப்பிட வீட்டுக்கு வந்தது.

நான் அண்ணனுக்கு சாப்பாடு போட்டுட்டு திரும்பும் போது எங்க அக்கா என வானதி கண்களில் நீருடன் சன்மதி அவங்க M.Dய யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் களுத்துமா வந்து நின்னா.என்றவள் கண்கள் இன்னும் அழுதது.

அங்கே பெரிய பிரச்னை ஆகி போச்சு. கடைசியில அந்த M.D அவர் divorcedன்னு தெரிய வந்தது. எங்க அக்கா அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கா.


மொத்த குடும்பமும் சிதிலடைஞ்சு போச்சு. என அழுதாள் வானதி.

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: Episode -38
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vedha

Member
Joined
Oct 7, 2024
Messages
31
Indha ajai manoj enna aananga sister, manoj vachu oru new storye start pannalame, intersting character 👍
 

Revathipriya

Member
Joined
Oct 14, 2024
Messages
32
Yeppadiyo oru vazhiya Vanathi unmaiya sollita Jeeva ta😊. Jeeva solrathu pola Vanathi rombavey maarita ☺️.Story is Superb and very interesting Sister 👌 👌 👌 🔥 🔥 🔥 👍 😍.
 

Aishwarya

New member
Joined
Oct 6, 2024
Messages
10
Omg vanathiku akka vara irukagala athu ya ipo tha soldriga aipo avaga akka avala tha jeeva vananu solitala
 

Magi

Member
Joined
Oct 6, 2024
Messages
43
Superb unexpected they fall in love at the same time💓 cute uhh .....vanathi solrathu laam kettu patharuthh jeeva ku Inga😅
 
Top