அவன் மேல வெறுப்பா இருக்கு? என்றாள் சங்கவி. ஜீவா ஒரு பெரு மூச்சை விட்ட படி "தெளிவா சொல்லு வெறுப்பாருக்கு அப்படிங்கிறது வேற, இஷ்டம் இல்லங்கறது வேற, அவன உனக்கு பிடிக்கலையா? யோசிச்சு சொல்லு?" என்று கேட்டான்.
சங்கவி கைகளை பிசைந்தபடி "எனக்கு அவன ஃப்ரெண்ட்டா பிடிக்கும். ஆனால் நான் அவனை லவ் பண்ணவே இல்லையே? காதலை எப்படி போர்ஸ் பண்ணி வரவைக்க முடியும்? எனக்கு அவன் மேல துளி கூட இன்ட்ரஸ்ட் கிடையாது." என்று கூறினாள்.
ஜீவா சிரித்தபடி "அவன் உன்ன லவ் பண்றான் ஓகேவா? அது கிளியர் தானே?"
"என்னன்னா மறுபடியும் நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க? கொஞ்சம் கூட எனக்கு இது நியாயமா தெரியல" என்றாள் சங்கவி.
"அப்படி இல்லம்மா, நீ அவன லவ் பண்ணுண்ணு சொல்ல வரல. நான் தான் முதல்ல வானதி லவ் பண்ணேன். அவ என்ன விரும்பலையே?"
"அண்ணா நீங்க வேற! அவன் வேற! நீங்களும் அவனும் ஒன்றாக முடியுமா? அவன் எவ்வளவு சீப்பான வேலையை பண்ணிட்டான் தெரியுமா? ராஸ்கல்.. அவன பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது." என்று சங்கவி மீண்டும் அழத் தயாராகினாள்.
"எனக்கு என்னமோ நீ வார்த்தைகள தேடி தேடி பூசி மொழுகற மாதிரி இருக்கே? அப்போ நீ அவனை விரும்பறயா? பினான்சியல் ஸ்டேட்டஸ்க்காக அவனை வேணாம்னு சொல்றியா?" என்று நேரடியாக கேட்டான் ஜீவா.
"சத்தியமா இல்ல அண்ணா! நானா லவ்வா? ச்ச அவன் மேல எனக்கு ஒரு எந்த எண்ணமும் கிடையாது."
"அப்போ இந்த கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லிடு. நான் வந்து பேசுறேன்" என்று ஜீவா எழுந்தான்.
சங்கவி சரி என்று அவனுடன் எழுந்தாள்.
"உன்கிட்ட ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்தான் பேசுவேன். ரெண்டு நாள் டைம் எடுத்துக்க அதுக்கும் மேல விருப்பம் இல்லன்னா சொல்லு மாத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்றான் ஜீவா.
சொல்லுங்க என சங்கவி பார்த்தாள்.
"நான் சொல்றதுல உனக்கு சரின்னு பட்டதுனா எடுத்துக்கோ இல்ல வேண்டான்னா விட்டுடு" என்று கூறினான்.
"சொல்லுங்க" என்ன விசயம் என சங்கவி கேட்டாள்.
"அந்த ராஸ்கல் கார்த்திக் அப்படி பண்ணது தப்புதான். உன்கிட்ட அப்படி நடந்துருக்க கூடாது. உன்னை அவங்க வீட்ல எல்லாரும் முன்னாடியும் உனக்கு நடந்தது ஐ மீன் எல்லாரும் பார்த்தது அவன் பிஹேவ் பண்ணது, கண்டிப்பா நான் தப்புனு தான் சொல்லுவேன். அது உனக்கு அவன் மேல வெறுப்பை கொடுக்குது. சரிதான?"
அது மட்டும் இல்ல இன்னும் என்று சங்கவி பேச வர..
"இருமா நான் பேசிட்டு இருக்கேன்."
"சொல்லுங்க"
"நீ கார்த்திக்கை கட்டிக்கலன்னா கூட, வீட்ல உனக்கு அலையன்ஸ் பார்ப்பாங்க. புதுசா ஒரு பையன நீ சந்திப்ப. அவன் கூட நீ பேசுவ, பழகணும், புதுசா ஒருத்தன் கூட ட்ராவல் பண்ணனும், அவனுக்கு உன்னை புரிய வைக்கணும். நீ அவனை புரிஞ்சுக்கணும். இந்த மாதிரி சைக்கலாஜிக்கலா நிறைய இருக்கு. மனசு இணையனும், உங்களோட வயசு வித்தியாசம், குடும்பம், அம்மா அப்பா மாமனார் மாமியார்ன்னு ஆயிரம் விஷயங்கள் இருக்கு. இதுக்கு அங்க நீ பேட்ச் ஆக, உனக்கு சிக்ஸ் மனத்ஸ், அது கம்மி மூணு வருஷம் நாலு வருஷம் தேவைப்படும்" என்றான் ஜீவா சிரித்துக் கொண்டே...
சங்கவி தீவிரமாக அவனை பார்த்தாள்.
"இது தான் மா ரியாலிட்டி. வானதியே இன்னும் என் கிட்ட ஓபன் அப் ஆகல.."
அண்ணா என சங்கவி ஆரம்பிக்க,
அவன் மேலே உனக்கு ஒரு... என விட்டவன். இத்தனை நாள் நீ பேசுனதுல கவனிச்சதுல ஒரு விஷயம் என்று ஜீவா கூறினான்.
அண்ணா அது தப்புன்னு நீங்க சொல்லிடாதீங்க என்று சங்கவி தவிப்புடன் கூற, ஜீவா சிரித்தபடி உனக்கு அவன் மேல லவ் இல்ல. அது எனக்கு தெரியுது.
"ஹப்பா இப்போவாச்சும் புரிஞ்சுகிட்டீங்களே அது வரை சந்தோஷம்" என ஒய்யாரமாக சாய்ந்தாள்.
"ஆனால் இனி வரலாம்" என்றான் ஜீவா.
சங்கவி அதிர்ச்சியுடன் பார்க்க, "அவன் மேல உனக்கு அது... அது தான் லவ்... அது இப்போ இல்லன்னு தானே சொன்னேன்! பியூச்சர்ல வரலாம்!" என்றான்.
"வரவே வராது.!"
"சரி அது வருதோ! போகுதோ அவனுக்கு உன் மேல இருக்கிறது வெறுப்பு. அத ஓரம் கட்டி வைத்துவிடு. அப்புறம் நீ கார்த்திக்க பாரு. அவனுக்கு என்ன குறை? அவனை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன்னா உனக்காக எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்கான்?"
"நீங்க ஏன் அண்ணா அவன் நல்லா இருக்கணும்னு விரும்புறீங்க?" என்று சங்கவி கேட்க,
ஜீவா சிரித்தபடி "ஏன்னா நீ நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். அதைவிட கார்த்திக் உன் மேல வச்சிருக்கறது ட்ரூ லவ். என்னால முடியாத விசயத்தை அவன் பண்ணிறுக்கான். நான் வானதிய பார்த்ததும் அவள் கிட்ட பேசணும் காதல் சொல்லணும்னு வந்து நின்னேன். ஆனால் கார்த்திக்? உன்ன இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சுட்டு தன்னையே கட்டுப்படுத்திக்கிட்டு இருந்திருக்கான். அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அதுவும் புடிச்ச பொண்ணை பக்கத்துல வச்சிட்டு ஒழுக்கமா இருந்திருக்கான். அது சாதாரண விஷயம் இல்லை."
சங்கவி சலிப்பாக பார்த்தாள்.
"என்னை கேட்டா நீ கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்கோன்னு தான் நான் சொல்லுவேன். அதுக்கப்புறம் உன்னோட முடிவு" என்று கூறினான் ஜீவா.
சங்கதி தீவிரமான யோசனையில் இருக்க, "வானதி கிட்ட அவன் பேசுறது எரிச்சலா இருந்தாலும் உன் பின்னாடி அவன் சுத்துறத பாத்தா fun ஆ இருக்கும். அதே சமயம் அவ்ளோ அழகா இருக்கும். ஒரு பூனை குட்டி மாதிரி.. முன்ன உன்ன எப்படி டீஸ் பண்ணுவான்? நீ கூட என்கிட்ட வந்து சொல்லுவல்ல. இப்போ பாரு உன் பின்னாடி எப்படி சுத்துறான்னு! அதுவே காட்டுது. நீ அவனோட மனசுல எந்த அளவுல ஆழமா பதிஞ்சி இருக்கேன்னு. உனக்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வரான். இதை விட என்ன வேணும்? அவன் கைய நீ கெட்டியா பிடிச்சுக்கணும். உண்மையான காதல் உன் மேல அவன் வச்சிருக்கான். அவ்வளவு தான் நான் சொல்லுவேன் இனிமேல் எடுக்க வேண்டியது முடிவெடுக்க வேண்டியது நீதான்" என்று கூறிவிட்டு ஜீவா நகர்ந்தான்.
"அண்ணா அவங்க அம்மா" என்று சங்கவி ஆரம்பிக்க, "அதை அவன் டேக்கல் பண்ணட்டும். நீ கல்யாணம் பண்ணிக்கோ. அவன் உன்னையும் உங்க அம்மாவையும் டேக்கல் பண்ணட்டும்.காதலில் வித்தியாசம் ஏற்றம் தாழ்வு ஜாதி மதம் எதுவும் கிடையாது. உனக்கு அவனை எல்லா விஷயமும். நான் நல்லா பாத்துப்பான். பிரண்ட்ன்னு அந்த கோட்டுக்குள்ள அவனை வைக்காத. அவனை நீ நெருக்கமா பார்ப்பதனால் தான் உனக்கு அவனோட ஒட்ட முடியலையோ! என்னவோ? கொஞ்சம் தள்ளி வைத்து பாரு. அவன் பண்ணது தப்பு அதை நான் மன்னிக்க மாட்டேன். நீயும் மன்னிக்க வேண்டாம் ஆனால் கல்யாணம் பண்ணிக்கோ" என்று சொல்லி முடித்து வட்டு கிளம்பினான்.
சங்கவி என்ன பண்ண போறா? பார்ப்போம்.
ஜீவா இன்று அடித்து பிடித்து நேரமே வீட்டுக்கு கிளம்பினான். காலையில் வேறு அவளை அடித்து விட்டு வந்தான். ஆனால் அதன் பின் மாமியாரை வீட்டுக்கு போக சொன்னானே! அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது என தெரியும். எப்படி? நதி என்னை விட ஸ்ட்ராங் என ஜீவனுக்கு தெரியும்.
காலிங் பெல் அடித்தான்.
வீங்கிய முகத்துடன் கதவை திறந்தாள் வானதி. நெஞ்சம் பதைத்து போனது. ஆனால் வெளி காட்டிக் கொள்ள வில்லை.
கோபத்துடன் உள்ளே சென்றான். திமிரில் ஆடுகிறாள்.
அவளின் பணிவிடையை ஏற்று கொள்ள வில்லை. படுக்கையில் போய் படுத்தாள். சாப்பிட வில்லை.
உணவை பார்த்தான். தக்காளி ரசம் முட்டை பொரியல், மொத்தமும் தட்டில் நிறைத்துக் கொண்டு சென்றான்.
சாப்பிட்டயா?
எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்தாள்.
மொத்தமும் ஊட்டி விட்டவன். " சாப்பிடுன்னு சொல்லிட்டு இருக்க முடியாது. என்னால கெஞ்சவும் முடியாது. உன்னை சஞ்சய் - வான்மதி மாதிரி கட்டிட்டு வரல நானு.. எழுந்து சாப்பிட்டு இனி சொல்ல மாட்டேன்." என சென்று விட்டான்.
முட்டாள் பெண்!. வயிற்றில் இருக்கும் குழந்தை அவளின் உயிர் அல்லவா? அதை கூட சொல்லி தெரிய வேண்டுமா?
அவனுக்கு ஒட்டி படுத்துக் கொண்டாள்.
"தள்ளி போ"
"சாரி இனி அப்படி சொல்ல மாட்டேன். பிளீஸ். என்னால உன்னை விட்டு இருக்க முடியாது ஜீவா"
"பிளீஸ் சாரி! உன் காலில் விழவா!"
அவன் அவள் பக்கம் படுத்தானே தவிர பேச வில்லை. அவனது உதட்டில் முத்தமிட்டாள். ஜீவா அமைதியுடன் இருக்க, வலிக்குது ஜீவா! ரொம்ப.. என அழுதாள்.
கண்களில் நீர் சுரக்க அவளை அணைத்து கொண்டான். கன்னத்தில் முத்தம் வைத்து ஊதி விட்டான்.
ஜீவா என அவன் முகத்தை பார்த்தாள். என் ஜீவா எனக்காக அழரார். எனக்காக.. ஜீவா மனசுல நான் தான் இருக்கேன் நான் மட்டும் தான்.. நான் தான்.. என காதல் உணர்வுகள் கரை புரண்டு ஓட அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள்.
"இன்னும் உன் மேலே கோபம் போகல! உன்னை நான் இனி எதுவும் சொல்லவும் மாட்டேன் கேட்கவும் மாட்டேன். ஆனால் என்னை இப்படி டார்ச்சர் பண்ணி கொல்லாத!" என ஆவேசமாக நெஞ்சில் அவளை பதித்து கொண்டான்.
ஜீவா எனக்கு பண்ணனும் போல தோணுது.
என்ன? என்ன சொல்ற?
நம்ம பண்ணலாம் என உதட்டில் முத்தம் வைத்தாள்.
வானதி அடி வாங்க போற!. தள்ளி படு..
இல்ல வேணும் எனக்கு தோணுது ரொம்ப!.. என அவனை அணைத்து முத்தமிட்டாள் ஆவேசமாக..
ஹே கூடாது. ஏற்கனவே நீ வீக்கா இருக்க!..
எனக்கு தெரியும் ஜீவா. என இழுத்து முத்தமிட ஆரம்பித்தாள்.
*
"செழியா"
அம்மா சின்னு மா எப்படி இருக்கா? என செழியன் கேட்க..
நல்லாருக்கா! ஈரல் செஞ்சு கொண்டு போனேன்.
அவளுக்கு அது பிடிக்காதே! என சிரித்த படியே கூறினான்.
ஊட்டி விட்டேன் கண்ணு.
நானும் வந்து பார்க்கணும் மா! என செழியன் கூற, அப்புறம் கண்ணு..
என்ன மா என்ன விசயம்?
ந.. நான் இன்.. இன்னிக்கு சன்மதிய பார்த்தேன் டா! என்றார் ராதா.
தொடரும்..

Author: Pradhanya
Article Title: Episode -36
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.