அம்மு என வீரா அழைத்த படி அவளின் விரல்களுக்கு முத்தம் வைத்தான். ஆணவனின் முதல் ஸ்பரிசமும் முத்தங்களும் உள்ளுக்குள் சிலிர்ப்பையும் மின்சாரத்தையும் கொடுக்க, ஹே அம்மு நீ எங்கே இருந்து வந்தேன்னு மறந்து போச்சா? வீரா கூட எப்படி உன்னால இருக்க முடியுது? முதலில் அவரு எந்த மனநிலையில் உன்னை வாங்கிட்டு வந்திருக்கார்ன்னு நினைக்கிற? என ஆயிரம் கேள்விகள் மண்டையில் வரிசை கட்டி நிற்க...
"யாரது? அம்மு? என்னோட பேர் ரதி" என்றாள் அவளின் கைகளை விலக்கி கொண்டே..
ஹான் அம்மு யாருன்னு தெரியாது மேடம்க்கு. ஓகே மேடம் நீங்க ரதி தான். என்றான் மெல்லிய குரலில்..
"நான் ரதி தான் சார்!" என அம்மு அடுத்து பேச வர, வீரா அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு "நான் இந்த ஒரு வாரத்தில் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா டி? செத்து கடந்தேன். என்னை அப்படியே விட்டுட்டு போயிட்டல்ல. இந்த வீரா பைத்தியம் பிடிச்சு சுத்தனும் அது தான உன்னோட எண்ணம். எப்போ உன்னை பார்போம்ன்னு இருந்தது டி. இனி ஒரு நிமிசம் கூட உன்னை விட்டு பிரிய முடியாது என்னால.. என்னோட வாழ்க்கை முழுக்க நீ வேணும் டி!" என்றான் வீரா உணர்வுடன்.
அம்மு திகைப்புடன் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல. என்னோட பேர் ரதி என அவள் பாதி சொல்லி முடிக்க வில்லை ஆவேசமாக கார் வேகமெடுத்தது.
வீராவின் கவனம் சக்தியின் மீது சென்று என்னாச்சு சக்தி? ஏன் இவ்லோ வேகம் என கேட்க, அவனுங்க வந்துட்டானுங்க.. பின்னாடி பாரு என சக்தி காரை வேக படுத்தினான்.
"என்னாச்சு? அது தான் அவன் கேட்ட பணத்தை நம்ம கொடுத்திட்டோம் தான அப்புறம் எதுக்கு வரானுங்க?" என வீரா சந்தேகத்துடன் கேட்டான்.
"ஏன்னா இதுல நான் சம்மந்த பட்டிருக்கேன்." என சத்ய தேவ் சமாளித்து விட்டான். உண்மையை சொல்ல போனால் இப்பொழுது தான் இன்பார்மரிடம் இருந்து செய்தி வந்தது. அம்மு பிளாக் ஈகிலுக்கு வேண்டுமாம். அங்கு நடந்த அனைத்து விசயமும் சத்ய தேவ்க்கு வந்து விட்டது.
அம்மு பதட்டத்துடன் சுற்றிலும் பார்க்க, அம்மு பயப்படாத பேபி அவனுங்க உன் பக்கத்தில் கூட நெருங்க மாட்டாணுங்க என்றவன் துப்பாக்கியை ட்ரிக்கர் செய்தான்.
பிளாக் ஈகில் மற்றும் தனா இருவரும் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். தனா தனக்கு பக்க வாட்டில் விரட்டி கொண்டிருக்கும் போலீஸ் ஜீப்பை பார்த்து ஹே அரிசந்திரா அந்த ஜீப்பை சுத்து போடு என உத்தரவிட்டான்.
அரிசந்திரா என்னும் பிளாக் ஈகில் ஸ்டியரிங்கை நேர்த்தியாக திருப்ப, போலீஸ் ஜீப் தள்ளாடிய படி அதன் கட்டுப்பாட்டை இழந்தது.
தனா காரில் இருந்து இறங்கி வந்து போலீஸ்காரனின் வாக்கி டாக்கியில் சத்ய தேவை அழைத்தான்.
"ஹே இருக்கியா கமிஷ்னர் மருமகனே!"
டேய் என சக்தி பேச வர, அடங்கு எனக்கு இப்போ உன்னை கொல்ற மூட் எல்லாம் சுத்தமா இல்ல. சொல்ல போனால் எப்போவும் இருந்தது இல்ல.
சக்தி அடுத்து பேச வர, "ஹே நிறுத்து டா! நான் லவ் மோட்ல இருக்கேன். ஒழுங்கா அவளை என் கிட்ட கொடுத்திட்டு நீ கிளம்பிகிட்டே இரு. இல்ல நான் யாருன்னு காட்ட வேண்டி வரும்." என்றான் தனா.
இதை கேட்டதும் அம்முவின் கண்களில் நீர் கொட்டியது. ஆள் ஆளுக்கு தன்னை விற்று விலை பேசி வாங்கி கொள்கிறார்கள். பெண் என்பவள் இவர்களுக்கு என்ன மாதிரி தெரிகிறாள் என வெட்டில் புழு போல துடித்தாள்.
பொண்ணை தர முடியாது டா! என்ன புடுங்குவியோ புடுங்கிக்க
சத்ய தேவ் இந்த பிளாக் ஈகில் கிட்ட மோதாதே விளைவு மோசமா இருக்கும். என்றான் தனா.
என் கிட்ட பேசுறது பிளாக் ஈகிள் இல்லையே? ஐ திங்க் தனா தான.. என்றான் சத்ய தேவ்.
மறுமுனையில் அமைதி நிலவியது. சத்ய தேவ் சிரித்த படி நான் யாருன்னு நல்லா தெரிஞ்சுக்க, உன்னோட உயிரை விட்டு வச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் இருக்கு. உன்னோட உயிர் சாதாரணமா போக கூடாது உன்னை சித்ரவதை பண்ணி உன்னை துடிக்க துடிக்க என சக்தி சொல்லி கொண்டிருக்க, அம்முவின் கண்களில் பயமும் பதட்டமும் கண்ணீருடன் வெளிப்பட்டது.
சத்ய தேவ் தன்னை சுதாரித்து கொண்டவன். அந்த பொண்ணுக்கு அங்கே இருக்க விருப்பம் இல்ல அதை விட அவள் நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல.
உன்னோட விளக்கம் வெங்காயம் எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அவள் வேணும். நீயா அவளை என் கிட்ட கொடுத்துட்டா நல்லது இல்லன்னா நான் யாருன்னு தெரிஞ்சுப்ப என கூறினான் தனா.
என்ன டா பண்ணுவ? என வீராவின் குரல் கேட்டது.
ஹே அவளை என் கிட்ட கொடுத்திடு அதிவீரா! உன்னோட மொத்த ஹிஸ்டரியும் என் கிட்ட இருக்கு. நீயே ஒப்படைக்கல நானா வருவேன். வந்து அவளை தூக்கிட்டு போவேன் என்றான் தனா.
தனாவின் வார்த்தைகள் அம்முவுக்கு உள்ளுக்குள் பயத்தை கிளப்பியது.
அவள் என்னோடகள் யாருக்கும் தர மாட்டேன். She is mine என கத்தினான் வீரா.
ஓ அது தான் அவளை காசு போட்டு வாங்கிட்டு போனயா! பொட்ட மாதிரி என தனா தூண்டி விடும் வார்த்தைகளை பேசி விட்டு எட்ட வந்தவன் அந்த ஜீப்பின் பெட்ரோல் டேங்கில் சுட்டான். பெரும் சத்தத்துடன் வெடித்தது அந்த ஜீப்.
சத்ய தேவ் காரை நிறுத்து என ஆக்ரோஷமாக கத்தினான் வீரா.
டேய் வேணாம் வீரா! அவன் வேணும்னு தூண்டி விட பேசிட்டு இருக்கான். உன்னோட கோபத்தை பயன்படுத்தி எதோ பிளான் பண்றான். நம்ம இந்த இடத்தை விட்டு போயே ஆகணும் என சத்ய தேவ் காரை நிறுத்தாமல் கூறினான்.
இல்ல சக்தி என வீரா பேச வர, சக்திக்கு மீண்டும் அழைப்பு வந்தது. ஜீப்பில் இருக்கும் ஆட்கள் எப்போதோ இறங்கி தனாவை சுட முயற்சி செய்ய, பிளாக் ஈகில் இன்னொரு பக்கம் அவர்களுடன் துப்பாக்கி சூட்டில் ஈடு பட்டுக் கொண்டிருந்தான்.
சார் நீங்க எங்கேயும் நிக்காதீங்க. இங்கே ஆளும் கட்சி நேரடியாகவே அந்த கும்பலுக்கு சப்பொட் சோ நீங்க நிக்காம போங்க நம்ம ஸ்டேட் ல அவனுங்களால நுழைய முடியாது என கூறினார் ஒரு காவலர்.
பிளாக் ஈகில் இந்த பக்கம் தனாவிடம் கொஞ்சம் பொறு தனா! என சொல்லி கொண்டிருக்க, உன்னை கொல்ட்ற வெறியில் இருக்கேன் மூடிட்டு இரு எனக்கு அவள் வேணும் என மொத்த கவனமும் அம்மு மேல் தான் இருந்தது தனாவுக்கு.
பிளாக் ஈகிள் அனைத்து இடங்களிலும் ஆட்களை ஏவி விட்டான்.
அந்த வீரா உயிர் போகட்டும். ஆனால் அந்த போலீஸ்காரன், அப்புறம் வண்டியில் இருக்கிற பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது. அந்த போலீஸ்காரனுக்கு உயிர் இருக்கணும் ஆனால் சாக கூடாது என கூறி கொண்டிருந்தான். பிளாக் ஈகில்.
அம்முவின் முகம் ஒன்றும் சரி இல்லை.
என்னாச்சு டி? என வீரா கேட்க, ரெஸ்ட் ரூம் வருது என கூறினாள்.
இன்னும் கொஞ்ச தூரம் மா! நம்ம பார்டர் கிட்ட வந்துட்டோம். அந்த பக்கம் பெட்ரோல் பங்க் வருது என கூகிள் மேப்பில் பார்த்தவன். அங்கே போனதும் போலாம் மா என சாலையில் கவனம் செலுத்தினான்.
சக்தி நீ அவனுக்கு பயப்படுற மாதிரி தெரியுது. அவள் தான் முடியலன்னு சொல்றாலே நிறுத்து டா வண்டிய..
இல்ல இல்ல சார் நீங்க போங்க எனக்கு ஓகே தான் என்றாள் அம்மு.
நீ கம்முன்னு இரு டா என சத்ய தேவ் கூற வீரா அம்முவை முறைத்தான். ரொம்ப லேட் ஆகும் போல நான் கௌதம் க்கு லொக்கேஷன் அனுப்பி ஜெட் எடுத்திட்டு வர சொல்றேன் என அந்த வேளையில் ஈடுபட்டான் வீரா.
அந்த பெட்ரோல் பங்க் வந்து விட வீரா வண்டியில் இருந்து இறங்கி கொள்ள சத்ய தேவ் ஜீப்பில் டீசல் பில் செய்தான். அம்மு ரெஸ்ட் ரூம் போய் விட்டு வெளியே வர மூவரும் காரில் ஏறும் தருணம் வீராவின் மேல் குறி வைக்க பட்டது.
தமார் டமார் என துப்பாக்கி சத்தம் கேட்க தனா வந்தான்.
துப்பாக்கி சூடு ஆரம்பித்தது.
சத்ய தேவ் அம்முவிடம் போ மா காருக்குள் போ! வீரா சாவி இந்தா கிளம்பி போ நான் இவனுங்கள பார்த்துக்கிறேன் என கூறிக் கொண்டே நகர, அம்முவை சாவியுடன் லாக் செய்தவன் நீ இல்லாம என்னால போக முடியாது என ஆரம்பித்தது வேட்டை.
தனா கையை ஆட்ட, நிசப்தம்.. .
டேய் இப்போ கூட சொல்றேன் அவளை என் கிட்ட கொடுத்திடுங்க உயிரோட விடுறேன் இல்லன்னா உங்க உயிருக்கு நான் பொறுப்பு இல்ல என தாக்க ஆரம்பித்தான் தனா.
சத்ய தேவ் ஒரு பக்கம் அனைத்து கடத்தல் கும்பலையும் கொன்று குவிக்க அவனது முதுகில் குண்டு பதம் பார்த்தது.
இன்னொரு பக்கம் வீராவின் வயிற்று பகுதி அல்லையில் குண்டு துளைத்து சென்றது.
சட்டென காரின் கதவுகள் திறக்க துப்பாக்கி சூடு நின்றது.
வேணாம் விடுங்க! வீரா நான் போறேன் எனக்காக உங்க உயிர் போக வேணாம். வீரா என கண்களில் கண்ணீருடன் கரைந்தாள் அம்மு.
அம்மு பைத்தியக்கார தனம் பண்ணாத என வீரா அவளின் அருகில் நெருங்க, தனா அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டான்.
தொடரும்..

Author: Pradhanya
Article Title: Episode -13
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.