🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
2. கள்ள கணவன் கர்ணன் 1
கள்ள கணவன் கர்ணன்
📖 கள்ள கணவன் கர்ணன் · Chapter 2 of 47

கள்ள கணவன் கர்ணன் 1

  • 9 Mar 2026
  • 1,342 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

அத்தியாயம் -1 

சித்திரை மாத வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, மதியம் அத்தனை வெயில்! வியர்க்க விறுவிறுக்க தனது கணவன் அர்ஜுனின் துணிகள் அனைத்தையும் துவைத்து காயவைத்துவிட்டு, சோர்வுடன் வந்த துளசி கையை கழுவிக்கொண்டு நேராக அடுக்களைக்குள் புகுந்து தண்ணீர் குடிக்கத் தூக்கினாள்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

வியர்க்க விறுவிறுக்க அவள் தண்ணீரை வானம் பார்த்து வாயில் சரிக்க, சிந்திய நீர் திவலைகள் துளசியின் அழகு வதனத்தில் உதட்டை முத்தமிட்டன. அந்தத் துளி கொஞ்சம் கொஞ்சமாகக் கழுத்தில் இறங்கி கூரான நெஞ்சில் பாய, இன்னொரு பக்கம் அதற்கு மேல் போட்டி போட்டுக்கொண்டு வதன வியர்வை துளிகள் தலையிலிருந்து கழுத்துக்கு இறங்கின; இன்னொரு பக்கம் அவளின் ரவிக்கையிலிருந்து இடை மடிப்புக்கு இறங்கியது. துளசி சொருகியிருந்த முந்தி, அந்த இடையினத்தில் அத்தனை இறுக்கமாகப் பதிந்து இருந்தது.

“இந்தத் தண்ணி தாகம் அடங்கவே மாட்டேங்குதே!” எனச் சொல்லிக்கொண்டு திரும்பிய துளசியின் முகம் பயத்தில் மாறிப்போனது. எதிரில் கர்ணன் நின்றிருந்தான். இருவருக்கும் ஒரு நொடிதான் இடைவெளி; அத்தனை நெருக்கம்! துளசிக்கு உடலெல்லாம் கிடுகிடுவென ஆட, வேகமாக வெளியே செல்ல முற்பட்டாள்.

உள்ளுக்குள் நடுக்கமும் பயமும் தொற்றிக்கொண்டு பேயாட்டம் கண்டது. கர்ணனின் சிவந்த விழிகளோ அவளின் இடையின் மேல் அழுத்தமாகப் படிந்தன.

“ஐயோ! எங்கு பார்க்கிறான்?” என வேகமாக முந்தியை இழுத்து மறைத்துக்கொண்டாள் துளசி.

“ஹேய் துளசி!” என மல்லிகாவின் குரல் கேட்க, “இதோ வரேன் அத்தை!” என வேகமாக வெளியே சென்றாள் மூச்சு வாங்க…

கர்ணன் அவள் வைத்துவிட்டுச் சென்ற சொம்பைப் பார்த்தான். வேகமாக உஷ்ண மூச்சை வெளிவிட்டவன், வேட்டியை முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிக்கொண்டு, ஒரு சட்டியில் கருவாடு மொத்தத்தையும் கொட்டிக் கழுவ ஆரம்பித்தான். சுடுநீரில் அலசி, வெங்காயம், தக்காளி வெட்டிப் போட்டு, விசிலடித்துக்கொண்டே செய்தான். அரை மணி நேரம் கழித்து கருவாடு மணம் ஆளைத் தூக்க, “மியாவ்” எனக் கத்தியபடி அவனது காலைச் சுற்றி வந்தது மீனா பூனைக்குட்டி.

“மீனு! உனக்குத்தான்டி வருது, இரு எடுத்திட்டு வரேன்” என கருவாட்டுத் தலையைப் பொட்டலம் கட்டி மீனு பூனைக்கு வைத்தவன், தட்டு நிறையச் சாப்பாட்டை அழுத்தி வைத்துக்கொண்டு கருவாடு வணக்கல் மற்றும் ஒரு கப் தயிரைப் போட்டுப் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தான் கர்ணன்.

காலை நீட்டிப் பரப்பி அமர்ந்திருந்தான். அவன் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே பூனைக்குட்டியும் கருவாட்டுத் தலையைக் “கரக் முராக்” எனச் சத்தம் போட்டுக்கொண்டே கடித்துச் சாப்பிட்டது.

மல்லிகா பட்டுப்புடவையில் நகையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தவர், “இன்னைக்கு கீழ்வளவு மணி புள்ள மேனக்காவுக்கு வளைகாப்பு. உன்னையும் வரச்சொன்னாங்க! வா, போயிட்டு வரலாம்” என்றார் வேண்டுமென்றே.

துளசியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. சோற்றைக் கவளமாக்கி உருட்டி விழுங்கிக்கொண்டிருந்த கர்ணனின் காதுகளுக்கும் இந்தச் செய்திகள் கேட்கவே செய்தன.

“அத்தை, நான்… எனக்கு?” என துளசி தயங்கினாள்.

மல்லிகாவின் வெற்றிலை குதப்பிய சிவந்த உதடும் நாக்கும் இன்னும் குரோதத்துடன் புன்னகைக்க, “அதுவும் சரிதான்! கல்யாணம் முடிச்சு ஏழு வருஷம் ஆகுது, இன்னும் குழந்தை இல்லை. உன்னோட வயசுல சின்னப் பிள்ளைங்க எல்லாம் இக்கத்துல ஒண்ணு, வயித்துல ஒண்ணு அப்படின்னு திரியிறாங்க. என் குடும்பத் தலையெழுத்து இப்படி! மூதேவி யாரு ரூபத்திலேயோ வந்து ஆடிட்டு இருக்கா,” என்றார்.

துளசி தலையைக் குனிந்தபடி நின்றிருக்க, “சரி போ! போய் என்னோட பட்டுப்புடவையை ஷாம்பூ போட்டு அலசி காயவச்சு அயர்ன் பண்ணி வச்சிடு. இன்னைக்கு என் பொண்ணு கார்த்திகா வர்றா! அவளுக்கு மீன் பிடிக்கும். உன்ற மாமனார் வாங்கிட்டு வருவாரு, தலையை குழம்பு வச்சுட்டு, மீனை மசால் தடவி காயவச்சிடு. கண்ட ஜென்மமும் கண்ட பூனையும் வாய் வச்சிடப் போகுது,” என்று விட்டு சீமந்தம் கிளம்பிவிட்டார் மல்லிகா.

“சரிங்க அத்தை” எனப் பெருமூச்சுடன் தலையாட்டினாள். மல்லிகா சென்ற அடுத்த நொடி, கண்களிலிருந்து நீர் கொட்டியது துளசிக்கு. இதை அர்ஜுனிடமும் சொல்ல முடியாது, வீட்டுக்கும் அழைத்து போன் செய்து புலம்ப முடியாது.

அர்ஜுன் அஞ்சல் துறையில் கிளர்க்காக வேலை செய்கிறான்; மத்திய அரசு வேலை. ரத்தினசாமி அஞ்சல் வங்கியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் மகனுக்கு எப்படியாவது வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு, நேர்காணலில் பணத்தைக் கட்டி வேலை வாங்கியாயிற்று. இந்த வேலையைச் சுட்டிக்காட்டி, 12-வது பொதுத்தேர்வு முடிந்து பதினெட்டு வயது பிறந்த அடுத்த நாளே, மல்லிகா தனது மகனுக்குத் தூரத்து உறவு செல்வி-பாரிவேந்தன் மகளான துளசியைக் கட்டிக்கொண்டு வந்தனர். திருமணமாகி ஏழு வருடங்கள் சென்றுவிட்டன. ஊரில் இருக்கும் அனைவரும் சொல்லும் ஒரே சொல் “மலடி” என்னும் மூன்றெழுத்து வார்த்தை. அது ஒவ்வொரு நொடியும் பெண்ணவளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. நகை கேட்காமல் பெண் மட்டும் போதும் எனச் சொன்ன மல்லிகாவைத் தெய்வமாகப் பார்த்தார்கள் துளசி குடும்பத்தினர்.

ஆனால் துளசி? இங்கு தினம் தினம் ரணத்தில் புழுங்கித் தவிக்கிறாள்.

ரத்தினசாமி – அன்னக்கொடி இருவரின் மகன் கர்ணன். அன்னக்கொடிக்கு இரண்டாம் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு, வயிற்றுக் குழந்தையுடன் இறந்து போனார். அப்போது கர்ணனுக்கு எட்டு வயது இருக்கும். சிறு வயதான கர்ணனுக்கும் தனக்கும் ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் இருக்க வேண்டும் எனத் தூரத்தில் கட்டாமல், அன்னக்கொடியின் சித்தப்பா மகளான மல்லிகாவைத் திருமணம் செய்தார் ரத்தினசாமி. மல்லிகா பவ்யமாக வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் செய்த காரியம், ரத்தினசாமியைத் தனக்கு அடிமைப்படுத்தியதுதான்; மதுவும் அதில் அடக்கம்.

கர்ணனை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்த மல்லிகா, ரத்தினசாமியின் குழந்தையை வயிற்றில் சுமந்தாள். கர்ப்பத்தைக் காரணம் காட்டி அவனை ரத்தினசாமியின் தங்கை வைஜயந்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். வைஜயந்திக்கு கர்ணன் என்றால் உயிர்; தனது மகனைப் போலப் பாசம் கொட்டி வளர்த்தார். ரத்தினசாமி கர்ணனைப் பார்க்க வருவது குறைந்துபோனது. மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துக் கொண்டிருந்தவர், மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்தார்; பின் அது ஆறு மாதமாகிப் போனது.

அர்ஜுன் பிறந்த ஒரு வருடத்திலேயே கார்த்திகா பிறந்தாள். இப்படியே நாட்கள் செல்ல, வைஜயந்தி உடல்நிலை சரியில்லாமல் போனாள். தனது அத்தையின் உடல்நலம் கருதி கர்ணன் அவர்களுக்குச் சுமை கொடுக்க வேண்டாம் என்று எண்ணி, தனது அம்மா வாழ்ந்த வீட்டுக்குச் சென்றான். அங்கே நிலை தலைகீழாக இருந்தது. கர்ணன் அமர்ந்த மடியில் இன்று அர்ஜுன் அமர்ந்திருந்தான்; கார்த்திகா இன்னொரு பக்கம் “ப்பா, ப்பா” என மழலை மொழியில் அழைத்துக்கொண்டு திரிந்தாள்.

கர்ணனுக்கு உள்ளுக்குள் ஏக்கம் மற்றும் சுயபச்சாதாபம் அனைத்தும் தோன்ற, மீண்டும் வைஜயந்தி வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டான். அதன்பின் கர்ணனின் வாழ்க்கை, ஒரு பெரிய சம்பவத்தில் திசைமாறிப் போனது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஹே ச்சீ! வெளில போ!” என துளசி ஒருவித பயத்துடன் பூனையைப் பார்த்துவிட்டு வெளியே துரத்த, “மீனு!” என கர்ணனின் கடுமையான குரல் ஒலிக்க, துள்ளிக்கொண்டு ஓடிவந்தாள் மீனு பூனைக்குட்டி.

“அய்யோ! இவன் இருக்கறத மறந்துட்டேனே?” என நினைத்த துளசி, வேகமாக மல்லிகா சொன்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு விரலாகச் சப்புக்கொட்டி ரசித்து ருசித்துச் சாப்பிட்டான் கர்ணன். அவன் அங்கு சப்புக்கொட்டும் சத்தம் இங்கே துளசியின் காதுகளில் ஒலிக்க, முகத்தைச் சுளித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தவள், வேகமாக என்ன செய்யலாம் என யோசித்தாள்.

ஆம், அவன் வீட்டில் இருந்தால் கூடத் துணைக்கு யாரையாவது வைத்துக்கொள்வாள். இரவில் பிரச்சினை இல்லை, அர்ஜுன் இருப்பான். “இன்னைக்கு யாரு… யாரு இங்கே இருக்கா? ஹான், வைதேகி இருக்கா!” என வேகமாக கிழக்கு பக்கம் இரண்டு வீடு தள்ளிச் சென்றவள், “வைதேகி வர்றியா? நான் துணி துவைக்கிறேன், அப்படியே பேச்சுத் துணைக்கு இருக்கியா புள்ள?” எனக் கேட்டாள்.

“அப்படியாக்கா, நான் வரேன். நீங்க போங்க,” எனச் சொல்லி அனுப்பிவைத்தாள்.

துளசி ஒரு பெருமூச்சை விட்டபடி நேராகத் துணி துவைக்கச் சென்றாள்.

கர்ணன் அவனது பக்கம் கயிற்றுக் கட்டிலைப்போட்டு, உடலை முறுக்கியபடி அப்படியே படுத்துக்கொண்டான். இரவு சவாரி இருக்கிறது. ஆம், கர்ணன் வாடகைக்கு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். முன்பு சரக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் வைஜயந்தி இறப்பதற்கு முன், “தூரமா சவாரி போகாத கர்ணா” எனச் சத்தியம் வாங்கிவிட்டார்.

கட்டிலில் படுத்ததும் சத்தமாக ஏப்பம் விட்டான். அதில் துளசி ஒரு நொடி பயந்துதான் போனாள். இந்த வீட்டுக்குத் திருமணமாகி வந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அவனிடம் ஒருமுறை கூடப் பேசியதில்லை. “அவனிடம் பேசக்கூடாது” என அர்ஜுன் சொல்லி வைத்திருக்கிறான்.

குறட்டைச் சத்தம் வீட்டையே தூக்கியது. “என்ன ஜென்மம் இவன்? ச்சீ… இவனைப் பார்த்தாலே பூச்சாண்டி மாதிரி இருக்குது! ஐயோ பயமா இருக்கே? எப்படி அள்ளி அள்ளித் திங்கிறான்? இவனுக்கே பத்து படி ஆக்கணும் போலையே! இவனுக்குத் துணை ஒரு பூனை, அப்புறம் வெளியே இருக்குற மணி நாய்…” என அவனையே கரித்துக் கொட்டியபடி வேலைகளைச் செய்தாள்.

மல்லிகா சொன்னது போலவே பட்டுப்புடவைகளை ஷாம்பூ போட்டு அலசி காயவைத்தவள், வீட்டைச் சுத்தம் செய்தாள். மாலை நான்கு மணிக்கு எழுந்தான் கர்ணன். அவனாக எழவில்லை, அழைப்பு வந்தது. “எவன்டா அது?” எனப் போனை அட்டெண்ட் செய்தான். லோக்கல் செட் பட்டன் போன்.

“ஹலோ, வரேன் வைடா! சவாரி இருக்கு, நைட்டு அதை முடிச்சிட்டு வரேன்,” எனப் போனை கட் செய்தான். தூக்கம் தொலைந்து போனது.

ஆட்டாங்கல்லில் அரைத்து மீன் குழம்பு வைத்தால் அர்ஜுனுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் மெனக்கெட்டு தனது புருஷனுக்காக ஆட்டிக்கொண்டிருந்தாள் துளசி.

மெல்ல வீட்டைப் பார்த்தான்; அத்தனை சுத்தமாக இருந்தது. அவர்கள் பகுதி… ஆம், வீடு இரண்டாகக் கோடு போட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது. சமையலறை மட்டும் இருவருக்கும் ஒன்று. இருவருக்கும் என்றால் மல்லிகா, ரத்னம், அர்ஜுன், துளசி ஆகிய நால்வரும் ஒரு பக்கம்; கர்ணன் மட்டும் இன்னொரு பக்கம். அவனது இடத்தில் கொஞ்சம் குப்பையாகத்தான் இருக்கும். கோடு போட்ட இடத்தில் கவனமாகத் துப்புரவு செய்வாள் துளசி.

அந்த நடுகூடத்தில் இருவரைத் தவிர யாருமே இல்லை. போனில் FM வைத்தான். பாட்டு கேட்பது வைஜயந்திக்கு மிகவும் பிடிக்கும்; அது அப்படியே கர்ணனுக்கும் தொத்திக்கொண்டது. அவன் பாடலைத் தட்டிவிட்டு குப்புறப் படுத்துக்கொண்டு திரும்ப, ஓய்ந்து மும்முரமாக வேலை செய்தவளை எதேச்சையாகப் பார்த்தான் கர்ணன்.

“கண்ணுக்குள் நூறு நிலவா… இது ஒரு கனவா? கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா…” – பாடல் ஓடத் தொடங்கியது.

கல்லைச் சுற்றிக்கொண்டே திரும்பிய துளசி ஸ்தம்பித்துப் போனாள்.

“கொள்ளைத் துளசி எல்லை கடந்தால்… வேதம் சொன்ன சட்டங்கள் நின்று விடுமா? வானுக்கு எல்லை யார் போட்டது… வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது. சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது?”

“டம்மார்!” என்ற சத்தம் கேட்டது. துளசியின் கையில் இருந்த அரைத்த சாந்து தொப்பெனக் கீழே விழுந்தது.

கர்ணன்…?

தொடரும்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!