
மயிலிறகாய் வருடுகிறாய்
- 10 Sep 2025
- 1,600 reads
- ☆ No ratings yet
- 8 min read
Episode-1
ஒரு அழகான இதமான மழைக்காலம் அது! நேரம் இரவு 11 இருக்கும், மழை நன்றாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது!
அப்போது அந்த இடத்தில் மிகவும் பிரபலமான அதேசமயம் காதலர்கள் சந்திக்கும் நல்ல இடமாக ஒரு கடை நகரத்தின் மையத்தில் இருந்தது. அதன் பெயர் “லவ்வர்ஸ் கேஃபே” (lovers cafe).
அந்த கஃபே-வில் பல காதலர்கள் தங்கள் நேரத்தை அற்புதமாக செலவழித்து கொண்டிருந்தனர்.
இரவு கடையை மூடும் நேரம் வந்ததால் கடையின் ஓனர்,”Ok guys shop close பண்ணற டைம் இது! So please எல்லாரும் கிளம்பிட்டு திரும்பவும் நாளைக்கு வாங்க wellcome all you!” என்றார்.
அங்கே இருந்த காதலர்களுள் சிலர்,
“ஐயோ! மழை இவ்ளோ கொட்டுதே! நாம எப்படி கிளம்புறது?” என முணுமுணுத்தபடி ஒவ்வொரு ஜோடியாக கலைந்து சென்றனர்.
இதே நேரம் அந்த கடையில் ஒரு இளம்பெண் வேலை செய்துகொண்டிருந்தாள். அவ்வப்பொது நேரத்தை தெரிந்துகொள்ள கடிகாரத்தை பார்த்தவண்ணம் பதற்றத்துடன் காணப்பட்டாள்.
அந்த நேரம் பார்த்து ஒரு நபர், “அகன்யா…! அகன்யா..!” என்று அழைக்க.
உடனே அகன்யா தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அந்த நபரிடம் கொடுத்தபடி, “அண்ணா! Sorry! இன்னைக்கு இவ்வளவு amount தான் குடுக்க முடிஞ்சது! அடுத்த time fulla குடுத்தற்றேன்”.
அந்த நபரும், “பரவால்ல மா! அடுத்த முறை கரெக்டா குடுத்த போதும்!” என பணத்தை வாங்கி நடக்க ஆரம்பித்த அவர், “பாவம்! அப்பா வாங்கி வெச்ச கடனை எல்லாம் இந்த பொண்ணு கஷ்டப்பட்டு அடைச்சுகிட்டு இருக்கு!” என சொல்லியபடி அங்கிருந்து சென்றார்.
பின்பு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் அகன்யா.
அப்போது கடை ஓனர், “அகன்யா…!”என அழைக்க. இந்த அழைப்புக்கு தான் அவள் வெகுநேரம் காத்திருந்தாள் போலும், ஏனென்றாள் இது அவள் வேலை முடியும் நேரம். அவள் வேகமாக வேலையை முடித்துவிட்டு தன் முதலாளியிடம் விடைபெற்றாள்.
இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் அங்கிருந்த எல்லா கடைகளும் ஒவ்வொன்றாக மூட தொடங்கியது. அதில் மூடாமல் இருந்த ஒரு கேக் கடைக்குள் நுழைந்தாள் அகன்யா. ஏற்கனவே அவள் order செய்த cake-ஐ வாங்கி கொண்டு வெளியே வந்தாள்.பின்பு இன்னொரு கடையில் order செய்த gift-ஐயும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
அதே சமயம் மழைச்சாரல் இன்னும் நின்றபாடில்லை.அகன்யா அவளிடம் உள்ள cake-க்கும் gifts-க்கும் நனையாதவாறு பிடித்து கொண்டே ஒரு taxi-யை நிறுத்தினாள்.பின் அந்த taxi ஓட்டுனரிடம் தான் செல்லும் இடத்திற்கான address-ஐ கொடுத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்தாள். அவள் அருகில் தன் பொருட்களை வைத்துவிட்டு taxi சன்னல் கண்ணாடியை இறக்கினாள். மழைச்சாரலோடு கலந்த தென்றல் குளிர்காற்று அவளை வருடியது. அப்படியே சிறிது கண் அயர்ந்தாள்.
யார் இந்த அகன்யா?
இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த பிறந்தா நாளில் இருபது வயதை கடந்தாள் அகன்யா. அகன்யாவின் அம்மா அவள் சிறுமியாக இருந்தபோதே cancer-ஆல் பாதிக்கப்பட்ட இறந்துவிட்டார். அகன்யாவின் அப்பாவோ அகன்யாவின் அம்மா அவளுக்காக விட்டுச்சென்ற வீட்டை விற்றுவிட்டார். மேலும் மதுப்பழக்க்திற்கு அடிமையாகி பல இடங்களில் கடன்களை வாங்கினார். தந்தையாக தன் மகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய அகன்யாவின் அப்பா பொறுப்பற்றவறாக கடன்களை உருவாக்கி விட்டு தலைமறைவாகிவிட்டார்.
இப்போது தன் அப்பா உருவாக்கிய கடன்களை அடைக்கும் சுமை அகன்யாவிற்கு வந்தது. அகன்யாவிற்க்கு பெற்றோரின் ஆதரவும் இல்லை. மற்ற உறவினர்கள் நண்பர்கள் எவரின் ஆதரவும் இல்லை.இவ்வளவு இன்னல்கள் இருந்தும் தன் வாழ்க்கை செலவுகள்,படிப்பு செலவு மற்றும் கடன் சுமை எல்லாவற்றையும் சமாளிப்பதற்கு part-time-ல் வேலை செய்து வருகிறாள்.
இத்தனை இன்னல்கள் அவள் வாழ்க்கையில் இருந்தும் அகன்யா வாழ்க்கையில் அவளுக்கென ஒரு ஆண் இருக்கிறான். அவன் பெயர் அரவிந்த். ஆம், அகன்யாவின் காதலன் அரவிந்த்.
கடிகார முட்கள் போல நகர்ந்து கொண்டே இருக்கும் அகன்யாவின் வாழ்வில் அவளுக்கென ஒரு ஆறுதல், ஆதரவு மற்றும் அன்பை தந்து அவளின் காதலனாக இருந்து வருகிறான் அரவிந்த்.தன் காதலன் அரவிந்த்-காக எல்லாம் செய்வாள்! எதையும் செய்வாள் அகன்யா. அவன் படிப்பு செலவிற்கு கூட அகன்யா உதவி செய்து இருக்கிறாள். இவ்வளவு இன்னல்களுக்குள்ளும் தன் காதலன் மீது அவளுக்கு சற்று பிரியம் அதிகம். அரவிந்த் ஒரு நிரந்தர வேலைக்கு சென்றதும் அகன்யாவை திருமணம் செய்து கொள்வதாக அவளுக்கு வாக்களித்து இருக்கிறான்.எனவே அவர்களின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.
இன்றிரவு அரவிந்தனுக்கு பிறந்தநாள். அதனை கொண்டாடும் பொருட்டு மிகவும் ஆனந்தமாக பரிசுகளை வாங்கி கொண்டு அவனை பார்க்க சென்று கொண்டு இருக்கிறாள்.
திடீரென break போட்டார் Taxi driver. அந்த நேரம் கார் சற்று குலுங்கவே கண்விழித்தாள் அகன்யா!
Taxi driver, “மேடம் நீங்க சொன்ன இடம் வந்தாச்சு!” என்றார்.
Taxi driver-க்கு பணத்தை கொடுத்துவிட்டு தன் பொருட்களை எடுத்து கொண்டு கீழே இறங்கினாள்.
“Thanks அண்ணா!” என சொன்னவள் தன் கையில் இருந்த கடிகாரத்தை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
அகன்யா மனதிற்குள், “அப்பாடா … மணி 11:50 தான் ஆகுது! இன்னும் பத்து நிமிஷம் இருக்கு!” என நினைத்தவள் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் தன் காதலன் இருக்கும் அப்பார்ட்மெண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தன் காதலன் அரவிந்த்தை மனதில் நினைத்தவாறு வெட்கத்துடன் நடந்து சென்றாள். அவள் வாங்கி செல்லும் பரிசுகளை காட்டிலும் தன் காதலன் பல நாட்களாக அகன்யாவிடம் கேட்ட முத்த பரிசுகளை இன்று அவனுக்கு தர வேண்டும் என்ற எண்ணங்களை மனதில் ஓட விட்டபடி லிஃப்ட்-ல் ஏறினாள். அதன் பின் அங்கு நடக்கும் விஷயங்கள் அதாவது தன் காதலனுடன் தனிமையில் தான் இருக்கும் நேரம் எவ்வளவு இனிதாக அமையும் என்பதை நினைத்துக்கொண்டாள். அது அவளுடைய இதயத்தை மென்மேலும் வேகமாக துடிக்க செய்தது! அகன்யாவின் கண்கள் சிரிக்க! அவள் கண்ணம் வெட்கத்தில் சிவந்தது. அவன் இருக்கும் அப்பார்ட்மெண்டை அடைந்தாள்.
அவன் வீடு கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருக்க, அகன்யா தன் கலைந்த ஆடைகளை சரி செய்தாள். தன் தோற்றத்தை சிறிது சரி செய்து கொண்டாள். பின் பதற்றத்துடன் இதய படபடப்புடன் ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டாள்.பின்பு வீட்டின் முன்பு சென்றாள்.
வழக்கத்துக்கு மாறாக கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது.இது அகன்யாவிற்கு ஒரு வித பதற்றத்தை தந்தது. எனினும் அதை பொருட்படுத்தாமல் அவள் முன்னேறி சென்றாள்.
அகன்யாவை அரவிந்த் வீட்டின் வாசலில் இருந்த இரண்டு ஜோடி செருப்புகள் வரவேற்க இருப்பதை பார்த்தாள்.அங்கே வீட்டின் வாசலில் ஒரு பெண்ணின் high heels- ரக slipper உம் அதற்கு அருகில் தன் காதலன் அரவிந்த்-இன் slipper-உம் இருந்தது.
இது அகன்யாவின் வெட்கத்தையும் புன்னகையையும் ஒட்டு மொத்தமாக பறித்தது.அவளின் சந்தோஷம் முற்றிலும் காணாமல் போனது.
இதை பார்த்து பதற்றத்துடன் மெதுவாக உள்ளே சென்றாள். அவன் வீட்டின் ஹாலில் உள்ள sofa மற்றும் தரையில் ஆங்காங்கே உடைகள் சிதறி கிடந்தன. அது ஒரு பெண்ணும் ஆணும் உடுத்தி இருந்த உடைகள் போல இருந்தது.
இதை பார்த்த அகன்யாவிற்கு இருதயமே நிற்பது போல் ஆகிவிட்டது.
இது கனவாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள் தன் மனதை தேற்ற முற்பட்டாள். இருந்தும் கூட அவள் கண்களில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
“No No! இது நடக்க கூடாது! இது truth இல்ல! இது truth இல்ல! அரவிந்த் இது உண்மை இல்லை!” முணுமுணுத்தபடி அகன்யா இன்னும் முன்னேறி சென்றாள்.
அங்கு நடக்கும் விஷயங்கள் என்ன என்பது தெரிந்தும் அகன்யாவின் மனம் அதை ஏற்கவில்லை.அதை உறுதிபடுத்தும் நோக்கில் இன்னும் சில அடிகள் bed room-ஐ நோக்கி மெதுவாக நடந்தாள். அங்கே bed room-ல் கதவு சிறிது திறந்த நிலையில் இருந்தது. அதன் வழியே இருவர் பெருமூச்சு விடும் சத்தம் பலமாக கேட்டது.
அகன்யாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அந்த சத்தம் தந்தது.
அந்த அறையில் நடப்பதை எதிர்பார்த்து தன் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு, அறையின் கதவை சற்று அகலமாக திறந்தாள் அகன்யா.
அவள் உலகமே நின்றது போல் ஒரு காட்சி!. அகன்யாவின் இதயத்தை சுக்குநூறாக உடைக்கும் காட்சியை கண்டாள்.
அரவிந்த் வேறொரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக முத்தமிட்டு கொண்டிருந்தான்.அவர்களிடமிருந்து அவ்வப்போது வெளிப்படும் பெருமூச்சு, சிரிப்பு, முணங்கள் சத்தங்கள் மற்றும் கத்தல் சத்தங்கள் அகன்யாவின் இதயத்தை குத்தி கிழிப்பது போல் இருந்தன.
ஒரு சில நொடிகள் அவளால் அசைய முடியவில்லை. தன் காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக உறவில் இருப்பதை பார்த்தாள். அவள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்தது!
இந்த முறை அகன்யா முழுவதுமாக தன் காதலனால் நசுக்கப்பட்டாள். தன் உயிருக்கு உயிரான நம்பிக்கைக்கு பாத்திரமான தன் காதலன் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அவள் முற்றிலும் ஸ்தம்பித்து விட்டாள்.
தன் வாழ்க்கையில் தனக்கென இருந்த தன் காதலன், தனக்கான ஒரு ஆறுதல், எந்த சூழ்நிலையிலும் உடன் இருக்கும் உற்ற நண்பன், ஊக்கமளிப்பவன், பாதுகாப்பவன், நம்பிக்கைகுறியவன் என்ற அவனுடைய எல்லா இடத்தையும் ஒரு நொடியில் சுக்கு நூறாக உடைத்து விட்டான் அரவிந்த்.
இது அவளை வேதனையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது தன் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள அவள் எண்ணினாள்.
அவனுடைய காதலை மட்டுமே எதிர்பார்த்து, தன் காதலன் அரவிந்த்திற்காக எதையும் செய்வாள் அகன்யா. ஆனால் அவனோ அகன்யாவிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டான்.
தன்னையே கொடுத்து எதற்கும் பதிலை எதிர்பார்க்காமல் யாருக்காகவும் எதையும் செய்வது என்பது ஒரு பெரிய தவறு.
தன் காதலனுக்காக கொடுப்பதற்காக ஆசை ஆசையாக பரிசுகளை வாங்கி வந்தாள் அகன்யா! ஆனால் காதலன் அரவிந்த் கொடுத்த இந்த பரிசினை கண்களால் கண்டு சுக்கு நூறாக உடைந்தாள். கண்களில் நீரோடியது வேகமாக துடித்த இதயம் நிற்பதற்கு ஏங்கியது.
அப்படியே மெதுவாக வெளியே நடந்த அகன்யா அவள் வாங்கி வந்த பரிசுகளை வெற்று சிரிப்புடன் பார்த்து வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment