EPISODE – 14

இரவு பத்து மணியை தாண்டி இருக்க “seventh heaven” கேளிக்கை விடுதியை சுற்றி நிறைய இளவட்டங்களின் அணிவகுப்பு கண்ணை கவர்ந்தது. 

மிருதியா பயத்துடன் காவியாவிடம் எனக்கு பயமா இருக்கு டி! ரியாவுக்கு தெரிஞ்சா எங்க வீட்டில பிரச்னை ஆகிடும். நான் போறேன் டி என எவ்வளவோ கெஞ்சினாள். காவியா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, டூர், IVன்னு எது கூப்பிட்டாலும் வர மாட்டிக்கிற. இன்னும் எவ்ளோ நாள் ஒண்ணா படிக்க போறோம்? படிச்சு முடிச்சதும் உன்னோட கேரியர் பார்த்திட்டு போயிடுவ! என்னையெல்லாம் மறந்திடுவ? சரி விடு விருப்பம் இல்லாதவர்களை கூப்பிட கூடாது. நான் தான் உனக்கு முக்கியம் இல்லையே! என சொல்லிய படி அவளின் கையை விட்ட காவியா அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 

ஹே ஹே காவியா! பிளீஸ் இரு இருடி! என கையை பிடித்துக் கொண்டவள். சரி சரி நான் என்ன சொல்ல வரேன்னா? அடிக்கடி வர வேண்டாம் வீக்லி ஒன்ஸ் மட்டும் வரலாம் என்றாள் மிருதியா. இதை கேட்டதும் காவியா சிரித்துக் கொண்டே பெங்களூர் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம் மதுரை எப்படி நம்ம ஊரில் தூங்கா நகரமோ அதை விட இங்கே இந்த இடம். பாரு இப்போ கூட பகல் மாதிரி இருக்கு என சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். 

BMW K 1600 கருப்பு நிற இரு சக்கரவாகனத்தில் கெத்தாக வந்து இறங்கினான் ராணா! அங்கிருக்கும் ஆண்களுக்கு அந்த வண்டியின் விலை என்ன என்பது தெரியும் அரை லட்சம். என்பதால் வண்டியை வைத்தே அவனது அந்தஸ்தை மதிப்பீடு செய்தார்கள். 

அங்கிருக்கும் மற்ற பெரிய பணம் படைத்தவர்கள் ரோல்ஸ் ராயிசில் வழுக்கி கொண்டு வந்து இறங்கினார்கள் அதில் ஒருவன் தான் சஞ்சய். ராணாவின் நட்பு இருவரும் ஒன்றாக தான் படிக்கிறார்கள். நீயா? நீயா? என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சஞ்சய் மிகவும் துறுதுறுவென இருப்பவன். சாக்லேட் பாய் என சொல்லலாம். ஆனால் ராணா அவனுக்கு அப்படியே ஆப்போசிட் யாரிடமும் ஒட்ட மாட்டான் வந்த வேலை என்னவோ அதை மட்டும் தான் செய்வான். 

நீ எதுக்கு டா இங்கே வந்த? உன்னை பார்த்தாலே பொண்ணுங்க பத்தடி தூரத்தில் நின்னுக்கும் அப்படி இருக்கும் போது இங்கே வந்து எதுக்கு டைம் வேஷ்ட் பண்ற? என சஞ்சய் கிண்டலடித்து சிரித்தான். இரும்பு மனிதன் போல அவனை திருப்பி முறைத்தான் ராணா. 

சரி சரி வா! போகலாம் என இருவரும் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நுழைவதற்கு முன் மாஸ்க் கொடுக்க பட இருவரும் ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொண்டார்கள். இருவரும் உள்ளே செல்ல, அங்கு சென்றதும் சஞ்சய் அவனது வசீகர முகத்தை  வேண்டும் என்றே பெண்களின் முன்  காட்டி விட்டு மாஸ்க்கை சரி செய்தான். 

ராணா தன் நண்பனை கை பிடித்தான். என்ன டா ராணா? என சஞ்சய் கேட்க.. இதுக்கு தான் அவ்ளோ பில்ட் அப் விட்டியோ? என கேட்டான். 

அது வந்து.. அது என சஞ்சய் தடுமாற அசுரன் சிரிப்பதை போல ராணா சிரித்தான். அதில் அவமான பட்ட சஞ்சய் அவனிடம் சரி டா அப்டின்னா உன்னோட முகத்தை காட்டாம ஒரு பொண்ணை பிக் அப் பண்ணிடுவியா. 

எனக்கு பொண்ணுங்க மேலே இன்டர்ஸ்ட் இல்ல என மதுவை எடுத்து ஒவ்வொரு மிடுக்காக குடிக்க ஆரம்பித்தான். இதை கேட்டதும் இளக்காரமாக சிரிக்க ஆரம்பித்தான் சஞ்சய். 

இப்போ எதுக்கு அசிங்கமா சத்தம் வர அளவுக்கு உன்னோட பல்லை காட்டுற? என கடுகடுத்தான் ராணா. 

அப்புறம் எதுக்கு டா இங்கே வந்த? இப்போ இந்த வெட்டி சீன்? இதையெல்லாம் என்னை நம்ப சொல்றயா? என கோழி போல கொக்கரித்தான். 

“ரொம்ப பேசிட்ட வாயை அடக்கு” என்றான் ராணா. 

அப்போ ஒத்துக்க என சஞ்சய் பெண்களை பார்த்து கை அசைத்தான். 

என்னன்னு? என ராணா குரலில் அதட்டல் தெரிந்தது. 

நீயும் என்னை போல தான்னு உன்னோட முகத்தை காட்டி தான் பொண்ணுங்களை மடிப்பேன்னு ஒத்துக்க என்றான் சஞ்சய். 

நெவர் என ராணா கடுமையாக உரைத்தான். 

அப்போ இங்கே போறதுக்குள்ள உன்னோட முகத்தையே காட்டாமல் ஒரு பொண்ணை பிக்கப் பண்ணி காட்டு அப்போ ஒத்துக்கிறேன் என்றான் சஞ்சய். 

பிக் அப் பண்ணா எனக்கு என்ன profit? என கேட்டான் ராணா. 

டேய் அந்த பொண்ணே உன்னோட புரோபெர்ட்டி தான் டா! உலகத்திலேயே ரொம்ப மோகமான விசயத்தில் பொன்னும் ஒரு முக்கிய மோகம் டா ஒவ்வொரு பொண்ணு கிட்டயும் ஒவ்வொண்ணு புதுசா கிடைச்சுக்கிட்டே இருக்கும் என்றான் சஞ்சய். 

நான் உன்னோட explanation கேட்கல. எனக்கு என்ன profitன்னு கேட்டேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு என மீண்டும் கேட்டான். நீயே கேளு? உனக்கு என்ன வேணும்? என சஞ்சய் கேட்டான். 

ராணாவின் மூளை எக்கு தப்பாக யோசித்தது. என்ன டா பயங்கரமா யோசிக்கிற? என சஞ்சய் கேட்க..  ம்ம் சொல்லவா? 

சொல்லு என்றான் சஞ்சய். 

நான் போற இடத்துக்கு நீ வழி விட்டு வேடிக்கை பார்க்கணும். என் கூட மோத கூடாது. 

புரியல என சஞ்சய் கேட்க, இங்கே பெங்களூர் அண்ட் மும்பைல மோஸ்ட்லி டவர் ஷிப்ல எங்க டாடிக்கு போட்டியே உன் டாடி தான். சோ இதுல நான் என் டாடி பிஸ்னஸ்சை டேக் ஓவர் பண்ணிக்கும் போது ஃபர்ஸ்ட் மூணு டெண்டர் எவ்ளோ பெருசா இருந்தாலும் சரி நீ வர கூடாது. I mean RV குருப் கோட் பண்ணுதுன்னு உனக்கு தெரிஞ்சாலே நீ அதில் விலகிடனும். நீ மட்டும் இல்ல உன்னோட கம்பெனி வர கூடாது என்றான் ராணா. 

டேய் டேய் யார்ரா நீ! பலே கேடியா இருக்க என சஞ்சய்க்கு குடித்த மது புரை ஏறியது. 

ராணா அவனை பார்த்து தேவையில்லாம பேசாதே! Deal or no deal என கேட்க .. சஞ்சய்க்கு ராணாவின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க, பார்க்கலாம் டா! அப்படி என்ன வித்தையை காட்டி சாரி உன்னோட முகத்தை காட்டாமல் ஒரு நாள் 24 மணி நேரம் ஒரு அழகான பொண்ணு கூட இரு அப்போ நான் ஒத்துக்கிறேன் டா. நீ சொன்ன மாதிரி மூணு தடவை இல்ல 5 தடவை நீ போற இடத்துக்கு நானும் என்னோட டாடியும் வர மாட்டோம். 

பக்கா! என ராணா கேட்க.. 

ம்ம் பக்கா என்றான் சஞ்சய்.   அடுத்த நொடி இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்து கொண்டார்கள். 

சஞ்சையின் முகத்தை பார்த்ததால் அனைத்து பெண்களும் அவன் மேல் விழாத குறையாக நின்று கொண்டிருந்தார்கள்.

இன்னிக்கி எல்லாருக்கும் என்னோட ஸ்பெசல் ட்ரீட் முழு செலவும் என்னோடது என கூறினான் சஞ்சய். 

காவியா வேகமாக உற்சாகத்துடன் கத்திக் கொண்டே அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டாள். மிருதியாவுக்கு துளி கூட விருப்பம் இல்லை. அவள் நேராக கூட்டமில்லாமல் அமைதியாக  இருக்கும் இன்னொரு பக்கம் வந்தாள். உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேணும் மேடம் என வெயிட்டர் கேட்க..  

எனக்கு நான் ஆல்கஹாலிக் வேணும். கூடவே வெஜ் சைட் டிஷ் வேணும் என்றாள் மிருதி அந்த வெயிட்டர் அவளை வித்தியாசமாக பார்க்க.. அவரிடம் அதற்குண்டான பணத்தையும் நீட்டினாள். 

என்ன மேம் இது? 

இது நான் குடிக்கும் ட்ரிங்க்ஸ்க்கு பணம் என்றாள் மிருதி. 

அருகில் மதுவை மெல்ல குடித்துக் கொண்டிருந்தவன் பார்வை மெதுவாக மிருதியின் பக்கம் திரும்பியது. வெயிட்டர் எடுத்து விவரிக்க, இல்ல வேணாம் எனக்கு free எல்லாம் பிடிக்காது. நீங்க எடுத்துக்கோங்க என சொல்லி அனுப்பினாள். 

அவளின் பேச்சில் சுவாரஸ்யம் தெரிய அவளை இன்னும் ஆராய எண்ணிய மனதுக்கு முதல் உத்வேகம் கொடுத்தது. அந்த மான் விழி மாஸ்க் உள்ளே இருக்கும் மீன் போன்ற கண்கள் தான். ராணா do something என மூளை திட்டம் தீட்ட.. அடுத்த நொடி வேலையை ஆரம்பித்தான் ராணா. அவள் பானத்தையும் சைட் டிஷ்சையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தவள் கால் இடறி எதிரில் அமர்ந்து கொண்டிருக்கும் ராணாவின் மேல் விழ போக..  

இடையுடன் வளைத்து பிடித்தான் மெல்லின பெண்ணவளை. அந்த பானம் மற்றும் டைம் பாஸ் டிஷ் மொத்தமும் கீழே கொட்டி விட உதடுகள் பாவமாக வளைந்து உணவை பார்த்ததே தவிர கை வளைவுக்குள் இருக்கும் ஆண் மீது எண்ணம் செல்ல வில்லை. 

க்கும் என தொண்டையை கணைத்தான். சாரி சாரி சார்! என அவள் படபடத்துக் கொண்டே கூற, வயிட்டர் என அழைத்தான் கம்பீர குரலில், சார் என ஒருவர் ஓடி வந்தார். இன்னொன்னு செட் கொடுங்க.. 

இல்ல சார் என் கிட்ட பாக்கெட் மணி இல்ல தீர்ந்து போச்சு என மிருதி சொல்ல.. நான் வாங்கி தரேன் என்றான் ராணா. 

நீங்க எதுக்கு எனக்கு வாங்கி தரணும்? என மிருதி கேட்க.. 

கடன் தான்! நாளைக்கு திருப்பி கொடுத்திடு பாரு நீ சாப்பிடாமல் இருந்தால் எல்லாரும் உன்னை தான் பார்ப்பாங்க.  ஒரு மாதிரி உனக்கு ஓகே வா! 

நான் அது நாளைக்கு வர மாட்டேனே! என்றாள் மிருதி. 

அப்போ எப்போ வருவ? 

நெக்ஸ்ட் சாட்டர்டே என்றாள். 

ஓ ஓகே நெக்ஸ்ட் சாட்டர்டே மீட் பண்ணலாம். 

உங்களை எப்படி எனக்கு தெரியும்? நீங்க யாரு? என மிருதி கேட்க…

நீ யாரு? உன் பேர் என்ன என ராணா கேட்டான் அவனது மனதில் முழுதாக அவளின் உருவம் பதிந்து போனது. 

நான் என் பேரு தியா! என்றாள் மிருதியா. 

ஐம் தீரன் என்றான் ரணதீரன். 

அப்போ நெக்ஸ்ட் சாட்டர்டே மீட் பண்ணலாம் இதே இடத்தில் நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் இதே டிஷ் ஆர்டர் போட்டு இருக்கேன். நீ வந்து பே பண்ணனும் என்றான் ராணா. 

ஓகே சார் என மெல்ல நடந்து கூட்டத்தில் காணாமல் போனாள் மிருதி. 

சஞ்சய்யுடன் படுக்கையை பகிர்ந்தவழுக்கு, சஞ்சயின் போனில் ராணாவை பார்த்ததும் அவனை அடைய வேண்டும் என ஆசை தோன்றியது. 

அவள் வருவாளா? என ஆவலாக காத்திருந்த கண்களுக்கு அவள் வந்து விட்டால் என்று அவளின் வாசம் சொன்னது. வளைத்து பிடித்த கைகள் இந்த முறை அணைத்து பிடிக்க போகிறது. கூடவே அவளை மொத்தமாக கொள்ளை கொண்டு அவனுள் சேர்க்க போகிறான் ராணா. 

இங்கே நிகழ் காலத்தில் இதே காட்சியை தான் நினைத்துக் கொண்டிருந்தான் ராணா. அவன் முன் ஒயிலாக வந்து நின்றாள் மிருதி மிகவும் அழகாக. 

வருவான். 

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.