Episode -36
முத்தமிடுவதற்கும் உதடுகள் உரசி கொள்வதற்கும் கொஞ்சம் இடைவெளி மட்டும் தான் இருந்தது. அஸ்வத்தாமன் அவளின் கன்னத்தை வருடி கொடுக்க.. மேடம் எழுந்துடாதீங்க என பின்னால் இருந்து மெல்லிய குரல் கேட்டது.
ஆக்சன் என சிவசக்தி ஷூட் செய்ய ஆரம்பித்தான். இரண்டு ஜோடி கண்களும் ஒன்றை ஒன்று ஈர்த்தது. அவளது மூச்சு காற்று பரிகாசத்தை வெளிபடுத்தவில்லை. அதற்கு மாறாக மோகத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்தியது. அஸ்வத்தாமனின் மூச்சு காற்று உள்ளுக்குள் இருக்கும் குமுரலையும் மன சோர்வையும் என்னை ஏற்று கொள்ளடி என மன்னிப்பை சுமந்து அவளிடம் யாசித்தது. அவளின் உதடுகள் வறண்டு துடிக்க.. அவன் உதட்டை ஈர படுத்திக் கொண்டான்.
உதட்டுக்கும் கண்ணுக்கும் அவளின் பார்வை சென்று வந்தது. முத்தம் கொடுக்காதே! என அஸ்வத்தாமனின் உணர்வுகள் மொத்தத்தையும் அவனது மனம் கடிவாளம் போட்டு கட்டி வைத்திருந்தது. முத்தம் கொடுப்பானா என அவளின் எண்ணம் அவன்பால் முதல்முறை சென்றது. கட் என சிவ சக்தியின் குரல் கேட்க இருவரும் தன்னிலைக்கு வந்து மெல்ல விளக்கினார்கள்.
“வெறி குட் நல்லாவே வந்திருச்சு. இனி பெருசா ஸீன் இல்ல சைத்ரா! இனி தமன் சாருக்கு தான் வில்லன் கூட மோதுற சீன் இருக்கு. நல்ல படியா இன்னிக்கு படப்பிடிப்பு முடிஞ்சது” என்றார் சிவ சக்தி.
“ஓகே சார்” என சைத்ரா அவ்விடத்தை விட்டு நகர.. “சார் ஒரு முக்கியமான விசயம்?”
“என்ன சார்! சொல்லுங்க” என சிவ சக்தி கேட்க.. தமன் சொன்ன விடயத்தை கேட்டதும் சக்தி ஒரு நிமிடம் அதே இடத்தில் நின்றாள்.
“என்ன சொல்றீங்க?” என சிவ சக்தி அதிர்ச்சியுடன் கேட்க..
“ஆமா இந்த சாங்கில் டூப்ல நடிச்ச பொண்ணை மெசன்சன் பண்ணிடுங்க!”
“எதுவும் பிரச்சனையா சார்!” என சிவ சக்தி கேட்க..
“நம்ம ஹீரோயின் சைத்ரா மேடம்க்கு அது பிரச்சனையா வர கூடாது அதுக்காக சொல்றேன்.” என்று விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அடுத்த வார இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. Cast and crew மொத்தமும் அடுத்த கட்ட வேலையில் இறங்கியது. டப்பிங், பேக் கிரவுண்ட் சவுண்ட், எடிட்டிங், தணிக்கை குழு வேலை, புரொமோஷன் வேலைகள் என அனைத்து வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க.. அஸ்வத்தாமன் சைத்ராவை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தான்.
“வீட்டில் யாரும் இல்லை. அம்மு வீரா வருவதற்காக காத்திருக்க வந்தது என்னமோ அஸ்வத்தாமன். அம்மு நான் தான்” என்றான்.
“தமன் சார்!.. என்ன இந்த நேரத்தில?” என அம்மு அவனுக்கு டீ போட சென்றாள்.
“கொஞ்சம் முக்கியமா பேசணும். சக்தி இருக்காங்களா?”
“மேலே இருக்காங்க இருங்க வர சொல்றேன்” என அம்மு அழைக்க செல்ல..
“வேணாம் ஒரு நிமிசம் இருங்க அம்மு. போன தடவையே ஆரு என்கிட்ட கார் கேட்டிருந்தான். மார்க்கெட்ல பார்த்து சின்ன ரிமோட் கார் வாங்கி இருக்கேன். அவனே ட்ரைவ் பண்ணி ஓட்டுற போல இருக்கும். இதோ” என ரிமோட் அழுத்தினான். வீட்டுக்குள் கார் வந்தது.
“சூப்பரா இருக்கு!” என அம்மு உற்சாகமாக கூற..
“அண்ட் ஒரு favour இதை நீங்க தான் ஆருவுக்கு கொடுக்கணும். அதுவும் இத அஸ்வத்தாமன் குடுத்தாங்கன்னு நீங்க சொல்லிடுங்க!”
“கண்டிப்பா” என அம்மு கூற..
“தென் ஓகே இப்போ ஆரு எங்க இருக்கான்? மேலயா? இல்ல உங்க கூட தூங்கறானா?” என்று அவன் கேட்க…
“பாப்பாங்க கூட உள்ள தான் இருக்கான் தூங்கிருப்பான்” என்று அம்மு சொல்ல..
“அப்படியா நான் போய் கொஞ்சுகிறேனே! அதுக்கப்புறம் நீங்க சக்தியை கூப்பிடுறீங்களா? என்னை பாத்தால் அவ குழந்தையை கொஞ்ச விட மாட்டா அப்புறம் ஆருவை நான் பார்க்க முடியாது.” என்று அப்பாவியாக கேட்டான் அஸ்வத்தாமன்.
அம்மு கவலையுடன் அவனைப் பார்த்தவள். “நீங்க போய் கொஞ்சுங்க! அவன் உங்களோட பையன். இத யாராலயும் மாத்த முடியாது. சக்தியால கூட இதை மாத்த முடியாது. நீங்க போங்க தமன் சார்” என்று அறையை காட்டினாள்.
ஓகே என புன்னகையுடன் தன் மகன் இருக்கும் பக்கம் சென்றவன். ஆருவை ஆசையுடன் கண்களில் நிரப்பி கொண்டான். அழகாக முகத்தை சுருக்கி கொண்டு தூங்கி கொண்டிருந்தான். ஆரு! மெல்ல அஸ்வத்தாமன் அருகில் நெருங்கி அமர்ந்து சின்ன பாதங்களுக்கு முத்தமிட்டான்.
அவனை வருடி கொடுத்து கொண்டிருந்தவன் கண்களில் இடை புடைப்பாக தெரிந்தது. என்னாச்சு? என சட்டையை தூக்கி பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. ஆம் ஆரு பொம்மை துப்பாக்கியை சொருகி வைத்து கொண்டே உறங்கி இருக்கிறான். ஆரு மை பாய்! இப்போவே துப்பாக்கி இப்போவே போலீஸ் சா அடுத்த முறை கன் செட் வாங்கிட்டு வரென் வாட்டர் கேம் ரிலெட்டேடடா என அவனது சின்ன கால்களுக்கு முத்தமிட்டு நெற்றியில் முத்தம் பதித்தவன். சிறிது நேரம் தன் மகனை ரசித்துக்கொண்டிருந்தான்.
என் பையன் என்று உள்ளுக்குள் பெருமை மார்தட்டிக்கொண்டான். இருக்காதா பின்ன! இது புதுவிதமான ஒரு அனுபவம். ராஜ போதை! என்னோட மகன் என்ற பெருமை, பாசம் அதை விட கர்வம் என அனைத்தும் அஸ்வத்தாமனுக்கு தோன்றியது.
ஆசை தீர கொஞ்சிக் கொண்டவன். உன்னோட அப்பா பேர் அஸ்பத்தாமன்! நினைப்புல வச்சுக்கோ ஆரு! ஆருத்ரா நீ என்னோட பையன் டா! ஆரு என்று அன்பாக அழைத்தவன். அவனது தலையை களைத்துவிட்டபடி போர்வையை போர்த்திவிட்டு சிறுவாண்டுகள் அருவி மற்றும் ஆதிரன் இருவரையும் கொஞ்சி விட்டு வெளியே வந்தான்.
அதற்குள் சக்தி வந்து விட்டாள் போல.. கால் மேல் கால் போட்டபடி சோபாவில் அமர்ந்திருக்க.. தமன் திடுக்கிட்டு அம்முவை பார்த்தான்.
“அவங்க முன்னாடியே வந்துட்டாங்க தமன் சார். வந்ததும் கேட்டாங்க. நான் தான் நீங்க உங்களோட பையனை பார்க்க போயிருக்கீங்கன்னு சொன்னேன். அதான் கல்யாணம் ஆகி போச்சே! ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று தைரியமாக அம்மு பதி சொல்ல..
சக்தி கைகளில் நெட்டை எடுத்த படி அவனை முறைத்து பார்த்தாள். ஏன் தான் இந்த அம்மு இப்படி இருக்காங்களோ! அய்யோ அம்மு நீங்க நினைக்கிற மாதிரி அவ இல்லையே! ரொம்ப கோபக்காரி என்று சக்தியை பற்றி நினைத்தவன். அருகில் சென்றான்.
என்ன விஷயம் என்று கைகளை கட்டியபடி எழுந்து நின்றாள்.
“மோகம் முத்தாடுது படத்தோட வேலை முடிஞ்சிடுச்சு. அதுதான் கல்யாணத்தை பத்தி பேச வந்தேன்.”
“நான் தான் செஞ்சுக்குறேன்னு சொல்லிட்டேனே! ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க. நான் வரேன்” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு அவள் நகர… “ஒரு நிமிஷம்” என்று தமன் அழைத்தான்.
“என்ன?” என்பது போல அவள் திரும்பிப் பார்க்க…
“ஆருவ கூட்டிட்டு”
“என் பையன் எங்கேயும் வரமாட்டான். நான் தான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டு இருக்கேன்ல! இது போதாதா? ஒப்பந்தம் ஞாபகம் இருக்குல்ல. நாளைக்கு என்னை தொந்தரவு..”
“கண்டிப்பா நான் சொன்ன வாக்கை காப்பாத்துவேன். நாளை மறுநாள் காலையில பிளைட். நான் உன்னை பிக்கப் என்னை நீ நம்பலாம்” என்ற அவன் சொல்ல வர..
“நான் ஏர்போர்ட் வந்துடுறேன். அண்ட் என்கூட என்னோட பாதுகாப்புக்காக தேனி கேசவன் நிக்கிதா இரண்டு பேரும் வருவாங்க” என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள்.
போகும் அவளை எந்த சலணமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். கண்டிப்பாக இவள் மனம் மாற மாட்டாள். என தெரிந்துவிட்டது. சரி இனி என் பையனாவது சந்தோஷமா இருக்கட்டும். என் பையன் அப்பா யாருன்னு தெரியாமல் இருக்க கூடாது. அவன் அவமான படக்கூடாது. நான் இல்லன்னா என்ன சக்தி என் பையன பார்த்துப்பா! என்னுடைய எல்லாமே என் பையனோடது என்று நினைத்தவன்.
திருமணத்திற்கு தயாராகினான். கிறிஸ்தவ முறைப்படி. யாரையும் அழைக்கவில்லை. சக்தியின் பாதுகாப்பிற்கு தேனி கேசவன் மற்றும் நிக்கிதா இருவரும் வந்திருக்க..
அஸ்வத்தாமனுடன் சஞ்சய் வந்திருந்தான். அனைத்து திருமண வேலைகளையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மச்சான் நிஜமாகவே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ கல்யாணம் பண்ணிக்க போற. நீ மாறிட்டடா! என்று பெருமையாக சஞ்சய் பேசிக் கொண்டிருக்க,
ஒரு புன்னகை மட்டுமே பதிலளித்தான் அஸ்வத்தாமன்.
மொத்த விஷயம் தெரிந்தால் சஞ்சய் வேமாதிரியாகயாக கொதித்து எழுவான். எதற்கு தேவையில்லாத வேலை என அமைதியாக விட்டுவிட்டான்.
கேமராமேனை அஸ்வத்தாமன் அழைத்து வந்திருந்தான். ஏனென்றால் இந்த திருமண புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் சரியான நேரத்திற்கு போட வேண்டும். ஏற்கனவே சக்தி ஒரு மாடலை வைத்து போட்ட படங்களை பார்த்து அதே போல் எடுத்து ஒரே நாளில் திருமணம் ஆன விசயத்தை அறிவிக்க வேண்டும்.சக்திக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
“ஜான் ஆகிய நீ ரெஜினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்பது போல “தமன் ஆகிய நீ சக்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க..
வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு சம்மதம் என்று சக்தி கூற..
முழு மனதுடன் கூறினான் அஸ்வத்தாமன். இயேசு கிறிஸ்துவின் ஆசியில் இருவரின் கைகளிலும் மோதிரங்கள் கொடுக்கப்பட இருவரும் மாற்றிக் கொண்டார்கள் திருமண முத்தம் அங்கு வந்து நின்றது.
அஸ்வத்தாமன் அவளின் அருகில் நெருங்கி உதட்டுடன் உதடு பொருத்தி விட்டு சட்டென விலகினான். சர்ச்சை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி சைத்ரா கிளம்ப முயற்சி செய்ய..
சக்திஇஇ! என்று அவனின் கையைப் பிடித்தான்.
ச்சீ என்று கையை வேகமாக தட்டிவிட்டாள்.
“என்னாச்சு ஏன் அப்படி?” என்று சஞ்சய் சொல்ல வர, கைக்காட்டி நிறுத்தியவன். “ஹே சக்தி no tension அது கொஞ்சம் போட்டோஸ் எடுக்கணும். ஆல்ரெடி நீ மாடல வச்சு எடுத்த தானே! அதுக்கு அப்ப்ட போட்டோஸ் எடுத்து, என்னோட பேஜ்ல போடணும். அப்பதான் கொஞ்சம் ஒரு ரியாலிட்டியா இருக்கும். ப்ளீஸ் அதை எடுத்ததும் போ சக்தி. இன்னிக்கி ஈவினிங் தானே பிளைட். போட்டோ எடுத்துட்டு லஞ்ச் முடிச்சிட்டு கிளம்பலாமே” என்று அஸ்வத்தாமன் கூறினான்.
என்னால லஞ்ச் சாப்பிட முடியாது. போட்டோ எடுத்துட்டு போறேன். நான்!.. எனக்கு வேலை இருக்கு என்று சென்றாள்.
ஏய் என்னடா இங்க நடக்குது? என்ன பேசிட்டு இருக்கா அந்த பொண்ணு? இப்பதானே உனக்கு மேரேஜ் ஆச்சு. எதுக்கு இப்படி முகத்தை காட்டுது என்று சஞ்சய் கொதித்தான்.
சக்தி இருவரையும் பார்த்து முறைத்தவள் எனக்கு டைம் ஆகுது என்று அதட்டலுடன் பதில் கூறினாள்.
டேய் கொஞ்சம் அமைதியா இருடா! ம்ம் சக்தி என பதில் கொடுத்தவன். இதோ வரேன். என்றுவிட்டு
சஞ்சய் நீ நினைக்கிற போல இல்ல. நாங்க போட்டோஸ் எடுத்துக்கிறோம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை என்று இருவரும் போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
விதவிதமான போஸ்களில் சிரிப்பது போல எடுக்கபட்டது. ஒரு லிப் கிஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும்..
தமன் மற்றும் சக்தி உதட்டுடன் உதடு பொருத்தி ஒரு போட்டோ இது இரண்டாவது முத்தம். சைத்ரா வேகமாக முத்தம் கொடுத்ததும் வேகமாக உதட்டை துடைத்து கொண்டு விலகினாள்.
அவ்வளவு தான எல்லாம் முடின்சிடுச்சு. நான் கிளம்புறேன் என்று அடுத்த நொடி தேனி கேசவன் மற்றும் நிக்கிதாவுடன் அவ்விடத்தை விட்டு கிளம்பிவிட்டாள்.
சஞ்சய் கோபத்துடன் தன் நண்பனின் அருகில் வந்தவன். என்னதான்டா ஆச்சு? இப்பதானே எந்த பிரச்சனையும் இல்லாம போயிட்டு இருந்தது. ஏன் அந்த பொண்ணு இப்படி நடந்துக்கிறா? என்ன பிரச்சனை. மறுபடியும் நீ ஏதாவது? என்று ஆரம்பிக்க..
ஒரு பிரச்சனையும் இல்லடா எல்லாமே சரியா தான் போய்கிட்ருக்கு. என்று அஸ்வத்தாமன் நகர..
அஸ்வந்த்!! டேய் பதில் சொல்லிட்டு போ! அவ ஏன் கல்யாணம் முடிஞ்சு தனியா போறா? என்ன நடக்குது? என்ன இதெல்லாம் என்று கேட்க..
எதை சொல்ல சொல்ற? என்ன சொல்ல சொல்ற? என்று உதட்டை கடித்தபடி தன் நண்பனை கண்களில் நீர் கோர்க்க பார்த்திருந்தான் அஸ்வத்தாமன்.
அப்படியே ஒருவாரம் கடந்தது.
தணிக்கை குழு சான்றிதழ் அளிக்கப்பட்டதும் படத்திற்கான பிரமோஷன் முடிந்து கிறிஸ்மஸுக்கு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மோகம் சக்கை போடு போட்டது. காதல் கதை அதீத காதல் என்று கூறலாம். அஸ்வத்தாமன் மற்றும் சக்தியின் நடிப்பு அவ்வளவு அபாரமாக இருந்தது. அந்த பாடலைப் பற்றி தான் அனைத்து இடங்களிலும் பேச்சு..
இந்த ஜோடி உண்மையாலுமே நிஜ வாழ்க்கையில் ஜோடியா வந்தால் நல்லா இருக்குமே என்று ரசிகர்கள் அனைவரும் கூற …
அஸ்வத்தாமன் மற்றும் சைத்ரா இருவருக்கும் ரசிகர் பட்டாளம் மற்றும் பேஸ்புக் குரூப் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் என நிறைய ஆரம்பித்து, அவர்கள் இருவரையும் எடிட் செய்து போட… அதேநேரத்தில் சரியாக அஸ்வத்தாமல் ஒரே நேரத்தில் அஸ்வத்தாமனும் சைத்ராவும் அவர்களின் திருமண புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.
அது கன்னடத் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் சூட்டோடு சூடாக ஆருத்ரனை அஸ்வத்தாமன் மற்றும் சைத்ரா இருவரும் பள்ளியில் சேர்த்தார்கள்.
அப்போ நீங்க ரெண்டு பேருமே கப்பில்சா என்று பாப்பராசிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சைத்ரா மற்றும் அஸ்வத்தாமன் இருவரையும் துரத்தி பேட்டி எடுத்தார்கள்.
அந்த நேரத்தில் சைத்ரா பெண்ணும் பாவம் அகம்பாவம் அவனது அகம்பாவம் தமிழிலும் கன்னடத்தில், அகம்பாவம் என்ற பெயரில் மலையாளத்தில், அகம்பாவம் என்ற பெயரில் தெலுங்கில், என ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில்..
சைத்ரா அகம்பாவம் படத்தை முடித்து சினிமா உலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாள் இதுவே கடைசி படம்..
என்ன நடக்குமோ?
அஸ்வத்தாமன் மற்றும் சைத்ராவுக்கு இடையில் இருக்கும் தூரங்கள் விலகுமா?
இதோ படப்பிடிப்பில் தன் கணவன் பாத்திரத்தில் அஸ்வத்தாமனிடம் காதல் காட்சியில் ரீலாகவும் ரியலாகவும் நடித்துக் கொண்டிருந்தாள் சைத்ரா.
ஆம் அகம்பாவம் படத்தில் அவனை கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
யாருக்கு அகம்பாவம்?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 Be the first to comment