🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
1. EPISODE 1 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

‘ஹலோ கீர்த்தி! போனை எடு டி, ப்ளீஸ்’ என கைகள் நடுங்க திரும்பத் திரும்ப அழைத்தாள் நளாயினி.

‘பொண்ணு ரெடியா?’ என கதவைத் தட்டும் சத்தம் ஈரகொலையை நடுங்க வைத்தது.

முன்னாள் மந்திரி ரங்கராஜ சக்திவேல் அவர்களின் மூத்த மகன், இந்நாள் M.L.A., தனா என அழைக்கப்படும் தனஞ்சயன் தான் மாப்பிள்ளை. கடுமையான முகத்துடன் மணமேடையில் அமர்ந்து கொண்டிருந்தான்.

‘கீர்த்தி அன்னி, ரெடியாகிட்டீங்களா?’ என தனாவின் தங்கை சங்கமித்ரா கேட்டுக்கொண்டே தட்டினாள்.

இதோ கதவு திறந்தது. தலையை கவிழ்ந்தபடி கண்களில் நீருடன் நின்றாள் நளாயினி.

“என்ன, நீங்க இருக்கீங்க அன்னி எங்கே?” என சங்கமித்ரா அறைக்குள் பார்த்தாள்.

நளாயினி அழுது கொண்டே, “அவள் இந்த லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடிப் போயிட்டா!” என பயத்துடன் கூறி முடித்தாள்.

“என்னது? மினிஸ்டர் தனாவுக்குப் பார்த்த பொண்ணு அவரை வேணாம்னு சொல்லிட்டு ஓடிப் போயிட்டாளா?” என விஷயம் கசிய ஆரம்பித்தது.

தனா எழுந்து வந்தவன், “எங்கே டி அவள்?” என கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவனது அறையில் மயங்கிச் சரிந்தாள் பெண்ணவள்.

“அண்ணா! என்ன பண்ற?” என சங்கமித்ரா முன்னால் வர…

“மித்ரா, அமைதியா இரு!” என கர்ஜனையுடன் கூறியவன், “டேய், தண்ணி தெளிச்சு அவளை கட்டிப் போடுங்கடா!” என சிவந்த விழிகளில் உத்தரவிட்டான் தனா. பின்ன இவன் யார்? கோபத்துக்கே கோபத்தை வரவைத்து விட்டாள் நளாயினி. 

“ஹாஆஆஆ!” என அரக்கனைப் போல கத்தினான் தனா.

‘அண்ணா’ என கைக்கூலிகள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரும் சுற்றி வந்து விட…

“இப்போ இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும். டேய், அந்தக் கீர்த்தி எங்கே இருந்தாலும் இன்னும் அரை மணி நேரத்தில் என் முன்னாடி இருக்கணும். போங்கடா!” என நடந்து கொண்டே கூறினான்.

தனா என்றால் அனைவருக்கும் கொலை நடுங்கும். அரசியல் குடும்பத்தின் அடாவடி வாரிசு. “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என பேசுபவர்களுக்கு மத்தியில் வெட்டி வீசும் அவன் பார்வையே போதும். பொத்தி கொண்டு ஓடி விடுவார்கள். அந்த அளவுக்கு அவன். சிறு வயதிலேயே அரசியலில் சேர்ந்தவன் படிப்படியாக முன்னேறி சட்டமன்ற தொகுதியில் வென்று, இப்பொழுது மத்திய மந்திரியாகவும் ஆகியிருந்தான். பெண்கள் என்றால் அவனுக்கு அவனது அம்மா, அக்கா தங்கை சங்கவி, தனலட்சுமி, அவ்வளவு தான். இப்பொழுது நடக்க இருக்கும் கல்யாணம் கூட அரசியலுக்காக செய்யப் போகும் திருமணம் தான். ஆனால், அதற்குள் கீர்த்தி அவளின் காதலுடன் ரன்னிங் ஆகி அவளின் ஆருயிர் தோழி நளாயினியை அசுரனிடம் சிக்க வைத்து விட்டு சென்று விட்டாள்.

“ப்பா! இன்னும் கொஞ்ச நேரத்தில் CM வந்திடுவார். இந்தக் கல்யாணத்தில் மட்டும் பிரச்சனை ஆச்சு! அவளைக் கொன்னுடுவேன்” என பிடரி முடியை அழுந்தி கோதியபடி கூறினான் தனா.

மெல்ல நளாயினி கண்களைத் திறந்தாள். அவளின் கன்னம் வீங்கிப் போக, அவளின் தலையோ ‘வின்விண்ணென்று’ வலித்துக் கொண்டிருந்தது. தனாவின் அடியில்…

“ஹே, எந்திரி டி!” என அவளின் தலை முடியைப் பற்றி தூக்கினான்.

“சார், சத்தியமா எனக்குத் தெரியாது” என அழுதபடி நளாயினி கூற…

“டேய், விட்ரா! நான் கேட்கிறேன். விடு அவளை” என ரங்கராஜன் குரலை உயர்த்த, கீழே தள்ளினான் தனா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நிலை தடுமாறி கீழே விழுந்தவள், சிவந்த விழிகளில் கைகூப்பி, “சத்தியமா எனக்குத் தெரியாது. என்ன நம்புங்க” என அழுது கரைந்தாள்.

“என்னம்மா? நீ அவளோட ஃப்ரெண்ட் தானே! என்ன சொல்ற நீ? விளையாடிட்டு இருக்காத! என் பையனைப் பற்றி உனக்குத் தெரியாது. ஒழுங்கா சொல்லிடு” என ரங்கராஜ் குரலை உயர்த்த…

“சத்தியமா தெரியாது, நம்புங்க சார்” என கெஞ்சினாள்.

“டேய், வாங்கடா! ஆளுங்களை வீட்டைச் சுத்தி வளைக்க சொல்லு. விஷயம் வெளியே போக கூடாது” என உத்தரவு பிறப்பித்தார்.

“அப்பா, இப்போ என்ன பண்றது? மினிஸ்டர் வந்துட்டா பெரிய அவமானம் ஆகிடும். இது எதிர்க்கட்சியோட வேலையா இருக்குமா?” என சங்கமித்ரா கேட்க…

“அண்ணா, அந்தக் கீர்த்தி ஃபாரின் போயிட்டாங்க. அவங்க யாரையோ லவ் பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் திவாகர். இப்போ அவள் ஃப்ளைட்ல பறந்துட்டு இருப்பா” என்றான் அடியாள்.

அங்கிருக்கும் அரிசி தட்டை ஆக்ரோசமாகத் தட்டி விட்டான் தனா. 

நடுங்கியபடி நின்றவள் மனதில் ‘கிளி’ பிடித்தது. ‘போச்சு! என்னை இப்படி மாட்டி விட்டு போயிட்டாளே!’ என நளாயினி ஸ்தம்பித்து நின்றாள்.

அதே நேரம் ரங்கராஜனுக்கு அழைப்பு வந்தது. ஃபோனை வைத்தவர் நெற்றியைத் தேய்த்தார்.

“என்னப்பா?” என மித்ரா கேட்க…

“அந்த ACP வேலாயுதம் பாதுகாப்பில் தான் CM வருகிறாராம்” என ரங்கராஜன் கூற…

“இல்ல, இல்ல. அப்படி நடக்கவே கூடாது. அவன் முன்னாடி! அவன் முன்னாடி நான் இப்படித் தோத்து போய் நிக்கக் கூடாது. இந்தக் கல்யாணம் இப்போவே, இப்போவே, இந்த நொடியே நடக்கணும்” என இடுப்பில் கைவைத்தபடி ஆவேசமாக நடந்தான்.

ரங்கராஜன் ஒரு பெருமூச்சுடன் மித்ராவின் பக்கம் திரும்பி, “பாப்பா, இந்த பொண்ண அலங்கரிச்சு கூட்டிட்டு வா! இப்போவே” என கூறினார்.

நளாயினி நொறுங்கிப் போக பார்த்தாள். தனா தன் தந்தையைத் திரும்பிப் பார்க்க, “வேற வழி தெரியல டா! அவன் முன்னாடி நம்ம அவமானப்பட்டு நிக்கக் கூடாது” என ரங்கராஜன் கூறினார்.

ஒரு பெருமூச்சை விட்ட தனா, நளாயினி பக்கம் திரும்பி, “ஹே, இனி வாழ்நாள் கைதி டி! போடி, உனக்கு இனிமே தான் ஆட்டமே இருக்கு. உன்னை வச்சுக்கிறேன்” என சொல்லியபடி ஃபோனை எடுத்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் நீக்கப்பட்டு இருந்தது. அனைத்து பேனரிலும் கீர்த்தி மற்றும் தனஜெயன் இருவரும் சேர்ந்து இருக்கும் படங்கள் இருக்க… வேலாயுதம் முன்பு அவமானப்பட்டு நிற்க முடியாதே?

யார் இந்த வேலாயுதம்? அதைப் பின்னால் பார்க்கலாம்.

இதோ, தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் நளாயினி. சங்கமித்ரா முகத்தில் எந்த வெளிப்பாடும் இல்லாமல் வேகமாக அவளைத் தயார் செய்து வெளியே அழைத்து வந்தாள். இதோ, மணமேடையில் தனாவின் அருகில் அமர்ந்தாள்.

“CM வந்தாச்சு” என அவ்விடமே பரபரப்பானது. C.M. சங்கரலிங்கம் – சங்கத்தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மற்றும் முதலமைச்சர் – வந்து கொண்டிருக்க, அவருக்கு அருகில் வேலாயுதம் காக்கி சட்டை மிடுக்கு குறையாமல் வந்தான்.

“தலைவரே!” என ரங்கராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்க…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சார்! எனக்கென்னமோ இது கட்டாயக் கல்யாணம் போல தோணுதே” என ஆரம்பித்தான் வேலாயுதம்.

தனஞ்செயன் கோபத்துடன் பார்க்க, சங்கரலிங்கம் பெருமூச்சுடன் பார்த்தார்.

“தலைவரே, நாங்க எதுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணப் போறோம்?” என ரங்கராஜன் கூற…

“சார், எதுக்கும் கேட்டுக்கோங்க! நாளைக்கு ‘CM நடத்தி வச்ச கல்யாணம், கட்டாயக் கல்யாணம், பொண்ணு முகம் வீங்கி இருந்தது’ அப்டின்னு எல்லா டிவி, நியூஸ் பேப்பர்லயும் ‘ஹாட் டாப்பிக்’ ஆகிடப் போகுது. ‘என்றும் உங்கள் நலம் விரும்பி நான்’. மத்திய அமைச்சர்கள் முதலைகள் போல. அதனால தான் சொன்னேன்” என தள்ளி நின்று கொண்டான் வேலாயுதம்.

“தலைவரே! நீங்க நினைக்கிற மாதிரி இது கட்டாயக் கல்யாணம் இல்ல. அதை எனக்கு அண்ணியாகப் போறவங்களே இந்த வீடியோவில் சொல்லுவாங்க” என காட்டினாள் சங்கமித்ரா.

வேலு அவளைப் பார்த்தவன் புருவத்தை தூக்கினான். “நான் நளாயினி. மினிஸ்டர் தனஞ்செயன் நான் தங்கியிருக்கும் ஹாஸ்டல்க்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கார். எனக்குப் படிப்புக்கு கூட அவரோட டிரஸ்ட்ல இருந்து தான் டொனேஷன் வருது. இப்படி அவரோட நல்ல குணத்தில் ஈர்க்கப்பட்ட நான், அவரை ஒருதலையாக விரும்ப ஆரம்பிச்சேன். என்னோட காதலை அவர் கிட்ட வெளிப்படுத்த ஆசைப்பட்டு இங்கே வந்தேன். இப்போ அவருக்கே மனைவியாகிற பாக்கியம் எனக்கு கிடைக்குனு எதிர்பார்க்கல” என பேசியிருந்தாள். அருகில் தனஞ்செயன் அவளின் கையை கோர்த்து நெற்றியில் முத்தமிட்டு பிடித்தான். (இதை சங்கமித்ரா தான் நளாயினி, தனா இருவரையும் வரவழைத்து தத்ரூபமாக எடுத்திருந்தாள் வீடியோ. தனாவின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் அவனது தங்கை சங்கமித்ரா தான் இருக்கிறாள்.)

“தலைவரே! எல்லார் முன்னாடியும் அந்த ACP பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். இதை ‘ex minister’ அப்படின்ற முறையிலும், மத்திய அமைச்சர் தனஞ்செயன் அப்பா அப்படின்ற உரிமையிலும் கேட்கிறேன்” என்றார் ரங்கராஜன்.

வேலாயுதம் சிரித்துக் கொண்டே, “சாரி!” என்றான். “மினிஸ்டர் சார்! சாரி சார்!” என்றான் கிண்டல் தொனியில்.

“க்கும்” என சங்கரலிங்கம் தொண்டையைக் கணைக்க, “வந்த வேலையைப் பார்க்கலாமே” என சங்கமித்ரா முன்னால் வந்தாள்.

இங்கே நளாயினி விசும்பிக் கொண்டிருக்க, “கோழிக்குஞ்சு தலையைத் திருகிப் போடுற போல… உன் தலையும் திருகிப் போடுவேன்” என மெல்லிய குரலில் மிரட்டினான் தனா.

நளாயினியின் வாய் மூடிக் கொள்ள…

“சிரிடி, நாயே!” என மிரட்டினான். மெல்லப் புன்னகை செய்தாள், வேறு வழி இல்லாமல்.

அங்கே நடக்கும் சம்பாஷணை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் வேலாயுதம்.

“தலைவரே, தாலி எடுத்து கொடுங்க!” என ரங்கராஜன் கூற…

சங்கரலிங்கம் முன்னால் வந்து,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” என கூறி தாலியை எடுத்து கொடுத்தார்.

தனஞ்செயன் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு மனைவியாக்கிக் கொண்டான்.

வேலாயுதம் வெற்றுப் பார்வையுடன் பார்க்க, தனஞ்செயன் நளாயினியைப் பார்த்தான். அவனது சிந்தையில், ‘புராணத்தில் வரும் நளாயினியை விட, இந்த தனஞ்செயன் கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறியே மா’ என தோன்றியது.

ஒரே நாளில் புயலடித்து ஓய்ந்தது போல நளாயினியின் வாழ்க்கை திசை மாறிப் போனது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இதோ, மூக்கு முட்டக் குடித்து விட்டு அறைக்குள் நுழைந்தான் தனா. அவன் எது செய்தாலும், அது கெட்டதாகவே இருந்தாலும் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ தங்கையோ, தந்தையோ வர மாட்டார்கள்.

இதோ, மாட்டி கொண்டாள் நளாயினி அவனிடம்…

“ஹே, எங்கடி இருக்க?” என நா குளற, போதை தலைக்கேற வந்தான் அவளைத் தேடி…

இவன் அசுரன் அவளின் கையில் அகதி…

இன்னொரு அசுரன் அவனோட அகதி நாளைக்கு வருவார்கள்.

வருவான்…

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!