நெஞ்சில் முட்டி முகம் புதைத்திருந்து உடல்கள் துடிக்க, தனா உச்சம் பெற்ற அடுத்த நொடி கட்டிலில் பரப்பி படுத்துவிட்டான். நளாயினி கூட உறங்கினாள். பஞ்சு மெத்தையில் இல்லை, கோரை பாயில். மூலையில் உடல்களோ அடித்து போட்டது போல வலி! இரவு முழுவதும் ஆசைக்கு இணங்கி அவனது தேவையை பூர்த்தி செய்தாள்.
புராணத்தில் வரும் நளாயினிக்கு ஐந்து கணவன். அடுத்த ஜென்மத்தில் தான் விரும்பிய ஒருவனுடன் வாழ வேண்டும் என நினைத்த நளாயினிக்கு, அதாவது திரௌபதிக்கு, அர்ஜுனன் கிடைத்தான். அவன் ஐவருக்கு பங்கு போட்டு விட்டான். இங்கே இந்த நளாயினிக்கு ஐந்து ஆடவர்கள் சேர்ந்தது போல தனஜெயன்! இவனுக்கு யார் இப்படி பெயர் வைத்தது? “வதம் செய்பவன்” என வைத்திருக்கலாம். யானை போல தன் மேல் மதம் கொண்டு பாய்கிறான், அதற்கு இவனுக்கு ஐராவதன் என வைத்திருக்கலாம். போல நளாயினியை மஞ்சத்தில் கிடத்தி வதம் செய்து கொண்டிருக்கிறான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, குளித்து முடித்து வெளியே வந்தாள் நளாயினி. அலமாரியைத் திறந்தாள். அங்கிருக்கும் புடவையில் ஒன்றை தேர்வு செய்து கட்டினாள். ஜாக்கெட் மிகவும் டைட்டாக இருந்தது. அது கீர்த்தியின் அளவுகளில் இருந்தது. கஷ்டப்பட்டு புடவையைச் சுற்றி கொண்டவள், ஹூக் கொண்டு பிரித்தாள்.
“தலை வலிக்குது!” எனப் பிடித்தபடி எழுந்தான் தனா.
“ஹே ஏமாத்துக்காரி! என்ன பண்ற?” என தனாவின் குரல் கேட்க, வேகமாக எழுந்து நின்றவள் அவனை கலவரத்துடன் பார்த்தாள்.
“ப்ச்! கேட்டதுக்கு பதில் வரணும்,” என அதட்டினான்.
“ஜாக்கெட் டைட்டாக இருக்கு, அதான் பிரிச்சிட்டு இருக்கேங்க!” என பயத்துடன் கூறி முடித்தாள் நளாயினி.
“டைட்டாக தான் இருக்கும். இது எதுவும் உனக்கு சொந்தமானது இல்லை. இது எல்லாமே இன்னொருவருக்குப் போக வேண்டியது. இங்கே வா!!” என அழைத்தான்.
மெல்ல நடந்தாள்.
“ஹே வேகமா வாடி!” என அதட்டினான்.
தனா தலையை இறுக்கிப் பிடித்தபடி, “இந்த புடவையைக் கழட்டி வீசு!!” அவள் பார்த்தான்.
“இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்,” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன சொன்ன?” என அவன் திரும்பக் கேட்க, பயத்தில் நடுங்கியவள் “அது வந்து…” என இரண்டு வார்த்தை பேசுவதற்குள் உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“எதிர்த்து பேசுற? ஒருவேளை பொண்டாட்டி அப்டின்னு திமிர் வந்திடுச்சு போல,” என அவனது குரல் அந்த அறையின் ஒவ்வொரு மூலைக்கும் பட்டு எதிரொலித்தது.
“தெ தெரியாம பேசிட்டேன்,” என்றவள் அவனது அடிமையாகி போனாள். இதோ புயலாய் கிளம்பி அவளிடம் சுருண்டான். அவள் மூச்சு வாங்கியபடி அவனைப் பார்க்க, “நான் ஃப்ரெஷ் ஆகி வரதுக்குள் இட்லி, குடல் குழம்பு பண்ணி வச்சிரு,” என்று விட்டு குளிக்கச் சென்றான்.
அவள் நகர, “ஏய்!” என உயிரை உறைய வைக்கும் குரலில் அமர்ந்தான்.
“என்னங்க?” என திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் நளாயினி.
“குளிச்சிட்டு சமைக்கணும். எனக்கு சுத்தம் ரொம்ப முக்கியம்,” என கர்ஜனையுடன் சென்று விட்டான் தனா.
ஒரு பெருமூச்சு விட்டவள் கண்களில் நீர் கொட்டியது. வாழ்க்கையே வெறுத்து போனது. இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு. ஒரு நாள் கல்யாண வாழ்க்கைக்கே இப்படி திணறினால் என்ன அர்த்தம்? என அறையில் மாட்டியிருந்த தனஞ்செயனின் புகைப்படங்கள் அவளைப் பார்த்து எக்காளமிட்டு சிரித்தன.
“மனிதாபிமானம் கூட அவன் பார்ப்பதில்லை. சொல்லப்போனால் அவன் மனிதனே இல்லை. மிருகம்,” என தனக்குத் தானே நினைத்துக் கொண்டவள் வேகமாகப் பக்கத்து அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றினாள். ஜாக்கெட் இறுக்கமாகத் தான் இருந்தது. பிரித்து வைத்த ஜாக்கெட்டைக் கிழித்து எறிந்துவிட்டது ஒரு மிருகம். வேறு வழி இல்லாமல் அதையே போட்டுக்கொண்டாள்.
வேகமாக கிச்சன் சென்றவள் போன் பார்த்து குடல் குழம்பு செய்தாள். குமட்டி கொண்டு வந்தது. அழுகையும் வந்தது. “இதற்கு அநாதையாகச் செத்திருக்கலாம்,” எனத் தோன்றியது. எப்படியோ செய்து முடித்தாள்.
“சாப்பாடு ரெடியா?” என குரல் உறைய வைத்தது அவளை. அங்கிருக்கும் பணியாளர்கள் அனைவரும் பாவமாகப் பார்த்தார்கள்.
ரங்கராஜன், சங்கமித்ரா, தனஞ்செயன் என அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, உணவை மேஜையில் எடுத்து வைத்தவள் பதட்டத்துடன் பார்த்தாள். சங்கமித்ரா எதையும் கண்டு கொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். மூவருக்கும் பரிமாறியவள் இட்லி மேல் குடல் குழம்பை ஊற்றிவிட்டாள் தெரியாமல்.
“ஹே அறிவு கெட்டவளே!” எனத் தட்டு பறந்தது. சங்கமித்ரா நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். தனஞ்செயன் உச்ச ஸ்தானியில் கத்தினான். அவள் புரியாமல் பார்க்க, அங்கிருக்கும் வேலைக்காரப் பெண் ஒருத்தி, “அய்யாவுக்கு இட்லி மேலே குழம்பு ஊற்றினால் பிடிக்காது மா,” என்றார்.
“தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க,” என நளாயினி அழுகையை அடக்கிக் கொண்டு இன்னொரு தட்டில் உணவைப் போட்டு வைத்தவள் வேகமாக கீழே சிதறிய அனைத்தையும் சுத்தம் செய்தாள்.
“ஹே வந்து உட்காரு!!” என சேரைத் தள்ளி காட்டினான். அவள் விதிர்விதிர்த்துப் பார்க்க, தனா உணவை காட்டி, “நீ முதல்ல சாப்பிடு, சீக்கிரம்,” என்றான்.
“புரியல, என்னங்க சொல்றீங்க?”
“எதுவும் விஷம் கலந்திருந்தால் என்ன பண்றது? சாப்பிடு நீ!! இனி டெய்லி நீ தான் சாப்பிடணும்,” என ஆதிக்கமாகக் கூறியவன், “வாடி வந்து தின்னு தொலை,” என்றான்.
“நான் சைவம்,” என சொல்லி விட்டாள் நளாயினி.
அவ்வளவுதான், வலுவாகச் சிக்கிவிட்டாள்.
“டேய் தனா, நேரமாகுது,” என ரங்கராஜன் அதட்ட, “இருங்க டாட். அவ தின்னு முடிக்கட்டும்,” என தனா சாதாரணமாகக் கூற. “அண்ணா, நாளையில் இருந்து கொஞ்சம் சீக்கிரமா செய்ய சொல்லு! ரொம்ப நேரமாகிறது. இன்னிக்கு கலெக்டர் வர்றார். நான் மேயர். சோ, சீக்கிரமா போகணும்,” என சங்கமித்ரா கூறினாள்.
“ஹே கேட்டியா டி!! நாளைக்கு இது மாதிரி ஆடி அசைஞ்சு வந்த!!” எனப் பற்களைக் கடித்தான் தனா.
“இப்போ சாப்பிடலாமா?” என சங்கமித்ரா கேட்க, “ம்ம், இவளுக்கு தான் எதுவும் ஆகலையே, அப்புறம் என்ன? சாப்பிடுங்க டாட்,” என தனஞ்செயன் கூற, ரங்கராஜன் சாப்பிட ஆரம்பித்தார்.
“ஹே குழம்பு மூட்டு கொண்டு வா,” என தனஞ்செயன் அதட்ட, “இதோ போறேன்,” என வேகமாக அனைத்தையும் குமட்டி விட்டாள். அவளுக்கு அசைவம் ஆகாதே. நாலாயினியைப் பார்த்து அங்கிருக்கும் அனைவரும் வருந்தினார்கள்.
ரங்கராஜன் ஒரு வாய் பிட்டு சாப்பிட்டவர் நிமிர, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ரங்கராஜன் அதற்கு மேல் சாப்பிடாமல் கிளம்பி விட, சங்கமித்ரா வேகமாக எழுந்து கை கழுவி விட்டு தன் தந்தையைப் ஃபாலோ செய்தாள். பா, பின்னாடியே ஓடினாள். தனஞ்செயன் அனைத்தையும் பொறுமையாகச் சாப்பிட்டு எழுந்தான்.
“ஹே எங்கே டி இருக்க?” என தனஞ்செயன் சத்தமாகக் அழைக்க, “என்னங்க?” என கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தாள் நளாயினி.
“மதியம் மீனு, ராலு, கணவாய் சமைச்சிடு!! நான் வருவேன்,” என்று விட்டுச் சென்றான்.
நளாயினி பெருமூச்சுடன் பார்த்தாள்.
ஆசிரமத்தில் வளர்ந்தவள். படித்து முடித்து வேலைக்குச் சென்ற ஹாஸ்டலில் தங்கி இருந்தாள். வழக்கமாக ஆசிரமத்தில் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை கொடுக்க இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வருவாள் நளாயினி. அப்படி வரும்போதுதான் தனது தோழி கீர்த்தியை சந்தித்தாள். இப்பொழுது இங்கே அடிமையை விட அகதியை விட மோசமான நிலையில் இருக்கிறாள். இனி என்ன நடக்கும்? பார்ப்போம்.
***
“டேய் விட்ரா!!” எனத் துள்ளினாள் சிந்து. அவளைத் தூக்கி வந்து அறைக்குள் தள்ளி, மயக்க மருந்தை முகத்தில் வைத்து அழுத்தினான் வேலு. “டேய், உன்னை கொல்லுவேன்!” என திமிர, திமிர சுருண்டு விழுந்தாள். அவளின் காலுக்குச் சங்கிலி போட்டவன், ஜன்னலில் சேர்த்து கட்டினான். இரண்டு காலுக்கும் சங்கிலி இணைக்கப்பட்டிருக்க, ஒரு பெரிய மூச்சை விட்டவன், “நசநசன்னு பேசுறா!” என கடுப்புடன் அறையை பூட்டிக் கொண்டு திரும்பினான்.
“வேலா? எப்போ வந்த?” என கேட்டுக்கொண்டே வந்தார் அபிராமி.
“ஹான், நான் இப்போதான் வந்தேன் மா! என் பொண்ணு எங்கே?”
“அவ ஸ்கூலுக்குப் போயிட்டா!!” என அபிராமி கூற.
“ஹான் மா!! இந்த ரூமுல இருந்து சத்தம் வரும். நீங்க பேச்சு கொடுக்க வேண்டாம். நான் சுடரைப் பிக் அப் பண்ணிட்டு போய் அவளுக்கு ட்ரெஸ் எடுத்திட்டு கேக் வாங்கிட்டு வந்து விட்டுட்டு ஸ்டேஷன் போகணும்,” என குளிக்கச் சென்றான் வேலு.
அபிராமி அந்த அறையின் பக்கம் காதை வைத்துக் கேட்க, “ஹே அபிராமி!!” என குரல் கேட்டது. சட்டெனத் திரும்பிப் பார்த்தார். அங்கே வேலு கையை கட்டியபடி நின்றிருந்தான். “ஹி ஹி!! என்னடா இந்த ரூமுக்குள்ள இருக்கு?” அம்மாவிடம் சொல்லேன்.
“அதுல ஒரு கொலைகாரியை வச்சிருக்கேன். சைக்கோ கொலைகாரி, நாலு பேர் சங்கை கடிச்சு முழுங்கி இருக்கா! பாக்குறீங்களா?” என வந்தான். அபிராமிக்கு பயம் பரவ, “டேய் டேய்.. பாவி எதுக்கு டா இங்கே கூட்டி வந்த? அய்யோ சுடர் இதை பார்த்தால் பயந்திடுவா!!” என கூறினார்.
“நான் பார்த்துக்கிறேன். உங்க அதிகப் பிரசங்கித் தனம் மட்டும் இல்லாம இருந்தால் போதும்,” என்றவன் அவனது வேலையை வரிசையாகப் பார்த்தான்.
“ஹே சுடர்?” என கவின் அழைக்க.
“டெல் கவின்!”
“ஹே உன் காதை கொடு!”
“என்ன சொல்லு?” என அருகில் சென்றாள் சுடர். ரகசியக் குரலில் கவின் அவளிடம், “ஹே இன்னிக்கு இன்னிக்கு night உனக்கு தேவதை வருவாங்க உன்னை பார்க்க..”
“என்ன சொல்ற?” என சுடர் ஆச்சரியமாகக் கேட்க.
“உனக்கு தான் பர்த் டே!! அதான் தேவதை angel star வானத்தில் வரும். அது உன்னோட லக்கி ஸ்டார்.”
“அவங்க என்ன பண்ணுவாங்க? புடிச்சிட்டுப் போவங்களா?” என சுடர் போனி டெயில் ஆட்டிக்கொண்டு கேட்க.
“இல்ல angel Star உனக்கு எது கேட்டாலும் கொடுப்பாங்க,” என்றான் கவின்.
“அப்டியா?” என சுடர் கண்களை விரித்து கேட்க.
“நீ இயல் கிட்ட கூட கேளு. அவளும் கேட்டா அவளுக்கு கிடைச்சது குட்டியா பப்பி,” என்றான் கவின்.
“அப்டியா? அப்போ நானும் கேட்கவா?” என சுடர் கண்கள் விரிந்தது உற்சாகத்தில். கவின் அவளுக்கு தம்ஸ் அப் காட்டிட.
“எத்தனை மணிக்கு angel star வரும்?” என சுடர் கேட்க.
“நேத்து நைட் 6 மணிக்கு வரும். நீ கண்டிப்பா கேளு! என்ன கேட்க போற?” என கவின் கேட்க.
“நான் எனக்கு நியூ அம்மா கேட்கப் போறேன். அழகா கேட்கப் போறேன்,” என சுடர் சொல்லிக் கொண்டிருக்க.
“அப்போ கிஸ்?” என கவின் கன்னத்தைக் காட்டினான். சுடர் முத்தமிட வர, “ஆங்!” என நடுங்கினான் கவின்.
“டேய் ஈவ் டீசிங் பண்ட்ரியா என் பொண்ணை?” என வேலு அவனை முறைத்துப் பார்க்க, கவின் பையன் யூனிஃபார்மில் ஒண்ணுக்குப் போய்விட்டான். “மம்மி!!” என கவின் அழ ஆரம்பித்து விட்டான்.
“அய்யோ டாடி!!” என தலையில் அடித்துக் கொண்டாள் சுடர்.
தொடரும்…











💬 Be the first to comment