🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
2. EPISODE 2

இது உங்களோட ரூம். அண்ட் இதுதான் என் அண்ணன் ரூமும் கூட. இனி நீங்க மினிஸ்டர் பொண்டாட்டி. எங்க அண்ணனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோங்க. உங்களுக்குத் தேவையான எல்லாமே இங்கே கிடைக்கும். நீங்க வெளியே போக அவசியமே இல்லை,” சொல்லிக்கொண்டே அறையைச் சுற்றி காட்டினாள் சங்கமித்ரா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என்… என்னோட திங்ஸ் எல்லாம் ஆசிரமத்துல இருக்கு,” எனத் தயங்கிக்கொண்டே கூறினாள் நளாயினி.

“அது என்னோட பிரச்சினை இல்லை. உங்களுக்கு எது வேணும்னாலும் அண்ணன்கிட்ட கேட்டுக்கோங்க,” எனக் கிளம்பிவிட்டாள் மித்ரா.

அறையே பயங்கரமாக இருந்தது. பெருமூச்சுடன் பார்த்தாள் நளாயினி. ‘இப்பொழுது புரிகிறது கீர்த்தி ஏன் இங்கிருந்து ஓடிச் சென்றாள் என்று.’

“ஹலோ!” எனச் சொடக்குப் போட்டு அழைத்தாள் மித்ரா மீண்டும்.

“சொல்லுங்க!”

“எங்க அண்ணனுக்குக் கொஞ்சமா இல்லை, அதிகமா கோபம் வரும். அதைக் ஹேண்டில் பண்ணிக்கோங்க. அவனுக்கு IED பிரச்சனை இருக்கு. தேவையில்லாம பேசி வாங்கி கட்டிக்க வேணாம்,” என்றுவிட்டுச் சென்றாள் மித்ரா.

அவளது போனில் கூகிள் ஆண்டவரிடம் தேடிப் பார்த்தாள். அவனுக்கு IED பிரச்சனை இருக்கிறது. அதாவது Intermittent Explosive Disorder. அப்படியென்றால் அதீத கோபம் வரும். அதாவது, வெடிக்கும் அளவுக்குக் கோபம். அந்தக் கோபத்தில் அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது. ‘மொத்தமாகத் தன் கதை முடிந்தது. வாழ்க்கையே நாசமா போச்சு’ என்ற நிலையில் இருந்தாள் நளாயினி. இனி அவனது கோபத்தைத் தாங்கிக்கொள்ளப் போவது அவள்தானே! ஆம், அது கொஞ்சம் கண்ணீராக இருந்தாலும், அதிகமாக நசுங்குவது அந்தக் கட்டில் படுக்கையும் அதனுடன் அவனது ஆண்மையின் கீழ் நிர்ப்பந்தத்தில் கொடுக்கப்படும் பெண்மையும்.

அறையில் இருக்கும் அனைத்துப் படங்களிலும் வேஷ்டி சட்டையில் இருந்தான். அந்த முகத்தில்கூட மென்மை என்பது துளிகூட இல்லை என்பதே உண்மை.

“ஹேய் ஒண்ட வந்தவளே! ராட்சசி! கேடு கெட்டவளே!” எனப் போதையில் கிறங்கியபடி குரல் கேட்க… உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவளுக்கு. அவனேதான் வந்துவிட்டான், அசுரன். 

“ஹேய் எங்கே டி இருக்க? ஏமாத்துக்காரி?” என அழைத்துக்கொண்டே வந்தவன் கண்களில் நளாயினி இரண்டு மூன்றாகத் தெரிந்தாள்.

“சார்!” என மெதுவாக அழைத்தாள் நளாயினி. அவளின் கண்களில் நீர் கொட்டியது. “இங்கே வா!” என அழைத்தான்.

அவள் நடுக்கத்துடன் நடந்து சென்றாள். “என்னடி அன்ன நடை நடக்கிற? பிளடி!” என தலைமுடியைப் பிடித்துக்கொண்டவன், “இனி நீ மினிஸ்டர் பொண்டாட்டியா? நல்ல வாழ்வுதான்! சரி, அந்த வாழ்வை உனக்கு எக்ஸ்பிளேன் பண்றேன் வா!” என இழுத்துச் சென்றான், முடியுடன்.

“சார் ப்ளீஸ்! வலிக்குது விடுங்களேன்,” என நளாவின் கண்களிலிருந்து நீர் சரிய, தனாவின் கைகளிலும் முடி இரண்டு மூன்று வந்தது. பீரோவைத் திறந்து காட்டியவன், “மினிஸ்டர் பொண்டாட்டி டெய்லி புடவை கட்டணும். அதுவும் பட்டுப் புடவை,” எனப் போதையில் புடவையை எடுத்து அவள்மேல் வீசினான்.

உள்ளுக்குள் மருகிக்கொண்டு அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள் நளா.

“டெய்லி தலை நிறைய பூ வைக்கணும். குங்குமம் நெத்தியில் குறையக் கூடாது. கண்ணாடி வளையல் கலகலக்கணும்,” என வளையலை வீசினான்.

“அம்மா!” எனக் கத்தினாள் நளாயினி.

தனா சிரித்துக்கொண்டே, “உனக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை. அப்புறம் இல்லாதவர்களை எதுக்கு கூப்பிடுற?” என எகத்தாளமாகச் சிரித்தான், போதையிலும்.

கண்ணாடித் துகளைவிட அவன் பேசியது நெஞ்சைக் கீறி ரத்தம் வந்தது. அங்கே கண்ணாடி வளையல் உடைந்து தூளானது.

பற்களைக் கடித்துக்கொண்டே கண்கள் கிறங்க… தனா சிவந்த விழிகளில் அவளிடம், “யாரைப் பார்த்தாலும் சிரிக்கணும்! வணக்கம் வைக்கணும். ஆனால் யார்கிட்டயும் பேசவே கூடாது. வீட்டில் இருக்கிற எல்லா வேலையும் நீதான் செய்யணும். முக்கியமா, நான் இழுத்த இழுப்புக்கு எல்லாம் நீ வரணும். அண்ட் ஃபைனலி, எல்லாம் முடிஞ்சதும் அங்கே அந்த மூலையில் போய் படுத்துக்கிற. புரியுதா?” என மூலையைக் காட்டினான்.

“சரிங்க சார்!” என நளாயினி தலையை ஆட்ட…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சாரா? என்னா சாரு மோரூ? ‘பீருன்னு!’ வாங்க… ‘ஏங்க! என்னங்க!’ அப்டின்னு சொல்ற!”

“ம்ம்!” என்றாள் ஒற்றை பதிலுடன்.

“இந்த ரூமுக்கு வெளியேதான் நீ மினிஸ்டர் பொண்டாட்டி! எனக்கு நீ எப்பவும்… Empty எம்ட்டி. உனக்கும் எனக்கும் இந்த கட்டில் பந்தத்தைத் தவிர எதுவும் இல்லை,” என்றான் தனா, நெற்றிப் பொட்டில் அடித்ததைப்போல.

நளாயினி அழுதுகொண்டே பார்த்தவள், “கீர்த்தி ஓடிப் போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ன நம்புங்க ப்ளீஸ்,” எனக் கைகூப்பி கும்பிட்டாள்.

“ச்சீ! மூடுடி வாய!” என்றவன், “போய் படு!”

“ஹாங்!”

“பட்ரீஈஈஈ!” எனக் கர்ஜித்தான். இதோ, படுக்கையில் தயக்கத்துடன் சென்றாள். காட்டமான ஸ்காட்ச் எடுத்துக் குடித்தவன், அவளின் முந்தியைப் பிடித்து இழுத்தான் தனஞ்செயன். ஹூக் அவளின் மேனியைப் பதம் பார்த்தது. ஆனால், அவளுக்கு அது வலியை கொடுக்கவில்லை. அவன் பேசியதைவிட இது பெரிய வலி ஒன்றும் இல்லையே!

நளாயினிக்கு அவன் ஒதுக்கிய மூலையில் புடவை விழுந்தது. அங்கே வஸ்திரங்கள், ஆடைகள், அணிகலன்கள் அதனுடன் தாலியும் விழுந்தது. இதுதான் கேடா? ‘கல்லானாலும் கணவன்’ கோட்பாட்டுக்குத் தனா ஒத்துப் போகும் ஆண் இல்லை. தனாவுக்கு அவள் ஒரு அடிமைபோல, அகதியைப்போல. கட்டில் அதிரும் நேரத்தில் அவளின் பெண்மையும் அதிர்ந்து அவனுக்கு வழிவிட, அவளின் கண்ணீரைத் தலையணை தாங்கிக்கொண்டது. இங்கு ஆண்மை பெண்மையை ஆளவில்லை. அகங்காரக்காரன், அசுரன் தாமரை போன்றவளை ஆட்டுவித்தான்.

****

“பாட்டி!”

“சுடர் குட்டி!”

“டாடி எப்போ வருவாங்க? நான் அஞ்சு மினிட்ஸ் வெயிட்! டாடி நோ கம்,” என மின்னும் கண்களில் கேட்டாள் சுடர்.

அபிராமி தன் பேத்தியைத் தூக்கிக்கொண்டவர், “அப்பாவுக்குப் போன் பண்ணுவோமா?” என எடுத்தார்.

“பாட்டி வரும்போது டாடி மம்மிய கூட்டிட்டு வருவாரா? நானுக்கு மம்மி வேணும். நானுக்கு மட்டும்தான் மம்மி இல்லை, உனக்குத் தெரியுமா? எங்க கிளாஸ்ல ஸ்ரீ இருக்கா, வைசாலி இருக்கா. என்னோட மூணு ஃப்ரண்ட் கிருஷ் இருக்கான். அவனுக்கு மம்மி இருக்காங்க. அவங்க டெய்லி லஞ்ச் டைம் வர்றாங்க. கூட்டிப் போறாங்க, கிஸ் தர்றாங்க. ஆனால், நானுக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தரக்கூட அம்மா இல்லையே!” என சுடர் அபிராமியின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள், மழலை மொழியில்.

அபிராமி தன் பேத்திக்கு முத்தமிட்டு, “சீக்கிரமே மம்மி வருவா. நான் ஏற்பாடு பண்றேன் தங்கம்,” எனக் கண்களில் நீர் திரையிட, அதை வேகமாகத் துடைத்துக்கொண்டவர், வேலாயுதத்துக்கு அழைத்தார். 

“டேய் வேலா! சுடர் கேட்டுட்டே இருக்கா! என்னடா பண்ற? எப்போ வரப்போற? வீட்டுக்கு? உன்னோட மனசில என்னதான் நினைச்சிட்டு இருக்க? குழந்தை தவிக்குதுடா!” என உருக்கமாகக் கேட்டார்.

“போனை என் பொண்ணுகிட்ட கொடுங்கமா!” என கூறினான் வேலு.

“இந்தா உன் அப்பா பேசுறான்! வீட்டுக்கு வந்தா அடி விழும்ன்னு சொல்லு,” என அபிராமி கூற…

“ப்பா!” என உற்சாகமாகப் பேசினாள் சுடர்.

“டாடிக்கு ஒரு கிஸ் கொடுத்து ஒரு டைட் ஹக் கொடுங்க சுடர்.”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ம்ம்… முத்தா! தைத்தா ஹக் கொதுத்துத்தேன்.

ம்ம்… நானுக்கு மம்மி வேணும்,” என சுடர் சொல்ல…

“பாட்டி சொல்லிக்கொடுத்தாங்களா?” என பற்களைக் கடித்துக்கொண்டே கேட்டான் வேலாயுதம்.

“டேய், வந்தேன்னு வை! திமிராகிப் போச்சா? குழந்தை அம்மாவைத் தேடுறா. நான் பொண்ணு பார்க்குறேன்டா, சரின்னு சொல்லித் தொலை. நான் இருக்குறவரைக்கும் பார்த்துப்பேன். நான் இல்லைன்னா இவளுக்கு யாருடா ஆதரவு,” என அபிராமி போனைப் பிடுங்கிக் கத்தினார்.

“பாட்டி கொடு! டாடிக்கு நோ திட்டு! இல்ல உன்னை போலீஸ்ல புடிச்சுக் கொடுப்பேன்,” என்றாள் சுடர்.

“உனக்காகத்தாண்டி பேசிட்டு இருக்கேன்,” என அபிராமி கூற…

வேலாயுதம் சிரித்துக்கொண்டே, “விடு சுடர் செல்லம்! பாட்டி பாவம்,” என்றான்.

“டாடி, என்னோட பர்த் டே அப்போ மம்மி தரேன்னு சொல்லிருக்கியே! நானுக்கு அம்மா வேணும். சீக்கிரமா வாங்கித் தரணும்!” என சுடர் கூற…

“பர்த் டே வரும்போது கண்டிப்பா வாங்கித் தரேன் மம்மி!” என்றான் வேலு விளையாட்டாக. அவனால் வேறு என்ன செய்ய முடியும்.

“ஓகே, அப்போ ஜாலி! என்னோட ஃப்ரண்ட் எல்லாரையும் கூப்பிட்டு ரெண்டு கேக் வெட்டுவேன். மம்மி வரப்போறாங்க! ஜாலி!” என குழந்தை குதித்தாள்.

அபி போனை வாங்கி, “டேய், எதுக்குடா இப்படிப் பிஞ்சு மனசுல ஆசை உண்டு பண்ற? கண்டிப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப் போறதும் இல்லை! எனக்கு மனசு உட்டுப் போச்சுடா,” என விரக்தியில் அழுதார்.

“அவள் இப்போ சந்தோஷமா இருக்காளே, அது போதும். நான் தான் அவளுக்கு அம்மா அப்பா எல்லாமே,” என்றான் வேலு.

“டேய், போன உயிர் திரும்ப வராது வேலா. இப்போ இந்தப் பிஞ்சு உயிருக்கு அம்மா தேவைடா!”

“மா… அப்புறம் கூப்பிடுறேன்,” எனக் கட் செய்தான் வேலு.

“சார், ஸ்பாட்டுக்கு வந்தாச்சு,” என பிரபு கூற…

“எல்லாரும் அலர்ட்டா இருங்க! கன் தேவைப்பட்டால் காலில் சுடுங்க,” களத்தில் இறங்கினான் வேலு.

புன்னகையுடன் தன் காதலன் யோகியின் கையை கோர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சிந்துஜா.

யோகி தாலியைக் காட்டி, “கட்டவா?” என காதலில் திளைத்துக்கொண்டே கேட்டான்.

“ம்ம்,” எனக் கண்கள் மின்ன சிந்து சிரிக்க…

இதோ, இறங்கிவிட்டான் வேலு களத்தில்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“யோகி, அந்த ACP வந்துட்டான்டா!” என கேசவன் குரல் கொடுக்க, “சிந்து, எழுந்திரு! இங்கே சேஃப் இல்லை. நம்ம போயே ஆகணும்,” எனக் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.

“யோகி!” என வேலாயுதம் துப்பாக்கியை ட்ரிகர் செய்துகொண்டு வந்தவன், வேகமாக அவனைப் பிடிக்க முற்பட, பிரபு அவனை வளைத்துப் பிடித்தான். “இன்ஸ்பெக்டர், அவர் என்னோட லவ்வர்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என சிந்து போய் நியாயம் பேச…

“பிரபு, இவள் தானா?”

“ஆமா சார், இவங்கதான்!” என பிரபு கூற, அவளின் முகத்தில் கர்சீஃப் வைத்து அழுத்தியவன் அப்படியே தூக்கித் தோள்மேல் போட்டுக்கொண்டான்.

“டேய், அவள் வேணும்டா! என் வழியில வராத!” என யோகி துள்ள…

“சரி, அவளைப் போட்டுடுறேன். அப்டியே இந்த மலையிலிருந்து… நோ நோ, எரிச்சிடுறேன்,” என வேலு கூற…

“அவள் எனக்கு முக்கியம்! நீ எங்கே தூக்கிட்டுப் போனாலும் நான் வருவேன்,” என வேகமாகப் பிரபுவைத் தள்ளிவிட்டு ஓடினான் யோகி..

“சுடுங்க பிரபு!” என வேலு உத்தரவு கொடுக்க…

“சார்… மினிஸ்டர் சதாசிவம் பையன் அவர்,” எனத் தயங்கி நின்றான்.

“பிளடி!” என வேலு சுட்டான், யோகியின் காலில்.

மணப்பெண் கோலத்தில் சிந்துஜா அவனது தோளில்.

தொடரும்…

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!